தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. எகிப்தில் தானியம் விற்கப்படுவதை யாக்கோபு கேள்விப்பட்டு, தன் புதல்வர்களை நோக்கி: நீங்கள் கவலையின்றி இருக்கலாமா?
2. எகிப்திலே கோதுமை விற்கப் படுகிறது என்று கேள்வி. நாம் பஞ்சத்தால் சாகாமல் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நீங்கள் அவ்விடத்திற்குப் போய், நமக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு வாருங்கள் என்றான்.
3. ஆகையால், சூசையின் சகோதரர் பத்துப் பேரும் தானியம் வாங்கும் பொருட்டு எகிப்துக்குப் போனார்கள்.
4. ஆனால், பெஞ்சமினுக்கு வழியில் ஏதேனும் மோசம் வரக்கூடுமென்று அவனுடைய சகோதரருக்குச் சொல்லி, யாக்கோபு அவனைப் போக விடாமல் வீட்டிலே நிறுத்திக் கொண்டான்.
5. யாக்கோபின் புதல்வர்கள், (தானியம்) வாங்கப் போன மற்றும் பலரோடு எகிப்து நாட்டிற்குள் புகுந்தனர். உண்மையிலே கானான் நாட்டிலும் பஞ்சம் நிலவியது.
6. சூசையோ எகிப்து நாட்டுக்குத் தலைவராய் இருந்தார். அவர் விருப்பப்படியே மக்களுக்குத் தானியங்கள் விலைக்குக் கொடுக்கப்படும். அவருடைய சகோதரர்கள் வந்து, தரையில் விழுந்து தம்மை வணங்கும் பொழுது,
7. அவர் அவர்களை இன்னொரென்று தெரிந்து கொண்டார். ஆயினும்; அறியாதவரைப் போல் மிகக் கடுமையுடன் அவர்களோடு பேசி: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று வினவினார். அவர்கள்: கானான் நாட்டிலிருந்து உயிர் பிழைக்கத் தேவையான உணவுப் பொருட்கள் வாங்கும்படியாக வந்தோம் என்று மறுமொழி கூறினர்.
8. சூசை அவர்களைத் தம் சகோதரர் என்று கண்டுகொண்டார். ஆயினும் அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை.
9. ஆகையால், தாம் முன்பு கண்ட கனவுகளை நினைவுகூர்ந்து அவர்களை நோக்கி: நீங்கள் ஒற்றர்கள். நாடு எங்கே வலுவிழந்து இருக்கிறதென்று பார்க்க வந்திருக்கிறீர்கள் என்றார்.
10. அதற்கு அவர்கள்: தலைவ, அப்படி அல்ல. உம் அடியார்களாகிய நாங்கள் தானியம் வாங்கவே வந்துள்ளோம்.
11. நாங்களெல்லாரும் ஒரே தந்தையின் புதல்வர்கள். நாங்கள் சமாதானப் பிரியர். அடியோர் யாதொரு துரோக்கத்தையும் சிந்தித்தவர்கள் கூட அல்லர் என்றனர்.
12. அவர்: அப்படி அல்ல. இந்நாட்டில் அரண் இல்லாத இடங்களைப் பார்த்தறியும்படி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னார்.
13. அப்பொழுது அவர்கள்: அடியோர் பன்னிரண்டு சகோதரர்கள். நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் மக்கள். எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கிறான். மற்றொருவன் காலமானான் என்றனர்.
14. சூசை: நான் முன்பு சொன்னது உண்மையே. நீங்கள் ஒற்றரே தாம்.
15. நான் இப்போதே உங்களைச் சோதிக்கப் போகிறேன். பாரவோனின் உயிர் மேல் ஆணை! உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுப் போவதில்லை.
16. அவனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள். நீங்கள் சொன்னது மெய்யோ பொய்யோ என்று நான் சான்று பெறும் வரை நீங்கள் விலங்கிலே கிடக்கவேண்டும். இல்லாவிட்டால், பாரவோனின் உயிர்மேல் ஆணை: நீங்கள் ஒற்றர்கள் தான் என்றான்.
17. அப்படியே அவர்களை மூன்று நாள் காவலிலே வைத்தார்.
18. மூன்றாம் நாள் அவர்களைச் சிறையிலிருந்து அழைப்பித்து: நான் சொல்லுகிறபடி செய்யுங்கள்; செய்தால் பிழைக்கலாம். ஏனென்றால், நான் தெய்வ பயம் உள்ளவன்.
19. நீங்கள் உண்மையிலேயே குற்றம் அற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறையில் கட்டுண்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, வாங்கின தானியத்தை உங்கள் வீட்டுக்குக் கொண்டு போகலாம்.
20. பின்னர் உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். வந்தால், நீங்கள் கூறியது உண்மையென்று விளங்கும். அப்படியெனின், நீங்கள் சாக மாட்டீர்கள் என்றார். அவர்களும் அப்படியே செய்தனர்.
21. அப்போது அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து: இந்த ஆபத்து நமக்கு நேர்ந்தது முறையே. ஏனென்றால், நம் சகோதரனுக்குத் துரோகம் செய்துள்ளோமே! அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக் கொண்ட போது, அவனுடைய மனத் துயரைக் கண்டும் நாம் கேளாமல் போனோமே! அதனாலல்லவா இந்தத் துன்பம் நமக்கு வந்தது என்றனர்.
22. அவர்களில் ஒருவனான ரூபன் அவர்களை நோக்கி, சிறுவனுக்கு விரோதமாய்த் தீங்கு யாதொன்றும் செய்யாதீர்கள் என்று உங்களுக்கு நான் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமல் போனீர்களே! இதோ, அவனுடைய இரத்தம் நம்மைப் பழி வாங்குகிறது என்றான்.
23. சூசை மொழிபெயர்ப்பாளனைக் கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆதலால், தங்கள் சொன்னது அவருக்குத் தெரியுமென்று அவர்கள் அறியாதிருந்தனர்.
24. அப்போது அவர் சிறிதுநேரம் ஒதுங்கிப் போய் அழுதார். பின் திரும்பி வந்து, அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில், சிமையோனைப் பிடித்து, அவர்கள் கண் முன்பாகவே கட்டுவித்தார்.
25. பின் அவர்களுடைய சாக்குகளைக் கோதுமையால் நிரப்பவும், அவனவன் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே இட்டு வைக்கவும், வழிக்கு வேண்டிய உணவுகளைக் கொடுக்கவும் தம் ஊழியருக்குக் கட்டளை இட்டார். அவர்கள் அப்படியே செய்தார்கள்.
26. அவர்கள் தங்கள் கழுதைகளின்மேல் தானியத்தை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்கள்.
27. பின் அவர்களில் ஒருவன் சாவடியில் தன் கழுதைக்குத் தீனி போட வேண்டித் தன் சாக்கைத் திறக்கவே, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கக் கண்டு தன் சகோதரரை நோக்கி:
28. என் பணம் திரும்ப வைக்கப்பட்டுள்ளது; இதோ சாக்கிலே இருக்கிறது என்றான். அவர்களோ திடுக்கிட்டு மயங்கிக் கலங்கி, ஒருவரோடொருவர்: கடவுள் நமக்கு இவ்வாறு செய்திருப்பது என்னவோ என்றனர்.
29. பின், அவர்கள் கானான் நாட்டிலே தங்கள் தந்தையாகிய யாக்கோபிடம் வந்து சேர்ந்து, தங்களுக்கு நேர்ந்தவற்றையெல்லாம் சொல்லத் தொடங்கினர்.
30. அதாவது, அந்நாட்டின் தலைவர், நாங்கள் ஒற்றர் என்று எண்ணி எங்களிடம் கொடூரமாய்ப் பேசினார்.
31. நாங்களோ, அவரைப் பார்த்து: நாங்கள் குற்றமற்றவர்கள்; வஞ்சகர் அல்லர்.
32. நாங்கள் ஒரே தந்தைக்குப் பிறந்த பன்னிரண்டு சகோதரர். ஒருவன் காலமானான். இளையவன் கானான் நாட்டிலே எங்கள் தந்தையோடு இருக்கிறான் என்று சொன்னோம்.
33. அவர்: நீங்கள் குற்றமற்றவரா இல்லையா என்பதை நான் உறுதிப்படுத்தப் போகிறேன். எவ்வாறென்றால், உங்கள் சகோதரர்களுள் ஒருவனை நீங்கள் என்னிடம் விட்டு வையுங்கள். பின் உங்கள் குடும்பத்துக்கு வேண்டிய தானியங்களை வாங்கிக் கொண்டு போங்கள்.
34. உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அதன் மூலம் நீங்கள் ஒற்றர் அல்லர் என்று நானும் கண்டுகொள்வேன்; நீங்களும் காவலில் வைக்கப்பட்ட சகோதரனைப் பெற்றுக் கொள்ளலாம். பின் உங்கள் விருப்பப்படி எதையும் வாங்கலாம் என்றார் என்றனர்.
35. அவர்கள் இவற்றைச் சொல்லி தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டிய போது, அவனவன் சாக்கின் வாயிலே அவனவன் பணமுடிப்பு காணப்பட்டது. அதைக் கண்டு அவர்கள் எல்லாருக்கும் திகில் உண்டாயிற்று.
36. தந்தை யாக்கோபு மக்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாகச் செய்தீர்கள்! சூசை உயிர் இழந்தான்; சிமையோனோ விலங்குண்டு கிடக்கிறான்; பெஞ்சமினையும் கூட்டிக் கொண்டு போகவிருக்கிறீர்களே! இந்தத் தீமைகளெல்லாம் என் மேல் சுமந்தன என்றான்.
37. அதற்கு ரூபன்: நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டு வராதிருப்பேனாகில், என் இரு புதல்வர்களையும் கொன்று விடும். அவனை என் கையில் ஒப்புவியும்; நான் அவனை உமக்குத் திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பேன் என்றான்.
38. அவனோ: என் மகன் உங்களோடு போகவிடேன். இவன் தமையன் இறந்து போனான்; இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான். நீங்கள் போகிற ஊரிலே இவனுக்கு மோசம் ஏதும் நேரிட்டால், நீங்கள் நரைமயிருள்ள என்னை மனச் சஞ்சலத்துடனே பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 42 of Total Chapters 50
ஆதியாகமம் 42:63

×

Alert

×

tamil Letters Keypad References