தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. யாக்கோபு, தன் தந்தை அகதி போல், அலைந்து திரிந்த கானான் நாட்டில் குடியேறினான்.
2. அவன் சந்ததியில் வரலாறு இதுவே: சூசை பதினாறு வயதிலே தன் சகோதரருடன் தந்தையின் மந்தையை மேய்த்துக் கொண்டிருந்தான். அவன் தன் தந்தையின் பிற மனைவிகளாகிய பாளான், செல்பாள் என்பவர்களுடைய புதல்வரோடு கூட இருந்தான். அப்படியிருக்க, ஒரு நாள் அவன் தன் சகோதரரின் மிக அக்கிரமமானதொரு தீச்செயலைத் தந்தையிடம் வெளிப்படுத்தினான்.
3. சூசை முதிர்ந்த வயதில் தனக்குப் பிறந்தமையால், இஸ்ராயேல் அவனை எல்லாப் புதல்வரையும் விட அதிகமாய் நேசித்து வந்தான். (அதனால்) அவனுக்குப் பல நிறமுள்ள ஓர் அங்கியைச் செய்து கொடுத்திருந்தான்.
4. தங்கள் தந்தை அவனை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு, இவன் சகோதரர் இவனோடு ஒருபோதும் அன்பாய்ப் பேசாமல், இவனைப் பகைத்து வந்தனர். ஒரு நாள் சூசை தான் கண்ட ஒரு கனவைத் தன் சகோதரருக்குத் தெரிவித்தான். இதனால் (அவர்கள்) அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தனர்.
5. அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட கனவைக் கேளுங்கள்.
6. நாம் வயலிலே அறுத்த அரிகளைக் கட்டுவது போலத் தோன்றியது. அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு எழுந்து நிற்பது போலவும்,
7. உங்கள் அரிக்கட்டுக்கள் என் அரிக்கட்டைச் சுற்றித் தொழுவது போலவும் கண்டேன் என்றான்.
8. அப்பொழுது அவன் சகோதரர் அவனை நோக்கி: நீ எங்களுக்கு அரசனாக இருப்பாயோ? உன் அதிகாரத்துக்கு நாங்கள் கீழ்ப்பட்டிருப்போமோ என்று பதில் கூறினர். இவ்விதக் கனவுகளும், பலபல வார்த்தைகளும் மிகுந்த பொறாமையும் பகையும் உண்டாகக் காரணமாயின.
9. மேலும் அவன் தான் கண்ட வேறொரு கனவையும் தன் சகோதரர்களுக்கு அறிவித்தான். சூரியனும் சந்திரனும் பதினொரு விண்மீன்களும் தன்னை வணங்கினது போல் கனவில் கண்டதாகச் சொன்னான்.
10. இதை அவன் தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் தெரிவித்த போது, அவனுடைய தந்தை அவனைக் கண்டித்து: நீ கண்ட இந்தக் கனவின் பொருள் என்ன? நானும் உன் தாயும் உன் சகோதரர்களும் இவ்வுலகில் உன்னை வணங்க வேண்டுமோ என்றான்.
11. இதன் பொருட்டும் அவன் சகோதரர் அவன் மீது பொறாமை கொண்டனர். தந்தையோ மௌனமாயிருந்து, இக்காரியத்தைத் தன் மனத்துள் வைத்துச் சிந்திக்கலானான்.
12. அப்படியிருக்கையில், அவன் சகோதரர் சிக்கேமில் தங்கித் தந்தையின் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்தனர்.
13. இஸ்ராயேல் சூசையை நோக்கி: உன் சகோதரர்கள் சிக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள். அவர்களிடம் உன்னை அனுப்பப் போகிறேன், வா என்று கூற, அவன்: இதோ போகத் தயாராய் இருக்கிறேன் என்றான்.
14. தந்தை: நீ போய், உன் சகோதரரும் மந்தைகளும் நலமோவென்று விசாரித்து, நடக்கும் காரியங்களை என்னிடம் தெரிவிப்பாய் என்றான். அவன் எபிறோன் பள்ளத்தாக்கிலிருந்து அனுப்பப்பட்டுச் சிக்கேமுக்குப் போனான்.
15. அப்பொழுது ஒரு மனிதன், அவன் வெளியிலே வழி தவறித் திரிவதைக் கண்டு: என்ன தேடுகிறாய் என்று அவனைக் கேட்டான்.
16. சூசை: என் சகோதரர்களைத் தேடுகிறேன். அவர்கள் எங்கே மந்தைகளை மேய்க்கிறார்கள்? சொல் என்றான்.
17. அதற்கு அம் மனிதன்: அவர்கள் இவ்விடத்தை விட்டுப் போய் விட்டார்கள். ஆனால், தொட்டாயீனுக்குப் போவோமென்று அவர்கள் சொல்லக் கேட்டேன் என்றான். ஆதலால், சூசை தன் சகோதரரைத் தேடித் தொட்டாயீனிலே அவர்களைக் கண்டுபிடித்தான்.
18. அவர்கள் அவன் தூரத்திலே வரக் கண்டு' அவன் தங்களுக்கு அண்மையில் வருமுன்னே அவனைக் கொல்லச் சதி செய்து,
19. ஒருவரொருவரை நோக்கி, கனவு காண்கிறவன் அதோ வருகிறான்.
20. நாம் அவனைக் கொன்று இந்தப் பாழ்கிணற்றில் போட்டு விட்டு, பிறகு, ஒரு கொடிய மிருகம் அவனைத் தின்று விட்டதென்று சொல்வோம். அப்போதல்லவோ அவனுடைய கனவுகள் எப்படி முடியுமென்று விளங்கும் என்றனர்.
21. ரூபன் இவற்றைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவிக்கக் கருதி, சகோதரரைப் பார்த்து:
22. நீங்கள் அவனைக் கொல்ல வேண்டாம்; அவன் இரத்தத்தைச் சிந்தவும் வேண்டாம். அவனைப் பாலை வனத்திலுள்ள பாழ்கிணற்றில் போட்டு விட்டால் உங்கள் கை சுத்தமாகவே இருக்கும் என்றான். ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்துத் தந்தையிடம் அவனைச் சேர்க்கும்படியாகவே அவ்விதம் பேசினான்.
23. சூசை தன் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடனே, அவன் அணிந்திருந்த பல நிறமுள்ள பெரிய அங்கியை அவர்கள் வலுக்கட்டாயமாய்க் கழற்றி,
24. தண்ணீரில்லாத பாழ் கிணற்றிலே அவனைத் தள்ளி விட்டனர்.
25. பின் அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது கலயாத்திலிருந்து வந்து கொண்டிருந்த இஸ்மாயேலியரின் கூட்டத்தைக் கண்டனர். அவர்கள் எகிப்துக்கு வாசனைத் திரவியங்களையும், பிசினையும், வெள்ளைப் போளத்தையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றி வந்தனர்.
26. அப்போது யூதா தன் சகோதரர்களை நோக்கி: நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் நமக்கு என்ன பயன்?
27. நமது கைகளைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளும்படி நாம் அவனை இந்த இஸ்மாயேலியருக்கு விற்று விடுவது நலம். ஏனென்றால், அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறான் என்று சொல்ல, அவன் சகோதரர் அவன் சொன்ன திட்டத்திற்கு உட்பட்டனர்.
28. ஆகையால், மதியானியராகிய இந்த வியாபாரிகள் (தங்களைக்) கடந்து போகையில், அவர்கள் சூசையைப் பாழ்கிணற்றினின்று தூக்கியெடுத்து, (அந்த) இஸ்மாயேலியருக்கு அவனை இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்கள் அவனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.
29. (இதை அறியாத) ரூபன் பாழ் கிணற்றிற்குத் திரும்பிப் போய்ப் பார்த்து, சூசை (அங்கு) இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,
30. தன் சகோதரிடம் திரும்பி வந்து: இளைஞனைக் காணோமே; நான் எங்கே போவேன் என்றான்.
31. பின் அவர்கள் சூசையின், அங்கியை எடுத்து, தாங்கள் அடித்திருந்த ஒரு வெள்ளாட்டுக் குட்டியின் இரத்தத்திலே அதைத் தோய்த்து, தங்கள் தந்தையிடம் அனுப்பி:
32. இதை நாங்கள் கண்டெடுத்தோம். இது உமது புதல்வனுடைய அங்கியோ அல்லவோ, பாரும் என்று சொல்லச் சொன்னார்கள்.
33. தந்தை அதைக் கண்டதும்: இது என் மகனுடைய அங்கி தானே! ஏதோ ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்று விட்டதே! ஐயோ, சூசை ஒரு காட்டு விலங்கிற்கு இரையாய்ப் போனானே என்று சொல்லி,
34. தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கோணி உடுத்தி, பல நாட்களாய்த் தன் மகனுக்காக வருந்திக் கொண்டிருந்தான்.
35. அவன் புதல்வர் புதல்வியர் அனைவரும் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்த போது, அவன் எந்த ஆறுதலான வார்த்தைக்கும் செவி கொடாமல்: நான் துக்கத்தோடே பாதாளத்தில் இறங்கி என் மகனிடத்திற்குப் போகிறேன் என்றான். அவன் இவ்விதமாய் சூசையைப் பற்றி அழுது புலம்பிக் கொண்டிருக்கையில்,
36. மதியானியர் எகிப்தை அடைந்து பாரவோனின் அண்ணகனும் படைத்தலைவனுமான புத்திபாரிடம் சூசையை விற்றனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 37 of Total Chapters 50
ஆதியாகமம் 37:1

×

Alert

×

tamil Letters Keypad References