தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆதியாகமம்
1. லீயாளுடைய புதல்வியாகிய தீனாள் அந்நாட்டுப் பெண்களைப் பார்க்க விரும்பி வெளியே புறப்பட்டுப் போனாள்.
2. ஏவையனான ஏமோரின் புதல்வனும் அந்நாட்டின் தலைவனுமாய் இருந்த சிக்கேம் அவளைக் கண்டு மோகம் கொண்டு, அவளைக் கவர்ந்து சென்று அவளுடன் கூடிக் கன்னிப் பெண்ணாய் இருந்த அவளைக் கட்டாயமாய்க் கற்பழித்தான்.
3. அவன் மனம் அவள் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தது. அவன் அவளுடைய துயரத்தை இனிய சொற்களாலும் வேடிக்கைகளாலும் ஆற்றித் தேற்றினான்.
4. மேலும் தன் தந்தையாகிய ஏமோரைப் போய்ப் பார்த்து: இந்தப் பெண்ணை எனக்கு மனைவியாகப் பெற்றுத்தர வேண்டும் என்றான்.
5. யாக்கோபு இதைக் கேள்விப்பட்ட போது, அவன் புதல்வர் அந்நேரம் வீட்டிலில்லை; மந்தைகளை மேய்க்கும் அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திரும்பி வரும் வரை யாக்கோபு பேசாமல் இருந்தான்.
6. சிக்கேமின் தந்தையாகிய ஏமோர் யாக்கோபோடு பேசும் பொருட்டுப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது யாக்கோபின் புதல்வர்கள் காட்டிலிருந்து வந்தார்கள்.
7. அவர்கள் நிகழ்ந்ததைக் கேள்வியுற்றதும்: சிக்கேம் யாக்கோபின் புதல்வியோடு சேர்ந்தது செய்யத் தகாத மதி கெட்ட செயல் என்றும், அதனாலே இஸ்ராயேலுக்கு மானக்கேடு உண்டானது என்றும் சொல்லி, மனம் கொதித்துச் சினம் கொண்டார்கள்.
8. அப்பொழுது ஏமோர் அவர்களை நோக்கி: என் புதல்வனாகிய சிக்கேமின் மனம் உங்கள் பெண் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருக்கிறது. அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள்.
9. நீங்கள் எங்களோடு கலந்து, உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுங்கள்; எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுப்போம்.
10. எங்களோடு நீங்கள் குடியிருங்கள். இந்நாடு உங்கள் ஆதீனத்தில் இருக்கிறது. அதிலே நீங்கள் பயிர் செய்தும் வியாபாரம் செய்தும் அதனை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்றான்.
11. சிக்கேமும், தீனாளுடைய தந்தையையும் சகோதரர்களையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும். நீங்கள் எதைத் தீர்மானித்துக் கேட்பீர்களோ அதை நான் தருகிறேன்.
12. பரிசத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்; வெகுமதிகளையும் கேளுங்கள். நீங்கள் எவ்வளவு கேட்டாலும், நான் மனமாரத் தருவேன். அந்தப் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகக் கொடுங்கள் என்றான்.
13. யாக்கோபின் புதல்வர்கள் தங்கள் சகோதரிக்கு வந்த அவமானத்தைப் பற்றிச் சீற்றம் கொண்டவர்களாய்ச் சிக்கேமையும் அவன் தந்தையையும் பார்த்துக் கபடமாய்க் கூறிய மறுமொழியாவது:
14. நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது. விருத்தசேதனம் செய்யப்படாத ஆடவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுக்கவே மாட்டோம். அது எங்களுக்குள்ளே பெரிய அவமானமும் அடாத செயலும் ஆகும்.
15. ஆனால், நீங்களும் உங்களுக்குள் இருக்கும் ஆண் மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டு எங்களைப் போல் ஆக இசைந்தால், நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளலாம்.
16. அப்போது உங்களுக்கும் எங்களுக்குமிடையே கொள்வனை கொடுப்பனை இருக்கும். நாங்கள் உங்களோடு குடியிருந்து ஒரே இனமாயிருப்போம்.
17. நீங்கள் விருத்தசேதனம் செய்ய இசையாவிட்டாலோ, நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போவோம் என்றனர்.
18. அவர்கள் சொன்ன வார்த்தை ஏமோருக்கும் அவன் மகன் சிக்கேமுக்கும் நியாயமாய்த் தோன்றியது.
19. அந்த இளைஞன் அவர்கள் கேட்டபடி செய்யத் தாமதிக்கவில்லை. ஏனென்றால், அவன் அந்தப் பெண்ணை (அவ்வளவு) அதிகமாய் நேசித்ததுமல்லாமல், அவனே (தன்) தந்தை வீட்டார் அனைவருக்குள்ளும் சிறந்தவனாயுமிருந்தான்.
20. அவனும் அவனுடைய தந்தையும் நகை வாயிலுக்கு வந்து, மக்களை நோக்கி:
21. இந்த மனிதர்கள் நம்மோடு சமாதானமாய் இருக்கிறார்கள். நம் நாட்டில் குடியிருக்க மனமுள்ளவர்கள். பரந்து விரிந்த இந்த நாட்டிற்குக் குடிகள் போதவில்லை. அவர்கள் விருப்பப்படி பயிரிட்டாலும் இடலாம்; வியாபாரம் செய்தாலும் செய்யலாம். அவர்கள் பெண்களை நாம் மனைவியாக்கிக் கொண்டு, நம் பெண்களை அவர்களுக்குக் கொடுப்போம்.
22. இவ்வளவு நன்மைக்கும் தடையாயிருப்பது என்னவென்றால், அந்த இனத்தார் விருத்தசேதனம் செய்து கொள்ளுதல் வழக்கம். அவர்களைப் போல, நம்மிலுள்ள ஆண் மக்களும் நுனித்தோலை வெட்டிக் கொள்ள வேண்டுமாம்.
23. செய்தால் தான், அவர்களுடைய சொத்துக்களும், மந்தைகளும், மற்றும் எல்லாப் பொருட்களும் நம்மைச் சேரும். நாம் அவர்களுக்குச் சம்மதிப்போமாகில் அவர்களும் (நம்மோடு) கூடி வாழ, (நாம்) ஒரே இனமாய் இருப்போம் என்று சொன்னார்கள்.
24. இதைக் கேட்டு, எல்லாரும் சரியென்று ஒத்துக் கொண்டமையால், ஆண் மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.
25. மூன்றாம் நாளிலே அவர்களுக்கு அதிக வலி உண்டான போது, யாக்கோபின் புதல்வரும் தீனாளின் சகோதரருமான சிமையோன், லேவி என்னும் இவ்விருவரும் தத்தம் வாளை எடுத்துக் கொண்டு, துணிவுடன் அந்நகருக்குள் புகுந்து, ஆண்கள் யாவரையும் வெட்டிப் போட்டு,
26. ஏமோரையும் சிக்கேமையும் கூடக் கொலை செய்து, தங்கள் சகோதரி தீனாளைச் சிக்கேமின் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய் விட்டனர்.
27. இவர்கள் வெளியே போன பின், யாக்கோபின் ஏனைய புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்கள் மேல் பாய்ந்து, (தங்கள் சகோதரி) கற்பழிக்கப்பட்ட பாதகத்திற்குப் பழிவாங்க, ஊர் முழுவதையும் கொள்ளையிட்டனர்.
28. ஊராரின் ஆடு மாடு கழுதைகளையும், வீடுகளிலுள்ள எல்லாத் தட்டு முட்டுக்களையும், இருந்தவை எல்லாவற்றையும் கொள்ளையிட்டனர்.
29. அவர்களுடைய பிள்ளைகளையும் பெண்களையும் அடிமைகளாகச் சிறைப்பிடித்துக் கொண்டு போயினர்.
30. அவர்கள் அஞ்சா நெஞ்சுடன் அவையெல்லாம் செய்து முடித்த பின் யாக்கோபு சிமையோனையும் லேவியையும் நோக்கி: உங்களாலே என் புத்தி கலங்கிப் போயிற்று. இந்நாட்டில் குடியிருக்கிற கானானையரிடத்திலும் பெரேசையரிடத்திலும் என் பெயரைக் கெடுத்து விட்டீர்கள். நாம் கொஞ்சப் பேராய் இருக்கிறோம். அவர்கள் ஒன்றாய்க் கூடி என்னை அடித்துப் போடுவார்கள். நான் வெட்டுண்டு போனால் என் குடும்பம் அழியுமே என்றான்.
31. அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப் போல் நடத்தலாமோ என்று மறுமொழி கூறினர்.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 50
1 லீயாளுடைய புதல்வியாகிய தீனாள் அந்நாட்டுப் பெண்களைப் பார்க்க விரும்பி வெளியே புறப்பட்டுப் போனாள். 2 ஏவையனான ஏமோரின் புதல்வனும் அந்நாட்டின் தலைவனுமாய் இருந்த சிக்கேம் அவளைக் கண்டு மோகம் கொண்டு, அவளைக் கவர்ந்து சென்று அவளுடன் கூடிக் கன்னிப் பெண்ணாய் இருந்த அவளைக் கட்டாயமாய்க் கற்பழித்தான். 3 அவன் மனம் அவள் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தது. அவன் அவளுடைய துயரத்தை இனிய சொற்களாலும் வேடிக்கைகளாலும் ஆற்றித் தேற்றினான். 4 மேலும் தன் தந்தையாகிய ஏமோரைப் போய்ப் பார்த்து: இந்தப் பெண்ணை எனக்கு மனைவியாகப் பெற்றுத்தர வேண்டும் என்றான். 5 யாக்கோபு இதைக் கேள்விப்பட்ட போது, அவன் புதல்வர் அந்நேரம் வீட்டிலில்லை; மந்தைகளை மேய்க்கும் அலுவலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திரும்பி வரும் வரை யாக்கோபு பேசாமல் இருந்தான். 6 சிக்கேமின் தந்தையாகிய ஏமோர் யாக்கோபோடு பேசும் பொருட்டுப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது யாக்கோபின் புதல்வர்கள் காட்டிலிருந்து வந்தார்கள். 7 அவர்கள் நிகழ்ந்ததைக் கேள்வியுற்றதும்: சிக்கேம் யாக்கோபின் புதல்வியோடு சேர்ந்தது செய்யத் தகாத மதி கெட்ட செயல் என்றும், அதனாலே இஸ்ராயேலுக்கு மானக்கேடு உண்டானது என்றும் சொல்லி, மனம் கொதித்துச் சினம் கொண்டார்கள். 8 அப்பொழுது ஏமோர் அவர்களை நோக்கி: என் புதல்வனாகிய சிக்கேமின் மனம் உங்கள் பெண் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருக்கிறது. அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள். 9 நீங்கள் எங்களோடு கலந்து, உங்கள் பெண்களை எங்களுக்குக் கொடுங்கள்; எங்கள் பெண்களை உங்களுக்குக் கொடுப்போம். 10 எங்களோடு நீங்கள் குடியிருங்கள். இந்நாடு உங்கள் ஆதீனத்தில் இருக்கிறது. அதிலே நீங்கள் பயிர் செய்தும் வியாபாரம் செய்தும் அதனை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்றான். 11 சிக்கேமும், தீனாளுடைய தந்தையையும் சகோதரர்களையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும். நீங்கள் எதைத் தீர்மானித்துக் கேட்பீர்களோ அதை நான் தருகிறேன். 12 பரிசத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள்; வெகுமதிகளையும் கேளுங்கள். நீங்கள் எவ்வளவு கேட்டாலும், நான் மனமாரத் தருவேன். அந்தப் பெண்ணை மட்டும் எனக்கு மனைவியாகக் கொடுங்கள் என்றான். 13 யாக்கோபின் புதல்வர்கள் தங்கள் சகோதரிக்கு வந்த அவமானத்தைப் பற்றிச் சீற்றம் கொண்டவர்களாய்ச் சிக்கேமையும் அவன் தந்தையையும் பார்த்துக் கபடமாய்க் கூறிய மறுமொழியாவது: 14 நீங்கள் கேட்டபடி செய்ய எங்களால் முடியாது. விருத்தசேதனம் செய்யப்படாத ஆடவனுக்கு எங்கள் சகோதரியைக் கொடுக்கவே மாட்டோம். அது எங்களுக்குள்ளே பெரிய அவமானமும் அடாத செயலும் ஆகும். 15 ஆனால், நீங்களும் உங்களுக்குள் இருக்கும் ஆண் மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்து கொண்டு எங்களைப் போல் ஆக இசைந்தால், நாங்கள் உங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளலாம். 16 அப்போது உங்களுக்கும் எங்களுக்குமிடையே கொள்வனை கொடுப்பனை இருக்கும். நாங்கள் உங்களோடு குடியிருந்து ஒரே இனமாயிருப்போம். 17 நீங்கள் விருத்தசேதனம் செய்ய இசையாவிட்டாலோ, நாங்கள் எங்கள் பெண்ணை அழைத்துக் கொண்டு போவோம் என்றனர். 18 அவர்கள் சொன்ன வார்த்தை ஏமோருக்கும் அவன் மகன் சிக்கேமுக்கும் நியாயமாய்த் தோன்றியது. 19 அந்த இளைஞன் அவர்கள் கேட்டபடி செய்யத் தாமதிக்கவில்லை. ஏனென்றால், அவன் அந்தப் பெண்ணை (அவ்வளவு) அதிகமாய் நேசித்ததுமல்லாமல், அவனே (தன்) தந்தை வீட்டார் அனைவருக்குள்ளும் சிறந்தவனாயுமிருந்தான். 20 அவனும் அவனுடைய தந்தையும் நகை வாயிலுக்கு வந்து, மக்களை நோக்கி: 21 இந்த மனிதர்கள் நம்மோடு சமாதானமாய் இருக்கிறார்கள். நம் நாட்டில் குடியிருக்க மனமுள்ளவர்கள். பரந்து விரிந்த இந்த நாட்டிற்குக் குடிகள் போதவில்லை. அவர்கள் விருப்பப்படி பயிரிட்டாலும் இடலாம்; வியாபாரம் செய்தாலும் செய்யலாம். அவர்கள் பெண்களை நாம் மனைவியாக்கிக் கொண்டு, நம் பெண்களை அவர்களுக்குக் கொடுப்போம். 22 இவ்வளவு நன்மைக்கும் தடையாயிருப்பது என்னவென்றால், அந்த இனத்தார் விருத்தசேதனம் செய்து கொள்ளுதல் வழக்கம். அவர்களைப் போல, நம்மிலுள்ள ஆண் மக்களும் நுனித்தோலை வெட்டிக் கொள்ள வேண்டுமாம். 23 செய்தால் தான், அவர்களுடைய சொத்துக்களும், மந்தைகளும், மற்றும் எல்லாப் பொருட்களும் நம்மைச் சேரும். நாம் அவர்களுக்குச் சம்மதிப்போமாகில் அவர்களும் (நம்மோடு) கூடி வாழ, (நாம்) ஒரே இனமாய் இருப்போம் என்று சொன்னார்கள். 24 இதைக் கேட்டு, எல்லாரும் சரியென்று ஒத்துக் கொண்டமையால், ஆண் மக்கள் யாவரும் விருத்தசேதனம் செய்யப்பட்டனர். 25 மூன்றாம் நாளிலே அவர்களுக்கு அதிக வலி உண்டான போது, யாக்கோபின் புதல்வரும் தீனாளின் சகோதரருமான சிமையோன், லேவி என்னும் இவ்விருவரும் தத்தம் வாளை எடுத்துக் கொண்டு, துணிவுடன் அந்நகருக்குள் புகுந்து, ஆண்கள் யாவரையும் வெட்டிப் போட்டு, 26 ஏமோரையும் சிக்கேமையும் கூடக் கொலை செய்து, தங்கள் சகோதரி தீனாளைச் சிக்கேமின் வீட்டினின்று அழைத்துக் கொண்டு போய் விட்டனர். 27 இவர்கள் வெளியே போன பின், யாக்கோபின் ஏனைய புதல்வர்கள் வந்து, வெட்டுண்டவர்கள் மேல் பாய்ந்து, (தங்கள் சகோதரி) கற்பழிக்கப்பட்ட பாதகத்திற்குப் பழிவாங்க, ஊர் முழுவதையும் கொள்ளையிட்டனர். 28 ஊராரின் ஆடு மாடு கழுதைகளையும், வீடுகளிலுள்ள எல்லாத் தட்டு முட்டுக்களையும், இருந்தவை எல்லாவற்றையும் கொள்ளையிட்டனர். 29 அவர்களுடைய பிள்ளைகளையும் பெண்களையும் அடிமைகளாகச் சிறைப்பிடித்துக் கொண்டு போயினர். 30 அவர்கள் அஞ்சா நெஞ்சுடன் அவையெல்லாம் செய்து முடித்த பின் யாக்கோபு சிமையோனையும் லேவியையும் நோக்கி: உங்களாலே என் புத்தி கலங்கிப் போயிற்று. இந்நாட்டில் குடியிருக்கிற கானானையரிடத்திலும் பெரேசையரிடத்திலும் என் பெயரைக் கெடுத்து விட்டீர்கள். நாம் கொஞ்சப் பேராய் இருக்கிறோம். அவர்கள் ஒன்றாய்க் கூடி என்னை அடித்துப் போடுவார்கள். நான் வெட்டுண்டு போனால் என் குடும்பம் அழியுமே என்றான். 31 அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப் போல் நடத்தலாமோ என்று மறுமொழி கூறினர்.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 50
×

Alert

×

Tamil Letters Keypad References