தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. பின்னர் யாக்கோபு தான் தொடங்கின பிரயாணத்தைத் தொடர்ந்தான். கடவுளின் தூதர்கள் வழியில் அவனை எதிர்கொண்டு வந்தார்கள்.
2. அவன் அவர்களைக் கண்டபோது: இதுதான் கடவுளின் படை என்று கூறி, அந்த இடத்திற்கு மகனாயீம் - அதாவது, பாளையம் - என்று பெயரிட்டான்.
3. பின் அவன் ஏதோம் நாட்டிலுள்ள செயீர் பகுதியில் வாழ்ந்து வந்த தன் தமையன் எசாயூவிடம் ஆட்களை அனுப்பி:
4. நீங்கள் என் தலைவன் எசாயூவிடம் போய், உம் தம்பி யாக்கோபு அனுப்பும் செய்தியாவது: நான் லாபானிடம் அகதியாகச் சஞ்சரித்து இந்நாள் வரையிலும் அவனிடம் தங்கியிருந்தேன்.
5. மாடுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் எனக்கு உண்டு. இப்போது உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்கத் தக்கதாய், என் தலைவனான உமக்குத் தூது அனுப்பலானேன் எனச் சொல்லுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.
6. அவர்கள் (போய்) யாக்கோபிடம் திரும்பி வந்து: நாங்கள் உம் தமையனார் எசாயூவிடம் போனோம். அவர் இதோ நானூறு பேருடன் விரைந்து உம்மைச் சந்திக்க வருகிறார் என்றனர்.
7. யாக்கோபு மிகவும் அஞ்சித் திடுக்கிட்டு, தன்னுடன் இருந்த ஆட்களையும், ஆடு மாடு ஒட்டகங்களாகிய மந்தைகளையும் இரண்டாகப் பிரித்து:
8. எசாயூ ஒரு பிரிவைத் தாக்கி அதை முறியடித்தாலும், மற்ற பிரிவாவது தப்புமே என்றான்.
9. மேலும் யாக்கோபு: என் தந்தை ஆபிரகாமின் கடவுளும் என் தந்தை ஈசாக்கின் கடவுளுமாயிருக்கிற ஆண்டவரே, நீர் என்னை நோக்கி: உன் சொந்த நாட்டிற்கும் உன் பிறந்த பூமிக்கும் திரும்பிப் போ; நாம் உன்னை ஆசீர்வதிப்போம் எனத் திருவாக்கருளினீரன்றோ?
10. அடியேனுக்கு நீர் செய்து வந்துள்ள எல்லாத் தயவுக்கும், நிறைவேற்றின சத்தியத்திற்கும் நான் தகுதியுள்ளவனல்லன். நான் கோலும் கையுமாய் (இந்த) யோர்தான் (நதியைக்) கடந்தேனே; இப்போதோ, இரண்டு பரிவாரங்களோடு திரும்பி வரலானேன்.
11. என் தமையனாகிய எசாயூவின் கையினின்று என்னைக் காத்தருளும். அவனுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். ஒரு வேளை அவள் வந்து, பிள்ளைகளையும் தாயையும் அழிக்கக் கூடும்.
12. நீர் அடியேனுக்கு நன்மை புரிவதாகவும், என் சந்ததியை எண்ணப்படாத கடலின் மணலைப் போலப் பெருகச் செய்வதாகவும் திருவாக்களித்தீரன்றோ (என்று மன்றாடினான்).
13. அன்றிரவும் அவன் அங்கேயே தூங்கி, தனக்குச் சொந்தமானவற்றிலே தமையனாகிய எசாயூவுக்குக் காணிக்கையாக
14. இருபது வெள்ளாட்டுக் கிடாய்களோடு இருநூறு வெள்ளாடுகளையும், இருபது செம்மறிக் கிடாய்களோடு இருநூறு செம்மறியாடுகளையும்,
15. பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும் அவற்றின் குட்டிகளையும், நாற்பது பசுக்களையும் இருபது காளைகளையும், இருபது கோவேறு கழுதைகளையும், பத்துக் கழுதைக் குட்டிகளையும் பிரித்தெடுத்து, ஊழியக்காரர் கையில்
16. ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாய் ஒப்புவித்து: நீங்கள் மந்தைக்கு முன்னும் பின்னுமாய் இடம் விட்டு எனக்கு முன் ஓட்டிக் கொண்டு போங்கள் என்று சொன்னான்.
17. பின் (யாக்கோபு) முந்திப் போகிறவனை நோக்கி: என் தமையனாகிய எசாயூ உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடைய ஆள்? அல்லது, நீ எங்கே போகிறாய்? அல்லது, நீ ஓட்டிப் போகிற மந்தை யாருடையது என்று அவன் உன்னைக் கேட்டால், நீ:
18. இவை உம் அடியானாகிய யாக்கோபினுடையவை. அவர், தம் தலைவனாகிய எசாயூக்கு இவற்றைக் காணிக்கையாக அனுப்பினார். அவரும் எங்கள் பின்னால் வருகிறார் என்று பதில் சொல்வாய் என்றான்.
19. அதேவிதமாய் யாக்கோபு இரண்டு மூன்று வேலைக்காரர்களையும், மந்தைகளை ஓட்டிப் போகிற மற்று முள்ளோர்களையும் நோக்கி: நீங்களும் எசாயூவைக் காணும் போது அவ்விதமாகவே அவரிடம் சொல்லுங்கள்.
20. மேலும்: இதோ உம் அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார். ஏனென்றால், அவர்: முன்னே வெகுமதிகளை அனுப்பித் தமையனாரைச் சமாதானப் படுத்திக் கொண்ட பின்பே அவருடைய முகத்தில் விழிப்பேன் என்றும், அப்பொழுது அவர் ஒருவேளை என்மேல் இரக்கமாய் இருப்பார் என்றும் நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பினான்.
21. அவ்விதமே காணிக்கைகள் யாக்கோபுக்குமுன் கொண்டு போகப் பட்டன. அவனோ, அன்றிரவு பாளையத்தில் தங்கினான்.
22. பின் அவன் அதிகாலையிலே துயில் விட்டெழுந்து, தன் புதல்வர் பதினொருவரையும், இரு மனைவியரையும் இரண்டு வேலைக்காரிகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டு, ஜாபோக் ஆற்றின் துறையைக் கடந்தான்.
23. பின்னர் தனக்கு உண்டான யாவையும் ஆற்றைக் கடக்கப் பண்ணி, தான் (மட்டும்) பிந்தித் தனித்திருந்தான்.
24. அப்பொழுது ஓர் ஆடவன் பொழுது விடியுமட்டும் அவனோடு போராடிக் கொண்டிருந்தான்.
25. யாக்கோபை வெல்லத் தன்னாலே கூடாதென்று கண்ட அந்த ஆடவன் அவன் தொடை நரம்பைத் தொட்டான். தொடவே, அது மரத்துப் போயிற்று.
26. அப்பொழுது ஆடவன்: என்னைப் போகவிடு; பொழுது புலரப் போகிறது என, யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போக விடேன் என்று மறுமொழி சொன்னான்.
27. ஆடவன்: உன் பெயர் என்ன என, அவன்: நான் யாக்கோபு என்றான்.
28. அப்பொழுது அவர்: உன் பெயர் இனி யாக்கோபு இல்லை; இஸ்ராயேல் எனப்படும். ஏனென்றால், நீ கடவுளோடு போராடி மேற்கொண்டாயென்றால், மனிதர்களை மேற்கொள்வாயென்று சொல்லவும் வேண்டுமா என்றார்.
29. யாக்கோபு அவரை நோக்கி: உம் பெயர் என்ன? அடியேனுக்கு அறிவிக்க வேண்டும் என்று வினவ, அவர்; என் பெயரை நீ கேட்பதென்ன என்று பதில் சொல்லி, அந்த இடத்திலேயே அவனை ஆசீர்வதித்தார்.
30. அப்பொழுது யாக்கோபு: நான் கடவுளை நேரிலே கண்டிருந்தும் உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பானுவேல் என்று பெயரிட்டான்.
31. அவன் பானுவேலுக்கு அப்பால் சென்றவுடனே சூரியன் உதித்தது. அவனோ, கால் நொண்டி நொண்டி நடந்தான்.
32. அதன் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் இந்நாள் வரை தொடைச் சந்து நரம்பை உண்பதில்லை. ஏனென்றால், (முன் சொல்லப்பட்ட ஆடவனால்) யாக்கோபின் நரம்பு தொடப்படவே, அது சூம்பிப் போயிற்று.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 32 of Total Chapters 50
ஆதியாகமம் 32:65

×

Alert

×

tamil Letters Keypad References