தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆதியாகமம்
1. சாறாள் நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த பின், கானான் நாட்டிலுள்ள எபிறோன் என்னும் பெயருள்ள அற்பே நகரில் இறந்தாள்.
2. அவளுக்காகப் புலம்பி அழும்படி ஆபிரகாம் வந்தார்.
3. இறுதிக்கடன்களை முடித்த பின் அவர் எழுந்து, ஏட் என்பவனுடைய புதல்வர்களோடு பேசி:
4. நான் உங்களிடையே அந்நியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்வதற்கு எனக்குச் சொந்தமாக உங்களிடமுள்ள ஒரு கல்லறை நிலத்தைத் தரவேண்டும் என்று மன்றாடினார்.
5. ஏத்தின் புதல்வர் அதற்கு மறுமொழியாக: ஐயா, நாங்கள் சொல்வதைக் கேளும்.
6. நீர் எங்கள் நடுவில் கடவுளிடமிருந்து வரும் தலைவன் போல் இருக்கிறீர். எங்கள் சிறந்த கல்லறைகளில் ஏதேனும் ஒன்றில் உமது வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்தாலும் செய்யலாம்: என் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டாம் என்று எங்களில் ஒருவனும் உம்மைத் தடுக்க மாட்டான் (என்றனர்).
7. அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்நாட்டினராகிய ஏத்தின் புதல்வர்களுக்கு வணக்கம் செய்து, அவர்களை நோக்கி:
8. என் வீட்டுப் பிணத்தை நான் அடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால் நான் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் செயோரின் புதல்வரான எபிரோனிடம் எனக்காகப் பரிந்து பேசி, அவருக்குச் சொந்தமாய் அவர் நிலத்தின் கடைக் கோடியிலிருக்கும் இரட்டைக் குகையை நான் சொந்தக் கல்லறையாக உரிமை கொள்ளுமாறு,
9. அவர் உங்கள் முன்னிலையில் நியாயமான விலையை வாங்கிக் கொண்டு எனக்கு விற்கவேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
10. ஏத்தின் புதல்வர்கள் நடுவிலே குடியிருந்த எபிரோன் தன் நகர் வாயிலுக்கு வந்திருந்த யாவரும் கேட்க ஆபிரகாமை நோக்கி:
11. அது வேண்டாம், ஐயா! அதை விட, நான் சொல்வதை நீர் கேளும்: என் இனத்தவர் முன்னிலையிலே இதோ! என் நிலத்தையும் அதிலுள்ள குகையையும் உமக்குச் சொந்தமாய்த் தருகிறேன். அதிலே உம் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்யும் என்றார்.
12. அப்போது ஆபிரகாம் நாட்டு மக்கள் முன் வணக்கம் புரிந்து,
13. அவர்கள் அனைவரும் கேட்க, எபிரோனை நோக்கி: நான் சொல்வதைத் தயவு செய்து கேட்பீராக. நிலத்தை விலைக்குத் தான் கேட்கிறேன். நீர் அதன் விலையை வாங்கிக் கொள்ளும். அப்போது அடக்கம் செய்வேன் என்றார்.
14. அதற்கு எபிரோன்: ஐயா என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு சீக்கல் வெள்ளிக் காசுகள் பெறுமானது. நம்மிருவரிடையேயும் அதுவே விலை.
15. ஆனால், அது எம்மாத்திரம்? உம் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்வீராக என்றான்.
16. இதைக் கேட்டவுடனே, எபிரோன் சொன்னபடியே ஆபிரகாம் நானூறு சீக்கல் வெள்ளிக் காசுகளை ஏத்தின் புதல்வர்கள் முன்னிலையில் நிறுத்துக் கொடுத்தார். அந்தக் காசுகளோ, ஊரில் செல்லுபடியாகும் நாணயமான காசுகளேயாம்.
17. இவ்வாறு மம்பிறேய்க்கு எதிரேயுள்ளதும், அதுவரை எபிரோனுக்குச் சொந்தமானதும் இரட்டைக் குகைகளையுடையதுமான அந்த நிலமும், அதிலுள்ள குகையும், அதன் எல்லையெங்கும் சூழ்ந்திருந்த மரங்களும் கிரயத்திற்கு விற்கப்பட்டன.
18. ஏத்தின் புதல்வர்களும், எபிறோன் நகர் வாயிலில் நின்று கொண்டிருந்த யாவரும் அறிய அது ஆபிரகாமுக்குச் சொந்தமாகி விட்டது.
19. இவ்வாறு மம்பிறேய்க்கு எதிரான அந்த நிலத்திலுள்ள இரட்டைக் குகையில் ஆபிரகாம் தம் மனைவி சாறாளை அடக்கம் செய்தார். கானான் நாட்டிலுள்ள எபிறோன் அதுவேயாம்.
20. அப்பொழுது அந்த நிலமும் அதிலிருந்த குகையும் ஏத்தின் புதல்வர்களால் ஆபிரகாமுக்குச் சொந்தமான கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டன.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 50
1 சாறாள் நூற்றிருபத்தேழு ஆண்டுகள் வாழ்ந்த பின், கானான் நாட்டிலுள்ள எபிறோன் என்னும் பெயருள்ள அற்பே நகரில் இறந்தாள். 2 அவளுக்காகப் புலம்பி அழும்படி ஆபிரகாம் வந்தார். 3 இறுதிக்கடன்களை முடித்த பின் அவர் எழுந்து, ஏட் என்பவனுடைய புதல்வர்களோடு பேசி: 4 நான் உங்களிடையே அந்நியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்வதற்கு எனக்குச் சொந்தமாக உங்களிடமுள்ள ஒரு கல்லறை நிலத்தைத் தரவேண்டும் என்று மன்றாடினார். 5 ஏத்தின் புதல்வர் அதற்கு மறுமொழியாக: ஐயா, நாங்கள் சொல்வதைக் கேளும். 6 நீர் எங்கள் நடுவில் கடவுளிடமிருந்து வரும் தலைவன் போல் இருக்கிறீர். எங்கள் சிறந்த கல்லறைகளில் ஏதேனும் ஒன்றில் உமது வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்தாலும் செய்யலாம்: என் கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டாம் என்று எங்களில் ஒருவனும் உம்மைத் தடுக்க மாட்டான் (என்றனர்). 7 அப்போது ஆபிரகாம் எழுந்து, அந்நாட்டினராகிய ஏத்தின் புதல்வர்களுக்கு வணக்கம் செய்து, அவர்களை நோக்கி: 8 என் வீட்டுப் பிணத்தை நான் அடக்கம் செய்வதை நீங்கள் விரும்பினால் நான் சொல்லும் வார்த்தையைக் கேளுங்கள். நீங்கள் செயோரின் புதல்வரான எபிரோனிடம் எனக்காகப் பரிந்து பேசி, அவருக்குச் சொந்தமாய் அவர் நிலத்தின் கடைக் கோடியிலிருக்கும் இரட்டைக் குகையை நான் சொந்தக் கல்லறையாக உரிமை கொள்ளுமாறு, 9 அவர் உங்கள் முன்னிலையில் நியாயமான விலையை வாங்கிக் கொண்டு எனக்கு விற்கவேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். 10 ஏத்தின் புதல்வர்கள் நடுவிலே குடியிருந்த எபிரோன் தன் நகர் வாயிலுக்கு வந்திருந்த யாவரும் கேட்க ஆபிரகாமை நோக்கி: 11 அது வேண்டாம், ஐயா! அதை விட, நான் சொல்வதை நீர் கேளும்: என் இனத்தவர் முன்னிலையிலே இதோ! என் நிலத்தையும் அதிலுள்ள குகையையும் உமக்குச் சொந்தமாய்த் தருகிறேன். அதிலே உம் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்யும் என்றார். 12 அப்போது ஆபிரகாம் நாட்டு மக்கள் முன் வணக்கம் புரிந்து, 13 அவர்கள் அனைவரும் கேட்க, எபிரோனை நோக்கி: நான் சொல்வதைத் தயவு செய்து கேட்பீராக. நிலத்தை விலைக்குத் தான் கேட்கிறேன். நீர் அதன் விலையை வாங்கிக் கொள்ளும். அப்போது அடக்கம் செய்வேன் என்றார். 14 அதற்கு எபிரோன்: ஐயா என் வார்த்தையைக் கேளும். நீர் கேட்கிற நிலம் நானூறு சீக்கல் வெள்ளிக் காசுகள் பெறுமானது. நம்மிருவரிடையேயும் அதுவே விலை. 15 ஆனால், அது எம்மாத்திரம்? உம் வீட்டுப் பிணத்தை அடக்கம் செய்வீராக என்றான். 16 இதைக் கேட்டவுடனே, எபிரோன் சொன்னபடியே ஆபிரகாம் நானூறு சீக்கல் வெள்ளிக் காசுகளை ஏத்தின் புதல்வர்கள் முன்னிலையில் நிறுத்துக் கொடுத்தார். அந்தக் காசுகளோ, ஊரில் செல்லுபடியாகும் நாணயமான காசுகளேயாம். 17 இவ்வாறு மம்பிறேய்க்கு எதிரேயுள்ளதும், அதுவரை எபிரோனுக்குச் சொந்தமானதும் இரட்டைக் குகைகளையுடையதுமான அந்த நிலமும், அதிலுள்ள குகையும், அதன் எல்லையெங்கும் சூழ்ந்திருந்த மரங்களும் கிரயத்திற்கு விற்கப்பட்டன. 18 ஏத்தின் புதல்வர்களும், எபிறோன் நகர் வாயிலில் நின்று கொண்டிருந்த யாவரும் அறிய அது ஆபிரகாமுக்குச் சொந்தமாகி விட்டது. 19 இவ்வாறு மம்பிறேய்க்கு எதிரான அந்த நிலத்திலுள்ள இரட்டைக் குகையில் ஆபிரகாம் தம் மனைவி சாறாளை அடக்கம் செய்தார். கானான் நாட்டிலுள்ள எபிறோன் அதுவேயாம். 20 அப்பொழுது அந்த நிலமும் அதிலிருந்த குகையும் ஏத்தின் புதல்வர்களால் ஆபிரகாமுக்குச் சொந்தமான கல்லறை நிலமாக உறுதிப்படுத்தப்பட்டன.
மொத்தம் 50 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 50
×

Alert

×

Tamil Letters Keypad References