தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஆதியாகமம்
1. ஆபிராம் தொண்ணுற்றொன்பது வயதுள்ளவனாய் இருந்த போது ஆண்டவர் அவனுக்குத் தோன்றி: நாம் எல்லாம் வல்ல கடவுள். நீ நமக்குமுன் நடந்து உத்தமனாய் இரு.
2. நாம் நமக்கும் உனக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்து, உன்னை மிகுதியாய்ப் பெருகச் செய்வோம் என்றார்.
3. ஆபிராம் முகம் குப்புற விழுந்து தொழுதான்.
4. அப்பொழுது கடவுள் அவனைப் பார்த்து: நாம் சுயம்பு. இதோ, நம் உடன்படிக்கை உன்னுடன் இருக்கும். நீ திரளான மக்களுக்குத் தந்தையாவாய்.
5. இன்று முதல் உன் பெயர் ஆபிராம் அன்று, ஆபிரகாம் என்றே அழைக்கப்படுவாய். ஏனென்றால், அநேக மக்களுக்கு உன்னைத் தந்தையாக ஏற்படுத்தினோம்.
6. நாம் உன்னைப் பெருந்திரளாய் விருத்தியடையச் செய்து பல இனத்தாருக்கும் உன்னைத் தந்தையாக்குவோம். அரசர்களும் உன்னிடமிருந்து தோன்றுவார்கள்.
7. நமக்கும் உனக்கும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நம் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாய் நிறுவுவோம். அதனாலே உனக்கும் உனக்குப் பின் உன் சந்ததியார்களுக்கும் நாம் கடவுளாக இருப்போம்.
8. அன்றியும், உனக்கு அன்னிய நாடாகிய இந்தக் கானான் நாடு முழுவதையும் உனக்கும் உன் சந்ததியாருக்கும் நித்திய உரிமையாகக் கொடுத்து, நாம் அவர்களுக்குக் கடவுளாக இருப்போம் என்றார்.
9. மீண்டும் கடவுள் ஆபிரகாமை நோக்கி: ஆதலால், நமது உடன்படிக்கையை நீயும் உனக்குப் பின் உன் சந்ததியாரும் தலைமுறை தலைமுறையாய்க் கடைப்பிடித்து வருவீர்களாக.
10. நமக்கும் உங்களுக்கும் உனக்குப் பின் வரும் சந்ததிக்குமிடையே உள்ள உடன்படிக்கை என்னவெனில், உங்களுக்குப் பிறக்கும் எல்லா ஆண் பிள்ளைகளுக்கும் விருத்தசேதனம் செய்யப்படும் என்பதாகும்.
11. நமக்கும் உங்களுக்குமிடையே (ஏற்பட்ட) உடன்படிக்கைக்கு அடையாளமாக உங்கள் நுனித்தோலை வெட்டுவீர்களாக.
12. உங்களில் ஆணாய்ப் பிறந்த குழந்தை எட்டாம் நாளிலே விருத்தசேதனம் பண்ணப்படும். உங்கள் வீட்டில் பிறந்த ஊழியனும் சரி, விலைக்கு வாங்கின அடிமையும் சரி, புறவினத்துப் பிள்ளையும் சரி, உங்களில் தலைமுறை தலைமுறையாய்ப் பிறக்கும் ஆண் பிள்ளைகளெல்லாம் விருத்தசேதனம் பண்ணப்படுவார்கள்.
13. இவ்வாறு நம் உடன்படிக்கை உங்கள் மாமிசத்திலே நித்திய உடன்படிக்கையாய் இருக்கும்.
14. நுனித் தோல் வெட்டப்படாத ஆண்பிள்ளை இருந்தால், அப்படிப்பட்டவன் நம் உடன்படிக்கையை மீறினபடியால் தன் இனத்தினின்று விலக்குண்டு போவான் என்றார்.
15. மீண்டும் கடவுள் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாறாயியை, இனிச் சாறாயி என்றழையாமல், சாறாள் என்று அழைப்பாய்.
16. நாம் அவளை ஆசீர்வதிப்போம். அவள் மூலம் நாம் உனக்குத் தரவிருக்கிற புதல்வனையும் ஆசீர்வதிப்போம். இவன் பல மக்களுக்கும் முதல்வனாவான்; எல்லா இனத்தவரின் அரசர்களுக்கும் தந்தையாவான் என்றருளினார்.
17. ஆபிரகாம் முகம் குப்புற விழுந்து, புன் முறுவலோடு: நூறு வயதுள்ளவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணுறு வயதுள்ள சாறாள் பிள்ளை பெறுவாளோ என்று உள்ளத்தில் நினைந்து, கடவுளைப் பார்த்து:
18. இஸ்மாயில் உம் முன்னனிலையில் பிழைக்கக் கடவான் என்று விண்ணப்பம் செய்தார்.
19. அதற்குக் கடவுள் ஆபிரகாமை நோக்கி; உன் மனைவி சாறாள் உனக்கு ஒரு புதல்வனைப் பெறுவாள். அவனுக்கு ஈசாக் என்று பெயரிடுவாய். நம் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக நிறுவுவோம்.
20. அன்றியும் இஸ்மாயிலுக்காக நீ செய்த விண்ணப்பத்தையும் கேட்டருளினோம். இதோ, அவனுக்கு நாம் ஆசீர் அளிப்போம். அவனை நாம் மிகவும் பலுகிப் பெருகச் செய்வோம். அவன் பன்னிரண்டு தலைவர்களைப் பெறுவான். அவனை மாபெரும் இனமாக விருத்தியடையச் செய்வோம்.
21. ஆனால், வருகிற ஆண்டு இதே காலத்தில் சாறாள் உனக்குப் பெறவிருக்கிற ஈசாக்கோடு நாம் நம் உடன்படிக்கையை ஏற்படுத்துவோம் என்றார்.
22. ஆண்டவர் ஆபிரகாமோடு பேசி முடிந்த பின்பு ஆபிரகாமை விட்டு மறைந்தார்.
23. ஆபிரகாம் தம் மகனான இஸ்மாயிலும், தம் வீட்டில் பிறந்த ஊழியரும், விலைக்கு வாங்கப் பட்டிருந்த அனைவருமாகிய தம் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா ஆண்களையும் அன்றே அழைத்துக் கடவுள் தமக்குக் கட்டளையிட்ட வண்ணம், உடனே அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தார்.
24. ஆபிரகாம் தமக்குத்தாமே நுனித் தோலை வெட்டிக் கொண்டார். அப்பொழுது அவருக்குத் தொண்ணுற்றொன்பது வயது.
25. அவர் மகனான இஸ்மாயில் பதின்மூன்று வயதுள்ள பிள்ளையாய் இருந்தான்.
26. ஒரே நாளில் ஆபிரகாமும், அவர் மகன் இஸ்மாயிலும் விருத்தசேதனம் செய்யப்பட்டார்கள்.
27. அவர் வீட்டில் பிறந்திருந்த எல்லா ஊழியர்களும், விலைக்கு வாங்கப் பட்ட அடிமைகளும், அன்னியர்களுமாகிய அவர் வீட்டு ஆடவர் அனைவரும் அவ்வாறே விருத்தசேதனம் செய்யப்பட்டனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 50 Chapters, Current Chapter 17 of Total Chapters 50
ஆதியாகமம் 17:33

×

Alert

×

tamil Letters Keypad References