தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
கலாத்தியர்
1. இன்னும் ஓர் எடுத்துக்காட்டுச் சொல்லுகிறேன்: தந்தையின் சொத்தனைத்திற்கும் என் மகன் தலைவனாய் இருந்தாலும், சிறுவனாய் இருக்கும் வரையில், அவனுக்கும் அடிமைக்கும் வேறுபாடு எதுவும் இல்லை;
2. தந்தை குறித்த நாள்வரை, பாதுகாப்பாளர்கள், கண்காணிப்பாளர்களின் பொறுப்பில் அவன் இருக்கிறான்.
3. அவ்வாறே நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகப் பூதங்களுக்கு அடிமைப்பட்டவர்களாய் இருந்தோம்.
4. ஆனால், காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக்கொள்வதற்காக,
5. கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார்.
6. அந்த ஆவியானவர் ' அப்பா, தந்தாய் ' எனக் கூப்பிடுகிறார். ஆகவே, இனி நீ அடிமை அல்ல, மகன்தான்;
7. மகனாயின் உரிமையாளனுமாம். இவையாவும் கடவுளின் செயலே.
8. ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தபோது, இயல்பாகவே, கடவுளல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்;
9. ஆனால், இப்பொழுது கடவுளை அறிந்து ஏற்றுக் கொண்டீர்கள்; சரியாய்ச் சொல்லவேண்டுமாயின், இப்பொழுது கடவுளே உங்களை அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அப்படியிருக்க வலுவற்ற வறுமை மிக்க உலகப் பூதங்களிடம் திரும்பிப் போய், அவற்றிற்கு மறுபடியும் அடிமைகளாவதற்கு நீங்கள் விரும்புவதெப்படி?
10. நாள், திங்கள், காலம், ஆண்டு இவற்றைப் பார்க்கிறீர்களே.
11. உங்களுக்காக நான் உழைத்தது வீண்தானா என அஞ்ச வேண்டியிருக்கிறது.
12. சகோதரர்களே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் என்னைப்போல் நடங்கள்; ஏனெனில், நான் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு அநீதி யொன்றும் இழைக்கவில்லை.
13. என் உடற் பிணிதான் உங்களுக்கு முதன்முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது. இது உங்களுக்கு நினைவிருக்கும்.
14. என் உடல் நிலை உங்களுக்கு இடைஞ்சலாய் இருந்தும், நீங்கள் என்னைப் புறக்கணிக்கவில்லை, வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வது போல் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; ஏன், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவே என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.
15. அதைப் பெரும் பேறாகவும் கருதினீர்கள்; அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால், உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுக்கத் தயங்கியிருக்க மாட்டீர்கள். உங்களைப்பற்றி இதைத் திண்ணமாகச் சொல்ல முடியும்.
16. இவ்வாறு உங்களுக்கு உண்மையைச் சொன்னதனால் உங்கள் பகைவன் ஆனேனோ?
17. முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதன்று. தங்கள் மேல் நீங்களும் அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள்.
18. உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே; ஆனால், அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.
19. என் குழந்தைகளே, குழந்தை பெற்றெடுக்கும் தாய்ப்போல, உங்களில் கிறிஸ்து உருவாகும் வரை, மறுபடியும் உங்களுக்காக நான் வேதனையுறுகிறேன்.
20. உங்களைப் பொறுத்த மட்டில் என்ன செய்வது என்றே எனக்கு விளங்கவில்லை. இப்பொழுதே நேரில் வந்து, உங்களோடு இருந்து, வேறு வகையாய்ப் பேசிப் பார்த்தால் நலமாயிருக்கும்.
21. சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறீர்களே, நான் ஒன்று கேட்கிறேன்; அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா?
22. ஆபிரகாமுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். 'ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன். மற்றவன் அடிமையல்லாத மனைவியிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது.
23. ஆனால், அடிமைப் பெண்ணின் மகன் இயல்பு முறைப்படி பிறந்தவன். அடிமையில்லாத மனைவியின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன்.
24. இது ஓர் உருவகம்: இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர்; ஒன்று, சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அதனால் அடிமைத்தனத்துக்கெனப் பிள்ளைகள் பிறக்கின்றனர்;
25. ஆகாரால் குறிக்கப்படுவது அரேபியாவிலுள்ள சீனாய் மலை. இது இப்பொழுதிருக்கும் யெருசலேமுக்கு அடையாளம். ஏனெனில், இது தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது.
26. விண்ணக யெருசலேமோ அடிமையன்று; அந்த யெருசலேம் நமக்கு அன்னை.
27. ஏனெனில், 'பிள்ளை பெறாத மலடியே மகிழ்வாயாக! பேறுகால வேதனையுறாதவளே, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிப்பாயாக! வாழ்க்கைப்பட்டவளின் மக்களைவிட கைவிடப்பட்டவளின் மக்களே மிகப் பலர்' என்று எழுதியுள்ளது.
28. ஆனவே சகோதரர்களே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியின் புதல்வர்கள்.
29. ஆனால், இயல்பு முறைப்படி பிறந்தவன் தேவ ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை எவ்வாறு அப்பொழுது துன்புறுத்தினானோ, அவ்வாறே இப்பொழுதும் நடக்கிறது.
30. எனினும் மறைநூல் கூறுவதென்ன? அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் விரட்டி விடு; அடிமை அல்லாத மனைவியின் மகனோடு அடிமைப் பெண்ணின் மகன் உரிமை கொண்டாட முடியாது'
31. ஆகவே, சகோதரர்களே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; அடிமை அல்லாத மனைவியின் மக்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 6 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 6
1 2 3 4 5 6
கலாத்தியர் 4:23
1 இன்னும் ஓர் எடுத்துக்காட்டுச் சொல்லுகிறேன்: தந்தையின் சொத்தனைத்திற்கும் என் மகன் தலைவனாய் இருந்தாலும், சிறுவனாய் இருக்கும் வரையில், அவனுக்கும் அடிமைக்கும் வேறுபாடு எதுவும் இல்லை; 2 தந்தை குறித்த நாள்வரை, பாதுகாப்பாளர்கள், கண்காணிப்பாளர்களின் பொறுப்பில் அவன் இருக்கிறான். 3 அவ்வாறே நாமும் சிறுவர்களாய் இருந்தபோது உலகப் பூதங்களுக்கு அடிமைப்பட்டவர்களாய் இருந்தோம். 4 ஆனால், காலம் நிறைவுற்றபோது, நாம் இறைவனின் பிள்ளைகளாகும்படி திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டுக்கொள்வதற்காக, 5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவராகவும் அனுப்பினார். 6 அந்த ஆவியானவர் ' அப்பா, தந்தாய் ' எனக் கூப்பிடுகிறார். ஆகவே, இனி நீ அடிமை அல்ல, மகன்தான்; 7 மகனாயின் உரிமையாளனுமாம். இவையாவும் கடவுளின் செயலே. 8 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தபோது, இயல்பாகவே, கடவுளல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்; 9 ஆனால், இப்பொழுது கடவுளை அறிந்து ஏற்றுக் கொண்டீர்கள்; சரியாய்ச் சொல்லவேண்டுமாயின், இப்பொழுது கடவுளே உங்களை அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அப்படியிருக்க வலுவற்ற வறுமை மிக்க உலகப் பூதங்களிடம் திரும்பிப் போய், அவற்றிற்கு மறுபடியும் அடிமைகளாவதற்கு நீங்கள் விரும்புவதெப்படி? 10 நாள், திங்கள், காலம், ஆண்டு இவற்றைப் பார்க்கிறீர்களே. 11 உங்களுக்காக நான் உழைத்தது வீண்தானா என அஞ்ச வேண்டியிருக்கிறது. 12 சகோதரர்களே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்: நீங்கள் என்னைப்போல் நடங்கள்; ஏனெனில், நான் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு அநீதி யொன்றும் இழைக்கவில்லை. 13 என் உடற் பிணிதான் உங்களுக்கு முதன்முதல் நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பளித்தது. இது உங்களுக்கு நினைவிருக்கும். 14 என் உடல் நிலை உங்களுக்கு இடைஞ்சலாய் இருந்தும், நீங்கள் என்னைப் புறக்கணிக்கவில்லை, வெறுத்து ஒதுக்கவில்லை. மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வது போல் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; ஏன், கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்வது போலவே என்னை ஏற்றுக்கொண்டீர்கள். 15 அதைப் பெரும் பேறாகவும் கருதினீர்கள்; அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால், உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுக்கத் தயங்கியிருக்க மாட்டீர்கள். உங்களைப்பற்றி இதைத் திண்ணமாகச் சொல்ல முடியும். 16 இவ்வாறு உங்களுக்கு உண்மையைச் சொன்னதனால் உங்கள் பகைவன் ஆனேனோ? 17 முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதன்று. தங்கள் மேல் நீங்களும் அதே ஆர்வம் காட்டவேண்டுமென்று அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்கப் பார்க்கிறார்கள். 18 உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே; ஆனால், அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும். 19 என் குழந்தைகளே, குழந்தை பெற்றெடுக்கும் தாய்ப்போல, உங்களில் கிறிஸ்து உருவாகும் வரை, மறுபடியும் உங்களுக்காக நான் வேதனையுறுகிறேன். 20 உங்களைப் பொறுத்த மட்டில் என்ன செய்வது என்றே எனக்கு விளங்கவில்லை. இப்பொழுதே நேரில் வந்து, உங்களோடு இருந்து, வேறு வகையாய்ப் பேசிப் பார்த்தால் நலமாயிருக்கும். 21 சட்டத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறீர்களே, நான் ஒன்று கேட்கிறேன்; அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா? 22 ஆபிரகாமுக்கு இரு புதல்வர்கள் இருந்தனர். 'ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன். மற்றவன் அடிமையல்லாத மனைவியிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது. 23 ஆனால், அடிமைப் பெண்ணின் மகன் இயல்பு முறைப்படி பிறந்தவன். அடிமையில்லாத மனைவியின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். 24 இது ஓர் உருவகம்: இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர்; ஒன்று, சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அதனால் அடிமைத்தனத்துக்கெனப் பிள்ளைகள் பிறக்கின்றனர்; 25 ஆகாரால் குறிக்கப்படுவது அரேபியாவிலுள்ள சீனாய் மலை. இது இப்பொழுதிருக்கும் யெருசலேமுக்கு அடையாளம். ஏனெனில், இது தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது. 26 விண்ணக யெருசலேமோ அடிமையன்று; அந்த யெருசலேம் நமக்கு அன்னை. 27 ஏனெனில், 'பிள்ளை பெறாத மலடியே மகிழ்வாயாக! பேறுகால வேதனையுறாதவளே, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிப்பாயாக! வாழ்க்கைப்பட்டவளின் மக்களைவிட கைவிடப்பட்டவளின் மக்களே மிகப் பலர்' என்று எழுதியுள்ளது. 28 ஆனவே சகோதரர்களே, ஈசாக்கைப் போல நீங்களும் வாக்குறுதியின் புதல்வர்கள். 29 ஆனால், இயல்பு முறைப்படி பிறந்தவன் தேவ ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை எவ்வாறு அப்பொழுது துன்புறுத்தினானோ, அவ்வாறே இப்பொழுதும் நடக்கிறது. 30 எனினும் மறைநூல் கூறுவதென்ன? அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் விரட்டி விடு; அடிமை அல்லாத மனைவியின் மகனோடு அடிமைப் பெண்ணின் மகன் உரிமை கொண்டாட முடியாது' 31 ஆகவே, சகோதரர்களே, நாம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; அடிமை அல்லாத மனைவியின் மக்கள்.
மொத்தம் 6 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 4 / 6
1 2 3 4 5 6
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References