தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
கலாத்தியர்
1. பதினான்கு ஆண்டுகள் கடந்தபின், தீத்துவையும் கூட்டிக்கொண்டு, மறுபடியும் பர்னபாவுடன் யெருசலேமுக்குப் போனேன்.
2. அங்குப் போகவேண்டுமென்று இறைவன் வெளிப்படுத்தியதால் நான் போனேன்; நான் புறவினத்தாரிடையே அறிவிக்கும் நற்செய்தியை அங்கே விளக்கிக் காட்டினேன்; அதாவது, செல்வாக்குள்ளவர்களுக்குத் தனிமையில் எடுத்துரைத்தேன். இப்போது நான் வருந்திச் செய்யும் வேலையும் இதுவரை உழைத்த உழைப்பும் வீணாகுமோ என்று அஞ்சி இப்படிச் செய்தேன்.
3. என்னுடனிருந்தத் தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை.
4. திருட்டுத்தனமாய் நுழைந்த கள்ளச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான், விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. யூதச் சட்டத்திற்கு அடிமைப்படாமல், கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் வாழும் முறையைப் பற்றி வேவுபார்க்க இவர்கள் வந்திருந்தனர். நம்மைத் திரும்பவும் பழைய அடிமை நிலைக்குக் கொண்டுவருவதே அவர்கள் நோக்கமாய் இருந்தது.
5. உங்கள் நன்மையை நினைத்து, நற்செய்தியின் உண்மையைப் பழுதுபடாமல் காக்க அவர்களுடைய வற்புறுத்தலுக்கு ஒரு நாழிகையேனும் நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
6. பெரியவர்கள் என மதிக்கப்பட்டவர்கள் கூட இவர்கள் முன்பு எந்நிலையில் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப்பார்த்தா செயலாற்றுகிறார்! அந்தச் செல்வாக்குள்ளவர்கள் கூட நான் போதிப்பதற்கு மேல் புதிதாய் ஒன்றும் சேர்க்கவில்லை.
7. மாறாக, விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி இராயப்பரிடம் ஒப்படைக்கப்பட்டது போலவே, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டனர் ஆம்,
8. விருத்தசேதனமுள்ளவர்களின் அப்போஸ்தலனாகும்படி இராயப்பருள் செயலாற்றியவரே புறவினத்தாரின் அப்போஸ்தலனாகும் படி என்னுள்ளும் செயலாற்றினார்.
9. அந்த அருள் எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் என மதிக்கப்பட்ட யாகப்பர், கேபா, அருளப்பர் ஆகியோர், நட்புறவின் அடையாளமாக, எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர்; விருத்தசேதனம் இல்லாதவர்க்கு நாங்கள் நற்செய்தி அறிவிப்பது என்றும் ஏற்பாடு செய்துகொண்டோம்.
10. ஏழைகளை மறக்க வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டனர்; அவர்களுக்கு உதவி செய்வதில் தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன்.
11. ஆனால், கேபா அந்தியோக்கியாவுக்கு வந்த போது, அவர் செய்வது கண்டனத்துக்கு உரியது என நன்றாகத் தெரிந்தால், நான் நேருக்கு நேராய் எதிர்த்தேன்.
12. ஏனெனில், யாகப்பரின் ஆட்கள் வருமுன், கேபா புறவினத்தாருடன் உண்டு வந்தார். ஆனால் அவர்கள் வந்தபோது, விருத்தசேதனம் உள்ளவர்க்கு அஞ்சிப் பிரிந்து விலகலானார்.
13. மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக்கூடக் கவர்ந்துவிட்டது.
14. ஆனால், அவர்கள் நற்செய்தியின் உண்மை எனும் நேர்பாதையில் நடவாததை நான் கண்டபோது, எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம் சொன்னதாவது: " நீர் யூதனாயிருந்தும், யூத முறைப்படி வாழ்கிறீரே. புறவினத்தார் யூத முறைமையைக் கடைப்பிடிக்கும்படி நீர் கட்டாயப்படுத்துவது எப்படி?"
15. "நாம் பிறப்பாலே யூதர்கள்; புறவினத்தாரைச் சார்ந்த பாவிகள் அல்ல;
16. எனினும், திருச்சட்டம் விதிக்கும் செயல்களால் அன்று, இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் மட்டுமே ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகக் கூடும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே தான் நாமும் திருச்சட்டம் விதித்த செயல்களாலன்று, கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவராகும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் கொண்டோம்; ஏனெனில், திருச் சட்டம் விதித்த செயல்களால் எந்த மனிதனும் இறைவனுக்கு ஏற்புடையவனாவதில்லை.
17. கிறிஸ்துவோடு இணைவதால் இறைவனுக்கு ஏற்புடையவராவதற்குத் தேடும் நாமும் பாவிகளே என்றால், கிறிஸ்து பாவத்திற்குத் துணை புரிகிறார் என்றாகுமே! இப்படி ஒருகாலும் சொல்லக் கூடாது.
18. நான் தகர்த்ததை நானே மீளவும் கட்டி எழுப்பினால், சட்டத்தை மீறினவன் என்பதை நானே நிலைநாட்டுபவன் ஆவேன்.
19. கடவுளுக்கென்று வாழும்படி நான் சட்டத்தின் செயலால் சட்டத்தைப் பொறுத்தமட்டில் இறந்தவன் ஆனேன்.
20. கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். இனி, வாழ்பவன் நானல்ல; என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்பு கூர்ந்தார்; எனக்காகத் தம்மையே கையளித்தார்.
21. கடவுளின் அருளை நான் வெறுமையாக்க மாட்டேன். ஏனெனில், திருச்சட்டத்தின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவராகக் கூடுமாயின், கிறிஸ்து இறந்தது வீணே. "
மொத்தம் 6 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 6
1 2 3 4 5 6
1 பதினான்கு ஆண்டுகள் கடந்தபின், தீத்துவையும் கூட்டிக்கொண்டு, மறுபடியும் பர்னபாவுடன் யெருசலேமுக்குப் போனேன். 2 அங்குப் போகவேண்டுமென்று இறைவன் வெளிப்படுத்தியதால் நான் போனேன்; நான் புறவினத்தாரிடையே அறிவிக்கும் நற்செய்தியை அங்கே விளக்கிக் காட்டினேன்; அதாவது, செல்வாக்குள்ளவர்களுக்குத் தனிமையில் எடுத்துரைத்தேன். இப்போது நான் வருந்திச் செய்யும் வேலையும் இதுவரை உழைத்த உழைப்பும் வீணாகுமோ என்று அஞ்சி இப்படிச் செய்தேன். 3 என்னுடனிருந்தத் தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை. 4 திருட்டுத்தனமாய் நுழைந்த கள்ளச் சகோதரர்கள் அங்கே இருந்ததால்தான், விருத்தசேதனத்தைப் பற்றிய பேச்சு எழுந்தது. யூதச் சட்டத்திற்கு அடிமைப்படாமல், கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் வாழும் முறையைப் பற்றி வேவுபார்க்க இவர்கள் வந்திருந்தனர். நம்மைத் திரும்பவும் பழைய அடிமை நிலைக்குக் கொண்டுவருவதே அவர்கள் நோக்கமாய் இருந்தது. 5 உங்கள் நன்மையை நினைத்து, நற்செய்தியின் உண்மையைப் பழுதுபடாமல் காக்க அவர்களுடைய வற்புறுத்தலுக்கு ஒரு நாழிகையேனும் நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை. 6 பெரியவர்கள் என மதிக்கப்பட்டவர்கள் கூட இவர்கள் முன்பு எந்நிலையில் இருந்தார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. கடவுள் ஆளைப்பார்த்தா செயலாற்றுகிறார்! அந்தச் செல்வாக்குள்ளவர்கள் கூட நான் போதிப்பதற்கு மேல் புதிதாய் ஒன்றும் சேர்க்கவில்லை. 7 மாறாக, விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கும் பணி இராயப்பரிடம் ஒப்படைக்கப்பட்டது போலவே, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு அதை அறிவிக்கும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டனர் ஆம், 8 விருத்தசேதனமுள்ளவர்களின் அப்போஸ்தலனாகும்படி இராயப்பருள் செயலாற்றியவரே புறவினத்தாரின் அப்போஸ்தலனாகும் படி என்னுள்ளும் செயலாற்றினார். 9 அந்த அருள் எனக்கு அளிக்கப்பட்டதை உணர்ந்து, திருச்சபையின் தூண்கள் என மதிக்கப்பட்ட யாகப்பர், கேபா, அருளப்பர் ஆகியோர், நட்புறவின் அடையாளமாக, எனக்கும் பர்னபாவுக்கும் கை கொடுத்தனர்; விருத்தசேதனம் இல்லாதவர்க்கு நாங்கள் நற்செய்தி அறிவிப்பது என்றும் ஏற்பாடு செய்துகொண்டோம். 10 ஏழைகளை மறக்க வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டனர்; அவர்களுக்கு உதவி செய்வதில் தான் முழு ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்தேன். 11 ஆனால், கேபா அந்தியோக்கியாவுக்கு வந்த போது, அவர் செய்வது கண்டனத்துக்கு உரியது என நன்றாகத் தெரிந்தால், நான் நேருக்கு நேராய் எதிர்த்தேன். 12 ஏனெனில், யாகப்பரின் ஆட்கள் வருமுன், கேபா புறவினத்தாருடன் உண்டு வந்தார். ஆனால் அவர்கள் வந்தபோது, விருத்தசேதனம் உள்ளவர்க்கு அஞ்சிப் பிரிந்து விலகலானார். 13 மற்ற யூதர்களும் இந்த வெளிவேடத்தில் அவரோடு சேர்ந்து கொண்டனர். இந்த வெளிவேடம் பர்னபாவைக்கூடக் கவர்ந்துவிட்டது. 14 ஆனால், அவர்கள் நற்செய்தியின் உண்மை எனும் நேர்பாதையில் நடவாததை நான் கண்டபோது, எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம் சொன்னதாவது: " நீர் யூதனாயிருந்தும், யூத முறைப்படி வாழ்கிறீரே. புறவினத்தார் யூத முறைமையைக் கடைப்பிடிக்கும்படி நீர் கட்டாயப்படுத்துவது எப்படி?" 15 "நாம் பிறப்பாலே யூதர்கள்; புறவினத்தாரைச் சார்ந்த பாவிகள் அல்ல; 16 எனினும், திருச்சட்டம் விதிக்கும் செயல்களால் அன்று, இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் மட்டுமே ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகக் கூடும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே தான் நாமும் திருச்சட்டம் விதித்த செயல்களாலன்று, கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவராகும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் கொண்டோம்; ஏனெனில், திருச் சட்டம் விதித்த செயல்களால் எந்த மனிதனும் இறைவனுக்கு ஏற்புடையவனாவதில்லை. 17 கிறிஸ்துவோடு இணைவதால் இறைவனுக்கு ஏற்புடையவராவதற்குத் தேடும் நாமும் பாவிகளே என்றால், கிறிஸ்து பாவத்திற்குத் துணை புரிகிறார் என்றாகுமே! இப்படி ஒருகாலும் சொல்லக் கூடாது. 18 நான் தகர்த்ததை நானே மீளவும் கட்டி எழுப்பினால், சட்டத்தை மீறினவன் என்பதை நானே நிலைநாட்டுபவன் ஆவேன். 19 கடவுளுக்கென்று வாழும்படி நான் சட்டத்தின் செயலால் சட்டத்தைப் பொறுத்தமட்டில் இறந்தவன் ஆனேன். 20 கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். இனி, வாழ்பவன் நானல்ல; என்னில் வாழ்பவர் கிறிஸ்துவே. இப்போது ஊனுடலோடு நான் வாழ்வது கடவுளின் மகன்மேல் உள்ள விசுவாசத்தின் வாழ்வாகும். இவரே என்மேல் அன்பு கூர்ந்தார்; எனக்காகத் தம்மையே கையளித்தார். 21 கடவுளின் அருளை நான் வெறுமையாக்க மாட்டேன். ஏனெனில், திருச்சட்டத்தின் வழியாய் இறைவனுக்கு ஏற்புடையவராகக் கூடுமாயின், கிறிஸ்து இறந்தது வீணே. "
மொத்தம் 6 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 2 / 6
1 2 3 4 5 6
×

Alert

×

Tamil Letters Keypad References