தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எஸ்றா
1. தத்தம் நகரங்களிலே வாழ்ந்து வந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஏழாம் மாதத்திலே யெருசலேமில் ஒன்று கூடினர்.
2. அப்பொழுது யோசதேக்கின் மகன் யோசுவாவும் அவர் உடன் குருக்களும், சலாத்தியேலின் மகன் ஜெரோபாபேலும், அவர் சகோதரர்களும் சேர்ந்து, கடவுளின் மனிதரான மோயீசனின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளவாறு தகனப் பலிகளை ஒப்புக்கொடுக்கும்படி இஸ்ராயேலின் கடவுளுக்கு ஒரு பீடம் எழுப்பினார்கள்.
3. அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்கள் அவர்களை அச்சுறுத்தியும், அவர்கள் கடவுளுடைய பீடத்தை அது முன்பு இருந்த இடத்திலேயே அமைத்தனர்; அதன் மேல் காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்குத் தகனப்பலி செலுத்தி வந்தனர்.
4. (திருச்சட்டநூலில்) எழுதியள்ளவாறு அவர்கள் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடினர்; அன்றாடக் கடமைகளை முறைப்படி நிறைவேற்றி, நாளும் தகனப்பலி செலுத்தி வந்தனர்.
5. அதற்குப் பிறகு, ஆண்டவரின் திருநாட்களான அமாவசை நாட்களிலும், மற்றக் கொண்டாட்டங்களின் போதும் தகனப்பலிகள் செலுத்தப்பட்டன; அத்தோடு காணிக்கைகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
6. ஏழாவது மாதத்தின் முதல் நாளிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலியை ஒப்புக்கொடுத்து வந்தார்கள். ஆனால் கடவுளுடைய ஆலயத்திற்கு இன்னும் அடிக்கல் நாட்டப் படவில்லை.
7. அப்பொழுது பாரசீக அரசன் சீருசின் கட்டளைப்படி, அவர்கள் கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். மேலும், லீபானிலிருந்து யோப்பேக் கடலுக்குக் கேதுரு மரங்களைக் கொண்டு வரும்படி சீதோன், தீர் நகரத்தாருக்கு உணவு, பானம், எண்ணெய் முதலியன கொடுத்தனர்.
8. அவர்கள் யெருசலேமில் உள்ள கடவுளின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் சலாத்தியேலின் மகன் ஜெரோபாபேலும், யோசதேக்கின் மகன் யோசுவாவும், அவர்களுடைய உடன்குருக்களும், லேவியர்களும், அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமிற்குத் திரும்பி வந்திருந்த எல்லாருமே ஆண்டவருடைய ஆலய வேலையைத் தொடங்கினர். இவ்வேலையை விரைவில் முடிக்க இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதினரான லேவியர்களை நியமித்தனர்.
9. மேலும் ஆலய வேலை செய்து வந்தவர்களை ஊக்குவிப்பதற்காக யோசுவாவும் அவன் புதல்வரும் சகோதரர்களும், கேத்மிகேலும் அவனுடைய புதல்வரும் சகோதரர்களும், கேத்மிகேலும் அவனுடைய புதல்வரும், யூதாவின் புதல்வர்களும் முன்வந்தனர்; கெனாதாத்தின் புதல்வர்களும் அவர்களுடைய சகோதரர்களான லேவியர்களும் அவ்விதமே முன் வந்தனர்.
10. கொத்தர்கள் ஆண்டவருடைய ஆலயத்திற்கு அடித்தளம் இட்டபின் இஸ்ராயேல் அரசர் தாவீது கட்டளை இட்டிருந்தவாறு, கடவுளைப் புகழ்வதற்காக, அணி செய்யப்பட்ட ஆடைகளை உடுத்தியிருந்த குருக்கள் எக்காளங்களோடும், ஆசாப்பின் மக்களான லேவியர்கள் தாளங்களோடும், அங்கு வந்து நின்றனர்.
11. அவர்கள் பாடல்களைப் பாடி, "ஆண்டவர் நல்லவர்; ஏனெனில் அவரது இரக்கம் இஸ்ராயேல் மீது என்றென்றும் உள்ளது" என்று ஆண்டவரை போற்றிப் புகழ்ந்தனர். மக்கள் எல்லாரும் அவரைப் புகழ்ந்து ஆண்டவரின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை எண்ணி, மகிழ்ச்சி கொண்டாடினர்.
12. பழைய ஆலயத்தைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மக்களின் மூப்பர் ஆகியோரில் பலர், புது ஆலயத்திற்குப் போடப்பட்டிருந்த அடித்தளத்தைக் கண்டு உரத்த குரலில் அழுதனர். வேறு பலரோ மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர்.
13. ஆனால், மகிழ்ச்சிக் குரலையும் அழுகைக் குரலையும் பிரித்துணர எவராலும் முடியவில்லை; ஏனெனில், வெகுதூரம் கேட்கும்படி மக்கள் பெரும் கூச்சலிட்டனர்.

பதிவுகள்

மொத்தம் 10 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 10
1 2 3 4 5 6 7 8 9 10
1 தத்தம் நகரங்களிலே வாழ்ந்து வந்த இஸ்ராயேல் மக்கள் அனைவரும் ஏழாம் மாதத்திலே யெருசலேமில் ஒன்று கூடினர். 2 அப்பொழுது யோசதேக்கின் மகன் யோசுவாவும் அவர் உடன் குருக்களும், சலாத்தியேலின் மகன் ஜெரோபாபேலும், அவர் சகோதரர்களும் சேர்ந்து, கடவுளின் மனிதரான மோயீசனின் திருச்சட்ட நூலில் எழுதியுள்ளவாறு தகனப் பலிகளை ஒப்புக்கொடுக்கும்படி இஸ்ராயேலின் கடவுளுக்கு ஒரு பீடம் எழுப்பினார்கள். 3 அவர்களைச் சுற்றி வாழ்ந்து வந்த மக்கள் அவர்களை அச்சுறுத்தியும், அவர்கள் கடவுளுடைய பீடத்தை அது முன்பு இருந்த இடத்திலேயே அமைத்தனர்; அதன் மேல் காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்குத் தகனப்பலி செலுத்தி வந்தனர். 4 (திருச்சட்டநூலில்) எழுதியள்ளவாறு அவர்கள் கூடாரத் திருவிழாவைக் கொண்டாடினர்; அன்றாடக் கடமைகளை முறைப்படி நிறைவேற்றி, நாளும் தகனப்பலி செலுத்தி வந்தனர். 5 அதற்குப் பிறகு, ஆண்டவரின் திருநாட்களான அமாவசை நாட்களிலும், மற்றக் கொண்டாட்டங்களின் போதும் தகனப்பலிகள் செலுத்தப்பட்டன; அத்தோடு காணிக்கைகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டன. 6 ஏழாவது மாதத்தின் முதல் நாளிலிருந்து அவர்கள் ஆண்டவருக்குத் தகனப்பலியை ஒப்புக்கொடுத்து வந்தார்கள். ஆனால் கடவுளுடைய ஆலயத்திற்கு இன்னும் அடிக்கல் நாட்டப் படவில்லை. 7 அப்பொழுது பாரசீக அரசன் சீருசின் கட்டளைப்படி, அவர்கள் கொத்தர்களுக்கும் தச்சர்களுக்கும் பணம் கொடுத்தார்கள். மேலும், லீபானிலிருந்து யோப்பேக் கடலுக்குக் கேதுரு மரங்களைக் கொண்டு வரும்படி சீதோன், தீர் நகரத்தாருக்கு உணவு, பானம், எண்ணெய் முதலியன கொடுத்தனர். 8 அவர்கள் யெருசலேமில் உள்ள கடவுளின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்த இரண்டாம் ஆண்டின் இரண்டாம் மாதத்தில் சலாத்தியேலின் மகன் ஜெரோபாபேலும், யோசதேக்கின் மகன் யோசுவாவும், அவர்களுடைய உடன்குருக்களும், லேவியர்களும், அடிமைத்தனத்திலிருந்து யெருசலேமிற்குத் திரும்பி வந்திருந்த எல்லாருமே ஆண்டவருடைய ஆலய வேலையைத் தொடங்கினர். இவ்வேலையை விரைவில் முடிக்க இருபதும் அதற்கும் மேற்பட்ட வயதினரான லேவியர்களை நியமித்தனர். 9 மேலும் ஆலய வேலை செய்து வந்தவர்களை ஊக்குவிப்பதற்காக யோசுவாவும் அவன் புதல்வரும் சகோதரர்களும், கேத்மிகேலும் அவனுடைய புதல்வரும் சகோதரர்களும், கேத்மிகேலும் அவனுடைய புதல்வரும், யூதாவின் புதல்வர்களும் முன்வந்தனர்; கெனாதாத்தின் புதல்வர்களும் அவர்களுடைய சகோதரர்களான லேவியர்களும் அவ்விதமே முன் வந்தனர். 10 கொத்தர்கள் ஆண்டவருடைய ஆலயத்திற்கு அடித்தளம் இட்டபின் இஸ்ராயேல் அரசர் தாவீது கட்டளை இட்டிருந்தவாறு, கடவுளைப் புகழ்வதற்காக, அணி செய்யப்பட்ட ஆடைகளை உடுத்தியிருந்த குருக்கள் எக்காளங்களோடும், ஆசாப்பின் மக்களான லேவியர்கள் தாளங்களோடும், அங்கு வந்து நின்றனர். 11 அவர்கள் பாடல்களைப் பாடி, "ஆண்டவர் நல்லவர்; ஏனெனில் அவரது இரக்கம் இஸ்ராயேல் மீது என்றென்றும் உள்ளது" என்று ஆண்டவரை போற்றிப் புகழ்ந்தனர். மக்கள் எல்லாரும் அவரைப் புகழ்ந்து ஆண்டவரின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை எண்ணி, மகிழ்ச்சி கொண்டாடினர். 12 பழைய ஆலயத்தைக் கண்டிருந்த குருக்கள், லேவியர், குலத்தலைவர்கள், மக்களின் மூப்பர் ஆகியோரில் பலர், புது ஆலயத்திற்குப் போடப்பட்டிருந்த அடித்தளத்தைக் கண்டு உரத்த குரலில் அழுதனர். வேறு பலரோ மகிழ்ச்சிக் குரல் எழுப்பினர். 13 ஆனால், மகிழ்ச்சிக் குரலையும் அழுகைக் குரலையும் பிரித்துணர எவராலும் முடியவில்லை; ஏனெனில், வெகுதூரம் கேட்கும்படி மக்கள் பெரும் கூச்சலிட்டனர்.
மொத்தம் 10 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 10
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

Tamil Letters Keypad References