தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எசேக்கியேல்
1. ஆண்டவருடைய வாக்கு என்னிடம் வந்தது:
2. மனிதா, இஸ்ராயேல் நாட்டைக்குறித்து ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ முடிவு! நாட்டின் நாற்றிசையிலும் முடிவு வருகிறது!
3. இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நம் கோபத்தை உன் மீது அனுப்புவோம்; உன் நடத்தைக்கு ஒத்தபடி உன்னை தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களையெல்லாம் உன் மீது சுமத்துவோம்;
4. நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உனக்குத் தயைகூர மாட்டோம். ஆனால் உன் நடத்தைக்கேற்ற தண்டனையை உன் மீது வரச்செய்வோம்; உன்னுடைய அக்கிரமங்கள் உன் நடுவிலேயே இருக்கும்; அப்போது நாமே உன் ஆண்டவர் என்பதை அறிவாய்.
5. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தீங்கு வருகிறது! இதோ, தீங்கு வருகிறது!
6. முடிவு வருகிறது, வருகிறது முடிவு! உனக்கு எதிராக எழுந்து வருகிறது, இதோ வந்து விட்டது!
7. இஸ்ராயேல் நாட்டில் வாழும் உன் மீது வேதனை வருகிறது; பழிவாங்கும் நாள் வந்துவிட்டது; மலைகளின் மகிழ்ச்சிக்குரிய நாள் கடந்து போயிற்று.
8. விரைவில் இப்பொழுதே நம் கோபத்தை உன் மேல் சுமத்துவோம்; நமது சினத்தை உன் மீது தீர்த்துக் கொள்வோம்; உன் நடத்தைக்குத் தக்கவாறு உன்னைத் தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களின் பலனை உன் மீது வரச் செய்வோம்.
9. நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உன்மேல் தயைகூர மாட்டோம்; உன் நடத்தையின் பலனை உன் மீது சுமத்துவோம்; உன் அக்கிரமங்கள் உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும். அப்போது ஆண்டவராகிய நாமே உன்னைத் தண்டிக்கிறவர் என்பதை அறிவாய்.
10. இதோ, அந்த நாள்! இதோ, வந்துவிட்டது! உன் வேதனை தொடங்கிவிட்டது; உன்னை அடிக்கும் தடி பூத்து விட்டது. உன் அகந்தையும் வளர்ந்திருக்கிறது.
11. அக்கிரமம் கொடுங்கோலாக மலர்ந்துள்ளது; அவர்களிலும், அவர்களின் இனத்திலும், அவர்களுடைய மகிமையிலும் ஒன்றும் விடப்படாது; யாவும் அழிந்துபோம்;
12. காலம் வருகிறது; அந்த நாள் அருகில் உள்ளது; வாங்குகிறவன் மகிழாமலும், விற்கிறவன் வருந்தாமலும் இருப்பானாக; ஏனெனில் எல்லாரும் கோபத்துக்கு ஆளானார்கள்;
13. விற்கிறவன் விற்ற உடைமையைத் திரும்பி அடையமாட்டான்; ஏனெனில் இப்போது வாழ்கிறவர்களின் காலத்திலேயே அது நடக்கும்; எல்லாரையும் பற்றிச் சொல்லப்பட்ட இந்த இறைவாக்கு வீணாகாது; எந்த மனிதனும் தன்னுடைய தீய வாழ்வில் அமைதி காணமுடியாது.
14. எக்காளம் ஊதுவர்; எல்லாரும் தயாராய் இருப்பர்; ஆனால் சண்டைக்குப் போகிறவன் எவனுமில்லை. ஏனெனில் மக்கள் அனைவர் மேலும் நாம் கோபமாய் இருக்கிறோம்.
15. இஸ்ராயேலரின் பாவங்கள்: "வெளியில் வாளும், உள்ளே கொள்ளை நோயும் பஞ்சமும் உண்டாகும்; வயல் வெளியிலுள்ளவன் வாளுக்கு இரையாவான்; பட்டணத்தில் இருப்பவனோ பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்.
16. தப்பி ஒடுகிறவர்கள் பிழைப்பார்கள்; ஆயினும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் அக்கிரமத்துக்காக மனம் வருந்தி, கணவாய்களிலுள்ள மாடப்புறாக்களைப் போல் மலைகளின் மேல் நிற்பார்கள்.
17. அப்போது கைகள் எல்லாம் பலனற்றுப்போகும்; முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப் போலத் தத்தளிக்கும்.
18. அஞ்சி நடுங்கி அனைவரும் மயிராடைகளை உடுத்திக் கொள்வார்கள்; எல்லாரும் வெட்கி நாணுவர்; தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்வார்கள்.
19. அவர்களுடைய வெள்ளி வெளியே எறியப்படும்; தங்கம் அவர்களுக்கு வெறுப்புள்ளதாகும்; ஆண்டவருடைய கோபத்தின் நாளில் அவர்களை விடுவிக்க அவர்களிடமிருக்கும் வெள்ளியாலும் தங்கத்தாலும் இயலாது; அவர்கள் தங்கள் உள்ளத்தைத் திருப்தியாக்குவதுமில்லை; தங்கள் வயிற்றை நிரப்புவதுமில்லை. ஏனெனில் அவர்களின் அக்கிரமத்தினால் அவர்களது செல்வமே அவர்களுக்கு இடறலாய் அமைந்தது.
20. தங்கள் அணிகலன்களைப் பார்த்து அவர்கள் அகந்தை கொண்டார்கள்; அவற்றைக் கொண்டு தங்கள் அக்கிரமத்தின் படிமங்களையும் சிலைகளின் உருவங்களையும் செய்தார்கள்; ஆகையால் பொன்னையும் வெள்ளியையும் அவர்களுக்கு வெறுப்புள்ளதாக்குவோம்.
21. அதை அந்நியர் கொள்ளையடிக்கச் செய்வோம்; அக்கிரமிகளான உலகத்தார் சூறையாடக் கொடுப்போம்; அவர்கள் அதைத் தாழ்வான காரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள்.
22. அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்; அவர்கள் நம்முடைய கோயிலின் அந்தரங்கமான இடத்தை அசுத்தப் படுத்துவார்கள்; கள்ளர்களும் அதனுள் நுழைந்து அதனைப் பங்கப் படுத்துவார்கள்.
23. நீ ஒரு சங்கிலியைச் செய்துகொள்: நாடு முழுவதும் இரத்தப்பழியால் நிறைந்துள்ளது; நகரெங்கும் அக்கிரமம் நிரம்பியுள்ளது.
24. ஆகையால் புறவினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவோம்; அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்; வலிமையுள்ளவர்களின் அகங்காரம் அடங்கும்; இவர்களின் பரிசுத்த இடங்களை அவர்கள் உரிமையாக்கிக் கொள்வார்.
25. முற்றுகையின் நெருக்கடி மிகுதியாகும் போது, நம் மக்கள் சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனால் அதைக் கண்டடைய மாட்டார்கள்.
26. அழிவுக்கு மேல் அழிவு உண்டாகும்; துயரச் செய்தியைத் தெடர்ந்து துயரச் செய்தி கிடைக்கும்; இறைவாக்கினரின் காட்சியை நாடுவார்கள்; ஆனால் குருக்களிடமிருந்து வேதமும், மூப்பர்களிடமிருந்து நல்லாலோசனையும் ஒழிந்து போயின.
27. அரசன் வருந்தி அழுவான்; இளவரசன் திகைத்து நிற்பான்; குடிமக்கள் தைரியமற்றுப் போவார்கள்; நாம் அவரவர் நடத்தைக்குத் தக்கவாறு நீதியாய்த் தீர்ப்பிட்டு அதற்கேற்பத் தண்டிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 48
1 ஆண்டவருடைய வாக்கு என்னிடம் வந்தது: 2 மனிதா, இஸ்ராயேல் நாட்டைக்குறித்து ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ முடிவு! நாட்டின் நாற்றிசையிலும் முடிவு வருகிறது! 3 இப்பொழுதே முடிவு உனக்கு வந்துவிட்டது. நம் கோபத்தை உன் மீது அனுப்புவோம்; உன் நடத்தைக்கு ஒத்தபடி உன்னை தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களையெல்லாம் உன் மீது சுமத்துவோம்; 4 நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உனக்குத் தயைகூர மாட்டோம். ஆனால் உன் நடத்தைக்கேற்ற தண்டனையை உன் மீது வரச்செய்வோம்; உன்னுடைய அக்கிரமங்கள் உன் நடுவிலேயே இருக்கும்; அப்போது நாமே உன் ஆண்டவர் என்பதை அறிவாய். 5 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தீங்கு வருகிறது! இதோ, தீங்கு வருகிறது! 6 முடிவு வருகிறது, வருகிறது முடிவு! உனக்கு எதிராக எழுந்து வருகிறது, இதோ வந்து விட்டது! 7 இஸ்ராயேல் நாட்டில் வாழும் உன் மீது வேதனை வருகிறது; பழிவாங்கும் நாள் வந்துவிட்டது; மலைகளின் மகிழ்ச்சிக்குரிய நாள் கடந்து போயிற்று. 8 விரைவில் இப்பொழுதே நம் கோபத்தை உன் மேல் சுமத்துவோம்; நமது சினத்தை உன் மீது தீர்த்துக் கொள்வோம்; உன் நடத்தைக்குத் தக்கவாறு உன்னைத் தீர்ப்பிடுவோம்; உன் அக்கிரமங்களின் பலனை உன் மீது வரச் செய்வோம். 9 நமது கண் உனக்கு இரக்கம் காட்டாது; நாம் உன்மேல் தயைகூர மாட்டோம்; உன் நடத்தையின் பலனை உன் மீது சுமத்துவோம்; உன் அக்கிரமங்கள் உன்னைச் சுற்றிக்கொண்டிருக்கும். அப்போது ஆண்டவராகிய நாமே உன்னைத் தண்டிக்கிறவர் என்பதை அறிவாய். 10 இதோ, அந்த நாள்! இதோ, வந்துவிட்டது! உன் வேதனை தொடங்கிவிட்டது; உன்னை அடிக்கும் தடி பூத்து விட்டது. உன் அகந்தையும் வளர்ந்திருக்கிறது. 11 அக்கிரமம் கொடுங்கோலாக மலர்ந்துள்ளது; அவர்களிலும், அவர்களின் இனத்திலும், அவர்களுடைய மகிமையிலும் ஒன்றும் விடப்படாது; யாவும் அழிந்துபோம்; 12 காலம் வருகிறது; அந்த நாள் அருகில் உள்ளது; வாங்குகிறவன் மகிழாமலும், விற்கிறவன் வருந்தாமலும் இருப்பானாக; ஏனெனில் எல்லாரும் கோபத்துக்கு ஆளானார்கள்; 13 விற்கிறவன் விற்ற உடைமையைத் திரும்பி அடையமாட்டான்; ஏனெனில் இப்போது வாழ்கிறவர்களின் காலத்திலேயே அது நடக்கும்; எல்லாரையும் பற்றிச் சொல்லப்பட்ட இந்த இறைவாக்கு வீணாகாது; எந்த மனிதனும் தன்னுடைய தீய வாழ்வில் அமைதி காணமுடியாது. 14 எக்காளம் ஊதுவர்; எல்லாரும் தயாராய் இருப்பர்; ஆனால் சண்டைக்குப் போகிறவன் எவனுமில்லை. ஏனெனில் மக்கள் அனைவர் மேலும் நாம் கோபமாய் இருக்கிறோம். 15 இஸ்ராயேலரின் பாவங்கள்: "வெளியில் வாளும், உள்ளே கொள்ளை நோயும் பஞ்சமும் உண்டாகும்; வயல் வெளியிலுள்ளவன் வாளுக்கு இரையாவான்; பட்டணத்தில் இருப்பவனோ பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான். 16 தப்பி ஒடுகிறவர்கள் பிழைப்பார்கள்; ஆயினும் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் அக்கிரமத்துக்காக மனம் வருந்தி, கணவாய்களிலுள்ள மாடப்புறாக்களைப் போல் மலைகளின் மேல் நிற்பார்கள். 17 அப்போது கைகள் எல்லாம் பலனற்றுப்போகும்; முழங்கால்கள் எல்லாம் தண்ணீரைப் போலத் தத்தளிக்கும். 18 அஞ்சி நடுங்கி அனைவரும் மயிராடைகளை உடுத்திக் கொள்வார்கள்; எல்லாரும் வெட்கி நாணுவர்; தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்வார்கள். 19 அவர்களுடைய வெள்ளி வெளியே எறியப்படும்; தங்கம் அவர்களுக்கு வெறுப்புள்ளதாகும்; ஆண்டவருடைய கோபத்தின் நாளில் அவர்களை விடுவிக்க அவர்களிடமிருக்கும் வெள்ளியாலும் தங்கத்தாலும் இயலாது; அவர்கள் தங்கள் உள்ளத்தைத் திருப்தியாக்குவதுமில்லை; தங்கள் வயிற்றை நிரப்புவதுமில்லை. ஏனெனில் அவர்களின் அக்கிரமத்தினால் அவர்களது செல்வமே அவர்களுக்கு இடறலாய் அமைந்தது. 20 தங்கள் அணிகலன்களைப் பார்த்து அவர்கள் அகந்தை கொண்டார்கள்; அவற்றைக் கொண்டு தங்கள் அக்கிரமத்தின் படிமங்களையும் சிலைகளின் உருவங்களையும் செய்தார்கள்; ஆகையால் பொன்னையும் வெள்ளியையும் அவர்களுக்கு வெறுப்புள்ளதாக்குவோம். 21 அதை அந்நியர் கொள்ளையடிக்கச் செய்வோம்; அக்கிரமிகளான உலகத்தார் சூறையாடக் கொடுப்போம்; அவர்கள் அதைத் தாழ்வான காரியங்களுக்குப் பயன்படுத்துவார்கள். 22 அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக்கொள்வோம்; அவர்கள் நம்முடைய கோயிலின் அந்தரங்கமான இடத்தை அசுத்தப் படுத்துவார்கள்; கள்ளர்களும் அதனுள் நுழைந்து அதனைப் பங்கப் படுத்துவார்கள். 23 நீ ஒரு சங்கிலியைச் செய்துகொள்: நாடு முழுவதும் இரத்தப்பழியால் நிறைந்துள்ளது; நகரெங்கும் அக்கிரமம் நிரம்பியுள்ளது. 24 ஆகையால் புறவினத்தாரில் பொல்லாதவர்களைக் கூட்டி வருவோம்; அவர்கள் இவர்களுடைய வீடுகளைக் கைப்பற்றுவார்கள்; வலிமையுள்ளவர்களின் அகங்காரம் அடங்கும்; இவர்களின் பரிசுத்த இடங்களை அவர்கள் உரிமையாக்கிக் கொள்வார். 25 முற்றுகையின் நெருக்கடி மிகுதியாகும் போது, நம் மக்கள் சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனால் அதைக் கண்டடைய மாட்டார்கள். 26 அழிவுக்கு மேல் அழிவு உண்டாகும்; துயரச் செய்தியைத் தெடர்ந்து துயரச் செய்தி கிடைக்கும்; இறைவாக்கினரின் காட்சியை நாடுவார்கள்; ஆனால் குருக்களிடமிருந்து வேதமும், மூப்பர்களிடமிருந்து நல்லாலோசனையும் ஒழிந்து போயின. 27 அரசன் வருந்தி அழுவான்; இளவரசன் திகைத்து நிற்பான்; குடிமக்கள் தைரியமற்றுப் போவார்கள்; நாம் அவரவர் நடத்தைக்குத் தக்கவாறு நீதியாய்த் தீர்ப்பிட்டு அதற்கேற்பத் தண்டிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 48
×

Alert

×

Tamil Letters Keypad References