தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எசேக்கியேல்
1. மனிதா, மயிரை மழிக்கும் அளவுக்குக் கருக்கான வாளையெடுத்து, அதனால் உன் தலையையும் தாடியையும் மழித்துக் கொண்டு, அந்த மயிரைத் தராசில் இட்டு நிறுத்துப் பங்கிடு.
2. அவற்றில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாட்கள் முடியும் போது நடுப்பட்டணத்தில் நெருப்பினால் சுட்டெரி; மூன்றில் மற்றொரு பங்கைப் பட்டணத்தைச் சுற்றிலும் கத்தியால் வெட்டிச் சிதைப்பாய்; மூன்றில் இன்னுமொரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு; நாம் கையிலேந்திய வாளுடன் அவர்களைப் பின் தொடர்வோம்.
3. அவற்றில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனையில் முடிந்து வை.
4. பிறகு, இவற்றில் கொஞ்சம் எடுத்துத் தீயிலிட்டுச் சுட்டெரிப்பாய்; இதினின்று இஸ்ராயேல் வீட்டாருக்கு எதிராக அக்கினி புறப்படும்."
5. ஆண்டவராகிய இறைவன் அருளிய வாக்கு: "புறவினத்தார்க்கும் மற்ற மக்களுக்கும் நடுவில் நாம் நிலைநாட்டிய யெருசலேம் பட்டணம் இதுவே.
6. புறவினத்தாரை விட மிகுதியாய் இவர்கள் எம் ஒழுங்குச் சட்டங்களை அவமதித்து அக்கிரமிகளானார்கள்; தங்களைச் சுற்றிலுமுள்ள பட்டணத்தாரை விட அதிகமாய் இவர்கள் எம் கட்டளைகளை மீறினார்கள்; எம் சட்டதிட்டங்களைக் காலால் மிதித்தார்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவே இல்லை."
7. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உங்களைச் சுற்றியுள்ள மக்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் நம் கட்டளைகளை எதிர்த்தீர்கள்; நம்முடைய நீதியையும் அனுசரிக்கவில்லை; உங்களைச் சுற்றியுள்ள மக்களுடைய நீதி முறைமைகளின்படி கூட நீங்கள் நடக்கவில்லை.
8. ஆகவே ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: இதோ, நாமே உங்களுக்கு எதிராக இருப்போம்; புறவினத்தார் பார்க்க உங்கள் நடுவில் இருந்து நாமே உங்களைத் தீர்ப்பிடுவோம்;
9. நீங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், நாம் இதுவரையில் செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான காரியத்தை இப்பொழுது செய்யப் போகிறோம்.
10. (அதாவது) உங்களுள் தகப்பன் மகனையும், மகன் தகப்பனையும் பிடுங்கித் தின்பார்கள்; உங்கள் நடுவில் நாம் எழுந்து நின்று தீர்ப்பிட்டு நாற்றிசையிலும் உங்களனைவரையும் சிதறடிப்போம்.
11. உங்களுடைய அக்கிரமங்களாலும், உங்களுடைய குற்றங்களாலும் நமது பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினதால் உங்களைத் தவிடு பொடியாக்குவோம்; கிருபைக் கண்ணோக்க மாட்டோம்; இரக்கமும் காட்ட மாட்டோம்; எம் உயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
12. உங்களில் மூன்றிலொரு பங்கு பெருவாரிக் காய்ச்சலாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்; மூன்றில் மற்றொரு பங்கு வாளால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் இறுதியான பங்கு எப்பக்கங்களிலும் சிதறுண்டு போவார்கள்; அவர்களையும் விடாமல் வாளோடு பின்தொடர்வோம்.
13. இவ்வாறு நமது கோபம் நிறைவேறும்; நமது ஆத்திரம் அவர்கள் மீது தீரும்படி செய்து, கோபத்தை ஆற்றிக் கொள்வோம்; நமது கோபம் அவர்கள் மீது நிறைவேறுகையில், ஆண்டவராகிய நாம் வைராக்கியத்தோடு பேசினோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
14. இவ் வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைத் தரைமட்டமாக்குவோம்; உன்னைச் சுற்றியுள்ள யாவருடைய நிந்தைக்கும் உன்னை உட்படுத்துவோம்.
15. கோபத்தின் வேகத்தால் கொடிய தண்டனைகளை நாம் உனக்குக் கொடுத்துத் தண்டித்துத் திருத்தி, நீதி செலுத்த வரும் போது, உன்னைச் சுற்றியுள்ள மக்கள் உன்னை அவமானப்படுத்தி நிந்திப்பார்கள்; அவர்கள் உன்னைப் பார்க்கும் போது நீ கடவுளின் கோபத்திற்கு இலக்காக இருக்கிறாய் எனக் கண்டு கலங்கி நிற்பார்கள்.
16. உங்களை அடியோடு அழிக்கும்படி கொடிய பஞ்சமாகிய அழிவின் அம்பை உங்கள் மீது எய்து சிதறடிப்போம்; நீங்கள் பட்டினியால் சாகும்படி அப்பத்தின் சேமிப்பாகிய உங்கள் ஊன்று கோலை நாம் முறித்துப் போடுவோம்; ஆண்டவராகிய நாம் இதை முன்னே சொல்லுகிறோம்.
17. உங்கள் பிள்ளைகளைக் கொன்றெழிக்கப் பஞ்சத்தையும், கொடிய மிருகங்களையும் பெருவாரிக் காய்ச்சலையும் உங்கள் மேல் அனுப்புவோம்; எங்கும் இரத்த வெள்ளம் புரண்டோடும்; வாளாலே வெட்டுண்டு நீங்கள் சாவீர்கள்; ஆண்டவராகிய நாம் இதைச் சொல்லுகிறோம்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 48
1 மனிதா, மயிரை மழிக்கும் அளவுக்குக் கருக்கான வாளையெடுத்து, அதனால் உன் தலையையும் தாடியையும் மழித்துக் கொண்டு, அந்த மயிரைத் தராசில் இட்டு நிறுத்துப் பங்கிடு. 2 அவற்றில் மூன்றிலொரு பங்கை முற்றுகை நாட்கள் முடியும் போது நடுப்பட்டணத்தில் நெருப்பினால் சுட்டெரி; மூன்றில் மற்றொரு பங்கைப் பட்டணத்தைச் சுற்றிலும் கத்தியால் வெட்டிச் சிதைப்பாய்; மூன்றில் இன்னுமொரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு; நாம் கையிலேந்திய வாளுடன் அவர்களைப் பின் தொடர்வோம். 3 அவற்றில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனையில் முடிந்து வை. 4 பிறகு, இவற்றில் கொஞ்சம் எடுத்துத் தீயிலிட்டுச் சுட்டெரிப்பாய்; இதினின்று இஸ்ராயேல் வீட்டாருக்கு எதிராக அக்கினி புறப்படும்." 5 ஆண்டவராகிய இறைவன் அருளிய வாக்கு: "புறவினத்தார்க்கும் மற்ற மக்களுக்கும் நடுவில் நாம் நிலைநாட்டிய யெருசலேம் பட்டணம் இதுவே. 6 புறவினத்தாரை விட மிகுதியாய் இவர்கள் எம் ஒழுங்குச் சட்டங்களை அவமதித்து அக்கிரமிகளானார்கள்; தங்களைச் சுற்றிலுமுள்ள பட்டணத்தாரை விட அதிகமாய் இவர்கள் எம் கட்டளைகளை மீறினார்கள்; எம் சட்டதிட்டங்களைக் காலால் மிதித்தார்கள்; அவற்றைக் கடைப்பிடிக்கவே இல்லை." 7 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உங்களைச் சுற்றியுள்ள மக்களைக் காட்டிலும் அதிகமாய் நீங்கள் நம் கட்டளைகளை எதிர்த்தீர்கள்; நம்முடைய நீதியையும் அனுசரிக்கவில்லை; உங்களைச் சுற்றியுள்ள மக்களுடைய நீதி முறைமைகளின்படி கூட நீங்கள் நடக்கவில்லை. 8 ஆகவே ஆண்டவராகிய இறைவன் கூறுவது இதுவே: இதோ, நாமே உங்களுக்கு எதிராக இருப்போம்; புறவினத்தார் பார்க்க உங்கள் நடுவில் இருந்து நாமே உங்களைத் தீர்ப்பிடுவோம்; 9 நீங்கள் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும், நாம் இதுவரையில் செய்யாததும் இனிச் செய்யாதிருக்கப் போவதுமான காரியத்தை இப்பொழுது செய்யப் போகிறோம். 10 (அதாவது) உங்களுள் தகப்பன் மகனையும், மகன் தகப்பனையும் பிடுங்கித் தின்பார்கள்; உங்கள் நடுவில் நாம் எழுந்து நின்று தீர்ப்பிட்டு நாற்றிசையிலும் உங்களனைவரையும் சிதறடிப்போம். 11 உங்களுடைய அக்கிரமங்களாலும், உங்களுடைய குற்றங்களாலும் நமது பரிசுத்த இடத்தை அசுத்தப்படுத்தினதால் உங்களைத் தவிடு பொடியாக்குவோம்; கிருபைக் கண்ணோக்க மாட்டோம்; இரக்கமும் காட்ட மாட்டோம்; எம் உயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். 12 உங்களில் மூன்றிலொரு பங்கு பெருவாரிக் காய்ச்சலாலும் பஞ்சத்தாலும் மடிவார்கள்; மூன்றில் மற்றொரு பங்கு வாளால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் இறுதியான பங்கு எப்பக்கங்களிலும் சிதறுண்டு போவார்கள்; அவர்களையும் விடாமல் வாளோடு பின்தொடர்வோம். 13 இவ்வாறு நமது கோபம் நிறைவேறும்; நமது ஆத்திரம் அவர்கள் மீது தீரும்படி செய்து, கோபத்தை ஆற்றிக் கொள்வோம்; நமது கோபம் அவர்கள் மீது நிறைவேறுகையில், ஆண்டவராகிய நாம் வைராக்கியத்தோடு பேசினோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். 14 இவ் வழியாய்க் கடந்து செல்வோர் அனைவரும் காணும்படி உன்னைத் தரைமட்டமாக்குவோம்; உன்னைச் சுற்றியுள்ள யாவருடைய நிந்தைக்கும் உன்னை உட்படுத்துவோம். 15 கோபத்தின் வேகத்தால் கொடிய தண்டனைகளை நாம் உனக்குக் கொடுத்துத் தண்டித்துத் திருத்தி, நீதி செலுத்த வரும் போது, உன்னைச் சுற்றியுள்ள மக்கள் உன்னை அவமானப்படுத்தி நிந்திப்பார்கள்; அவர்கள் உன்னைப் பார்க்கும் போது நீ கடவுளின் கோபத்திற்கு இலக்காக இருக்கிறாய் எனக் கண்டு கலங்கி நிற்பார்கள். 16 உங்களை அடியோடு அழிக்கும்படி கொடிய பஞ்சமாகிய அழிவின் அம்பை உங்கள் மீது எய்து சிதறடிப்போம்; நீங்கள் பட்டினியால் சாகும்படி அப்பத்தின் சேமிப்பாகிய உங்கள் ஊன்று கோலை நாம் முறித்துப் போடுவோம்; ஆண்டவராகிய நாம் இதை முன்னே சொல்லுகிறோம். 17 உங்கள் பிள்ளைகளைக் கொன்றெழிக்கப் பஞ்சத்தையும், கொடிய மிருகங்களையும் பெருவாரிக் காய்ச்சலையும் உங்கள் மேல் அனுப்புவோம்; எங்கும் இரத்த வெள்ளம் புரண்டோடும்; வாளாலே வெட்டுண்டு நீங்கள் சாவீர்கள்; ஆண்டவராகிய நாம் இதைச் சொல்லுகிறோம்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 48
×

Alert

×

Tamil Letters Keypad References