தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. எங்கள் சிறை வாழ்வின் இருபத்தைந்தாம் ஆண்டின் தொடக்கத்தில், மாதத்தின் பத்தாம் நாளில், யெருசலேம் நகரம் பிடிபட்ட பதினான்காம் ஆண்டின் நிறைவு நாளாகிய அன்று ஆண்டவரின் கரம் என் மேல் இருந்தது.
2. கடவுள் தந்த காட்சிகளில், அவர் என்னை இஸ்ராயேல் நாட்டுக்குக் கொணர்ந்து, மிக உயரமான ஒரு மலை மேல் நிறுத்தினார்; ஆங்கே தென்முகமாய் நோக்கும் நகரம் போன்ற ஓர் அமைப்பு இருந்தது.
3. அவர் என்னை அதனுள் அழைத்துச் சென்றார்; இதோ, அங்கே ஓரு மனிதரைக் கண்டேன். அவருடைய தோற்றம் வெண்கல மயமாய் இருந்தது; தமது கையில் சணல் பட்டுக் கயிறும், ஓர் அளவு கோலும் வைத்துக் கொண்டு வாயிலில் நின்று கொண்டிருந்தார்.
4. அவர் என்னை நோக்கி, "மனிதா, கண்ணாரப் பார், காதாரக் கேள்; நான் உனக்குக் காட்டுவதையெல்லாம் உன் மனத்தில் பதியவை; அதைப் பார்க்கும்படியே நீ இங்குக் கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ராயேல் வீட்டார்க்குத் தெரிவிக்கவேண்டும்" என்றார்.
5. அப்போது இதோ, கோயிலுக்கு வெளியில் கோயிலைச் சுற்றி ஒரு மதிலிருக்கக் கண்டேன்; அந்த மனிதர் தாம் கையில் வைத்திருந்த ஆறு முழம் நான்கு விரற்கடை நீளமுள்ள கோலால் மதிலை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதன் உயரம் ஒரு கோல்.
6. பிறகு அவர் கிழக்கு வாயிலுக்கு வந்து அதன் படிக்கட்டுகள் வழியாக ஏறி வாயிற்படியை அளந்தார்; அதன் அகலம் ஒரு கோல்; அதாவது வாயிற்படிக்கு இப்பக்கமும் அப்பக்கமும் ஒரு கோல் அளவு இருந்தது;
7. அவ்வாறே, பக்க அறைகளை அளந்தார்; ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமும் இருந்தது; அவ்வறைகளுக்கு இடையில் ஐந்து முழ இடம் விடப்பட்டிருந்தது.
8. வாயிலின் மண்டபத்தினருகில் இருக்கும் வாயிற்படியின் உள்ளளவு ஒரு கோல் இருந்தது.
9. வாயிலுக்கு முன்னிருந்த முகமண்டபத்தையும் அளந்தார்; அதன் அளவு எட்டு முழம்; அதன் புடை நிலையின் அளவு இரண்டு முழம்; இந்த முகமண்டபம் உட்புறத்தை நோக்கியது.
10. கிழக்கு வாயிலின் இருபக்கமும் பக்கத்திற்கு மூன்று அறைகள் இருந்தன; மூன்றுக்கும் ஒரே அளவு; மூன்றின் புடைநிலைகளுக்கும் ஒரே அளவு.
11. பின்னர் அவர் வாசற்படியின் அகலத்தை அளந்தார்; பத்து முழம் இருந்தது; அதன் நீளமோ பதின்மூன்று முழம்.
12. இருபக்கமும் அறைகளுக்கு முன்னால் ஒரு முழம் இடைவெளி விட்டு ஒரு சிறிய கைபிடிச் சுவர் இருந்தது; ஆறு முழ அளவுள்ள அறைகள் இருபக்கமும் இருந்தன;
13. ஓர் அறையின் மேற்கூரையிலிருந்து மற்ற அறையின் மேற்கூரை வரையில் தாழ்வாரத்தை அளந்த போது இருபத்தைந்து முழ அகலமிருந்தது; கதவுகள் எதிரெதிராய் இருந்தன.
14. புடைநிலைகளை அளந்த போது அறுபது முழங்கள் இருந்தன; முற்புறத்து வாயிலின் முற்றமொன்று சுற்றிலுமிருந்தது.
15. நுழையும் வாயிலின் புடைநிலையிலிருந்து உட்புற வாயிலின் மண்டபத்துப் புடைநிலை வரை ஐம்பது முழமிருந்தது.
16. வாயிலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமிருந்த அறைகளுக்கும், அவற்றின் முகப்புகளுக்கும் செய்யப்பட்டிருந்த பலகணிகள் வளைந்தவை; மண்டபங்களிலும் அத்தகைய பலகணிகளே இருந்தன; உட்புறத்தில் சுற்றிலுமிருந்த பலகணிகளும் அத்தகையவையே; புடைநிலைகளின் மேல் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப் பட்டிருந்தன.
17. பின்பு அம்மனிதர் என்னை வெளிப் பிராகாரத்திற்குக் கூட்டிக்கொண்டு போனார்; அங்குக் கருவூல அறைகளைக் கண்டேன்; பிராகாரத்தைச் சுற்றிலும் தளவரிசை கல்லால் அமைக்கப்பட்டிருந்தது; பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் முப்பது கருவூல அறைகள் இருந்தன.
18. பிராகாரத்தின் நெடுக அறைகளின் ஓரத்தில் தளவரிசை சற்றே தாழ்வாய் இருந்தது.
19. பிறகு அவர் கீழ்வாயிலின் புடைநிலை துவக்கி உட்புறத்துப் பிராகார முகப்பு வரையில் இருந்த அகலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறு முழம் இருந்தது.
20. வடக்கு வாயில்: பின்னும் வெளிப் பிராகாரத்தின் வடப்பக்கத்திற்கு எதிரில் இருந்த வாயிலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார்.
21. அதற்கு இருபக்கமும் மும்மூன்று அறைகள் இருந்தன; முதல் வாயிலின் அளவுக்கு இவ்வாயிலின் அளவு சரியாக இருந்தது. அதாவது: நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
22. அதன் பலகணிகளும், தாழ்வாரமும், சித்தரிக்கப்பட்ட சிற்ப வேலைகளும் கீழ்த் திசைக்கு எதிரான வாயிலின் இருந்தவற்றின் அளவுக்கு இணையாக இருந்தன; அதில் ஏறிப்போவதற்கு ஏழு படிகளிருந்தன; அதன் முன்புறத்தில் மண்டபமொன்று இருந்தது.
23. வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாயிலுக்கும் எதிராக உட்பிராகாரத்திலும் வாயில்கள் இருந்தன; அவர் ஒரு வாயில் துவக்கி மறுவாயில் வரைக்கும் அளந்தார்; நூறு முழம் இருந்தது.
24. பின்னும் அவர் என்னைத் தெற்கே கூட்டிச் சென்றார்; அங்கே தென்திசைக்கு நேர்முகமாய் இருந்த வாயிலொன்றைக் கண்டேன்; அவர் அதன் புடைநிலையையும் அதன் தாழ்வாரத்தையும் அளந்தார்; இவற்றின் அளவு முன்சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
25. பலகணிகளும் சுற்றிலுமுள்ள தாழ்வாரங்களும் மற்றவை போலவே இருந்தன; நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
26. அதில் ஏறிப்போக ஏழு படிகள் இருந்தன; கதவுகளுக்கு முன்பாகத் தாழ்வாரங்கள் இருந்தன; வாயிலின் புடைநிலையில் இரு புறமும் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன.
27. உட்பிராகாரத்துக்கும் ஒரு வாயில் தென் திசைக்கு நேர்முகமாய் இருந்தது; அவர் தென்திசை வாயில் துவக்கி மறுவாயில் மட்டும் அளந்தார்; நூறு முழம் இருந்தது.
28. பிறகு அவர் தென்திசையின் வாயில் வழியாய் என்னை உட்பிராகாரத்துக்குள் கூட்டிச் சென்றார்; அந்த வாயிலின் அளவு முன் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
29. அதன் பக்க அறைகளையும் புடைநிலைகளையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்து பார்த்தார்; மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
30. சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தின் நீளம் இருபத்தைந்து முழம்; அகலம் ஐந்து முழம்.
31. தாழ்வாரத்தின் வழியாய் வெளிப் பிராகாரத்துக்குப் போகலாம்; புடைநிலையில் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலேறிப் போவதற்கு எட்டுப் படிகள் இருந்தன.
32. பின்னர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்திற்கு அழைத்துப் போனார்; இவ்வாயிலின் அளவும் முன் சொல்லியவற்றின் அளவும் ஒன்றே.
33. அதன் அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார். மேற்சொன்னவற்றின் அளவாகவே இருந்தது; அதாவது, நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
34. தாழ்வாரத்தின் வழியாய் வெளிப் பிராகாரத்திற்குப் போகலாம்; புடைநிலையில் பேரீச்ச மரங்கள் இருபுறமும் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலேறிப் போக எட்டுப் படிகள் இருந்தன.
35. அடுத்து அவர் என்னை வடக்கு வாயிலுக்கு அழைத்துச் சென்றார்; வாயில் முன் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாய் இருந்தது.
36. அதன் பக்க அறைகளையும் புடைநிலையையும் மண்டபத்தையும் பலகணிகளையும், சுற்றிலுமிருந்த தாழ்வாரத்தையும் அளந்தார்; மேற் சொன்னவற்றின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதாவது நீளம் ஐம்பது முழம்; அகலம் இருபத்தைந்து முழம்.
37. அதன் தாழ்வாரம் வெளிப் பிராகாரத்துக்கு நேர்முகமாயிருந்தது; இருபுறமும் பேரீச்ச மரங்கள் சித்திரிக்கப்பட்டிருந்தன; மேலே ஏற எட்டுப் படிகள் இருந்தன.
38. கருவூல அறைகளில் எல்லாம் வாயில்களின் புடைநிலைகளுக்கு நேராக ஒரு கதவு இருந்தது; அங்கே தகனப் பலிகளைக் கழுவுவார்கள்.
39. வாயில் மண்டபத்தின் இரு புறமும் இரண்டிரண்டு பீடங்கள் உண்டு; அவற்றின் மேல் தகனப் பலிகளும், பாவப் பரிகாரப் பலிகளும், குற்றப் பரிகாரப் பலிகளும் செலுத்தப்படும்.
40. வடக்கு வாயிலுக்குச் செல்ல ஏறிப்போகும் வெளிப்புறத்தில் இரண்டு பீடங்கள் உண்டு; வாயில் மண்டபத்து முன்னாலிருக்கும் மறுபுறத்தில் இரண்டு பீடங்கள் உள்ளன.
41. வாயிலுக்கு அருகில் இரு பக்கமும் நந்நான்கு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன; அவற்றின் மேல் பலிகள் செலுத்தப்படும்.
42. தகனப் பலிக்குரிய நான்கு பீடங்கள் சதுரக் கற்களால் கட்டப்பட்டிருந்தன; அவற்றின் அளவு: நீளம் ஒன்றரை முழம்; அகலம் ஒன்றரை முழம்; உயரம் ஒரு முழம்; அவற்றின் மேல் தகனப் பலிகளையும், சாதாரண பலிகளையும் இடுவதற்கான கருவிகள் வைக்கப்படும்.
43. ஒரு சாண் அளவாகிய அவற்றின் விளிம்பு உட்புறத்தின் சுற்றிலும் வளைந்திருந்தது; அப்பீடங்களின் மீது பலி இறைச்சித் துண்டுகள் வைக்கப்படும்.
44. உட்புறத்து வாயிலுக்குப் புறம்பே உட்பிராகாரத்தில் சங்கீதம் பாடுபவரின் அறைகள் இருந்தன; அந்த உட்பிராகாரம் வடதிசையை நோக்கும் வாயிலின் பக்கமாகவே இருந்தது; அறைகளோ தென் திசைக்கு எதிர் முகமாய் இருந்தன; கீழ்வாயிலின் பக்கத்திலிருந்த அறையொன்று வடக்கை நோக்கியிருந்தது.
45. அப்பொழுது அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தெற்கு நோக்கியிருக்கும் இந்த அறை கோயிலைக் காவல் காக்கும் அர்ச்சகர்களின் அறை;
46. வடக்கு நோக்கியிருக்கும் அறை பலி பலிபீடத்தைக் காவல்காக்கும் அர்ச்சகர்களின் அறை; லேவியின் வழிவந்த சதோக்கின் புதல்வர்களான இவர்கள் ஆண்டவருக்கு வழிபாடு செய்ய வருவார்கள்" என்றார்.
47. பிறகு அவர் பிராகாரத்தின் அளவு பார்த்தார்; அது சதுரமானது; அதன் நீளம் நூறு முழம்; அகலம் நூறு முழம்; கோயிலுக்கு எதிரிலுள்ள பீடத்தையும் அளந்தார்.
48. அப்பொழுது அவர் என்னைக் கோயில் மண்டபத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அம்மண்டபத்தின் புடைநிலைகளை அளந்தார்; அவற்றின் அளவு இருபக்கமும் அவ்வைந்து முழம் இருந்தது; வாயிலின் அகலம் மும்மூன்று முழம் இருந்தது.
49. மண்டபத்தின நீளம் இருபது முழம்; அகலம் பதினொரு முழம் இருந்தது; ஏறிப்போக எட்டுப்படிகள் உள்ளன; புடைநிலைகளில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இரு தூண்கள் இருந்தன.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 40 of Total Chapters 48
எசேக்கியேல் 40:24

×

Alert

×

tamil Letters Keypad References