தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எசேக்கியேல்
1. பன்னிரண்டாம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதத்தில் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, எகிப்து நாட்டின் அரசனாகிய பார்வோனைக் குறித்து நீ ஒரு புலம்பல் தொடங்கி அவனுக்குச் சொல்: "உலக மக்களுள் நீ ஒரு சிங்கம் என உன்னைப்பற்றிக் கருதுகிறாய்; ஆனால் நீ கடலில் உலவும் மகர மீனுக்கு ஒப்பானவன்; நீ உன் கடலில் கிளர்ந்தெழுந்து தண்ணீரை உன் கால்களின் ஆட்டத்தால் கலக்கிக் குழப்பிக் கொண்டிருக்கிறாய்.
3. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார். மாபெரும் மக்கட் கூட்டத்தோடு வந்து உன் மேல் நமது வலையை வீசுவோம்; அதிலே உன்னைப் பிடித்துக் கொள்வோம்;
4. உன்னைக் கரைக்கு இழுத்துத் தரையில் எறிவோம்; வானத்துப் பறவையெல்லாம் உன்மேல் உட்காரச் செய்வோம்; பூமியின் மிருகங்களையெல்லாம் உன்னைக் கொண்டு நிறைவு செய்வோம்;
5. உன் சதைத் துண்டுகளை மலைகளின் மேல் போடுவோம்; உன் அழுகின உடலால் பள்ளத்தாக்குகளை நிரப்புவோம்.
6. நாற்றமடிக்கும் உன் குருதியால் பூமியைப் பாய்ச்சுவோம்; மலைகள் வரை பாயச் செய்வோம்; பள்ளத்தாக்குகளை நிரப்புவோம்;
7. உன்னை அழித்த பிறகு வானத்தை மூடுவோம்; விண்மீன்களை இருளச் செய்வோம்; கதிரவனை மேகத்தால் மூடி மறைப்போம்; சந்திரன் தன்னொளி தராதிருக்கச் செய்வோம்;
8. வானத்தின் ஒளி விளக்குகள் யாவும் உன் மேல் இருண்டு போகச் செய்வோம்; உன் நாட்டை இருள் மூடிக் கொள்ளச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
9. உன்னை நாம் பல்வேறு இனத்தாருக்கும், நீ அறியாத நாட்டினருக்கும் கைதியாகக் கொணர்ந்து மக்களின் இதயங்களைக் கலங்கச் செய்வோம்.
10. பல்வேறு இனத்தார் உன்னைக் கண்டு திகைத்துக் கலங்கும்படி செய்வோம்; அவர்களுடைய அரசர்கள் நமது வாள் தங்கள் முன் மின்னல் போலப் பளிச்சிடுவதைக் கண்டு திகிலடைவார்கள்; நீ அழியும் நாளில் அவர்கள் தத்தம் உயிருக்குப் பயந்து திடுக்கிட்டு மயங்குவார்கள்.
11. ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் அரசனுடைய வாள் உன் மேல் விழப் போகிறது;
12. வலிமை மிக்கவர்களின் வாளால் உன் திரளான மக்களை வெட்டி வீழ்த்துவோம்; நாடுகளில் எல்லாம் அவர்கள் மிகவும் கொடியவர்கள்: "எகிப்தின் செருக்கை அறவே ஒழிப்பார்கள், எகிப்தின் ஏராளமான படையை முறியடிப்பார்கள்;
13. மிகுதியான கால்வாய்களின் கரையில் இருக்கும் அதன் மிருகங்கள் அனைத்தையும் அழிப்போம்; இனி மனிதர்களின் கால்கள் அங்கே நடமாடுவதில்லை; மிருகங்களின் குளம்புகள் அவ்விடத்தை மிதிக்கவுமாட்டா.
14. பின்னர் நாம் ஆறுகளின் நீரைத் தெளியச் செய்வோம்; தண்ணீரை எண்ணெய் போல தெளிந்தோடச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15. எகிப்து நாட்டை நாம் பாழாக்கும் போது, அதன் திரண்ட செல்வங்களை நாம் அழிக்கும் போது, அதில் வாழ்கின்ற அனைவரையும் கொலை செய்யும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
16. அழ வேண்டிய காலம் வந்திருக்கிறது; எகிப்து நாட்டின்மேல் புலம்பல் கேட்கும்; பல நாட்டுப் பெண்கள் ஒப்பாரி பாடி எகிப்தைக் குறித்தும், அதில் வாழும் மக்களைக் குறித்தும் புலம்பி அழுவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
17. பாதாளத்தில் பார்வோன்: பன்னிரண்டாம் ஆண்டின் முதல் மாதத்தில் பதினைந்தாம் நாள், ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
18. மனிதா, எகிப்து நாட்டின் ஏராளமான மக்களைக் குறித்துப் புலம்பி அழு; எகிப்து என்னும் மங்கையையும், மகிமை மிகுந்த மற்ற நாடுகளாகிய அதன் புதல்வியரையும், ஆழ்குழியில் இறங்குகிறவர்களோடு கீழுலகுக்குத் தள்ளு:
19. 'எகிப்து மாதே! மற்றவர்களை விட நீ மட்டும் அழகிலே சிறந்தவளா? கீழுலகுக்கு இறங்கு; அங்கே விருத்தசேதனமில்லாதவர்களுடன் உறங்கு.'
20. அந்நாட்டு மக்கள் வாளுக்கு இரையான மக்கள் நடுவில் வெட்டுண்டு வீழ்வார்கள்: அதுவும், அதனைச் சார்ந்த எல்லா மக்களும் வெட்டுண்டு படுகுழியில் தள்ளப்படுவார்கள்.
21. படுகுழியின் நடுவிலிருந்து வல்லமை மிகுந்த தலைவர்கள் தங்களுக்குத் துணை செய்தவர்களுடன் சேர்ந்து, 'விருத்தசேதனம் செய்யாதவர்கள் வாளால் வெட்டுண்டு படுகுழியில் வீழ்ந்தனர்; வீழ்ந்து அங்கேயே கிடக்கின்றனர்' என்று குரலுயர்த்திக் கூவுவார்கள்.
22. அசூரும், அவனைச் சார்ந்தவர்களும் அங்கே கிடக்கிறார்கள்; இவர்களுடைய பிணக்குழிகள் அவனது கல்லறையைச் சூழ்ந்துள்ளன; விருத்தசேதனம் செய்து கொள்ளாத அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டவர்கள்.
23. இவர்களுடைய பிணக்குழிகள் பாதாளத்தின் ஆழத்தில் இருக்கின்றன; அசூருடைய கல்லறைக்கு நாற்புறமும் புதைக்கப்பட்டனர்; வாளால் வெட்டுண்டு செத்து வீழ்ந்த இவர்கள் எல்லாரும் முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தவர்கள்.
24. ஏலாமும், ஏலாமின் கூட்டத்தார் அனைவரும் அங்கே கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லாரும் வாளால் வெட்டுண்டு விழுந்தனர்; விருந்தசேதனம் செய்து கொள்ளாமல் பாதாளத்தில் இறங்கினார்கள்; முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தார்கள்; இப்பொழுது குழியில் இறங்கினவர்களோடு இழிவாகச் செத்தார்கள்;
25. வெட்டுண்டு விழுந்த குடிமக்களோடு ஏலாம் அரசனைக் கிடத்தினார்கள்; அவன் குடிகளின் கல்லறை அவன் கல்லறைக்கு நாற்புறமும் சூழ்ந்துள்ளது; விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் எல்லாரும் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகிச் செத்துக் குழியில் இறங்கினார்கள்; தங்கள் இழிவைச் சுமந்து கொண்டு, கொலை செய்யப்பட்டவர்களோடு சேர்ந்தார்கள்.
26. அங்கே மொசோக்கும் தூபாலும் கிடக்கிறார்கள்; அவர்களுடைய திரளான ஆட்களும் அவர்கள் இருவரின் கல்லறையைச் சுற்றிப் புதைக்கப்பட்டார்கள்; விருத்தசேதனம் செய்து கொள்ளாத இவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சம் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகி மாண்டார்கள்.
27. விருத்தசேதனமில்லாதவர்களுள் வல்லமை மிக்கவர் சிலர் படைக்கலந் தாங்கியவர்களாய் விழுந்து பாதாளத்தில் இறங்கினார்கள்; இவர்கள் தங்கள் வாளைத் தலையணையாக வைத்துத் தூங்குகிறார்கள்; ஏனெனில் இவர்கள் வாழ்வோரின் நாட்டை அச்சத்தால் கலங்கச் செய்தார்கள்; மொசோக்கும் தூபாலும் இவர்களோடு இல்லை.
28. மொசோக்கே, தூபாலே, நீங்கள் இருவரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள் நடுவில் நொறுக்கப்பட்டு வாளால் கொலை செய்யப்பட்டவர்களோடு கிடக்கக் கடவீர்கள்.
29. இதுமேய மன்னர்களும், அதன் தலைவர்களும், மக்களும் அங்கே கிடக்கிறார்கள்; வல்லவர்களாய் இருந்தாலும் வாளால் கொல்லப்பட்டவர்களோடு புதைக்கப்பட்டனர்; படுகுழிக்குள் இறங்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களோடு கிடக்கிறார்கள்.
30. வட நாட்டு மன்னர்களும் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; தங்கள் வல்லமையால் அச்சத்தைக் கொடுத்ததினால் வெட்டுண்டு செத்து தங்கள் இழிவைத் தாங்கியவர்களாய்ப் படுகுழியில் இறங்கினார்கள்; விருத்தசேதனமில்லாதவர்களாய் வாளால் கொலையுண்டவர்களோடு கிடக்கிறார்கள்; படுகுழிக்குள் இறங்குகிறவர்களோடு தங்கள் இழிவைத் தாங்குகிறார்கள்.
31. பார்வோன் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தன் ஏராளமான மக்களைப் பற்றிய துயரம் ஆறியிருப்பான்; அவனோடு அவன் சேனைகள் யாவும் தேறியிருப்பர், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
32. ஏனெனில் அவன் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தான் ஆகவே, விருத்தசேதனம் இல்லாதவர்களாய் வாளால் வெட்டுண்டவர்களோடு பார்வோனும் அவன் மக்களும் கிடப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 32 / 48
1 பன்னிரண்டாம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதத்தில் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 2 மனிதா, எகிப்து நாட்டின் அரசனாகிய பார்வோனைக் குறித்து நீ ஒரு புலம்பல் தொடங்கி அவனுக்குச் சொல்: "உலக மக்களுள் நீ ஒரு சிங்கம் என உன்னைப்பற்றிக் கருதுகிறாய்; ஆனால் நீ கடலில் உலவும் மகர மீனுக்கு ஒப்பானவன்; நீ உன் கடலில் கிளர்ந்தெழுந்து தண்ணீரை உன் கால்களின் ஆட்டத்தால் கலக்கிக் குழப்பிக் கொண்டிருக்கிறாய். 3 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார். மாபெரும் மக்கட் கூட்டத்தோடு வந்து உன் மேல் நமது வலையை வீசுவோம்; அதிலே உன்னைப் பிடித்துக் கொள்வோம்; 4 உன்னைக் கரைக்கு இழுத்துத் தரையில் எறிவோம்; வானத்துப் பறவையெல்லாம் உன்மேல் உட்காரச் செய்வோம்; பூமியின் மிருகங்களையெல்லாம் உன்னைக் கொண்டு நிறைவு செய்வோம்; 5 உன் சதைத் துண்டுகளை மலைகளின் மேல் போடுவோம்; உன் அழுகின உடலால் பள்ளத்தாக்குகளை நிரப்புவோம். 6 நாற்றமடிக்கும் உன் குருதியால் பூமியைப் பாய்ச்சுவோம்; மலைகள் வரை பாயச் செய்வோம்; பள்ளத்தாக்குகளை நிரப்புவோம்; 7 உன்னை அழித்த பிறகு வானத்தை மூடுவோம்; விண்மீன்களை இருளச் செய்வோம்; கதிரவனை மேகத்தால் மூடி மறைப்போம்; சந்திரன் தன்னொளி தராதிருக்கச் செய்வோம்; 8 வானத்தின் ஒளி விளக்குகள் யாவும் உன் மேல் இருண்டு போகச் செய்வோம்; உன் நாட்டை இருள் மூடிக் கொள்ளச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். 9 உன்னை நாம் பல்வேறு இனத்தாருக்கும், நீ அறியாத நாட்டினருக்கும் கைதியாகக் கொணர்ந்து மக்களின் இதயங்களைக் கலங்கச் செய்வோம். 10 பல்வேறு இனத்தார் உன்னைக் கண்டு திகைத்துக் கலங்கும்படி செய்வோம்; அவர்களுடைய அரசர்கள் நமது வாள் தங்கள் முன் மின்னல் போலப் பளிச்சிடுவதைக் கண்டு திகிலடைவார்கள்; நீ அழியும் நாளில் அவர்கள் தத்தம் உயிருக்குப் பயந்து திடுக்கிட்டு மயங்குவார்கள். 11 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் அரசனுடைய வாள் உன் மேல் விழப் போகிறது; 12 வலிமை மிக்கவர்களின் வாளால் உன் திரளான மக்களை வெட்டி வீழ்த்துவோம்; நாடுகளில் எல்லாம் அவர்கள் மிகவும் கொடியவர்கள்: "எகிப்தின் செருக்கை அறவே ஒழிப்பார்கள், எகிப்தின் ஏராளமான படையை முறியடிப்பார்கள்; 13 மிகுதியான கால்வாய்களின் கரையில் இருக்கும் அதன் மிருகங்கள் அனைத்தையும் அழிப்போம்; இனி மனிதர்களின் கால்கள் அங்கே நடமாடுவதில்லை; மிருகங்களின் குளம்புகள் அவ்விடத்தை மிதிக்கவுமாட்டா. 14 பின்னர் நாம் ஆறுகளின் நீரைத் தெளியச் செய்வோம்; தண்ணீரை எண்ணெய் போல தெளிந்தோடச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். 15 எகிப்து நாட்டை நாம் பாழாக்கும் போது, அதன் திரண்ட செல்வங்களை நாம் அழிக்கும் போது, அதில் வாழ்கின்ற அனைவரையும் கொலை செய்யும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள். 16 அழ வேண்டிய காலம் வந்திருக்கிறது; எகிப்து நாட்டின்மேல் புலம்பல் கேட்கும்; பல நாட்டுப் பெண்கள் ஒப்பாரி பாடி எகிப்தைக் குறித்தும், அதில் வாழும் மக்களைக் குறித்தும் புலம்பி அழுவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்." 17 பாதாளத்தில் பார்வோன்: பன்னிரண்டாம் ஆண்டின் முதல் மாதத்தில் பதினைந்தாம் நாள், ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: 18 மனிதா, எகிப்து நாட்டின் ஏராளமான மக்களைக் குறித்துப் புலம்பி அழு; எகிப்து என்னும் மங்கையையும், மகிமை மிகுந்த மற்ற நாடுகளாகிய அதன் புதல்வியரையும், ஆழ்குழியில் இறங்குகிறவர்களோடு கீழுலகுக்குத் தள்ளு: 19 'எகிப்து மாதே! மற்றவர்களை விட நீ மட்டும் அழகிலே சிறந்தவளா? கீழுலகுக்கு இறங்கு; அங்கே விருத்தசேதனமில்லாதவர்களுடன் உறங்கு.' 20 அந்நாட்டு மக்கள் வாளுக்கு இரையான மக்கள் நடுவில் வெட்டுண்டு வீழ்வார்கள்: அதுவும், அதனைச் சார்ந்த எல்லா மக்களும் வெட்டுண்டு படுகுழியில் தள்ளப்படுவார்கள். 21 படுகுழியின் நடுவிலிருந்து வல்லமை மிகுந்த தலைவர்கள் தங்களுக்குத் துணை செய்தவர்களுடன் சேர்ந்து, 'விருத்தசேதனம் செய்யாதவர்கள் வாளால் வெட்டுண்டு படுகுழியில் வீழ்ந்தனர்; வீழ்ந்து அங்கேயே கிடக்கின்றனர்' என்று குரலுயர்த்திக் கூவுவார்கள். 22 அசூரும், அவனைச் சார்ந்தவர்களும் அங்கே கிடக்கிறார்கள்; இவர்களுடைய பிணக்குழிகள் அவனது கல்லறையைச் சூழ்ந்துள்ளன; விருத்தசேதனம் செய்து கொள்ளாத அவர்கள் அனைவரும் வாளால் வெட்டுண்டவர்கள். 23 இவர்களுடைய பிணக்குழிகள் பாதாளத்தின் ஆழத்தில் இருக்கின்றன; அசூருடைய கல்லறைக்கு நாற்புறமும் புதைக்கப்பட்டனர்; வாளால் வெட்டுண்டு செத்து வீழ்ந்த இவர்கள் எல்லாரும் முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தவர்கள். 24 ஏலாமும், ஏலாமின் கூட்டத்தார் அனைவரும் அங்கே கிடக்கிறார்கள்; அவர்கள் எல்லாரும் வாளால் வெட்டுண்டு விழுந்தனர்; விருந்தசேதனம் செய்து கொள்ளாமல் பாதாளத்தில் இறங்கினார்கள்; முன்பு வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தார்கள்; இப்பொழுது குழியில் இறங்கினவர்களோடு இழிவாகச் செத்தார்கள்; 25 வெட்டுண்டு விழுந்த குடிமக்களோடு ஏலாம் அரசனைக் கிடத்தினார்கள்; அவன் குடிகளின் கல்லறை அவன் கல்லறைக்கு நாற்புறமும் சூழ்ந்துள்ளது; விருத்தசேதனம் செய்யப்படாத இவர்கள் எல்லாரும் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகிச் செத்துக் குழியில் இறங்கினார்கள்; தங்கள் இழிவைச் சுமந்து கொண்டு, கொலை செய்யப்பட்டவர்களோடு சேர்ந்தார்கள். 26 அங்கே மொசோக்கும் தூபாலும் கிடக்கிறார்கள்; அவர்களுடைய திரளான ஆட்களும் அவர்கள் இருவரின் கல்லறையைச் சுற்றிப் புதைக்கப்பட்டார்கள்; விருத்தசேதனம் செய்து கொள்ளாத இவர்கள் வாழ்வோரின் நாட்டில் அச்சம் கொடுத்து வந்ததால் வாளுக்கு இரையாகி மாண்டார்கள். 27 விருத்தசேதனமில்லாதவர்களுள் வல்லமை மிக்கவர் சிலர் படைக்கலந் தாங்கியவர்களாய் விழுந்து பாதாளத்தில் இறங்கினார்கள்; இவர்கள் தங்கள் வாளைத் தலையணையாக வைத்துத் தூங்குகிறார்கள்; ஏனெனில் இவர்கள் வாழ்வோரின் நாட்டை அச்சத்தால் கலங்கச் செய்தார்கள்; மொசோக்கும் தூபாலும் இவர்களோடு இல்லை. 28 மொசோக்கே, தூபாலே, நீங்கள் இருவரும் விருத்தசேதனம் இல்லாதவர்கள் நடுவில் நொறுக்கப்பட்டு வாளால் கொலை செய்யப்பட்டவர்களோடு கிடக்கக் கடவீர்கள். 29 இதுமேய மன்னர்களும், அதன் தலைவர்களும், மக்களும் அங்கே கிடக்கிறார்கள்; வல்லவர்களாய் இருந்தாலும் வாளால் கொல்லப்பட்டவர்களோடு புதைக்கப்பட்டனர்; படுகுழிக்குள் இறங்கும் விருத்தசேதனம் இல்லாதவர்களோடு கிடக்கிறார்கள். 30 வட நாட்டு மன்னர்களும் சீதோனியர்களும் இருக்கிறார்கள்; தங்கள் வல்லமையால் அச்சத்தைக் கொடுத்ததினால் வெட்டுண்டு செத்து தங்கள் இழிவைத் தாங்கியவர்களாய்ப் படுகுழியில் இறங்கினார்கள்; விருத்தசேதனமில்லாதவர்களாய் வாளால் கொலையுண்டவர்களோடு கிடக்கிறார்கள்; படுகுழிக்குள் இறங்குகிறவர்களோடு தங்கள் இழிவைத் தாங்குகிறார்கள். 31 பார்வோன் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தன் ஏராளமான மக்களைப் பற்றிய துயரம் ஆறியிருப்பான்; அவனோடு அவன் சேனைகள் யாவும் தேறியிருப்பர், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். 32 ஏனெனில் அவன் வாழ்வோரின் நாட்டில் அச்சத்தைக் கொடுத்தான் ஆகவே, விருத்தசேதனம் இல்லாதவர்களாய் வாளால் வெட்டுண்டவர்களோடு பார்வோனும் அவன் மக்களும் கிடப்பார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 32 / 48
×

Alert

×

Tamil Letters Keypad References