தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. பதினோராம் ஆண்டின் மூன்றாம் மாதத்தில் முதல்நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, எகிப்து நாட்டின் அரசன் பார்வோனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் சொல்: "நீ உன் மகிமையில் யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்;
3. இதோ லீபானில் உள்ள கேதுரு மரத்துக்கு நீ ஒப்பாவாய்; அதில் அழகிய கிளைகள் உண்டு; அடர்ந்த நிழலுண்டு; அது ஓங்கிய உயரமுள்ளது; உச்சி மேகத்தைத் தொடுகிறது;
4. தண்ணீர் அதனைத் தழைக்கச் செய்தது; மிகுதியான நீர் அதனை உயர்ந்து வளரச் செய்தது; ஆறுகள் அடிமரத்தைச் சுற்றி ஓடுகின்றன; அதிலிருந்து ஓடும் அருவிகள் காட்டிலுள்ள மரங்களுக்கு எல்லாம் பாய்கின்றன.
5. ஆகையால் அந்தக் கேதுரு மரம் காட்டிலுள்ள மற்றெல்லா மரங்களை விட உயர்ந்து வளர்ந்தது; அதன் தளிர்கள் பலுகின; மிகுந்த ஈரத்தால் கொம்புகளும் கிளைகளும் வளர்ந்தோங்கின.
6. அது தன் நிழலைச் சுற்றிலும் பரவச் செய்தது; வானத்துப் பறவைகள் அதன் கொம்புகளில் தத்தம் கூடுகளைக் கட்டிக் கொண்டன. வயல் வெளி மிருகங்கள் அதன் கிளைகளின் கீழ் தங்கள் குட்டிகளைப் போட்டன; பல நாட்டு மக்கள் அதன் நிழலிலே குடிகொண்டார்கள்.
7. அதன் வேர்கள் ஆழ்ந்த தண்ணீருக்குள் இருந்ததால் அதன் கிளைகள் படர்ந்திருந்தன; பசுங்கொழுந்துகள் மிகுந்திருந்தன; மரம் மிகவும் அழகாய் இருந்தது.
8. கடவுளின் சோலையிலுள்ள கேதுரு மரங்கள் இதை விடச் செழித்தவை அல்ல; தேவதாரு மரங்கள் இதைவிட உயரமல்ல; பிலத்தான் மரங்கள் இதைப் போலத் தழைத்ததில்லை, கடவுளின் சோலையிலுள்ள எந்த மரமும் இதற்கு நிகரில்லை; அழகிலே இதற்கு இணையில்லை.
9. ஏனெனில் அடர்ந்த கிளைகளாலும், செறிந்த தழைகளாலும் அதனை நாம் அழகு செய்தோம்; கடவுளின் சோலையிலுள்ள அழகிய மரங்களெல்லாம் அதைக் கண்டு பொறாமை கொண்டன.
10. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அது தன் உயரத்தைக் கண்டு செருக்குற்றதாலும், தன் செறிந்த கிளைகளின் மிகுதியான தழைப்பசுமையைப் பெருமிதமாய்க் காட்டி இறுமாந்ததாலும்,
11. நாம் அதைப் புறவினத்தாருள் மிகுத்த வலிமையுள்ளவனுடைய கையில் ஒப்படைப்போம்; அவன் அதன் அக்கிரமத்திற்கு ஏற்ப தான் விரும்புவதை அதற்குச் செய்வான்; நாமும் அதைத் தள்ளிப்போட்டோம்.
12. வேற்று நாட்டவருள் மிகக் கொடிய அந்நியர் வந்து, அதனை வெட்டிப் போடுவார்கள்; அதன் கிளைகள் எல்லாம் மலைகளிலும் கணவாய்களிலும் வீழும்: அதன் கொழுந்துகள் சுற்றிலுமுள்ள நீரோடைகளில் விழுந்து சிதைந்து போகும்: பூமியிலுள்ள மக்கள் அனைவரும் அதன் நிழலை விட்டகலுவார்கள்.
13. பாழ்பட்ட அம்மரத்திலே வானத்துப் பறவைகள் வாசம் செய்யும்; அதன் கிளைகளினிடையில் பூமியின் மிருகங்கள் யாவும் பதுங்கி ஒடுங்கும்.
14. இனிமேல் நீரினருகே நடப்பட்ட மரங்கள் தங்கள் உயரத்தை முன்னிட்டுச் செருக்கடைதலாகாது; மேகம் வரை வளரக் கூடாது; நீர் நிலைகளுக்கருகில் வாழும் மரங்கள் அவற்றைப் போல் உயரமாய் வளருதலாகாது; ஏனெனில் அவையெல்லாம் செத்துப் போகும்; ஆழ்குழிக்குள் செல்லும் மனிதர்களோடு கீழுலகுக்குத் தள்ளப்படும்.
15. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தக் கேதுரு மரம் பாதாளத்தில் இறங்கும் அந்நாளில் அங்கே இழவு கொண்டாடச் செய்வோம்; அதனைப் பாதாளத்தால் மூடிவிடுவோம்; தண்ணீரையும் ஆறுகளையும் அடைத்து விடுவோம்; அதன் இழவை முன்னிட்டு லீபான் மலை புலம்பியழும்; காட்டு மரங்கள் யாவும் திகிலடையும்.
16. ஆழ்குழியில் இறங்குகிறவர்களோடு நாம் அதனைப் பாதாளத்தில் வீழ்த்தும் போது, அதன் வீழ்ச்சியின் ஓசையால் பூமியின் மக்கள் அனைவரும் நடுங்குவார்கள். அப்போது, சோலைவனமாகிய லீபானில் எஞ்சியுள்ள சிறந்த மரங்களும், அழகான தருக்களும், தண்ணீர் பாயும் மரங்களும் யாவும் பூமியின் ஆழத்தில் ஆறுதல் அடையும்.
17. ஆனால் இவையும் அதைப் போலச் செத்தவர்களோடு பாதாளத்தில் இறங்க வேண்டியிருக்கும்; ஆம், அதன் நிழலை அணுகி வாழ்ந்த புறவினத்தாரும் அழிவார்கள்.
18. அழகிலும் மகிமையிலும், சிங்காரச் சோலையின் மரங்கள் யாவற்றிலும் சிறந்திருந்த கேதுரு மரமே, நீ எதற்கு ஒப்பாயிருக்கிறாய்? மற்ற மரங்களோடு நீயும் ஆழ்குழியில் வீழ்த்தப்படுவாய்; வாளால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாப் புறவினத்தாரோடு கிடப்பாய்; அங்ஙனமே பார்வோனுக்கும், அவன் நாட்டு மக்கள் அனைவருக்கும் நடக்கும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 31 of Total Chapters 48
எசேக்கியேல் 31:31

×

Alert

×

tamil Letters Keypad References