தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, நீ இறைவாக்குரைத்துச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: 'ஆபத்தான நாள்' என்று அலறி அழுங்கள்.
3. ஏனெனில் அந்த நாள் வருகிறது, ஆண்டவரின் நாள் வந்துவிட்டது; அந்த நாள் இருண்ட நாளாகும், புறவினத்தார்க்கு அழிவின் நாளாகும்;
4. எகிப்தின் மேலே வாளொன்று விழும்; எகிப்திலே கொலையுண்டு வீழ்ந்தார்கள், அதன் செல்வமெல்லாம் பறிபோயிற்று, அதன் அடிப்படைகள் அழிந்து போயின என்று எத்தியோப்பியர் கேட்டுத் திகைத்து மயங்குவர்.
5. எத்தியோப்பியரும் பூத்தியரும் லீதியரும், அராபியர் யாவரும், கூபியரும், உடன்படிக்கை செய்து கொண்ட மக்கள் யாவரும் அவர்களோடு கூட வாளுக்கு இரையாவார்கள்.
6. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எகிப்தை ஆதரித்தவர்கள் வீழ்ச்சி அடைவார்கள், அதன் வல்லமையின் செருக்கு தாழ்ந்து நாசமாகும்; மிக்தோல் முதல் சியேனே வரை வாழ்பவர்கள் வாளால் வெட்டுண்டு வீழ்வார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய இறைவன்.
7. பாழாகப் போன நாடுகளின் நடுவிலே அது பாழாகப் போன ஒரு நாடாகும்; அழிக்கப்பட்ட நகரங்களின் நடுவிலே, அதன் நகரங்கள் அழிந்து போன நகரங்கள் ஆகும்;
8. எகிப்துக்கு நாம் தீ வைத்து, அதற்குத் துணையாயிருந்தவர்கள் யாவரும் தோற்கடிக்கப்படும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
9. அந்நாளில் எத்தியோப்பியர்களுடைய இறுமாப்பை அழிக்க நாம் தூதர்களை அனுப்புவோம்; அப்பொழுது அவர்கள், எகிப்தின் அழிவு நாள் வந்தது, தங்களுக்கும் அது வந்தே தீரும்" எனக் கண்டு அஞ்சித் திகைப்பார்கள்.
10. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் மன்னனாகிய நபுக்கோதனசாரைக் கொண்டு நாம் எகிப்து மக்களை அழிக்கப்போகிறோம்.
11. வேற்றினத்தாரில் மிகக் கொடுமையான அவனையும் அவன் சேனைகளையும் கொண்டு வந்து, எகிப்து நாட்டை அழிக்கச் செய்வோம்; அவர்கள் தங்கள் வாளை உருவி, எகிப்தியர் மேல் பாய்ந்து கொன்று, கொலையுண்ட உடல்களால் நாட்டை நிரப்புவார்கள்.
12. நைல் நதியை வற்றச் செய்வோம்; கொடியவர் கையில் நாட்டை விற்போம்; அந்நியர்களின் கையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் பாழாக்குவோம்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்.
13. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் சிலைகளை அழிப்போம்; மெம்பீஸ் நகரத்தில் இருக்கும் படிமங்களை ஒழிப்போம்; இனி எகிப்து நாட்டில் தலைவன் இரான்; எகிப்து நாட்டில் திகில் பரவி இருக்கும்.
14. பாத்துரேஸ் நாட்டைப் பாழாக்குவோம்; தப்னீஸ் நகருக்குத் தீ வைப்போம்; அலெக்சாந்திரியா நகரத்தாரை ஆக்கினைக்கு உள்ளாக்குவோம்.
15. எகிப்திற்கு அரணாக விளங்கும் பெலுஸ் நகரத்தின் மீது நமது ஆத்திரத்தைக் காட்டுவோம்; அலெக்சாந்திரியா பட்டணத்தின் கணக்கிலடங்கா மக்களைக் கொன்றொழிப்போம்.
16. எகிப்துக்குத் தீ வைப்போம். பிரசவிக்கும் பெண்ணைப் போலப் பெலுஸ் நகரம் மிகுந்த வேதனைப்படும்; அலெக்சாந்திரியா நகரம் பாழாகும்; மெம்பீஸ் நகருக்கு நாடோறும் நெருக்கமிருக்கும்.
17. எலியோப்பொலி நகரத்து வாலிபர்களும், புபாஸ்தி நகரத்தின் இளைஞர்களும் வாளால் வெட்டுண்டு வீழ்வர்; அவ்வூர்ப் பெண்களும் அடிமைகளாய்ச் சிறைப்படுத்திக் கொண்டுபோகப்படுவர்;
18. தப்னீஸ் நகரத்திலே எகிப்தின் அதிகாரத்தை முறித்து, அதன் செருக்கெல்லாம் அற்றுப்போக நாம் செய்யும் போது, அங்கே கதிரவன் மங்கிப்போகும்; அழகிய வானமும் இருண்டு போகும்; பெண்கள் அடிமைகளாக்கப்படுவர்.
19. இங்ஙனம் நாம் எகிப்தைத் தண்டிக்கும் போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்."
20. பதினோராம் ஆண்டின் முதல் மாதத்தில் ஏழாம் நாள் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது;
21. மனிதா, எகிப்தின் அரசனான பார்வோனின் புயத்தை நாம் முறித்துவிட்டோம்; ஆனால் அது நலமடையும்படி காயத்துக்கு வேண்டிய மருத்துவம் செய்வாரில்லை; அவன் வாளேந்த சக்தி பெறும்படி புயத்திற்குத் துணி சுற்றி நாடாவால் கட்டுப்போடவுமில்லை.
22. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் எகிப்தின் அரசனான பார்வோனுக்கு எதிராகச் செல்வோம்; சென்று அவனது நன்றாயிருக்கும் கையையும், ஏற்கெனவே முறிந்த கையையும் முற்றிலும் ஒடித்து, அவன் கையிலிருக்கும் வாளை விழச் செய்வோம்;
23. மேலும் எகிப்தியரை வேற்றினத்தார் நடுவில் சிதறடிப்போம்; பல்வேறு நாடுகளுக்கு அவர்களை விரட்டியடிப்போம்;
24. பபிலோன் மன்னனின் புயங்களை நாம் பலப்படுத்தி, அவன் கையிலே நம் வாளைக் கொடுப்போம்; பார்வோனின் புயங்களை முறிப்போம்; அப்பொழுது குற்றுயிராய்க் கிடப்பவன்போல், அவன் முன் கிடந்து தவிப்பான்.
25. நாம் பபிலோன் அரசனின் புயங்களை வலுப்படுத்துவோம்; பார்வோனின் புயங்கள் வலுவற்று வீழும்; நமது வாளைப் பபிலோன் அரசனின் கையில் கொடுத்தால், அவன் அதை எகிப்து நாட்டின்மேல் நீட்டுவான்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
26. எகிப்தியரை வேற்றினத்தார் நடுவில் சிதறடிப்போம்; பல்வேறு நாடுகளுக்கு அவர்களை விரட்டியடிப்போம்; அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 30 of Total Chapters 48
எசேக்கியேல் 30:31

×

Alert

×

tamil Letters Keypad References