தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எசேக்கியேல்
1. பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, நீ எகிப்து அரசனாகிய பார்வோனுக்கு எதிராய் உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து நாடனைத்துக்கும் எதிராக இறைவாக்குக் கூறு:
3. நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "எகிப்துக்கு அரசனாகிய பார்வோனே, ஆறுகளின் நடுவிலே படுத்துக் கொண்டு, 'நைல் என்னுடைய ஆறு, நானே அதை எனக்கென உண்டாக்கினேன் ' என்று இறுமாந்து சொல்லும் பெரிய முதலையே, இதோ, நாம் உனக்கு எதிராளியாய் இருக்கிறோம்.
4. உன் வாயிலே தூண்டில்களை மாட்டி, உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வோம்; உன் செதிள்களில் ஒட்டியிருக்கும் மீன்களோடு ஆறுகளின் நடுவினின்று உன்னை இழுத்துப் போடுவோம்.
5. உன்னையும் உன்னில் ஒட்டியுள்ள மீன்களையும் பாலை நிலத்தில் வீசி எறிவோம்; கட்டாந் தரையிலே விழுந்து சாவாய்; உன்னை வாரி எடுத்துப் புதைப்பார் யாரும் இருக்க மாட்டார்; பூமியின் மிருகங்களுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உணவாக உன்னைத் தந்தோம்.
6. அப்போது எகிப்து நாட்டின் குடிகள் எல்லாம், நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள். இஸ்ராயேல் வீட்டாருக்கு நாணல் கோலாய் நீ இருந்தாய்;
7. உன்னை அவர்கள் பற்றிப் பிடித்த போது, நீ முறிந்தாய், அவர்கள் தோளைக் கிழித்தாய், ஊன்றுகோலாகிய உன்மேல் சாய்ந்த போது, நீ துண்டு துண்டாய் ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கச் செய்தாய்.
8. ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் உனக்கு எதிராய் வாளை எழுப்புவோம்; உன் மக்களையும், மிருகங்களையும் கொன்றொழிப்போம்.
9. எகிப்து நாடு பாழடைந்த பாலை நிலமாகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள் ஏனெனில், 'நைல் என்னுடைய ஆறு, நானே அதை உண்டாக்கினேன்' என்று சொன்னாய்.
10. ஆகையால், இதோ, நாம் உனக்கும் உன் ஆறுகளுக்கும் எதிராய் வருவோம்; வந்து மிக்தோல் முதல் சினேயே வரை எத்தியோப்பியா எல்லை முடிய எகிப்து நாட்டை அழித்துப் பாலையாக்குவோம்.
11. மனிதர்களும் மிருகங்களும் அதில் நடமாட மாட்டா. நாற்பது ஆண்டுகளுக்கு அது குடியற்றுப் போகும்.
12. பாழான நாடுகள் நடுவில் பாழடைந்த நாடாய் எகிப்தை ஆக்குவோம்; அழிந்து போன பட்டணங்களின் நடுவில் அழிந்து போன பட்டணங்களாக அதன் பட்டணங்களை ஆக்குவோம்; நாற்பது ஆண்டுகளுக்குப் பாலையாயிருக்கும்; எகிப்து நாட்டினரை வேற்றினத்தார் நடுவில் சிதறடித்து, பல்வேறு நாடுகளுக்கு விரட்டி விடுவோம்.
13. ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்தியரை அவர்கள் சிதறி வாழும் மக்கள் நடுவிலிருந்து கூட்டிச்சேர்ப்போம்;
14. எகிப்தின் செல்வங்களைத் திரும்பக் கொடுப்போம்; அவர்களுடைய பிறந்த நாடாகிய பாத்துரேஸ் என்னும் நாட்டுக்கு அவர்களைக் கொணர்ந்து நிலைநாட்டுவோம்; அங்கே அவர்கள் ஒரு சிற்றரசாய் இருப்பார்கள்.
15. மற்ற அரசுகளை விட அதுவே சிறியதாய் இருக்கும்; வேற்றினத்தாரை விடத் தன்னையே உயர்வாகக் கருதமாட்டாது; வேற்றினத்தார் மேல் அதிகாரம் செலுத்த முடியாதபடி அவர்களை மிகவும் சிறிய அரசாக்குவோம்.
16. இனி எகிப்தியர் இஸ்ராயேல் வீட்டார்க்கு ஆதரவாகவோ நம்பிக்கையாகவோ இருக்க மாட்டார்கள்; அவர்களிடம் உதவி கோரி தங்கள் பழைய அக்கிரமத்தை நினைப்பூட்ட மாட்டார்கள். அப்போது நாமே ஆண்டவராகிய இறைவன் என்பதை அறிவார்கள்."
17. இருபத்தேழாம் ஆண்டின் முதல் மாதத்தில் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
18. மனிதா, பபிலோன் மன்னாகிய நபுக்கோதனசார் தீர் பட்டண முற்றுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் எல்லாம் மொட்டையாயின; தோள்கள் யாவும் நொறுங்கின; ஆனால், தீர் பட்டணத்தில் அவனும், அவன் படைகளும் நமக்குச் செய்த முயற்சிக்கு யாதொரு கைம்மாறும் பெறவில்லை.
19. ஆதலால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பபிலோன் மன்னனாகிய நபுக்கோதனசாருக்கு எகிப்து நாட்டைக் கொடுப்போம்; அதன் செல்வங்களையெல்லாம் அவன் கைப்பற்றிக் கொள்ளையிட்டு, அந்தக் கொள்ளைப் பொருட்களைப் பங்கிடுவான்; அது அவன் சேனைக்குப் பலனும் கூலியுமாகும்.
20. தீர் பட்டணத்தில் அவன் செய்த முயற்சிக்காக எகிப்து நாட்டை அவனுக்குக் கொடுத்தோம். ஏனெனில் நமக்காக அவன் வேலை செய்தான், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
21. அந்நாளில் இஸ்ராயேல் வீட்டாருக்கு ஒரு கொம்பு முளைக்கச் செய்வோம்; அவர்கள் நடுவில் உன் வாயைத் திறப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 48 Chapters, Current Chapter 29 of Total Chapters 48
எசேக்கியேல் 29:18

×

Alert

×

tamil Letters Keypad References