தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எசேக்கியேல்
1. மேலும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2. மனிதா, இரத்தத்தைச் சிந்தின யெருசலேமுக்கு நீதி செலுத்த மாட்டாயோ? அதைத் தீர்ப்பிட மாட்டாயோ?
3. அப்படியானால் அதனுடைய அக்கிரமங்களையெல்லாம் எடுத்துக்காட்டி, அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தனக்குத் தண்டனை நாள் விரைவில் வரும்படி, தன் நடுவில் இரத்தத்தைச் சிந்தித் தனக்கு எதிராகச் சிலைகளை உண்டு பண்ணித் தன்னையே தீட்டுப்படுத்திக் கொண்ட பட்டணம் இதுவே.
4. இரத்தத்தைச் சிந்தி, அதனால் குற்றவாளியாகிச் சிலைகளை உண்டு பண்ணி, அதனால் உன்னேயே தீட்டுப்படுத்தி உன் நாட்களைக் குறைத்து, அதனால் உன் கடைசி நாளை நீயே வரவழைத்துக் கொண்டாய்; ஆகையால் உன்னைப் புறவினத்தார்க்கு நிந்தையாகவும், அண்டை நாட்டார்க்குப் பரிகாசமாகவும் ஆக்கினோம்;
5. உனக்கு அருகில் இருப்பவர்களும், தொலைவில் இருப்பவர்களும் பேர் கெட்ட நகரம் என்றும், அமளி நிறைந்த ஊரென்றும் உன்னை இகழ்வார்கள்.
6. இதோ, இஸ்ராயேலின் தலைவர்கள் தத்தம் வல்லமைக்கேற்ப உன் நடுவில் இரத்தம் சிந்துவதே வேலையாய் இருந்தார்கள்.
7. தாய் தந்தையரை உன் நடுவில் அவமதித்தார்கள்; உன்னை நாடி வந்த அந்நியருக்கு இடுக்கண் செய்தார்கள்; உன்னிடமுள்ள கைம்பெண்களையும் அனாதைப் பிள்ளைகளையும் துன்புறுத்தினார்கள்.
8. நீயோ நமது கோயிலை அவசங்கைப்படுத்தி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தம் இழக்கச் செய்தாய்.
9. இரத்தத்தைச் சிந்தும் அக்கிரமிகள் உன்னில் இருக்கிறார்கள்; மலைகளின் மேல் படைக்கப்பட்டதை உண்ணுகிறார்கள்; உன் நடுவில் அக்கிரமம் செய்யத்துணிகிறார்கள்;
10. தங்கள் தந்தையின் நிருவாணத்தை வெளிப்படுத்துகிறவர்களும், தீட்டுப்பட்ட பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னில் உள்ளனர்.
11. ஒருவன் தன் அயலான் மனைவியைக் கெடுக்கிறான்; இன்னொருவன் தன் மருமகளைக் கெடுத்துக் கற்பழிக்கிறான்; மற்றொருவன் சொந்தத் தந்தைக்குப் பிறந்த தன் உடன் பிறந்த சகோதரியை முறைகேடாய்க் கெடுக்கிறான்.
12. உன்னில் பலர் கொலை செய்ய இலஞ்சம் வாங்குகிறார்கள்; நீ வட்டி வாங்குகிறாய்; கொடுத்ததற்கு அதிகமாய்த் திரும்பப் பெறுகிறாய்; பொருளாசையால் அயலானை ஒடுக்குகிறாய்; நம்மை மறந்துவிட்டாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
13. இதோ, உன் பொருளாசையையும், உன் நடுவில் சிந்தப்பட்ட இரத்தத்தையும் கண்டு நாம் கைகளைத் தட்டுகிறோம்.
14. நாம் உன்னைத் தண்டிக்கும் நாட்களில் உன் இதயம் அதைத் தாங்குமோ? உன் கைகள் திடமாக இருக்குமோ? ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; இதைச் செய்தே தீருவோம்.
15. உன்னைப் புறவினத்தார் நடுவில் சிதறடித்து, வேற்று நாடுகளுக்கு விரட்டியடித்து, உன் அக்கிரமத்தை உன்னிடமிருந்து அகற்றுவோம்.
16. வேற்றினத்தார் கண்முன் உன்னால் நமது பரிசுத்தம் குலைந்து போகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்."
17. ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
18. மனிதா, இஸ்ராயேல் வீட்டார் நமக்குக் களிம்பாகி விட்டார்கள்; அவர்கள் எல்லாம் நெருப்பில் கிடக்கும் பித்தளை, வெள்ளீயம், இரும்பு, காரீயம் ஆனார்கள்; வெள்ளியின் களிம்பானார்கள்.
19. ஆகையால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் எல்லாரும் களிம்பாகிவிட்டதால், உங்களைவரையும் யெருசலேமில் ஒன்றுசேர்ப்போம்;
20. வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் இவை நெருப்பில் உருக்கப்படுவது போல, நமது கோப அக்கினியால் உங்களை ஒன்று சேர்த்து உருக்குவோம்.
21. நாம் உங்களைக் கூட்டி, நமது கோப அக்கினியால் உங்களைச் சுட்டெரிப்போம்; நீங்கள் யெருசலேமின் நடுவில் உருக்கப்படுவீர்கள்.
22. உலையில் வெள்ளி உருக்கப்படுவது போல நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள்; நமது கோபத்தை உங்கள் மேல் காட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்."
23. அன்றியும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
24. மனிதா, அந்த நகருக்குச் சொல்: நீ சுத்தப்படுத்தப்படாத பூமி; ஆண்டவர் உன் மேல் சினங்கொண்டு மழை பொழியவில்லை.
25. பொய் தீர்க்கதரிசிகள் அதன் நடுவில் ஒப்பந்தம் செய்து கொண்டு, கார்ச்சிக்கும் சிங்கம் இரை தேடிப் பிடிப்பது போல், ஆன்மாக்களை விழுங்கினார்கள்; மனிதா உயிர்களைக் குடித்தார்கள்; செல்வத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும் பறித்துக் கொண்டார்கள்; கைம்பெண்களை மிகுதிப்படுத்தினார்கள்.
26. அதனுடைய குருக்கள் நமது சட்டத்தை அவமதித்தார்கள்; பரிசுத்தமானவற்றைத் தீட்டுப்படுத்தினார்கள்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமற்றதற்கும் வேற்றுமை பாராமலும், அசுத்தமானதையும் அசுத்தமற்றதையும் பிரித்துணர்த்தாமலும் இருந்தார்கள்; நமது ஒய்வுநாளைப் பொருட்படுத்தவில்லை; அதனால் அவர்கள் நடுவில் நாம் அவமதிக்கப்பட்டோம்.
27. அதிலுள்ள தலைவர்களோ இரையைக் கவ்வும் ஒநாய்கள் போலத் தங்கள் பொருளாசையால் செல்வம் திரட்டுவதற்காகக் கொலை செய்யவும், ஆன்மாக்களைக் கெடுக்கவும் தயங்கவில்லை.
28. அதனுடைய பொய்த் தீர்க்கதரிசிகள், வெளிப்பூச்சுப் பூசிக் கொண்டு, போலிக்காட்சிகள் கண்டு, பொய்களைச் சொல்லி ஆண்டவர் சொல்லாததை ஆண்டவர் சொன்னதாகக் கூறிப் பிதற்றினார்கள்.
29. மக்களோ பிறர்பொருளைப் பறித்தார்கள்; கொள்ளை அடித்தார்கள்; ஏழைகளையும் எளியவர்களையும் ஒடுக்கினார்கள்; அந்நியரை அநியாயமாய்த் துன்புறுத்தினார்கள்.
30. நமக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நடுவில் சுவர் போல நின்று, நாம் இந்த நாட்டை அழிக்காதபடி தடுக்கக் கூடியவன் ஒருவனைத் தேடினோம்; அப்படிப்பட்டவன் எவனையும் காணோம்.
31. ஆகையால் நமது ஆத்திரத்தை அவர்கள் மேல் காட்டினோம்; நமது கோபாக்கினியால் அவர்களை அழித்தோம்; அவர்கள் குற்றங்களை அவர்கள் மேலேயே சுமத்தினோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 48
1 மேலும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 2 மனிதா, இரத்தத்தைச் சிந்தின யெருசலேமுக்கு நீதி செலுத்த மாட்டாயோ? அதைத் தீர்ப்பிட மாட்டாயோ? 3 அப்படியானால் அதனுடைய அக்கிரமங்களையெல்லாம் எடுத்துக்காட்டி, அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தனக்குத் தண்டனை நாள் விரைவில் வரும்படி, தன் நடுவில் இரத்தத்தைச் சிந்தித் தனக்கு எதிராகச் சிலைகளை உண்டு பண்ணித் தன்னையே தீட்டுப்படுத்திக் கொண்ட பட்டணம் இதுவே. 4 இரத்தத்தைச் சிந்தி, அதனால் குற்றவாளியாகிச் சிலைகளை உண்டு பண்ணி, அதனால் உன்னேயே தீட்டுப்படுத்தி உன் நாட்களைக் குறைத்து, அதனால் உன் கடைசி நாளை நீயே வரவழைத்துக் கொண்டாய்; ஆகையால் உன்னைப் புறவினத்தார்க்கு நிந்தையாகவும், அண்டை நாட்டார்க்குப் பரிகாசமாகவும் ஆக்கினோம்; 5 உனக்கு அருகில் இருப்பவர்களும், தொலைவில் இருப்பவர்களும் பேர் கெட்ட நகரம் என்றும், அமளி நிறைந்த ஊரென்றும் உன்னை இகழ்வார்கள். 6 இதோ, இஸ்ராயேலின் தலைவர்கள் தத்தம் வல்லமைக்கேற்ப உன் நடுவில் இரத்தம் சிந்துவதே வேலையாய் இருந்தார்கள். 7 தாய் தந்தையரை உன் நடுவில் அவமதித்தார்கள்; உன்னை நாடி வந்த அந்நியருக்கு இடுக்கண் செய்தார்கள்; உன்னிடமுள்ள கைம்பெண்களையும் அனாதைப் பிள்ளைகளையும் துன்புறுத்தினார்கள். 8 நீயோ நமது கோயிலை அவசங்கைப்படுத்தி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தம் இழக்கச் செய்தாய். 9 இரத்தத்தைச் சிந்தும் அக்கிரமிகள் உன்னில் இருக்கிறார்கள்; மலைகளின் மேல் படைக்கப்பட்டதை உண்ணுகிறார்கள்; உன் நடுவில் அக்கிரமம் செய்யத்துணிகிறார்கள்; 10 தங்கள் தந்தையின் நிருவாணத்தை வெளிப்படுத்துகிறவர்களும், தீட்டுப்பட்ட பெண்களைப் பலவந்தப் படுத்துகிறவர்களும் உன்னில் உள்ளனர். 11 ஒருவன் தன் அயலான் மனைவியைக் கெடுக்கிறான்; இன்னொருவன் தன் மருமகளைக் கெடுத்துக் கற்பழிக்கிறான்; மற்றொருவன் சொந்தத் தந்தைக்குப் பிறந்த தன் உடன் பிறந்த சகோதரியை முறைகேடாய்க் கெடுக்கிறான். 12 உன்னில் பலர் கொலை செய்ய இலஞ்சம் வாங்குகிறார்கள்; நீ வட்டி வாங்குகிறாய்; கொடுத்ததற்கு அதிகமாய்த் திரும்பப் பெறுகிறாய்; பொருளாசையால் அயலானை ஒடுக்குகிறாய்; நம்மை மறந்துவிட்டாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன். 13 இதோ, உன் பொருளாசையையும், உன் நடுவில் சிந்தப்பட்ட இரத்தத்தையும் கண்டு நாம் கைகளைத் தட்டுகிறோம். 14 நாம் உன்னைத் தண்டிக்கும் நாட்களில் உன் இதயம் அதைத் தாங்குமோ? உன் கைகள் திடமாக இருக்குமோ? ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்; இதைச் செய்தே தீருவோம். 15 உன்னைப் புறவினத்தார் நடுவில் சிதறடித்து, வேற்று நாடுகளுக்கு விரட்டியடித்து, உன் அக்கிரமத்தை உன்னிடமிருந்து அகற்றுவோம். 16 வேற்றினத்தார் கண்முன் உன்னால் நமது பரிசுத்தம் குலைந்து போகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவாய்." 17 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: 18 மனிதா, இஸ்ராயேல் வீட்டார் நமக்குக் களிம்பாகி விட்டார்கள்; அவர்கள் எல்லாம் நெருப்பில் கிடக்கும் பித்தளை, வெள்ளீயம், இரும்பு, காரீயம் ஆனார்கள்; வெள்ளியின் களிம்பானார்கள். 19 ஆகையால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீங்கள் எல்லாரும் களிம்பாகிவிட்டதால், உங்களைவரையும் யெருசலேமில் ஒன்றுசேர்ப்போம்; 20 வெள்ளி, பித்தளை, இரும்பு, ஈயம் இவை நெருப்பில் உருக்கப்படுவது போல, நமது கோப அக்கினியால் உங்களை ஒன்று சேர்த்து உருக்குவோம். 21 நாம் உங்களைக் கூட்டி, நமது கோப அக்கினியால் உங்களைச் சுட்டெரிப்போம்; நீங்கள் யெருசலேமின் நடுவில் உருக்கப்படுவீர்கள். 22 உலையில் வெள்ளி உருக்கப்படுவது போல நீங்களும் அதன் நடுவில் உருக்கப்படுவீர்கள்; நமது கோபத்தை உங்கள் மேல் காட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்." 23 அன்றியும் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: 24 மனிதா, அந்த நகருக்குச் சொல்: நீ சுத்தப்படுத்தப்படாத பூமி; ஆண்டவர் உன் மேல் சினங்கொண்டு மழை பொழியவில்லை. 25 பொய் தீர்க்கதரிசிகள் அதன் நடுவில் ஒப்பந்தம் செய்து கொண்டு, கார்ச்சிக்கும் சிங்கம் இரை தேடிப் பிடிப்பது போல், ஆன்மாக்களை விழுங்கினார்கள்; மனிதா உயிர்களைக் குடித்தார்கள்; செல்வத்தையும், விலையுயர்ந்த பொருட்களையும் பறித்துக் கொண்டார்கள்; கைம்பெண்களை மிகுதிப்படுத்தினார்கள். 26 அதனுடைய குருக்கள் நமது சட்டத்தை அவமதித்தார்கள்; பரிசுத்தமானவற்றைத் தீட்டுப்படுத்தினார்கள்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமற்றதற்கும் வேற்றுமை பாராமலும், அசுத்தமானதையும் அசுத்தமற்றதையும் பிரித்துணர்த்தாமலும் இருந்தார்கள்; நமது ஒய்வுநாளைப் பொருட்படுத்தவில்லை; அதனால் அவர்கள் நடுவில் நாம் அவமதிக்கப்பட்டோம். 27 அதிலுள்ள தலைவர்களோ இரையைக் கவ்வும் ஒநாய்கள் போலத் தங்கள் பொருளாசையால் செல்வம் திரட்டுவதற்காகக் கொலை செய்யவும், ஆன்மாக்களைக் கெடுக்கவும் தயங்கவில்லை. 28 அதனுடைய பொய்த் தீர்க்கதரிசிகள், வெளிப்பூச்சுப் பூசிக் கொண்டு, போலிக்காட்சிகள் கண்டு, பொய்களைச் சொல்லி ஆண்டவர் சொல்லாததை ஆண்டவர் சொன்னதாகக் கூறிப் பிதற்றினார்கள். 29 மக்களோ பிறர்பொருளைப் பறித்தார்கள்; கொள்ளை அடித்தார்கள்; ஏழைகளையும் எளியவர்களையும் ஒடுக்கினார்கள்; அந்நியரை அநியாயமாய்த் துன்புறுத்தினார்கள். 30 நமக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நடுவில் சுவர் போல நின்று, நாம் இந்த நாட்டை அழிக்காதபடி தடுக்கக் கூடியவன் ஒருவனைத் தேடினோம்; அப்படிப்பட்டவன் எவனையும் காணோம். 31 ஆகையால் நமது ஆத்திரத்தை அவர்கள் மேல் காட்டினோம்; நமது கோபாக்கினியால் அவர்களை அழித்தோம்; அவர்கள் குற்றங்களை அவர்கள் மேலேயே சுமத்தினோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
மொத்தம் 48 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 22 / 48
×

Alert

×

Tamil Letters Keypad References