தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யாத்திராகமம்
1. அப்போது, ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் பாரவோனுக்குச் செய்வதை நீ இப்பொழுதே காணப்பெறுவாய். உண்மையிலே அவன் (நமது) வலுத்த கையைக் கண்டே அவர்களைப் போகவிட்டு, வற்புறுத்தித் தன் நாட்டிலிருந்து புறப்படும்படி, தானே அவர்களை மன்றாடுவான் என்று அருளினார்.
2. மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் ஆண்டவர்.
3. நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எல்லாம் வல்ல கடவுளாய்க் காட்சியளித்தவர். ஆயினும், அதோனாயி என்னும் நமது பெயரை அவர்களுக்குத் தெரிவித்தோமில்லை.
4. அவர்கள் அந்நியர்களாய் அலைந்து திரிந்த கானான் நாட்டை அவர்களுக்கு அளிப்பதாக அவர்களோடு உடன்படிக்கை செய்தோம்.
5. எகிப்தியர் அவர்களை வதைத்ததின் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் விட்ட பெருமுச்சைக் கேட்டு, நமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தோம்.
6. ஆகையால், நீ நம் பெயராலே இஸ்ராயேல் மக்களை நோக்கி: ஆண்டவராகிய நாமே எகிப்தியருடைய சிறையினின்றும் உங்களை விடுதலையாக்கி, அடிமைத்தனத்தினின்றும் மீட்டு, ஓங்கிய கையாலும் பெரும் தண்டனைகளினாலும் உங்கனை நாம் ஈடேற்றுவோம்.
7. மேலும், உங்களை நம் சொந்த மக்களாகத் தெரிந்து கொள்வோம். அஃதோடு, உங்கள் கடவுளாகவும் இருப்போம். பிறகு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமென்று அறிவீர்கள். எந்த அடையாளத்தினால் என்று கேட்டால், உங்களை நாம் எகிப்தியருடைய சிறையினின்று விடுவித்து,
8. ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுக்கு நாம் கொடுப்பதாக ஆணையிட்டு வாக்களித்த நாட்டிலே உங்களைக் குடியேறச் செய்வதனாலே தான். உண்மையில், ஆண்டவராகிய நாம் அதை உங்களுக்கு உடைமையாய்க் கொடுப்போம் என்று சொல்லுவாய் என்றார்.
9. அவ்வண்ணமே மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார். அவர்களோ, மன வருத்தத்தையும் தாளாத வேலையையும் முன்னிட்டு, அவருக்குச் செவிகொடுக்கவில்லை.
10. அதன் பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி:
11. நீ எகிப்திய மன்னன் பாரவோனிடம் சென்று, அவன் இஸ்ராயேல் மக்களைத் தன் நாட்டினின்று அனுப்பி விடுமாறு சொல் என்றார்.
12. மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்றுகொண்டு: இஸ்ராயேல் மக்களே என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவில்லை; பாரவோன் எப்படிச் செவி கொடுப்பான்? அதிலும் நான் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையவன் அல்லவா என்றார்.
13. ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் அவ்வண்ணமே பேசினார். இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று போக வேண்டிய காரியத்தைப் பற்றி, அந்த மக்களிடத்திலும் எகிப்திய மன்னன் பாரவோனிடத்திலும் அவர் சொன்ன கட்டளைகள் அவையேயாம்.
14. குடும்ப வரிசைப்படி கோத்திரத் தலைவர்களாவன: இஸ்ராயேலின் மூத்த புதல்வனான ரூபனின் புதல்வர்கள்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மீ ஆகியோர். இவர்களே ரூபனின் கோத்திரத்தார்.
15. சிமையோனின் மக்கள்: ஜமுவேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோவார், கானானையப் பெண்ணின் மகன் சவூல் முதலியோர். இவர்களே சிமையோனின் கோத்திரத்தார்.
16. வம்ச வரிசைப்படி லேவியின் மக்கள்: யெற்சோன், காவாத், மெராரி இவர்களேயாம். லேவியின் வாழ்நாளோ, நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகளாம்.
17. யேற்சோனின் மக்கள், தங்கள் வம்ச வரிசைப்படி: லோப்னி, சேமையி ஆகியோர்.
18. காவாத்தின் மக்கள்: அம்ராம், இசார், எபிரோன், ஒசியேல் ஆவர். காவாத் நூற்று முப்பத்து மூன்று ஆண்டுகாலம் வாழ்ந்தான்.
19. மெராரியின் மக்கள் மொகோலியும் மூசியுமாம். இவர்களே வம்ச வரிசைப்படி லேவியின் வழித்தோன்றல்கள்.
20. அம்ராம் தன் தந்தையின் சகோதரன் மகளாகிய யொக்காபேத்தை மணந்து கொண்டான். அவனுக்கு அவள் வயிற்றில் மோயீசனும் ஆரோனும் பிறந்தனர். அம்ராம் வாழ்ந்த ஆண்டுகள் நூற்றுமுப்பத்தேழு.
21. இசாரின் மக்களோ, கோரையும் நெபேகும் செக்கிரியுமாம்.
22. ஒசியேலின் மக்களோ மிசயேலும் எலிசபானும் செத்திரியுமாம்.
23. ஆரோன் அமினதாபின் மகளும் நாகசோனின் சகோதரியுமான எலிசபெத்தை மணந்து கொண்டான். இவள் அவனுக்கு நதாப், அபியு, எலியெசார், இத்தமார் என்பவர்களைப் பெற்றாள்.
24. கோரையின் மக்களோ, ஆசேரும் எல்கானாவும் அபியசாபுமாம். இவர்கள் கோரையின் வழித்தோன்றல்களாம்.
25. ஆரோனின் மகனான எலியெசார், புத்தியேலின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டான். இவள் அவனுக்குப் பினேஸ் என்பவனைப் பெற்றாள். வம்ச வரிசைப்படி லேவி கோத்திரத்தாரின் தலைவர் இவர்களே.
26. இஸ்ராயேல் மக்களை அணியணியாக எகிப்து நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று ஆண்டவரால் கட்டளை பெற்ற மோயீசனும் ஆரோனும் இவர்களே.
27. எகிப்தினின்று இஸ்ராயேல் மக்களைக் கூட்டிக்கொண்டு போகும் பொருட்டு, எகிப்து மன்னன் பாரவோனோடு பேசின மோயீசனும் ஆரோனும் இவர்களே.
28. எகிப்து நாட்டில் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளிய நாளிலே,
29. ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாமே ஆண்டவர். நாம் உன்னோடு பேசுகிற எல்லாவற்றையும் எகிப்து மன்னன் பாரவோனுக்குச் சொல்லுவாய் என்ற போது,
30. மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்று கொண்டு: அடியேன் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையனாய் இருக்க பாரவோன் எனக்கு எப்படிச் செவி கொடுப்பான் என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 40 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 40
யாத்திராகமம் 6:25
1 அப்போது, ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் பாரவோனுக்குச் செய்வதை நீ இப்பொழுதே காணப்பெறுவாய். உண்மையிலே அவன் (நமது) வலுத்த கையைக் கண்டே அவர்களைப் போகவிட்டு, வற்புறுத்தித் தன் நாட்டிலிருந்து புறப்படும்படி, தானே அவர்களை மன்றாடுவான் என்று அருளினார். 2 மீண்டும் ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாம் ஆண்டவர். 3 நாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் எல்லாம் வல்ல கடவுளாய்க் காட்சியளித்தவர். ஆயினும், அதோனாயி என்னும் நமது பெயரை அவர்களுக்குத் தெரிவித்தோமில்லை. 4 அவர்கள் அந்நியர்களாய் அலைந்து திரிந்த கானான் நாட்டை அவர்களுக்கு அளிப்பதாக அவர்களோடு உடன்படிக்கை செய்தோம். 5 எகிப்தியர் அவர்களை வதைத்ததின் பொருட்டு, இஸ்ராயேல் மக்கள் விட்ட பெருமுச்சைக் கேட்டு, நமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தோம். 6 ஆகையால், நீ நம் பெயராலே இஸ்ராயேல் மக்களை நோக்கி: ஆண்டவராகிய நாமே எகிப்தியருடைய சிறையினின்றும் உங்களை விடுதலையாக்கி, அடிமைத்தனத்தினின்றும் மீட்டு, ஓங்கிய கையாலும் பெரும் தண்டனைகளினாலும் உங்கனை நாம் ஈடேற்றுவோம். 7 மேலும், உங்களை நம் சொந்த மக்களாகத் தெரிந்து கொள்வோம். அஃதோடு, உங்கள் கடவுளாகவும் இருப்போம். பிறகு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாமென்று அறிவீர்கள். எந்த அடையாளத்தினால் என்று கேட்டால், உங்களை நாம் எகிப்தியருடைய சிறையினின்று விடுவித்து, 8 ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு என்பவர்களுக்கு நாம் கொடுப்பதாக ஆணையிட்டு வாக்களித்த நாட்டிலே உங்களைக் குடியேறச் செய்வதனாலே தான். உண்மையில், ஆண்டவராகிய நாம் அதை உங்களுக்கு உடைமையாய்க் கொடுப்போம் என்று சொல்லுவாய் என்றார். 9 அவ்வண்ணமே மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார். அவர்களோ, மன வருத்தத்தையும் தாளாத வேலையையும் முன்னிட்டு, அவருக்குச் செவிகொடுக்கவில்லை. 10 அதன் பின்னர் ஆண்டவர் மோயீசனை நோக்கி: 11 நீ எகிப்திய மன்னன் பாரவோனிடம் சென்று, அவன் இஸ்ராயேல் மக்களைத் தன் நாட்டினின்று அனுப்பி விடுமாறு சொல் என்றார். 12 மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்றுகொண்டு: இஸ்ராயேல் மக்களே என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவில்லை; பாரவோன் எப்படிச் செவி கொடுப்பான்? அதிலும் நான் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையவன் அல்லவா என்றார். 13 ஆண்டவர் மோயீசனோடும் ஆரோனோடும் அவ்வண்ணமே பேசினார். இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டினின்று போக வேண்டிய காரியத்தைப் பற்றி, அந்த மக்களிடத்திலும் எகிப்திய மன்னன் பாரவோனிடத்திலும் அவர் சொன்ன கட்டளைகள் அவையேயாம். 14 குடும்ப வரிசைப்படி கோத்திரத் தலைவர்களாவன: இஸ்ராயேலின் மூத்த புதல்வனான ரூபனின் புதல்வர்கள்: ஏனோக், பால்லு, எஸ்ரோன், கர்மீ ஆகியோர். இவர்களே ரூபனின் கோத்திரத்தார். 15 சிமையோனின் மக்கள்: ஜமுவேல், ஜமீன், அகோத், ஜக்கீன், சோவார், கானானையப் பெண்ணின் மகன் சவூல் முதலியோர். இவர்களே சிமையோனின் கோத்திரத்தார். 16 வம்ச வரிசைப்படி லேவியின் மக்கள்: யெற்சோன், காவாத், மெராரி இவர்களேயாம். லேவியின் வாழ்நாளோ, நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகளாம். 17 யேற்சோனின் மக்கள், தங்கள் வம்ச வரிசைப்படி: லோப்னி, சேமையி ஆகியோர். 18 காவாத்தின் மக்கள்: அம்ராம், இசார், எபிரோன், ஒசியேல் ஆவர். காவாத் நூற்று முப்பத்து மூன்று ஆண்டுகாலம் வாழ்ந்தான். 19 மெராரியின் மக்கள் மொகோலியும் மூசியுமாம். இவர்களே வம்ச வரிசைப்படி லேவியின் வழித்தோன்றல்கள். 20 அம்ராம் தன் தந்தையின் சகோதரன் மகளாகிய யொக்காபேத்தை மணந்து கொண்டான். அவனுக்கு அவள் வயிற்றில் மோயீசனும் ஆரோனும் பிறந்தனர். அம்ராம் வாழ்ந்த ஆண்டுகள் நூற்றுமுப்பத்தேழு. 21 இசாரின் மக்களோ, கோரையும் நெபேகும் செக்கிரியுமாம். 22 ஒசியேலின் மக்களோ மிசயேலும் எலிசபானும் செத்திரியுமாம். 23 ஆரோன் அமினதாபின் மகளும் நாகசோனின் சகோதரியுமான எலிசபெத்தை மணந்து கொண்டான். இவள் அவனுக்கு நதாப், அபியு, எலியெசார், இத்தமார் என்பவர்களைப் பெற்றாள். 24 கோரையின் மக்களோ, ஆசேரும் எல்கானாவும் அபியசாபுமாம். இவர்கள் கோரையின் வழித்தோன்றல்களாம். 25 ஆரோனின் மகனான எலியெசார், புத்தியேலின் புதல்வியருள் ஒருத்தியை மணந்து கொண்டான். இவள் அவனுக்குப் பினேஸ் என்பவனைப் பெற்றாள். வம்ச வரிசைப்படி லேவி கோத்திரத்தாரின் தலைவர் இவர்களே. 26 இஸ்ராயேல் மக்களை அணியணியாக எகிப்து நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று ஆண்டவரால் கட்டளை பெற்ற மோயீசனும் ஆரோனும் இவர்களே. 27 எகிப்தினின்று இஸ்ராயேல் மக்களைக் கூட்டிக்கொண்டு போகும் பொருட்டு, எகிப்து மன்னன் பாரவோனோடு பேசின மோயீசனும் ஆரோனும் இவர்களே. 28 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோயீசனுக்குத் திருவாக்கருளிய நாளிலே, 29 ஆண்டவர் மோயீசனை நோக்கி: நாமே ஆண்டவர். நாம் உன்னோடு பேசுகிற எல்லாவற்றையும் எகிப்து மன்னன் பாரவோனுக்குச் சொல்லுவாய் என்ற போது, 30 மோயீசன் ஆண்டவர் திருமுன் நின்று கொண்டு: அடியேன் விருத்தசேதனமில்லாத உதடுகளை உடையனாய் இருக்க பாரவோன் எனக்கு எப்படிச் செவி கொடுப்பான் என்றார்.
மொத்தம் 40 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 40
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References