தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யாத்திராகமம்
1. அப்பொழுது மோயீசன் (ஆண்டவரை நோக்கி): அவர்கள் என்னை நம்பவும் மாட்டார்கள்; என் வார்த்தைக்குச் செவி கொடுக்கவும் மாட்டார்கள்: ஆண்டவர் உனக்குக் காட்சி தரவில்லை என்று சொல்வார்களே என்று பதில் கூறினான்.
2. அவர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். அவன்: அது ஒரு கோல் என்று பதில் சொல்ல,
3. ஆண்டவர்: அதைத் தரையிலே போடு என்றார். அவன் போடவே, அது பாம்பாக மாறிப் போயிற்று. அது கண்டு மோயீசன் விலகி ஓடினான்.
4. அப்பொழுது ஆண்டவர்: உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடி என்று சொன்னார். அவன் பிடிக்கவே, அது அவன் கையிலே கோலாயிற்று.
5. ஆண்டவர்: உன் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுளாய் இருக்கிறவரே உனக்குக் காட்சி கொடுத்தார் என்று அவர்கள் நம்பும் பொருட்டு (இதுவே அடையாளம்) என்றார்.
6. மீண்டும் ஆண்டவர்: உன் கையை உன் மடியிலே வை என, அவன் மடியிலே வைத்து எடுத்த போது, அது உறை பனிபோல வெண் தொழுநோய் பிடித்து இருந்தது.
7. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே வை என, அவன் திரும்ப வைத்து எடுத்துப் பார்க்க, அது மற்ற சதையைப் போல் ஆயிற்று.
8. அப்பொழுது ஆண்டவர்: சிலவேளை அவர்கள் முந்தின அடையாளத்தைக் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், பிந்தின அடையாளத்தைக் கண்டு உன்னை நம்புவார்கள்.
9. அவர்கள் இவ்விரண்டு அற்புதங்களையும் கண்டு நம்பாமலும் உன் வார்த்தைக்குச் செவிகொடாமலும் இருப்பார்களாயின், அப்பொழுது ஆற்று நீரை முகந்து அதைத் தரையிலே ஊற்று. ஆற்றில் முகந்த நீர் எல்லாம் இரத்தமாக மாறிப்போம் என்றார்.
10. மோயீசன்: ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேளும்: நேற்றும் நேற்று முன்தினமும் நான் பேச்சுத் திறன் உள்ளவன் அல்லேன். சிறப்பாக, நீர் அடியேனுக்குத் திருவாக்கு அருளினது முதல், நான் திக்கு வாயனும் மந்த நாவு உள்ளவனும் ஆனேன் என்றான்.
11. ஆண்டவர் அவனை நோக்கி: மனிதனின் வாயை உண்டாக்கினவர் யார்? அன்றியும், ஊமையனையும் செவிடனையும், கண்பார்வை உள்ளவனையும் பார்வையற்ற குருடனையும் படைத்தவர் யார்?
12. நாம் அல்லவா? ஆகையால், நீ போ. நாம் உன் வாயோடு இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குச் சொல்லிக் கொடுப்போம் என்றார்.
13. அதற்கு அவன்: ஆண்டவரே! கெஞ்சிக் கேட்கிறேன், எவனை அனுப்ப வேண்டுமோ அவனை அனுப்பியருளும் என்று சொல்லக் கேட்டு,
14. ஆண்டவர் மோயீசன்மீது சினம் கொண்டவராய்: லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் சொற்றிறம் மிக்கவன் என்று அறிந்திருக்கிறோம். அதோ, அவன் உனக்கு எதிர்கொண்டு வருகிறான். உன்னைக் கண்டதும் அவன் மனமகிழ்வான்.
15. நீ அவனோடு பேசி, நம் வாக்குக்களை அவன் வாயிலே இடு. நாமோ, உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்துகொண்டு, நீங்கள் செய்ய வேண்டியதை உங்களுக்கு உணர்த்துவோம்.
16. அவன் உனக்குப் பதிலாய் மக்களிடம் பேசி, உனக்கு வாயாக இருப்பான். நீயோ, கடவுளுக்கு அடுத்தவைகளில் அவனுக்குக் குருவாய் இருப்பாய்.
17. இந்தக் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. அதைக்கொண்டே அற்புதங்களைச் செய்துவருவாய் என்று அருளினார்.
18. மோயீசன் திரும்பிப் போய்த் தன் மாமனாகிய யெத்திரோவிடம் வந்து: எகிப்தில் இருக்கிற என் சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்த்து வரும்படி நான் போய் வருகிறேன் என்று அவருக்குச் சொல்ல, யெத்திரோ: சமாதானமாய்ப் போய் வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
19. ஆண்டவர் மதியானிலே மோயீசனை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போகலாம். ஏனென்றால், உன் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் எல்லாரும் இறந்து போனார்கள் என்று உரைத்தார்.
20. அப்பொழுது மோயீசன் தன் மனைவியையும் புதல்வர்களையும் அழைத்துக் கொண்டு, அவர்களைக் கழுதையின்மீது ஏற்றி, கடவுள் தந்த கோலைத் தன் கையில் எடுத்துக் கொண்டு எகிப்துக்குப் பயணமானான்.
21. எகிப்திற்குத் திரும்பிச் செல்லுகையில் ஆண்டவர் அவனை நோக்கி: நாம் உன் கையில் வைத்துக் கொடுத்த எல்லா அற்புதங்களையும் பாரவோன் முன்னிலையில் செய்து காட்டக் கவனமாய் இரு. நாம் அவன் மனத்தைக் கடினமாக்கி விடுவோமாதலால், அவன் மக்களைப் போக விடான்.
22. அப்போது நீ அவனுக்குச் சொல்ல வேண்டியது என்ன என்றால்: ஆண்டவர் சொல்லுவதாவது: இஸ்ராயேல் நம் மூத்த புதல்வன்.
23. நமக்கு ஆராதனை செய்யும்படி நம் புதல்வனை அனுப்பி விடு என்று நாம் உனக்குக் கட்டளை இட்டிருந்தும், நீ அவனை அனுப்பிவிட மாட்டேன் என்றாய். ஆதலால், இதோ நாம் உன் மூத்த மகனைக் கொல்ல இருக்கின்றோம் என்பாய் என்றார்.
24. மேலும், மோயீசன் வழியே சென்றுகொண்டிருக்கையில், ஆண்டவர் ஒரு சாவடியில் அவனைச் சந்தித்து, அவனைக் கொல்ல எண்ணியிருந்தார்.
25. உடனே செப்போறாள் மிகக் கூர்மையான ஒரு கல்லை எடுத்துத் தன் புதல்வனின் நுனித்தோலை வெட்டி, பின் அவன் கால்களைத் தொட்டு: நீர் எனக்கு இரத்தப் பழியின் கணவர் என்றாள்.
26. விருத்த சேதனத்தைப் பற்றி: இரத்தப் பழியின் கணவர் என்று அவள் சொன்ன உடனே ஆண்டவர் அவனை விட்டு விலகினார்.
27. இதற்கிடையில் ஆண்டவர் ஆரோனை நோக்கி: பாலைவனத்திலே மோயீசனுக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார். தெய்வ மலைப் பக்கம் அவனுக்கு எதிர்கொண்டு சென்ற, அவனை முத்தமிட்டான்.
28. அப்பொழுது மோயீசன் தன்னை அனுப்பிய ஆண்டவரின் எல்லா வார்த்தைகளையும், அவர் கட்டளையிட்ட அற்புதங்களையும் ஆரோனுக்கு விளக்கிச் சொன்னான்.
29. பின், இருவரும் சேர்ந்து போய், இஸ்ராயேல் மக்களில் பெரியோர் அனைவரையும் கூட்டினர்.
30. அப்போது, ஆண்டவர் மோயீசனுக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் சொல்லி, மக்களுக்கு முன்பாக அற்புதங்களையும் செய்தான்.
31. மக்களும் நம்பினார்கள். ஆண்டவர் இஸ்ராயேல் மக்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய தொல்லைகளைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும் அவர்கள் அந்நேரம் அறிந்து கொண்டு, நெடுங்கிடையாய் விழுந்து தொழுதனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 40 Chapters, Current Chapter 4 of Total Chapters 40
யாத்திராகமம் 4:20

×

Alert

×

tamil Letters Keypad References