தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யாத்திராகமம்
1. அப்பொழுது பரிசுத்த இடத்துத் திருப் பணிகளுக்கடுத்த தட்டுமுட்டுக்களையும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்த மற்ற யாவற்றையும் சிற்பக்கலை முறைப்படி செய்வதற்கு ஆண்டவர் எவரெவர்க்கு ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் தந்தருளியிருந்தாரோ அவர்கள் -- அதாவது, பெசெலேயல், ஒலியாப் முதலிய தொழில் நுணுக்கம் படைத்த அனைவரும் -- மேற்சொன்ன வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள்.
2. அவர்கள் இருவரையும், அவர்களோடு ஆண்டவரால் திறமையைப் பெற்றுக்கொண்டு வேலைகளைச் செய்துவரும்படி மன உற்சாகம் மேற்கொண்டிருந்த விவேகிகள் எல்லாரையும் மோயீசன் வரவழைத்து,
3. இஸ்ராயேல் மக்கள் கொடுத்திருந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம் கொடுத்தார். பின் அவர்கள் முழுமனத்தோடு வேலை செய்து வருகையில் மக்கள் காலை தோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்.
4. ஆகையினால், வேலைசெய்யும் அந்த மனிதர்கள் கட்டாயமாய்
5. மோயீசனிடம் வந்து: ஐயா, வேலைக்கு வேண்டியதை மட்டுமல்ல, அதற்கு அதிகமான பொருட்களையும் மக்கள் கொடுத்து வருகிறார்கள் என்றனர்.
6. அதை கேட்டு மோயீசன்: இனி ஆடவரோ மகளிரோ பரிசுத்த இடத்துத் திருப்பணிக்கு வேறொரு காணிக்கையும் செலுத்த வெண்டாம் என்று பாளையமெங்கும் கட்டியக்காரன் கூறும்படி கட்டளையிட்டார். மக்கள் கொடைகளைக் கொண்டு வருதல் இவ்விதமாய் நிறுத்தப்பட்டது.
7. உண்மையிலே ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்கள் செய்யவேண்டிய வேலைகளுக்கெல்லாம் போதுமானதாய் இருந்ததுமன்றி, அதிகமாயும் இருந்தன.
8. வேலை செய்யும் மனம் படைத்தோர் யாவரும் திருஉறைவிடத்தை அமைப்பதற்குத் திரித்த மெல்லிய சணல்நூலாலும், நீல நூலாலும், கருஞ்சிவப்பு நூலாலும், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிற நூலாலும், பல நிறமுள்ள வினோத நெசவுக் கலை முறைப்படி பத்து மூடுதிரைகளை அமைத்தனர்.
9. அவற்றில் ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாய் இருந்தது. எல்லா மூடுதிரைகளும் ஒரே அளவாய் இருந்தன.
10. பெசெலேயல் ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்துச் சேர்த்தான்.
11. மேலும், ஒரு மூடுதிரையின் இரு ஒரங்களிலும் இளநீலக் கயிறுகளால் வளையங்கள் அமைத்து, பின்பு அப்படியே மற்ற மூடுதிரையின் ஓரங்களிலும் செய்தான்.
12. அவ் வளையங்கள் ஒன்றோடொன்று நேர் நேராக அமைந்திருந்ததனால், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படத் தக்கனவாய் இருந்தன.
13. பின் ஐம்பது பொன்கொக்கிகளால் மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு கூடாரமாய்ச் சேரும்படி செய்தான்.
14. திருஉறைவிடத்தின் மேல்தட்டை மூடும்படி ஆட்டுமயிரால் நெசவுசெய்யப்பட்ட பதினொரு கம்பளிகளையும் அமைத்தான்.
15. ஒவ்வொரு கம்பளியும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் இருந்தது. எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாய் இருந்தன.
16. அவற்றில் ஐந்து கம்பளிகளை ஒன்றாகவும் மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாகவும் இணைத்தான்.
17. அவை ஒன்றோடொன்று சேரத்தக்கதாக, ஒரு கம்பளியின் ஒரத்திலே ஐம்பது காதுகளையும், மற்றக் கம்பளியின் ஒரத்திலே ஐம்பது காதுகளையும் அமைத்தான்.
18. அன்றியும், கூடாரத்தின் மேல்தட்டைக் கட்ட, எல்லாக் கம்பளிகளும் ஒரே கம்பளியாய் இருக்கத் தக்கதாக ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் செய்தான்.
19. மேலும், சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக் கிடாய்த் தோல்களால் கூடாரத்துக்கு இன்னொரு மூடியையும், அதன் மேல் வைக்கத்தக்க ஊதாத் தோல்களால் ஆன வேறொரு மூடியையும் செய்தான்.
20. கூடாரத்திற்கு நட்டமாய் நிற்கும் பலகைகளைச் சேத்தீம் மரத்தினால் செய்தான்.
21. ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருந்தது.
22. ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு காடிகளும் இரண்டு கழுத்துக்களும் இருந்தன. அதனால் ஒரு பலகை மற்ற பலகையோடு சேரக்கூடும். உறைவிடத்தின் பலகைகளுக்கெல்லாம் அவ்வாறே அமைத்தான்.
23. அவற்றில் தென் திசையை நோக்கும் இருபது பலகைகளும்,
24. நாற்பது வெள்ளிப் பாதங்களும் இருந்தன. பக்கங்களின் காடி கழுத்துகள் சேரும் இடத்திலே மூலைகளின் இரு பக்கத்திலும் ஒவ்வொரு பலகைக்கும் கீழே இரண்டு பாதங்கள் வைக்கப்பட்டிருந்தன.
25. வடதிசையை நோக்கிய கூடாரப் பக்கத்துக்கு இருபது பலகைகள் இருந்தன.
26. ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு பாதங்கள் இருந்ததனால், நாற்பது வெள்ளிப் பாதங்களும் இருந்தன.
27. மேற்புறத்திலும் அதாவது, கடலை நோக்கிய கூடாரப் பக்கத்திற்கும் ஆறு பலகைகளைச் செய்தான்.
28. கூடாரத்தின் பின் புறத்து ஒவ்வொரு மூலைக்கும் வேறு இரண்டு பலகைகளையும் வைத்தான்.
29. அவை கீழிருந்து மேல்வரை இணைக்கப்படிருந்தமையால், ஒரே கட்டுக்கோப்பாய் இருக்கும். இரு பக்கத்து மூலைகளிலும் அவ்வாறே செய்தான்.
30. அப்படியே எட்டுப் பலகைகளும், ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருந்தன.
31. திரு உறைவிடத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளை உறுதிப்படுத்துவதற்காகச் சேத்தீம் மரத்தால் ஐந்து குறுக்குச் சட்டங்களையும்,
32. மறு பக்கத்துப் பலகைகளைச் சேர்ப்பதற்காக வேறு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், அவை தவிர, கடலை நோக்கிய கூடார மேற்குப் புறத்திற்கு இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் அவன் செய்தான்.
33. அன்றியும், பலகைகளின் மையத்தில் ஒரு முனை தொடங்கி மறுமுனை வரை பாயும்படி மற்றொரு குறுக்குச் சட்டத்தையும் செய்தான்.
34. அப்பலகைகளுக்குப் பொன் தகடு பொதிந்து அவற்றின் வெள்ளிப் பாதங்களையும் வார்த்து வைத்தான். குறுக்குச் சட்டம் எந்த வளையங்களில் ஊடுருவப் பாயுமோ அந்த வளையங்களையும் பொன் தகட்டால் மூடினான்.
35. நீல நிறம், கருஞ்சிவப்பு நிறம், இரத்த நிறம் கொண்ட நூல்கள், திரித்த மெல்லிய சணல் நூல்கள் இவற்றால் நெசவு செய்து, அழகான பின்னல் வேலைகளோடும் பற்பல நிறங்களோடும் சிறந்த ஒரு திரையை அமைத்தான்.
36. சேத்தீம் மரத்தால் நான்கு தூண்களைச் ( செய்து ), அவற்றையும் அவற்றின் போதிகைகளையும் பொன் தகட்டால் மூடினான். அவற்றின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாலானதாம்.
37. கூடார வாயிலுக்காக நீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய மெல்லிய சணல்நூல் இவற்றால் நெசவு செய்து விசித்திரப் பின்னல் வேலையுடைய ஒரு தொங்கு திரையையும்,
38. பொன்தகட்டால் மூடிய ஐந்து தூண்களையும், அவற்றின் போதிகைகளையும் செய்தான். அவற்றின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாய் இருந்தன.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 40 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 40
யாத்திராகமம் 36:25
1 அப்பொழுது பரிசுத்த இடத்துத் திருப் பணிகளுக்கடுத்த தட்டுமுட்டுக்களையும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்த மற்ற யாவற்றையும் சிற்பக்கலை முறைப்படி செய்வதற்கு ஆண்டவர் எவரெவர்க்கு ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் தந்தருளியிருந்தாரோ அவர்கள் -- அதாவது, பெசெலேயல், ஒலியாப் முதலிய தொழில் நுணுக்கம் படைத்த அனைவரும் -- மேற்சொன்ன வேலைகளைச் செய்யத் தொடங்கினார்கள். 2 அவர்கள் இருவரையும், அவர்களோடு ஆண்டவரால் திறமையைப் பெற்றுக்கொண்டு வேலைகளைச் செய்துவரும்படி மன உற்சாகம் மேற்கொண்டிருந்த விவேகிகள் எல்லாரையும் மோயீசன் வரவழைத்து, 3 இஸ்ராயேல் மக்கள் கொடுத்திருந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம் கொடுத்தார். பின் அவர்கள் முழுமனத்தோடு வேலை செய்து வருகையில் மக்கள் காலை தோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள். 4 ஆகையினால், வேலைசெய்யும் அந்த மனிதர்கள் கட்டாயமாய் 5 மோயீசனிடம் வந்து: ஐயா, வேலைக்கு வேண்டியதை மட்டுமல்ல, அதற்கு அதிகமான பொருட்களையும் மக்கள் கொடுத்து வருகிறார்கள் என்றனர். 6 அதை கேட்டு மோயீசன்: இனி ஆடவரோ மகளிரோ பரிசுத்த இடத்துத் திருப்பணிக்கு வேறொரு காணிக்கையும் செலுத்த வெண்டாம் என்று பாளையமெங்கும் கட்டியக்காரன் கூறும்படி கட்டளையிட்டார். மக்கள் கொடைகளைக் கொண்டு வருதல் இவ்விதமாய் நிறுத்தப்பட்டது. 7 உண்மையிலே ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்கள் செய்யவேண்டிய வேலைகளுக்கெல்லாம் போதுமானதாய் இருந்ததுமன்றி, அதிகமாயும் இருந்தன. 8 வேலை செய்யும் மனம் படைத்தோர் யாவரும் திருஉறைவிடத்தை அமைப்பதற்குத் திரித்த மெல்லிய சணல்நூலாலும், நீல நூலாலும், கருஞ்சிவப்பு நூலாலும், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிற நூலாலும், பல நிறமுள்ள வினோத நெசவுக் கலை முறைப்படி பத்து மூடுதிரைகளை அமைத்தனர். 9 அவற்றில் ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாய் இருந்தது. எல்லா மூடுதிரைகளும் ஒரே அளவாய் இருந்தன. 10 பெசெலேயல் ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்துச் சேர்த்தான். 11 மேலும், ஒரு மூடுதிரையின் இரு ஒரங்களிலும் இளநீலக் கயிறுகளால் வளையங்கள் அமைத்து, பின்பு அப்படியே மற்ற மூடுதிரையின் ஓரங்களிலும் செய்தான். 12 அவ் வளையங்கள் ஒன்றோடொன்று நேர் நேராக அமைந்திருந்ததனால், அவை ஒன்றோடொன்று இணைக்கப்படத் தக்கனவாய் இருந்தன. 13 பின் ஐம்பது பொன்கொக்கிகளால் மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு கூடாரமாய்ச் சேரும்படி செய்தான். 14 திருஉறைவிடத்தின் மேல்தட்டை மூடும்படி ஆட்டுமயிரால் நெசவுசெய்யப்பட்ட பதினொரு கம்பளிகளையும் அமைத்தான். 15 ஒவ்வொரு கம்பளியும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமும் இருந்தது. எல்லாக் கம்பளிகளும் ஒரே அளவாய் இருந்தன. 16 அவற்றில் ஐந்து கம்பளிகளை ஒன்றாகவும் மற்ற ஆறு கம்பளிகளை ஒன்றாகவும் இணைத்தான். 17 அவை ஒன்றோடொன்று சேரத்தக்கதாக, ஒரு கம்பளியின் ஒரத்திலே ஐம்பது காதுகளையும், மற்றக் கம்பளியின் ஒரத்திலே ஐம்பது காதுகளையும் அமைத்தான். 18 அன்றியும், கூடாரத்தின் மேல்தட்டைக் கட்ட, எல்லாக் கம்பளிகளும் ஒரே கம்பளியாய் இருக்கத் தக்கதாக ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் செய்தான். 19 மேலும், சிவப்புச் சாயம் தோய்த்த ஆட்டுக் கிடாய்த் தோல்களால் கூடாரத்துக்கு இன்னொரு மூடியையும், அதன் மேல் வைக்கத்தக்க ஊதாத் தோல்களால் ஆன வேறொரு மூடியையும் செய்தான். 20 கூடாரத்திற்கு நட்டமாய் நிற்கும் பலகைகளைச் சேத்தீம் மரத்தினால் செய்தான். 21 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருந்தது. 22 ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு காடிகளும் இரண்டு கழுத்துக்களும் இருந்தன. அதனால் ஒரு பலகை மற்ற பலகையோடு சேரக்கூடும். உறைவிடத்தின் பலகைகளுக்கெல்லாம் அவ்வாறே அமைத்தான். 23 அவற்றில் தென் திசையை நோக்கும் இருபது பலகைகளும், 24 நாற்பது வெள்ளிப் பாதங்களும் இருந்தன. பக்கங்களின் காடி கழுத்துகள் சேரும் இடத்திலே மூலைகளின் இரு பக்கத்திலும் ஒவ்வொரு பலகைக்கும் கீழே இரண்டு பாதங்கள் வைக்கப்பட்டிருந்தன. 25 வடதிசையை நோக்கிய கூடாரப் பக்கத்துக்கு இருபது பலகைகள் இருந்தன. 26 ஒவ்வொரு பலகைக்கும் இரண்டு பாதங்கள் இருந்ததனால், நாற்பது வெள்ளிப் பாதங்களும் இருந்தன. 27 மேற்புறத்திலும் அதாவது, கடலை நோக்கிய கூடாரப் பக்கத்திற்கும் ஆறு பலகைகளைச் செய்தான். 28 கூடாரத்தின் பின் புறத்து ஒவ்வொரு மூலைக்கும் வேறு இரண்டு பலகைகளையும் வைத்தான். 29 அவை கீழிருந்து மேல்வரை இணைக்கப்படிருந்தமையால், ஒரே கட்டுக்கோப்பாய் இருக்கும். இரு பக்கத்து மூலைகளிலும் அவ்வாறே செய்தான். 30 அப்படியே எட்டுப் பலகைகளும், ஒவ்வொரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருந்தன. 31 திரு உறைவிடத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளை உறுதிப்படுத்துவதற்காகச் சேத்தீம் மரத்தால் ஐந்து குறுக்குச் சட்டங்களையும், 32 மறு பக்கத்துப் பலகைகளைச் சேர்ப்பதற்காக வேறு ஐந்து குறுக்குச் சட்டங்களையும், அவை தவிர, கடலை நோக்கிய கூடார மேற்குப் புறத்திற்கு இன்னும் ஐந்து குறுக்குச் சட்டங்களையும் அவன் செய்தான். 33 அன்றியும், பலகைகளின் மையத்தில் ஒரு முனை தொடங்கி மறுமுனை வரை பாயும்படி மற்றொரு குறுக்குச் சட்டத்தையும் செய்தான். 34 அப்பலகைகளுக்குப் பொன் தகடு பொதிந்து அவற்றின் வெள்ளிப் பாதங்களையும் வார்த்து வைத்தான். குறுக்குச் சட்டம் எந்த வளையங்களில் ஊடுருவப் பாயுமோ அந்த வளையங்களையும் பொன் தகட்டால் மூடினான். 35 நீல நிறம், கருஞ்சிவப்பு நிறம், இரத்த நிறம் கொண்ட நூல்கள், திரித்த மெல்லிய சணல் நூல்கள் இவற்றால் நெசவு செய்து, அழகான பின்னல் வேலைகளோடும் பற்பல நிறங்களோடும் சிறந்த ஒரு திரையை அமைத்தான். 36 சேத்தீம் மரத்தால் நான்கு தூண்களைச் ( செய்து ), அவற்றையும் அவற்றின் போதிகைகளையும் பொன் தகட்டால் மூடினான். அவற்றின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாலானதாம். 37 கூடார வாயிலுக்காக நீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய மெல்லிய சணல்நூல் இவற்றால் நெசவு செய்து விசித்திரப் பின்னல் வேலையுடைய ஒரு தொங்கு திரையையும், 38 பொன்தகட்டால் மூடிய ஐந்து தூண்களையும், அவற்றின் போதிகைகளையும் செய்தான். அவற்றின் பாதங்களோ வார்க்கப்பட்ட வெள்ளியாய் இருந்தன.
மொத்தம் 40 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 40
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References