தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யாத்திராகமம்
1. மேலும் அவர்கள் நமக்குக் குருத்துவ அலுவலுக்குரிய பட்டம் பெறும் பொருட்டு நீ செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதில்லாத இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் மந்தையினின்று எடுத்துக் கொள்வாய்.
2. புளியாத அப்பங்கள், எண்ணெய் தெளித்த புளிப்பற்ற தோசை, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பேறாத பணியாரங்கள் முதலியவற்றையெல்லாம் மிருதுவான கோதுமை மாவினால் செய்யக்கடவாய்.
3. ஒரு கூடையில் வைத்து, அவற்றையும் காளையையும் இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் கொண்டு வருவாய்.
4. ஆரோனையும் அவன் புதல்வர்களையும் உடன்படிக்கைக் கூடாரத்தின் வாயில் முன்பாக வரச்செய்து,. தந்தையையும் அவன் புதல்வர்களையும் தண்ணீரால் கழுவக்கடவாய்.
5. பின் ஆரோனையும் ஆடை அணிகளை எடுத்து வந்து, மெல்லிய சணல் நூலால் நெய்த உட்சட்டையையும் கீழங்கியையும் எப்போத்தையும் மார்ப்பதக்கத்தையும் அவனுக்கு அணிவித்து மேலே விசித்திரக் கச்சையால் அவற்றைக் கட்டுவாய்.
6. அவன் தலையின் மீது கிரீடப்பாகையையும், பாகையின்மீது பரிசுத்த தகட்டையும் அணிவித்து,
7. அவன் தலையின் மேல் அபிசேகத் தைலத்தை வார்ப்பாய். இவ்வாறான சடங்குடனே அவன் அபிசேகம் செய்யப்படுவான்.
8. பிறகு அவன் புதல்வர்களையும் வரச் சொல்லி, மெல்லிய சணல் நூலால் நெய்த அங்கிகளையும் அணிவித்துக் கச்சையாலும் கட்டுவாய்.
9. இவ்வாறு ஆரோனும் அவன் புதல்வர்களும் உடுத்தப்பட்ட பின்பு அவர்களுக்குக் கிரீடங்களை அணிவிப்பாய். அவர்களும் நித்திய ஆராதனைக்காக நமக்குக் குருக்களாய் இருப்பார்கள். அவர்களுடைய கைகளையும் அபிசேகம் செய்த பின்,
10. காளையை உடன்படிக்கைக் கூடாரத்தின் முன் கொண்டு வரச் செய்வாய். ஆரோனும் அவள் புதல்வர்களும் அதன் தலையின் மீது கைகளை விரித்து வைத்தவுடனே,
11. அதனை ஆண்டவருக்கு முன்பாகச் சாட்சியக் கூடாரத்தின் வாயிலருகில் அடித்துப் பலியிடக் கடவாய்.
12. பிறகு காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்துப் பீடத்துக் கொம்புகளின் மீது உன் விரலால் தடவி, எஞ்சிய இரத்தம் முழுவதையும் பலிப்பீடத்துப் பாதத்தில் ஊற்றுவாய்.
13. குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரல் பையையும், இரு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலேயுள்ள கொழுப்பையும் எடுத்துப் பீடத்தின் மீது எரித்து விட்டு,
14. காளையின் இறைச்சிகளையும் தோலையும் சாணியையும், அவைகள் பாவப் பரிகாரப் பலியாகையால், அவையெல்லாம் வெளியே பாளையத்தின் புறத்தே சுட்டெரிப்பாய்.
15. ஓர் ஆட்டுக் கிடாயைப் பிடித்துக் கொள்வாய். ஆரோனும் அவன் புதர்வர்களும் அதன் தலையின்மீது கைகளை வைத்தவுடனே,
16. அதை அடித்து, அதன் இரத்தத்தினின்று சிறிது எடுத்துப் பீடத்தைச் சுற்றிலும் ஊற்றுவாய்.
17. அவ்வாட்டுக் கிடாயையோ துண்டு துண்டாய் வெட்டி, அதன் குடல்களையும் கால்களையும் கழுவி. அவற்றைத் துண்டிக்கப்பட்ட இறைச்சிகளின் மேலும் தலையின் மீதும் வைத்து,
18. ஆட்டுக்கிடாய் முழுவதையும் பலிப்பீடத்தின் மேல் சுட்டெரித்து ஒப்புக்கொடுப்பாய். ஆண்டவருக்கு ஏற்ற பலியின் மிக்க நறுமணமே ஆண்டவருக்குக் காணிக்கையாகும்.
19. இன்னும் மற்ற ஆட்டுக் கிடாயையும் பிடித்துக் கொள்வாய். ஆரோனும் அவன் புதல்வர்களும் அதன் தலையின் மீது கைகளை வைத்த பிறகு,
20. நீ அதை அடித்துப் பலியிட்டு, அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் வலக் காது மடலிலேயும், அவர்களுடைய வலக் கையின் பெருவிரலிலேயும் தடவி, மீதியான இரத்தத்தைப் பலிப்பீடத்தின்மேல் சுற்றிலும் வார்த்து,
21. பீடத்தின் மீதிருக்கும் இரத்தத்திலும் அபிசேகத் தைலத்திலும் சிறிது எடுத்து ஆரோன் மேலும், அவன் உடைகளின் மீதும், அவன் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகளின் மீதும் அதைத் தெளிப்பாய். (இவ்வாறு) அவர்களையும் அவர்கள் உடைகளையும் நீ அபிசேகம் செய்த பின்னர்,
22. அந்த ஆட்டுக்கிடாய் (ஆண்டவருக்கு) அர்ப்பணித்து ஒதுக்கப்பட்ட கிடாயாகையால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், வலப்பக்கத்து முன்னந் தொடையையும்,
23. ஆண்டவர் திருமுன் வைக்கப்பட்ட புளியாத அப்பங்களின் கூடையிலிருந்து ஓர் அப்பத் துண்டையும், எண்ணெய் தெளித்த ஒரு தோசையையும், ஒரு பணியாரத்தையும் எடுத்து,
24. அவை எல்லாவற்றையும் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் புதல்வர்களுடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளை ஆண்டவர் திருமுன் உயர்த்திப் பரிசுத்தமாக்குவாய்.
25. பின்னர். அவர்களுடைய கைகளிலிருந்து அவையெல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு, ஆண்டவர் திருமுன் மிக்க நறுமணமுள்ள தகனப் பலியாகப் பலிப் பீடத்தின் மீது சுட்டெரிப்பாய். ஏனென்றால், இது அவருக்கான காணிக்கையே.
26. அன்றியும், ஆரோன் எந்த ஆட்டுக்கிடாயைக் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டானோ அந்தக்கிடாயிலுள்ள சிறிய மார்க் கண்டத்தை எடுத்து, அதை ஆண்டவர் முன்னிலையில் உயர்த்தி, உனக்குப் பங்கு என்று பத்திரப்படுத்துவான்.
27. அன்றியும், அருச்சித்து ஒதுக்கப்பட்ட சிறிய மார்க்கண்டத்தோடு ஆட்டுக்கிடாயிலிருந்து பிரித்தெடுத்த முன்னந் தொடையையும் பரிசுத்தப் படுத்துவாய்.
28. ஆரோனும் அவன் புதல்வர்களும் அதைக் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டமையால், (மேற்சொன்ன மார்க்கண்டமும் முன்னந் தொடையும்) ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நித்திய உரிமையான பங்கு என்று இஸ்ராயேல் மக்களால் அளிக்கப்படும். ஏனென்றால், ஆண்டவருக்கு அருச்சித்து ஒதுக்கப்பட்ட சமாதானப் பலிகளில் அவை தலைக்காணிக்கையாய் இருக்கின்றன.
29. ஆரோன் அணிந்திருக்கும் பரிசுத்த ஆடை அணிகள் அவனுக்குப்பின் அவன் புதல்வர்களைச் சேரும். அவற்றை அணிந்தே அவர்கள் அபிசேகம் செய்யப்பட்டுக் கைப்பூசுதலைப் பெறக்கடவார்கள்.
30. அவன் புதல்வர்களில் எவன் அவனுக்குப் பதிலாய்த் தலைமைக் குருவாக நியமிக்கப் பட்டுப் பரிசுத்த இடத்தில் பணிவிடை செய்ய உடன்படிக்கைக் கூடாரத்திலே புகுவானோ அவன் ஏழு நாள் வரை அவற்றை அணிந்து கொள்ளக் கடவான்.
31. மேலும், நீ அபிசேகத்தின் ஆட்டுக் கிடாயைக் கொண்டு வந்து, அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்திலே சமைக்கக்கடவாய்.
32. ஆரோனும் அவன் புதல்வர்களும் அவற்றை உண்பார்கள்; கூடையிலிருக்கிற அப்பங்களையும் சாட்சியக் கூடாரத்து மண்டபத்திலே உண்பார்கள்.
33. (அவை) பாவப்பரிகாரப் பலியாய் இருக்கத் தக்கதாகவும், அந்தப் பலியைச் செலுத்தியவர்களின் கைகள் பரிசுத்தமாகவும் இருக்கவேண்டும். அவை, ஆண்டவருக்குப் படைக்கப்பட்டவையாதலால், அந்நியன் அவற்றை உண்ணலாகாது.
34. ஆனால், அருச்சித்து ஒதுக்கப்பட்ட இறைச்சிகளிலேனும் அப்பங்களிலேனும் ஏதாவது மீதியிருந்தால் அவற்றை நெருப்பில் சுட்டெரிப்பாய். அவை பரிசுத்தமானவையாதலால் உண்ணப்படலாகாது.
35. நாம் உனக்குக் கட்டளையிட்டுள்ள எல்லாவற்றையும் நீ ஆரோனிடத்தும் அவன் புதல்வர்களிடத்தும் நிறைவேற்றுவாயாக. அதாவது, ஏழு நாள் வரை அவர்களுடைய கைகளை அபிசேகம் செய்து,
36. ஒவ்வொரு நாளும் பரிகாரப் பலியாக ஒரு காளையைப் படைக்கக்கடவாய். பாவப் பரிகாரப் பலியிட்ட பின் பலிப்பீடத்தையும் சுத்திகரிப்பதற்கு அதை எண்ணெய் பூசி அபிசேகம் செய்யக்கடவாய்.
37. ஏழு நாளும் பலிப்பீடத்தைச் சுத்திகரித்து புனிதமாக்கிய பின் அது பரிசுத்தத்திலும் பரிசுத்தமாய் இருக்குமாகையால் அதைத் தொடுபவன் பரிசுத்தன் ஆவான்.
38. பலிப்பீடத்தின் மேல் நீ பலியிட வேண்டியதாவது: இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக் குட்டிகளைப் படைத்து,
39. ஓர் ஆட்டுக் குட்டியைக் காலையிலும், மற்றொரு ஆட்டுக் குட்டியை மாலையிலும், பலியிடக்கடவாய்.
40. கின் என்னும் படியிலே காற்படி இடித்து, பிழிந்த எண்ணெயிலே எப்பி என்னும் மரக்காலிலே பத்தில் ஒரு பங்கு மிருதுவான மாவைப் பிசைந்து, அந்த மாவையும், பானபலியாகக் காற்படித் திராட்சை இரசத்தையும் ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் ஒப்புக் கொடுக்கவேண்டும்.
41. மற்ற ஆட்டுக் குட்டியை நறுமணப் பலியாக மாலையிலே பலியிடவேண்டும். காலையிலே ஒப்புக்கொடுத்தது போலவும் மேலே சொல்லப்பட்டது போலவும் அதைப் படைக்கக்கடவாய்.
42. நீங்கள் தலைமுறை தலைமுறையாக நித்தியமாய் ஆண்டவருக்குச் செலுத்தவேண்டிய பலி இதுவே. இனி நாம் உன்னுடன் எவ்விடத்திலே பேசத் தீர்மானித்துக் கொண்டோமோ அந்த ஆண்டவருடைய சந்நிதியாகிய சாட்சியக் கூடாரத்தின் வாயிலிலேயே அதைப் படைக்க வேண்டியதாய் இருக்கும்.
43. அங்கே இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளைகளையும் இடுவோம். அங்கே பலிப்பீடமும் நம்முடைய மாட்சியின் பெருமையாலே பரிசுத்தமாக்கப்படும்.
44. நாம் பலிப்பீடத்தையும் சாட்சியப் பெட்டியையும் பரிசுத்தமாக்குவோம். நமக்குக் குருத்துவத் தொழிலைச் செய்யும்படி ஆரோனையும் அவன் புதல்வர்களையும் பரிசுத்தப் படுத்துவோம்.
45. அவ்விதமாய் இஸ்ராயேல் மக்களின் நடுவே நாம் வாழ்ந்து அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்.
46. அபொழுது, தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாம் என்றும், தங்களோடு கூடவாழும்படி தங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நாம் என்றும் அவர்கள் அறிவார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 40 Chapters, Current Chapter 29 of Total Chapters 40
யாத்திராகமம் 29:30

×

Alert

×

tamil Letters Keypad References