தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
யாத்திராகமம்
1. அப்படியிருக்க, கடவுள் மோயீசனுக்கும் தம் மக்களாம் இஸ்ராயேலருக்கும் செய்தயாவையும், ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்திலிருந்து புறப்படச் செய்ததையும், மதியானில் குருவாயிருந்தவனும் மோயீசனின் உறவினனும் ஆகிய யெத்திரோ கேள்விப்பட்டு,
2. மோயீசனாலே வீட்டுக்கு அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி செப்பொறாளையும் அவனுடைய இரண்டு புதல்வர்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்.
3. நான் அயல் நாட்டிலே அகதியாயினேன் என்று தகப்பன் சொல்லி, ஒரு மகனுக்கு யேற்சம் என்று பெயரிட்டிருந்தான்.
4. என் தந்தையின் கடவுள் எனக்குத் துணையாகி, என்னைப் பாரவோனுடைய வாளினின்று காப்பாற்றியருளினார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பெயரிட்டிருந்தான்.
5. ஆகையால் மோயீசனின் உறவினராகிய யெத்திரோ அவன் புதல்வர்களோடும் மனைவியோடும் பாலைவனத்திற்கு வந்து, மருமகன் பாளையம் இறங்கியிருந்த தெய்வமலையின் அடிவாரத்தை அடைந்து மோயீசனுக்குக் செய்தி அனுப்பி:
6. யெத்திரோ என்னும் உம்முடைய உறவினனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடுகூட அவளுடைய இரண்டு புதல்வர்களும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று சொல்லச் சொன்னான்.
7. அப்பொழுது, மோயீசன் தன் உறவினருக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு வணக்கம் செலுத்தி, அவனை முத்தமிட்ட பின், இருவரும் உபசார மொழிகளால் ஒருவரை ஒருவர் வாழ்த்தினர். பின், யெத்திரோ கூடாரத்தினுள் புகுந்த போது,
8. மோயீசன், இஸ்ராயேலின்பொருட்டு பாரவோனுக்கும் எகிப்தியருக்கும் ஆண்டவர் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட வருத்தங்கள் எல்லாவற்றையும், ஆண்டவர் தங்களை விடுவித்துக் காப்பாற்றியதையும் மாமனுக்கு விவரித்துச் சொன்னார்.
9. ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து அவர்களுக்குச் செய்த எல்லா உபகாரங்களையும் குறித்து யெத்திரோ மகிழ்ச்சியுற்றுச் சொன்னதாவது:
10. உங்களை எகிப்தியருடைய கைக்கும் பாரவோனுடைய கொடுங்கோலுக்கும் தப்புவித்து, எகிப்தின் சிறையினின்று தம் (மக்களை) விடுவித்த ஆண்டவர் வாழ்த்தப்படக் கடவாராக.
11. எல்லாத் தேவர்களைக் காட்டிலும் ஆண்டவர் மகத்தானவர் என்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் (மக்களுக்கு) அநியாயமன்றோ செய்தார்கள் (என்றார்).
12. மேலும், மோயீசனின் மாமனாகிய யெத்திரோ கடவுளுக்குத் தகனப்பலி முதலிய பலிகளையும் படைத்தார். பின், ஆரோனும் இஸ்ராயேலரின் மூத்தோரான அனைவரும் வந்து, கடவுள் முன்னிலையில் அவரோடுகூட உணவருந்தினர்.
13. மறுநாள், மோயீசன் மக்களுக்கு நியாய விசாரணை செய்ய உட்கார்ந்தார். மக்கள் காலை முதல் மாலை வரை மோயீசன் முன் நின்று கொண்டிருந்தனர்.
14. மோயீசன் இவ்வாறு மக்களுக்கு ஆதரவாய்ச் செய்துவந்த யாவையும் கண்ட யெத்திரோ: மக்களை முன்னிட்டு நீர் ஏன் இவ்வாறு செய்கிறீர்? நீர் மட்டும் உட்கார்ந்திருக்கிறதும், காலை முதல் மாலை வரை மக்கள் காத்திருக்கிறதும், சரி தானோ என்றார்.
15. மோயீசன் மறுமொழியாக: மக்கள் கடவுளின் தீர்ப்பை நாடியே என்னிடம் வருகின்றனர்.
16. அதாவது, அவர்களுக்குள் யாதொரு வழக்கு உண்டானால், நான் அவர்களுக்குள் நடுவனாய் இருந்து, கடவுளின் கட்டளைகளையும் அவருடைய நீதி நெறிச் சட்டங்களையும் தெரிவிக்கும்படி என்னிடம் வருகின்றனர் என்றார்.
17. அவரோ: நீர் இவ்வாறு செய்வது நல்லது அன்று.
18. இத்தகைய விவேகமற்ற வேலையால் நீரும் (களைப்புற்றுப்) போகிறீர்; உம்மோடு இருக்கிற மக்களும் வீணாய்த் தொல்லைப்பட்டு வருகின்றனர். இது உமக்குத் தாளாத வேலை. அதன் பாரத்தை ஒருவராய் நின்று தாங்க உம்மால் முடியாது.
19. இப்போது நான் சொல்லும் வார்த்தைகளையும் ஆலோசனைகளையும் கேட்பீராயின், கடவுள் உம்மோடு இருப்பார். கடவுளைச் சார்ந்த காரியங்களில் நீர் கடவுள் முன்னிலையிலிருந்து அவர்களுக்காகப் பேசும்.
20. (மக்களுக்குச்) சடங்குகளையும், ஆராதனை முறைமையையும், அவர்கள் செல்ல வேண்டிய வழியையும் அவர்கள் செய்யவேண்டிய செயல்களையும் நீரே கற்பித்துக் காட்டக்கடவீர்.
21. மேலும், மக்கள் அனைவருள்ளும் செல்வாக்கு, தெய்வபயம், உண்மைமொழி, தாராள குணம் உடையோரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம் பேருக்கோ நூறு பேருக்கோ ஐம்பது அல்லது பத்துப் பேருக்கோ தலைவர்களாக ஏற்படுத்தும்.
22. இவர்களே எப்பொழுதும் நீதி வழங்குவார்கள். பெரிய வழக்குகள் யாவையும் உம்மிடம் கொண்டு வரவும், சிறிய வழக்குகளை அவர்களே தீர்க்கவும் கடவர். இப்படி அவர்கள் உம்மோடு கூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், அது உமக்கு இலகுவாய் இருக்கும்.
23. இவ்வாறு செய்வீராயின், கடவுள் உமக்குக் கற்பித்த கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய சட்டதிட்டங்களை உம்மாலே நிறைவேற்றக் கூடும். அதனால் மக்கள் எல்லாரும் நிறைவுடன் வீடு எய்துவர் என்றார்.
24. இந்த அறிவுரையை மோயீசன் உற்றுக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் நடந்தார்.
25. இஸ்ராயேல் மக்கள் அனைவருள்ளும் செல்வாக்குள்ளவர்களைத் தெரிந்து எடுத்து, அவர்களை மக்கள் தலைவராக்கி, சிலரை ஆயிரம் பேருக்கும், வேறு சிலரை நூறு பேருக்கும், இன்னும் சிலரை ஐம்பது அல்லது பத்துப் பேருக்கும் தலைவர்களாக நியமித்தார்.
26. அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கிவந்தனர். பெரிய வழக்குகளை மோயீசனிடம் கொண்டு வருவர்; சாதாரண வழக்குகளை அவர்களே தீர்த்து வைப்பர்.
27. பின் மோயீசன் தம் மாமனை அனுப்பிவிட, அவர் திரும்பத் தம் நாடு திரும்பினார்.
மொத்தம் 40 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 40
1 அப்படியிருக்க, கடவுள் மோயீசனுக்கும் தம் மக்களாம் இஸ்ராயேலருக்கும் செய்தயாவையும், ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்திலிருந்து புறப்படச் செய்ததையும், மதியானில் குருவாயிருந்தவனும் மோயீசனின் உறவினனும் ஆகிய யெத்திரோ கேள்விப்பட்டு, 2 மோயீசனாலே வீட்டுக்கு அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவி செப்பொறாளையும் அவனுடைய இரண்டு புதல்வர்களையும் கூட்டிக் கொண்டு வந்தார். 3 நான் அயல் நாட்டிலே அகதியாயினேன் என்று தகப்பன் சொல்லி, ஒரு மகனுக்கு யேற்சம் என்று பெயரிட்டிருந்தான். 4 என் தந்தையின் கடவுள் எனக்குத் துணையாகி, என்னைப் பாரவோனுடைய வாளினின்று காப்பாற்றியருளினார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பெயரிட்டிருந்தான். 5 ஆகையால் மோயீசனின் உறவினராகிய யெத்திரோ அவன் புதல்வர்களோடும் மனைவியோடும் பாலைவனத்திற்கு வந்து, மருமகன் பாளையம் இறங்கியிருந்த தெய்வமலையின் அடிவாரத்தை அடைந்து மோயீசனுக்குக் செய்தி அனுப்பி: 6 யெத்திரோ என்னும் உம்முடைய உறவினனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடுகூட அவளுடைய இரண்டு புதல்வர்களும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று சொல்லச் சொன்னான். 7 அப்பொழுது, மோயீசன் தன் உறவினருக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு வணக்கம் செலுத்தி, அவனை முத்தமிட்ட பின், இருவரும் உபசார மொழிகளால் ஒருவரை ஒருவர் வாழ்த்தினர். பின், யெத்திரோ கூடாரத்தினுள் புகுந்த போது, 8 மோயீசன், இஸ்ராயேலின்பொருட்டு பாரவோனுக்கும் எகிப்தியருக்கும் ஆண்டவர் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட வருத்தங்கள் எல்லாவற்றையும், ஆண்டவர் தங்களை விடுவித்துக் காப்பாற்றியதையும் மாமனுக்கு விவரித்துச் சொன்னார். 9 ஆண்டவர் இஸ்ராயேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து அவர்களுக்குச் செய்த எல்லா உபகாரங்களையும் குறித்து யெத்திரோ மகிழ்ச்சியுற்றுச் சொன்னதாவது: 10 உங்களை எகிப்தியருடைய கைக்கும் பாரவோனுடைய கொடுங்கோலுக்கும் தப்புவித்து, எகிப்தின் சிறையினின்று தம் (மக்களை) விடுவித்த ஆண்டவர் வாழ்த்தப்படக் கடவாராக. 11 எல்லாத் தேவர்களைக் காட்டிலும் ஆண்டவர் மகத்தானவர் என்று இப்பொழுது நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் (மக்களுக்கு) அநியாயமன்றோ செய்தார்கள் (என்றார்). 12 மேலும், மோயீசனின் மாமனாகிய யெத்திரோ கடவுளுக்குத் தகனப்பலி முதலிய பலிகளையும் படைத்தார். பின், ஆரோனும் இஸ்ராயேலரின் மூத்தோரான அனைவரும் வந்து, கடவுள் முன்னிலையில் அவரோடுகூட உணவருந்தினர். 13 மறுநாள், மோயீசன் மக்களுக்கு நியாய விசாரணை செய்ய உட்கார்ந்தார். மக்கள் காலை முதல் மாலை வரை மோயீசன் முன் நின்று கொண்டிருந்தனர். 14 மோயீசன் இவ்வாறு மக்களுக்கு ஆதரவாய்ச் செய்துவந்த யாவையும் கண்ட யெத்திரோ: மக்களை முன்னிட்டு நீர் ஏன் இவ்வாறு செய்கிறீர்? நீர் மட்டும் உட்கார்ந்திருக்கிறதும், காலை முதல் மாலை வரை மக்கள் காத்திருக்கிறதும், சரி தானோ என்றார். 15 மோயீசன் மறுமொழியாக: மக்கள் கடவுளின் தீர்ப்பை நாடியே என்னிடம் வருகின்றனர். 16 அதாவது, அவர்களுக்குள் யாதொரு வழக்கு உண்டானால், நான் அவர்களுக்குள் நடுவனாய் இருந்து, கடவுளின் கட்டளைகளையும் அவருடைய நீதி நெறிச் சட்டங்களையும் தெரிவிக்கும்படி என்னிடம் வருகின்றனர் என்றார். 17 அவரோ: நீர் இவ்வாறு செய்வது நல்லது அன்று. 18 இத்தகைய விவேகமற்ற வேலையால் நீரும் (களைப்புற்றுப்) போகிறீர்; உம்மோடு இருக்கிற மக்களும் வீணாய்த் தொல்லைப்பட்டு வருகின்றனர். இது உமக்குத் தாளாத வேலை. அதன் பாரத்தை ஒருவராய் நின்று தாங்க உம்மால் முடியாது. 19 இப்போது நான் சொல்லும் வார்த்தைகளையும் ஆலோசனைகளையும் கேட்பீராயின், கடவுள் உம்மோடு இருப்பார். கடவுளைச் சார்ந்த காரியங்களில் நீர் கடவுள் முன்னிலையிலிருந்து அவர்களுக்காகப் பேசும். 20 (மக்களுக்குச்) சடங்குகளையும், ஆராதனை முறைமையையும், அவர்கள் செல்ல வேண்டிய வழியையும் அவர்கள் செய்யவேண்டிய செயல்களையும் நீரே கற்பித்துக் காட்டக்கடவீர். 21 மேலும், மக்கள் அனைவருள்ளும் செல்வாக்கு, தெய்வபயம், உண்மைமொழி, தாராள குணம் உடையோரைத் தெரிந்தெடுத்து, அவர்களை ஆயிரம் பேருக்கோ நூறு பேருக்கோ ஐம்பது அல்லது பத்துப் பேருக்கோ தலைவர்களாக ஏற்படுத்தும். 22 இவர்களே எப்பொழுதும் நீதி வழங்குவார்கள். பெரிய வழக்குகள் யாவையும் உம்மிடம் கொண்டு வரவும், சிறிய வழக்குகளை அவர்களே தீர்க்கவும் கடவர். இப்படி அவர்கள் உம்மோடு கூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், அது உமக்கு இலகுவாய் இருக்கும். 23 இவ்வாறு செய்வீராயின், கடவுள் உமக்குக் கற்பித்த கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய சட்டதிட்டங்களை உம்மாலே நிறைவேற்றக் கூடும். அதனால் மக்கள் எல்லாரும் நிறைவுடன் வீடு எய்துவர் என்றார். 24 இந்த அறிவுரையை மோயீசன் உற்றுக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் நடந்தார். 25 இஸ்ராயேல் மக்கள் அனைவருள்ளும் செல்வாக்குள்ளவர்களைத் தெரிந்து எடுத்து, அவர்களை மக்கள் தலைவராக்கி, சிலரை ஆயிரம் பேருக்கும், வேறு சிலரை நூறு பேருக்கும், இன்னும் சிலரை ஐம்பது அல்லது பத்துப் பேருக்கும் தலைவர்களாக நியமித்தார். 26 அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கிவந்தனர். பெரிய வழக்குகளை மோயீசனிடம் கொண்டு வருவர்; சாதாரண வழக்குகளை அவர்களே தீர்த்து வைப்பர். 27 பின் மோயீசன் தம் மாமனை அனுப்பிவிட, அவர் திரும்பத் தம் நாடு திரும்பினார்.
மொத்தம் 40 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 40
×

Alert

×

Tamil Letters Keypad References