தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எஸ்தர்
1. அன்றிரவு தனக்குத் தூக்கம் வராமையால் அரசன் நிகழ்ச்சிக் குறிப்புகளையும் வரலாற்று ஏடுகளையும் கொண்டுவரக் கட்டளையிட்டான்.
2. அவை அவன் முன் வாசிக்கப்பட்டன. அப்பொழுது பாகாத்தான், தாரேஸ் எனும் இரு அண்ணகர்கள் அசுவேருஸ் அரசனைக் கொல்லும் பொருட்டுச் செய்திருந்த சதியை மார்தொக்கே அரசனுக்கு அறிவித்திருந்த நிகழ்ச்சி வாசிக்கப்பட்டது.
3. அரசன் அதைக் கேட்டு, "மார்தொக்கே இக்காரியத்தில் என் மேல் காட்டிய நேர்மைக்குக் கைம்மாறாக அவன் என்ன நன்மதிப்பும் பரிசும் பெற்றான்?" என்று கேட்டான். அதற்கு அரச அலுவலர்களும் ஊழியர்களும், "அவர் ஒன்றும் பெறவில்லை" என்றனர்.
4. உடனே அரசன், "முற்றத்தில் நிற்பது யார்?" என்று கேட்டான். அப்பொழுது ஆமான் தான் தயார் செய்திருந்த தூக்கு மரத்திலே மார்தொக்கேயைக் கட்டித் தொங்க விட அரசனின் உத்தரவு பெறும் பொருட்டு அரசனின் உள்முற்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
5. அரசனின் பணியாளர் திரும்பி வந்து, "ஆமான் முற்றத்தில் இருக்கிறார்" என்றனர். அதற்கு அரசன், "அவன் உள்ளே வரட்டும்" என்றான்.
6. ஆமான் உள்ளே வந்த போது அரசன் அவனை நோக்கி, "அரசர் ஒருவனை மகிமைப்படுத்தி உயர்த்த விரும்பினால், அவனுக்கு அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்று கேட்டான். ஆமான் இதைக் கேட்டதும் தன்னையன்றி வேறு யாரை அரசர் மகிமைப்படுத்தப் போகிறார் என்று தன்னுள் எண்ணிக் கொண்டு, அரசனை நோக்கி,
7. அரசர் ஒருவனை மேன்மைப்படுத்த விரும்புவாராயின்,
8. அவனை அரசகோலம் பூணச்செய்து, அரசரின் குதிரை மேல் அவனை ஏற்றி, அரச முடியை அவனுக்கு அணிவிக்க வேண்டும்.
9. அரச அலுவலர்க்குத் தலைவன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வர, அவனை ஊர்வலமாய்க் கொண்டுவர வேண்டும். வீதியில் போகும் போது, 'அரசர் மகிமைப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இத்தகைய மரியாதை செய்யப்படும்!' என்று அத்தலைவன் அவனுக்கு முன்பாகக் கூறிக்கொண்டே செல்ல வேண்டும்" என்றான்.
10. அரசன் ஆமானை நோக்கி, "நீ விரைந்து போய் அரண்மனை வாயிலிலேயே எப்பொழுதும் உட்கார்ந்திருக்கும் மார்தொக்கே எனும் யூதனுக்கு அவ்வாறு செய். அரச கோலத்தையும் குதிரையையும் கொண்டு போய் நீ சொன்னவற்றில் ஒன்றும் விடாது கவனமாய் நிறைவேற்று" என்றான்.
11. எனவே ஆமான் அரச ஆடை அணிகளையும் குதிரையையும் கொண்டு போய், மார்தொக்கேயை அலங்கரித்துக் குதிரை மேல் ஏற்றி, நகர வீதியிலே, "அரசர் மகிமைப்படுத்த விரும்புகிற மனிதன் இத்தகைய மரியாதைக்கு உகந்தவன் ஆவான்!" என உரக்கக் கூறிக் கொண்டே முன் நடந்தான்.
12. இதன்பின் மார்தொக்கே அரண்மனை வாயிலுக்குத் திரும்பி வந்தார். ஆனால் ஆமான் கவலையால் தலையை மூடிக் கொண்டு தன் வீட்டுக்கு விரைந்து சென்றான்.
13. நிகழ்ந்த யாவற்றையும் தன் மனைவி ஜாரேசுக்கும் தன் நண்பர்களுக்கும் கூறினான். பின்னர் அவனுக்கு அறிவுரை கூறும் அறிஞர்களும் அவன் மனைவியும் அவனை நோக்கி, "நீர் தலை பணிந்த மார்தொக்கே ஒரு யூதன் என்றால் நீர் அக்குலத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. மாறாக நீர் தோல்வியுறுவது உறுதி" என்றனர்.
14. அவர்கள் இதைச் சொல்லி முடியுமுன்னே அரசனின் அண்ணகர் விரைந்து வந்து அரசி தயாரித்திருந்த விருந்திற்கு உடனே வரவேண்டுமென்று அவனை வற்புறுத்தினர்.

பதிவுகள்

மொத்தம் 10 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 10
1 2 3 4 5 6 7 8 9 10
1 அன்றிரவு தனக்குத் தூக்கம் வராமையால் அரசன் நிகழ்ச்சிக் குறிப்புகளையும் வரலாற்று ஏடுகளையும் கொண்டுவரக் கட்டளையிட்டான். 2 அவை அவன் முன் வாசிக்கப்பட்டன. அப்பொழுது பாகாத்தான், தாரேஸ் எனும் இரு அண்ணகர்கள் அசுவேருஸ் அரசனைக் கொல்லும் பொருட்டுச் செய்திருந்த சதியை மார்தொக்கே அரசனுக்கு அறிவித்திருந்த நிகழ்ச்சி வாசிக்கப்பட்டது. 3 அரசன் அதைக் கேட்டு, "மார்தொக்கே இக்காரியத்தில் என் மேல் காட்டிய நேர்மைக்குக் கைம்மாறாக அவன் என்ன நன்மதிப்பும் பரிசும் பெற்றான்?" என்று கேட்டான். அதற்கு அரச அலுவலர்களும் ஊழியர்களும், "அவர் ஒன்றும் பெறவில்லை" என்றனர். 4 உடனே அரசன், "முற்றத்தில் நிற்பது யார்?" என்று கேட்டான். அப்பொழுது ஆமான் தான் தயார் செய்திருந்த தூக்கு மரத்திலே மார்தொக்கேயைக் கட்டித் தொங்க விட அரசனின் உத்தரவு பெறும் பொருட்டு அரசனின் உள்முற்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். 5 அரசனின் பணியாளர் திரும்பி வந்து, "ஆமான் முற்றத்தில் இருக்கிறார்" என்றனர். அதற்கு அரசன், "அவன் உள்ளே வரட்டும்" என்றான். 6 ஆமான் உள்ளே வந்த போது அரசன் அவனை நோக்கி, "அரசர் ஒருவனை மகிமைப்படுத்தி உயர்த்த விரும்பினால், அவனுக்கு அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?" என்று கேட்டான். ஆமான் இதைக் கேட்டதும் தன்னையன்றி வேறு யாரை அரசர் மகிமைப்படுத்தப் போகிறார் என்று தன்னுள் எண்ணிக் கொண்டு, அரசனை நோக்கி, 7 அரசர் ஒருவனை மேன்மைப்படுத்த விரும்புவாராயின், 8 அவனை அரசகோலம் பூணச்செய்து, அரசரின் குதிரை மேல் அவனை ஏற்றி, அரச முடியை அவனுக்கு அணிவிக்க வேண்டும். 9 அரச அலுவலர்க்குத் தலைவன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வர, அவனை ஊர்வலமாய்க் கொண்டுவர வேண்டும். வீதியில் போகும் போது, 'அரசர் மகிமைப்படுத்த விரும்புகிற மனிதனுக்கு இத்தகைய மரியாதை செய்யப்படும்!' என்று அத்தலைவன் அவனுக்கு முன்பாகக் கூறிக்கொண்டே செல்ல வேண்டும்" என்றான். 10 அரசன் ஆமானை நோக்கி, "நீ விரைந்து போய் அரண்மனை வாயிலிலேயே எப்பொழுதும் உட்கார்ந்திருக்கும் மார்தொக்கே எனும் யூதனுக்கு அவ்வாறு செய். அரச கோலத்தையும் குதிரையையும் கொண்டு போய் நீ சொன்னவற்றில் ஒன்றும் விடாது கவனமாய் நிறைவேற்று" என்றான். 11 எனவே ஆமான் அரச ஆடை அணிகளையும் குதிரையையும் கொண்டு போய், மார்தொக்கேயை அலங்கரித்துக் குதிரை மேல் ஏற்றி, நகர வீதியிலே, "அரசர் மகிமைப்படுத்த விரும்புகிற மனிதன் இத்தகைய மரியாதைக்கு உகந்தவன் ஆவான்!" என உரக்கக் கூறிக் கொண்டே முன் நடந்தான். 12 இதன்பின் மார்தொக்கே அரண்மனை வாயிலுக்குத் திரும்பி வந்தார். ஆனால் ஆமான் கவலையால் தலையை மூடிக் கொண்டு தன் வீட்டுக்கு விரைந்து சென்றான். 13 நிகழ்ந்த யாவற்றையும் தன் மனைவி ஜாரேசுக்கும் தன் நண்பர்களுக்கும் கூறினான். பின்னர் அவனுக்கு அறிவுரை கூறும் அறிஞர்களும் அவன் மனைவியும் அவனை நோக்கி, "நீர் தலை பணிந்த மார்தொக்கே ஒரு யூதன் என்றால் நீர் அக்குலத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. மாறாக நீர் தோல்வியுறுவது உறுதி" என்றனர். 14 அவர்கள் இதைச் சொல்லி முடியுமுன்னே அரசனின் அண்ணகர் விரைந்து வந்து அரசி தயாரித்திருந்த விருந்திற்கு உடனே வரவேண்டுமென்று அவனை வற்புறுத்தினர்.
மொத்தம் 10 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 10
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

Tamil Letters Keypad References