தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
பிரசங்கி
1. (2) விலையுயர்ந்த நறுமணத் தைலங்களைக் காட்டிலும் நற்புகழே நல்லது. பிறந்த நாளைக் காட்டிலும் இறந்த நாள் நல்லது.
2. (3) விருந்து வீட்டிற்குப் போவதைவிடத் துக்க வீட்டுக்குப் போவது நல்லது. ஏனென்றால், இழவு வீட்டிலே எல்லா மனிதருக்கும் முடிவு உண்டென்று காணப்படுவதால், உயிரோடிருக்கிறவன் தனக்கு நிகழவிருப்பதைச் சிந்திப்பான்.
3. (4) சிரிப்பதைக் காட்டிலும் வருத்தமுற்றிருப்பதே நல்லது. ஏனென்றால், முகவாட்டத்தால் பாவிகளுடைய இதயம் திருத்தப்படும்.
4. (5) துக்கம் எங்கேயோ, அங்கேயே ஞானிகளின் இதயமும். மகிழ்ச்சி எங்கேயோ, அங்கேயே மூடனுடைய இதயமும்.
5. (6) மூடர்களின் இச்சக வர்த்தைகளால் ஏய்க்கப்படுவதைக் காட்டிலும் ஞானிகளின் வார்த்தைகளால் கண்டிக்கப்படுவதே நலம்.
6. (7) ஏனென்றால், பானையின் கீழ்ப் படபடவென்று எரியும் முட்களின் ஓசை எப்படியோ அப்படியே அறிவில்லாதவனுடைய சிரிப்பும். ஆனால், இதுவும் வீண்தான்.
7. (8) அவதூற்றால் ஞானி வருத்தப்படுவதுடன் அவனுடைய மனநிலையும் குலைந்துபோகிறது.
8. (9) காரியத்தைத் தொடங்குகிறதைவிட அதை முடிப்பது நலம். செருக்குள்ள மனிதனைக் காட்டிலும் பொறுமையுள்ளவனே சிறந்தவன்.
9. (10) விரைவில் கோபங் கொள்ள வேண்டாம். மூடர்களுடைய இதயம் கோபத்தின் இருப்பிடம்.
10. (11) நிகழ் காலத்தைக் காட்டிலும் கடந்த காலமே நலமாய் இருந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்க வேண்டாம். இப்படிக் கேட்பது மூடத்தனமே.
11. (12) செல்வத்தோடு கூடிய ஞானம் அதிகப் பயனுடையதும், சூரியனைப் பார்க்கிறவர்களுக்கு அதிகப் பயனுள்ளது மரம்.
12. (13) ஏனென்றால், ஞானமும் கேடயம்; பணமும் கேடயம். ஆனால், ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; அறிவும் வாழ்வு தரும்; பணமோ அதைத் தராது.
13. (14) கடவுளுடைய செயல்களைக் கவனித்துப் பார். அவர் எவனை வெறுத்துத் தள்ளிவிட்டாரோ அவன் அவன் சீர்ப்படவே மாட்டான்.
14. (15) வாழ்வு நாளில் நன்மைகளை அனுபவித்துக்கொண்டு, தாழ்வு நாளுக்கு உன்னைத் தயார்படுத்துவாயாக. உண்மையிலே கடவுளே வாழ்வு நாளையும் செய்தார்; தாழ்வு நாளையும் செய்தார். இதைப் பற்றிக் கடவுளுக்கு விரோதமாய் ஒன்றும் சொல்லக்கூடாது.
15. (16) மேலும், என் வீணான நாட்களில் நான் கண்டது என்ன வென்றால்: நீதியாய் நடக்கிற நீதிமான் துன்பத்தில் இருப்பதைக் கண்டேன்; அக்கிரமமாய் நடக்கிற பாவி வெகுநாள் வாழ்வதைக் கண்டேன்.
16. (17) நீதியிலே கூட அளவுக்கு மிஞ்சி நீதிமானாய் இருக்க வேண்டாம். ஞானத்திலும் அளவோடே ஞானியாய் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மூடனாவாய்.
17. (18) கடவுளுக்குத் துரோகம் செய்யாதே; அதிகப் பேதையாய் இராதே; இல்லாவிடில் உன் காலத்துக்கு முன்னே சாவாய்.
18. (19) நீதிமானை ஆதரிப்பதே சிறந்ததே; ஆயினும், பாவியைக் கைவிடலாகாது. கடவுளுக்குப் பயப்படுகிறவன் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்க வண்டும்.
19. (20) நகரத்துப் பத்து அதிகாரிகளைக் காட்டிலும் ஞானமே ஞானியை வலியவனாக்கும்.
20. (21) ஏனென்றால், நன்மை செய்தும், பாவம் செய்யாத நீதிமான் இவ்வுலகத்தில் இல்லை.
21. (22) சொல்லப்படும் எல்லாப் பேச்சுகளையும் கவனிக்க வேண்டாம்; சிலவேளை உன் சொந்த வேலைக்காரனே உன்னைக்குறித்துக் கோள் சொல்வதைக் கேட்பாய்.
22. (23) உள்ளபடி பலமுறை நீயே மற்றவர்களைக் குறித்துக் கோள் சொன்னாயென்று உன் மனச்சாட்சிக்குத் தெரியும்.
23. (24) ஞானத்தை அடைவதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்தேன். எப்படியும் ஞானியாவேனென்று தீர்மானித்திருந்தும், ஞானம் எனக்குத் தூரமாய்ப் போயிற்று;
24. (25) முன்னிலும் அதிக தூரம் போயிற்று. ஞானத்தின் ஆழம் மிகவும் பெரிது. அதைச் சோதித்துப் பார்க்க யாராலே கூடும்?
25. (26) அறியவும், ஆராயவும், ஞானத்தை அடையவும், காரியங்களின் காரணங்களைத் தேடவும், அறிவில்லாதவருடைய அக்கிரமத்தைக் கண்டுபிடிக்கவும், அவிவேகிகளுடைய தவறுகளை வெளிப்படுத்தவும் நான் என் மனத்தைச் செலுத்தினேன்.
26. (27) இப்படித் தேடினபோது, பெண்கள் சாவைக் காட்டிலும் கசப்புள்ளவர்களென்றும், அவர்கள் நெஞ்சம் வேடர்களின் கண்ணியும் வலையும் போன்றதென்றும், அவர்கள் கைகள் சங்கிலிகளென்றும் கண்டேன். கடவுளுக்கு முன்பாக நீதிமானாய் உள்ளவன் அவர்களிடம் சிக்கிக் கொள்ள மாட்டான். பாவிகளோ அவர்கள் கையில் அகப்படுவார்கள்.
27. (28) சங்கப்போதகன் சொல்லுகிறதாவது: அதன் காரணம் அறியும்படி நான் பல காரியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தேன்.
28. (29) ஒப்பிட்டுப் பார்த்தும், அந்த காரணத்தை நான் கண்டுபிடியாமல், ஒரு காரியத்தை மட்டும் நிச்சயமென்று கண்டேன். அது என்ன வென்றார்: ஆயிரம் பேருக்குள்ளே ஒரு (நல்ல) ஆடவனைக் கண்டேன்; எல்லாப் பெண்களுக்குள்ளேயும் ஒரு (நல்ல) பெண்ணை நான் காணவில்லை.
29. (30) இதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அதாவது: கடவுள் மனிதனை நேர்மை உள்ளவனாகவே படைத்தார். மனிதனோ பலப்பல காரியங்கள் ஆராய முற்பட்டு, அவைகளில் தானே தனக்கு விலங்கிட்டுக் கொண்டான். இதைக் கண்டுபிடிக்கத் தக்க ஞானியும் எங்கே? இந்த வாக்கின் விளக்கம் சொல்லத் தக்க (அறிஞனும்) எங்கே?
மொத்தம் 12 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
1 (2) விலையுயர்ந்த நறுமணத் தைலங்களைக் காட்டிலும் நற்புகழே நல்லது. பிறந்த நாளைக் காட்டிலும் இறந்த நாள் நல்லது. 2 (3) விருந்து வீட்டிற்குப் போவதைவிடத் துக்க வீட்டுக்குப் போவது நல்லது. ஏனென்றால், இழவு வீட்டிலே எல்லா மனிதருக்கும் முடிவு உண்டென்று காணப்படுவதால், உயிரோடிருக்கிறவன் தனக்கு நிகழவிருப்பதைச் சிந்திப்பான். 3 (4) சிரிப்பதைக் காட்டிலும் வருத்தமுற்றிருப்பதே நல்லது. ஏனென்றால், முகவாட்டத்தால் பாவிகளுடைய இதயம் திருத்தப்படும். 4 (5) துக்கம் எங்கேயோ, அங்கேயே ஞானிகளின் இதயமும். மகிழ்ச்சி எங்கேயோ, அங்கேயே மூடனுடைய இதயமும். 5 (6) மூடர்களின் இச்சக வர்த்தைகளால் ஏய்க்கப்படுவதைக் காட்டிலும் ஞானிகளின் வார்த்தைகளால் கண்டிக்கப்படுவதே நலம். 6 (7) ஏனென்றால், பானையின் கீழ்ப் படபடவென்று எரியும் முட்களின் ஓசை எப்படியோ அப்படியே அறிவில்லாதவனுடைய சிரிப்பும். ஆனால், இதுவும் வீண்தான். 7 (8) அவதூற்றால் ஞானி வருத்தப்படுவதுடன் அவனுடைய மனநிலையும் குலைந்துபோகிறது. 8 (9) காரியத்தைத் தொடங்குகிறதைவிட அதை முடிப்பது நலம். செருக்குள்ள மனிதனைக் காட்டிலும் பொறுமையுள்ளவனே சிறந்தவன். 9 (10) விரைவில் கோபங் கொள்ள வேண்டாம். மூடர்களுடைய இதயம் கோபத்தின் இருப்பிடம். 10 (11) நிகழ் காலத்தைக் காட்டிலும் கடந்த காலமே நலமாய் இருந்ததற்குக் காரணம் என்ன என்று கேட்க வேண்டாம். இப்படிக் கேட்பது மூடத்தனமே. 11 (12) செல்வத்தோடு கூடிய ஞானம் அதிகப் பயனுடையதும், சூரியனைப் பார்க்கிறவர்களுக்கு அதிகப் பயனுள்ளது மரம். 12 (13) ஏனென்றால், ஞானமும் கேடயம்; பணமும் கேடயம். ஆனால், ஞானம் தன்னை உடையவர்களுக்கு வாழ்வு தரும்; அறிவும் வாழ்வு தரும்; பணமோ அதைத் தராது. 13 (14) கடவுளுடைய செயல்களைக் கவனித்துப் பார். அவர் எவனை வெறுத்துத் தள்ளிவிட்டாரோ அவன் அவன் சீர்ப்படவே மாட்டான். 14 (15) வாழ்வு நாளில் நன்மைகளை அனுபவித்துக்கொண்டு, தாழ்வு நாளுக்கு உன்னைத் தயார்படுத்துவாயாக. உண்மையிலே கடவுளே வாழ்வு நாளையும் செய்தார்; தாழ்வு நாளையும் செய்தார். இதைப் பற்றிக் கடவுளுக்கு விரோதமாய் ஒன்றும் சொல்லக்கூடாது. 15 (16) மேலும், என் வீணான நாட்களில் நான் கண்டது என்ன வென்றால்: நீதியாய் நடக்கிற நீதிமான் துன்பத்தில் இருப்பதைக் கண்டேன்; அக்கிரமமாய் நடக்கிற பாவி வெகுநாள் வாழ்வதைக் கண்டேன். 16 (17) நீதியிலே கூட அளவுக்கு மிஞ்சி நீதிமானாய் இருக்க வேண்டாம். ஞானத்திலும் அளவோடே ஞானியாய் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் மூடனாவாய். 17 (18) கடவுளுக்குத் துரோகம் செய்யாதே; அதிகப் பேதையாய் இராதே; இல்லாவிடில் உன் காலத்துக்கு முன்னே சாவாய். 18 (19) நீதிமானை ஆதரிப்பதே சிறந்ததே; ஆயினும், பாவியைக் கைவிடலாகாது. கடவுளுக்குப் பயப்படுகிறவன் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருக்க வண்டும். 19 (20) நகரத்துப் பத்து அதிகாரிகளைக் காட்டிலும் ஞானமே ஞானியை வலியவனாக்கும். 20 (21) ஏனென்றால், நன்மை செய்தும், பாவம் செய்யாத நீதிமான் இவ்வுலகத்தில் இல்லை. 21 (22) சொல்லப்படும் எல்லாப் பேச்சுகளையும் கவனிக்க வேண்டாம்; சிலவேளை உன் சொந்த வேலைக்காரனே உன்னைக்குறித்துக் கோள் சொல்வதைக் கேட்பாய். 22 (23) உள்ளபடி பலமுறை நீயே மற்றவர்களைக் குறித்துக் கோள் சொன்னாயென்று உன் மனச்சாட்சிக்குத் தெரியும். 23 (24) ஞானத்தை அடைவதற்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்தேன். எப்படியும் ஞானியாவேனென்று தீர்மானித்திருந்தும், ஞானம் எனக்குத் தூரமாய்ப் போயிற்று; 24 (25) முன்னிலும் அதிக தூரம் போயிற்று. ஞானத்தின் ஆழம் மிகவும் பெரிது. அதைச் சோதித்துப் பார்க்க யாராலே கூடும்? 25 (26) அறியவும், ஆராயவும், ஞானத்தை அடையவும், காரியங்களின் காரணங்களைத் தேடவும், அறிவில்லாதவருடைய அக்கிரமத்தைக் கண்டுபிடிக்கவும், அவிவேகிகளுடைய தவறுகளை வெளிப்படுத்தவும் நான் என் மனத்தைச் செலுத்தினேன். 26 (27) இப்படித் தேடினபோது, பெண்கள் சாவைக் காட்டிலும் கசப்புள்ளவர்களென்றும், அவர்கள் நெஞ்சம் வேடர்களின் கண்ணியும் வலையும் போன்றதென்றும், அவர்கள் கைகள் சங்கிலிகளென்றும் கண்டேன். கடவுளுக்கு முன்பாக நீதிமானாய் உள்ளவன் அவர்களிடம் சிக்கிக் கொள்ள மாட்டான். பாவிகளோ அவர்கள் கையில் அகப்படுவார்கள். 27 (28) சங்கப்போதகன் சொல்லுகிறதாவது: அதன் காரணம் அறியும்படி நான் பல காரியங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தேன். 28 (29) ஒப்பிட்டுப் பார்த்தும், அந்த காரணத்தை நான் கண்டுபிடியாமல், ஒரு காரியத்தை மட்டும் நிச்சயமென்று கண்டேன். அது என்ன வென்றார்: ஆயிரம் பேருக்குள்ளே ஒரு (நல்ல) ஆடவனைக் கண்டேன்; எல்லாப் பெண்களுக்குள்ளேயும் ஒரு (நல்ல) பெண்ணை நான் காணவில்லை. 29 (30) இதையும் உறுதிப்படுத்திக் கொண்டேன். அதாவது: கடவுள் மனிதனை நேர்மை உள்ளவனாகவே படைத்தார். மனிதனோ பலப்பல காரியங்கள் ஆராய முற்பட்டு, அவைகளில் தானே தனக்கு விலங்கிட்டுக் கொண்டான். இதைக் கண்டுபிடிக்கத் தக்க ஞானியும் எங்கே? இந்த வாக்கின் விளக்கம் சொல்லத் தக்க (அறிஞனும்) எங்கே?
மொத்தம் 12 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References