தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உபாகமம்
1. கடவுளின் ஊழியனாகிய மோயீசன் இறக்குமுன் இஸ்ராயேல் மக்களுக்கு ஆசீரளித்துக் கூறிய ஆசிமொழியாவது:
2. ஆண்டவர் சீனாயினின்று வந்து செயீரிலிருந்து நமக்குள்ளே எழுந்தருளினார். அவர் பாரான் மலையிலிருந்து ஆயிரமாயிரம் புனிதர்கள் சூழத் தரிசனமானார். அவருடைய வலக்கையில் நெருப்புமயமான சட்டம் இருந்தது. அவர் மக்களை நேசித்தார்.
3. புனிதர்கள் யாவரும் அவருடைய கையில் இருக்கின்றனர். அவருடைய மலரடியினை அண்டி வருகிறவர்கள் அவருடைய (வார்த்தையினால்) போதனை பெறுவார்கள்.
4. மோயீசன் நமக்கு ஒரு நீதிச் சட்டத்தைக் கொடுத்தார். அது யாக்கோப் சந்ததியாரின் மரபுரிமையாகும்.
5. இஸ்ராயேலின் தலைவர்களும் கோத்திரங்களும் கூட்டமாய்க் கூடிய மிகவும் புனித இனத்துக்கு அவர் அரசர். ரூபன் சாகாமல் வாழ்வான்.
6. ஆனால், அவன் மக்கள் கொஞ்சமாய் இருப்பார்கள்.
7. யூதாவைக் குறித்த ஆசீராவது: யூதாவின் குரலொலியைக் கேளும், ஆண்டவரே. அவனைத் தன் மக்களோடு சேர்ந்திருக்கச் செய்யும். அவன் புயம் இஸ்ராயேலுக்கு உதவியாகப் போராடும்; பகைவருடைய கையினின்று அவனை விடுதலையாகக் உதவியாய் இருக்கும் என்றார்.
8. பிறகு லேவியை நோக்கி: (ஆண்டவரே, ) உம்முடைய முழு நிறைவான புண்ணிய மேன்மையும் ஞானமும் நீர் தேர்ந்துகொண்ட உமது புனித ஊழியனுக்கு உண்டு. நீர் அவனை ஒரு சோதனையில் பரிசோதித்து, வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்தில் அவன்மேல் தீர்ப்புச் சொன்னீர்.
9. அவன் தன் தந்தைக்கும் தாய்க்கும்: நான் உங்களை அறியேன் என்றும், தன் சகோதரருக்கு: நீங்கள் யாரோ என்றும் சொன்னான். (லேவியர்கள்) தங்கள் பிள்ளைகளையும் பாராமல், உம் வார்த்தைகளைக் கைக்கொண்டு உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்கள்.
10. அவர்கள் யாக்கோபே, உன் நீதிச்சட்டத்ததையும், இஸ்ராயேலே, உன் கட்டளைகளையும் (கைக்கொண்டு அனுசரித்தோம் என்கிறார்கள்.) ஆண்டவரே, நீர் கோபமாயிருக்கும்போது அவர்கள் உமக்குத் தூபம் காட்டி, உம்முடைய பலிபீடத்திலே முழுத்தகனப் பலியை இடுவார்கள்.
11. ஆண்டவரே, (லேவியுடைய) வல்லமையை ஆசீர்வதியும்; அவன் கைச் செயல்களுடன் (இரும்). அவன் பகைவர்களின் முதுகுகளை நொறுக்கிவிடும்; அவன் எதிரிகள் எழுந்திராதபடி செய்யும் என்றார். அப்பால் பெஞ்சமினை நோக்கி:
12. இவன் ஆண்டவரால் அதிகமாய் நேசிக்கப்பட்டவனாகையால், அவரோடு நம்பிக்கையாய் வாழ்வான். அவன் அவரோடு படுத்துக்கொண்டு, அவருடைய இரு கைகளின் நடுவே தூங்குவான் என்றார்.
13. பிறகு சூசையை நோக்கி: இவனுடைய நிலம் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்படுவதாக: அது வானத்து வரங்களின் கனி மிகுதியினாலும், பனியின் பலன்களினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளின் பலன்களினாலும்,
14. சூரிய சந்திரன் பக்குவப்படுத்தும் பலன்களினாலும்,
15. பழமையான மலைகளில் உண்டாகும் செல்வத்தினாலும், நித்திய குன்றுகளில் அகப்படும் அரும் பழங்களினாலும்,
16. நிலத்தின் பலன்களினாலும் அதன் முழு நிறைவான விளைச்சலினாலும் செல்வத்தை அடையக்கடவது. முட்செடியில் தரிசனமானவருடைய ஆசீர் சூசை தலையின்மேலும் அவன் சகேதரருள் சிறந்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வரக்கடவதாக.
17. இவனழகு பசுவின் தலையீற்றுக்காளையின் அழகைப் போலாம். இவன் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகளை ஒத்தனவாம். அவைகளாலே மக்களை நாட்டின் கடைக் கோடிவரையிலும் அவன் முட்டித் துரத்துவான் என்றார். எபிராயீமின் படைகளும் மனாஸேயின் படைவீரார்களும் அவ்வாறே இருப்பார்கள் என்றார்.
18. ஸபுலோனை நோக்கி: ஸபுலோவே, உன் ஏற்றுத் துறைகளிலும், இஸாக்காரே, உன் கூடாரங்களிலும் மகிழக்கடவீர்கள்.
19. இவர்கள் மக்களை மலைகளிடம் அழைப்பார்கள்; அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள். கடற் செல்கங்களையும் மணலில் மறைத்து கிடக்கும் செல்வங்களையும் பாலைப்போல் உறிஞ்சுவார்கள் என்றார்.
20. காத்தை நோக்கி: காத் தன் பரந்த நாட்டில் ஆசீர் பெற்றுச் சிங்கம்போல் இளைப்பாறி, ஒரு புயத்தையும் ஒரு தலையையும் பீறினான்.
21. அவன் தன் உரிமையிலே சட்ட வல்லுநன் ஒருவனைக் கொண்டிருத்தலாகிய சிறந்த மகிமையைக் கண்டு மகிழ்ந்தான். அந்தச் சட்ட வல்லுநன் மக்களின் தலைவர்களுடன் இருந்து, ஆண்டவருக்கடுத்த நீதிச் சட்டங்களையும் விதித்து, இஸ்ராயேலரிடையே நீதித்தலைவனாய் இருந்தான் என்றார்.
22. தானை நோக்கி: தான் என்கிறவன் சிங்கக்குட்டியாம். அவன் பாசானிலிருந்து (பாய்ந்து) தூரமாய்ப் பரவுவான் என்றார்.
23. நெப்தலியை நோக்கி: நெப்தலி செல்வம் உடையவனாய் நிறைவு கொண்டிருப்பான். அவன் ஆண்டவருடைய ஆசீரால் நிறைந்திருப்பான். அவன் கடற் திசையையும் தென்திசையையும் உரிமையாக்கிக் கொள்வான் என்றார்.
24. ஆஸேரை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குள் ஆஸேர் ஆசீர் பெற்றவன். அவன் தன் சகோதரருக்கு விருப்பமாய் இருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான்.
25. இரும்பும் செம்பும் அவனுக்குக் காலணியாம். நீ உன் இளமையில் இருந்ததுபோல முதுமையிலும் இருப்பாய்.
26. மாபெரும் நீதிபதியான மக்களின் கடவுளுக்கு நிகரான இறைவன் ஒருவரும் இல்லை. வானத்தின்மேல் ஏறிப்போகிறவரே உனக்கு உதவியாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் மேன்மையைக் கண்டு மேகங்கள் அஞ்சிச் சிதறிப்போகும்.
27. அவருடைய உறைவிடமோ உன்னதத்தில் உள்ளது. அவருடைய நித்திய கையோ கீழே வீற்றிருக்கின்றது. அவர் உன் முன்பாக நின்று உன் பகைவனைத் தள்ளிவிட்டு: நெருங்கக்கடவாய் என்பார்.
28. இஸ்ராயேல் ஆபத்திற்கு அஞ்சாமல் தனித்து வாழ்ந்திருக்கும். யாக்கோபு கொடி முந்திரிப் பழச்சாற்றையும் கோதுமையையும் விளைவிக்கிற நிலத்தை நோக்குவான். பனி மிகுதியால் வானம் மங்கிப்போகும்.
29. இஸ்ராயேலே, நீ பேறுபெற்றவன். ஆண்டவரால் மீட்கப்பட்ட இனமே, உனக்கு நிகர் யார் ? ஆண்டவர் உனக்குக் குதிரையும் கேடயமும் உன் மகிமையைக் காக்கும் வாளுமாய் இருக்கிறார். உன் பகைவர்கள் உன்னை நிந்திப்பார்கள். நீயோ அவர்களுடைய கழுத்தை மிதித்து முறித்து விடுவாய் என்றார்.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 33 / 34
1 கடவுளின் ஊழியனாகிய மோயீசன் இறக்குமுன் இஸ்ராயேல் மக்களுக்கு ஆசீரளித்துக் கூறிய ஆசிமொழியாவது: 2 ஆண்டவர் சீனாயினின்று வந்து செயீரிலிருந்து நமக்குள்ளே எழுந்தருளினார். அவர் பாரான் மலையிலிருந்து ஆயிரமாயிரம் புனிதர்கள் சூழத் தரிசனமானார். அவருடைய வலக்கையில் நெருப்புமயமான சட்டம் இருந்தது. அவர் மக்களை நேசித்தார். 3 புனிதர்கள் யாவரும் அவருடைய கையில் இருக்கின்றனர். அவருடைய மலரடியினை அண்டி வருகிறவர்கள் அவருடைய (வார்த்தையினால்) போதனை பெறுவார்கள். 4 மோயீசன் நமக்கு ஒரு நீதிச் சட்டத்தைக் கொடுத்தார். அது யாக்கோப் சந்ததியாரின் மரபுரிமையாகும். 5 இஸ்ராயேலின் தலைவர்களும் கோத்திரங்களும் கூட்டமாய்க் கூடிய மிகவும் புனித இனத்துக்கு அவர் அரசர். ரூபன் சாகாமல் வாழ்வான். 6 ஆனால், அவன் மக்கள் கொஞ்சமாய் இருப்பார்கள். 7 யூதாவைக் குறித்த ஆசீராவது: யூதாவின் குரலொலியைக் கேளும், ஆண்டவரே. அவனைத் தன் மக்களோடு சேர்ந்திருக்கச் செய்யும். அவன் புயம் இஸ்ராயேலுக்கு உதவியாகப் போராடும்; பகைவருடைய கையினின்று அவனை விடுதலையாகக் உதவியாய் இருக்கும் என்றார். 8 பிறகு லேவியை நோக்கி: (ஆண்டவரே, ) உம்முடைய முழு நிறைவான புண்ணிய மேன்மையும் ஞானமும் நீர் தேர்ந்துகொண்ட உமது புனித ஊழியனுக்கு உண்டு. நீர் அவனை ஒரு சோதனையில் பரிசோதித்து, வாக்குவாதத் தண்ணீர் என்னும் இடத்தில் அவன்மேல் தீர்ப்புச் சொன்னீர். 9 அவன் தன் தந்தைக்கும் தாய்க்கும்: நான் உங்களை அறியேன் என்றும், தன் சகோதரருக்கு: நீங்கள் யாரோ என்றும் சொன்னான். (லேவியர்கள்) தங்கள் பிள்ளைகளையும் பாராமல், உம் வார்த்தைகளைக் கைக்கொண்டு உடன்படிக்கைக்குப் பிரமாணிக்கமாய் இருந்தார்கள். 10 அவர்கள் யாக்கோபே, உன் நீதிச்சட்டத்ததையும், இஸ்ராயேலே, உன் கட்டளைகளையும் (கைக்கொண்டு அனுசரித்தோம் என்கிறார்கள்.) ஆண்டவரே, நீர் கோபமாயிருக்கும்போது அவர்கள் உமக்குத் தூபம் காட்டி, உம்முடைய பலிபீடத்திலே முழுத்தகனப் பலியை இடுவார்கள். 11 ஆண்டவரே, (லேவியுடைய) வல்லமையை ஆசீர்வதியும்; அவன் கைச் செயல்களுடன் (இரும்). அவன் பகைவர்களின் முதுகுகளை நொறுக்கிவிடும்; அவன் எதிரிகள் எழுந்திராதபடி செய்யும் என்றார். அப்பால் பெஞ்சமினை நோக்கி: 12 இவன் ஆண்டவரால் அதிகமாய் நேசிக்கப்பட்டவனாகையால், அவரோடு நம்பிக்கையாய் வாழ்வான். அவன் அவரோடு படுத்துக்கொண்டு, அவருடைய இரு கைகளின் நடுவே தூங்குவான் என்றார். 13 பிறகு சூசையை நோக்கி: இவனுடைய நிலம் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்படுவதாக: அது வானத்து வரங்களின் கனி மிகுதியினாலும், பனியின் பலன்களினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளின் பலன்களினாலும், 14 சூரிய சந்திரன் பக்குவப்படுத்தும் பலன்களினாலும், 15 பழமையான மலைகளில் உண்டாகும் செல்வத்தினாலும், நித்திய குன்றுகளில் அகப்படும் அரும் பழங்களினாலும், 16 நிலத்தின் பலன்களினாலும் அதன் முழு நிறைவான விளைச்சலினாலும் செல்வத்தை அடையக்கடவது. முட்செடியில் தரிசனமானவருடைய ஆசீர் சூசை தலையின்மேலும் அவன் சகேதரருள் சிறந்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வரக்கடவதாக. 17 இவனழகு பசுவின் தலையீற்றுக்காளையின் அழகைப் போலாம். இவன் கொம்புகள் காட்டெருமையின் கொம்புகளை ஒத்தனவாம். அவைகளாலே மக்களை நாட்டின் கடைக் கோடிவரையிலும் அவன் முட்டித் துரத்துவான் என்றார். எபிராயீமின் படைகளும் மனாஸேயின் படைவீரார்களும் அவ்வாறே இருப்பார்கள் என்றார். 18 ஸபுலோனை நோக்கி: ஸபுலோவே, உன் ஏற்றுத் துறைகளிலும், இஸாக்காரே, உன் கூடாரங்களிலும் மகிழக்கடவீர்கள். 19 இவர்கள் மக்களை மலைகளிடம் அழைப்பார்கள்; அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள். கடற் செல்கங்களையும் மணலில் மறைத்து கிடக்கும் செல்வங்களையும் பாலைப்போல் உறிஞ்சுவார்கள் என்றார். 20 காத்தை நோக்கி: காத் தன் பரந்த நாட்டில் ஆசீர் பெற்றுச் சிங்கம்போல் இளைப்பாறி, ஒரு புயத்தையும் ஒரு தலையையும் பீறினான். 21 அவன் தன் உரிமையிலே சட்ட வல்லுநன் ஒருவனைக் கொண்டிருத்தலாகிய சிறந்த மகிமையைக் கண்டு மகிழ்ந்தான். அந்தச் சட்ட வல்லுநன் மக்களின் தலைவர்களுடன் இருந்து, ஆண்டவருக்கடுத்த நீதிச் சட்டங்களையும் விதித்து, இஸ்ராயேலரிடையே நீதித்தலைவனாய் இருந்தான் என்றார். 22 தானை நோக்கி: தான் என்கிறவன் சிங்கக்குட்டியாம். அவன் பாசானிலிருந்து (பாய்ந்து) தூரமாய்ப் பரவுவான் என்றார். 23 நெப்தலியை நோக்கி: நெப்தலி செல்வம் உடையவனாய் நிறைவு கொண்டிருப்பான். அவன் ஆண்டவருடைய ஆசீரால் நிறைந்திருப்பான். அவன் கடற் திசையையும் தென்திசையையும் உரிமையாக்கிக் கொள்வான் என்றார். 24 ஆஸேரை நோக்கி: இஸ்ராயேல் மக்களுக்குள் ஆஸேர் ஆசீர் பெற்றவன். அவன் தன் சகோதரருக்கு விருப்பமாய் இருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். 25 இரும்பும் செம்பும் அவனுக்குக் காலணியாம். நீ உன் இளமையில் இருந்ததுபோல முதுமையிலும் இருப்பாய். 26 மாபெரும் நீதிபதியான மக்களின் கடவுளுக்கு நிகரான இறைவன் ஒருவரும் இல்லை. வானத்தின்மேல் ஏறிப்போகிறவரே உனக்கு உதவியாய் இருக்கிறார். அவருடைய மகிமையின் மேன்மையைக் கண்டு மேகங்கள் அஞ்சிச் சிதறிப்போகும். 27 அவருடைய உறைவிடமோ உன்னதத்தில் உள்ளது. அவருடைய நித்திய கையோ கீழே வீற்றிருக்கின்றது. அவர் உன் முன்பாக நின்று உன் பகைவனைத் தள்ளிவிட்டு: நெருங்கக்கடவாய் என்பார். 28 இஸ்ராயேல் ஆபத்திற்கு அஞ்சாமல் தனித்து வாழ்ந்திருக்கும். யாக்கோபு கொடி முந்திரிப் பழச்சாற்றையும் கோதுமையையும் விளைவிக்கிற நிலத்தை நோக்குவான். பனி மிகுதியால் வானம் மங்கிப்போகும். 29 இஸ்ராயேலே, நீ பேறுபெற்றவன். ஆண்டவரால் மீட்கப்பட்ட இனமே, உனக்கு நிகர் யார் ? ஆண்டவர் உனக்குக் குதிரையும் கேடயமும் உன் மகிமையைக் காக்கும் வாளுமாய் இருக்கிறார். உன் பகைவர்கள் உன்னை நிந்திப்பார்கள். நீயோ அவர்களுடைய கழுத்தை மிதித்து முறித்து விடுவாய் என்றார்.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 33 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References