தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உபாகமம்
1. ஓரேபிலே இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மோவாபியர் நாட்டிலே அவர்களோடு உடன்படிக்கை செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டார். அது பின்வருமாறு:
2. மோயீசன் இஸ்ராயேலர் எல்லாரையும் அழைத்து அவர்களை நோக்கி: எகிப்து நாட்டில் உங்கள் கண்களுக்கு எல்லா ஊழியர்களுக்கும் அவனுடைய நாடு முழுவதற்கும்,
3. ஆண்டவர் செய்த பெரிய சோதனைகளையும், காண்பித்த மகத்தான அடையாளம் முதலிய அற்புத அதிசயங்களையும் கண்டீர்களே.
4. ஆயினும், உணரத்தக்க இதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க செவிகளையும் ஆண்டவர் இந்நாள் வரையிலும் உங்களுக்குத் தந்தாரில்லை.
5. ( அவர் உங்களை நேக்கி: ) நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரென்று நீங்கள் அறியும்வண்ணம் நாற்பது ஆண்டளவும் உங்களைப் பாலைவனத்தில் நடத்தி வந்தோம்.
6. அப்பொழுது உங்கள் ஆடைகள் பழையதாய்ப் போனதுமில்லை; உங்கள் காலணிகள் பழுதாய்ப் போனதுமில்லை. நீங்கம் அப்பம் உண்டதுமில்லை; கொடிமுந்திரிப் பழச்சாறு முதலிய மதுவைக் குடித்ததுமில்லை.
7. பிறகு நீங்கள் இவ்விடம் வந்து சேர்ந்தபோது எஸெபோன் அரசனான செகோனும், பாசான் அரசனான ஓகும் நம்மோடு போர்புரியப் புறப்பட்டார்கள். நாமும் அவர்களை முறியடித்து,
8. அவர்களுடைய நாட்டைப் பிடித்து, ரூபன், காத் கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் உரிமையாகக் கொடுத்தோம்.
9. ஆகையால், நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்து செய்யும்படியாக இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, அவைகளின்படி நடக்கக் கடவீர்களாக (என்றார்).
10. இன்று உங்கள் கோத்திரத் தலைவர்களும் உங்கள் வம்சங்களும் பெரியோர்களும் அறிஞர்களும், இஸ்ராயேலின் ஆடவர் அனைவரும்,
11. உங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் விறகுக்காரனும் தண்ணீர்காரனும் நீங்கலாக, உங்கள் பாளையத்திற்குள் இருக்கிற அந்நியனுமாகிய எல்லா மக்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் இருக்கிறார்கள்.
12. (எதற்கென்றால்) நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய உடன்படிக்கைக்கும், இன்று அவர் உன்னோடு செய்கிற அவருடைய ஆணை உறுதிக்கும் நீ உட்படுவதற்காகவும்,
13. அவர் உனக்குச் சொன்னபடியும் உன் மூதாதையராகிய ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்பவர்களுக்கு ஆணையிட்டருளியபடியும் உன்னைத் தம் மக்களாக ஏற்படுத்தித் தாம் உனக்குக் கடவுளாக இருப்பதற்காகவுமேயாம்.
14. நான் இவ்வுடன் படிக்கையையும் இந்த ஆணையின் உறுதியையும் உங்களோடு மட்டுமல்ல;
15. இவ்விடத்தில் வந்திருக்கிற அனைவரோடும் இங்கே நம்மோடு இராதவர்களோடேயும் அதைச் செய்கிறோம்.
16. உள்ளபடி நாம் எகிப்து நாட்டில் குடியிருந்ததையும் நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த மக்களின் நடுவில் நடந்து வந்ததையும், அப்பொழுது,
17. அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்கள் கும்பிட்டு ஆராதிக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமாகிய நரகலான விக்கிரகங்களையும் நீங்கள் கண்ணாலே கண்டீர்கள்.
18. ஆகையால் அந்த மக்களின் தேவர்களை கும்பிடத் தக்கவர்களென்று மதித்து, நம் கடவுளாகிய ஆண்டவரை விட்டு மறுதலிக்கும் மனத்தையுடைய ஓர் ஆடவனேனும் ஒரு பெண்ணேனும் குடும்பமேனும் வம்சமேனும் உங்களிடையே இராதபடிக்கும், உங்களுக்குள்ளே பித்தையும் கைப்பையும் விளைவிக்கத்தக்க வேர் போன்றவர்கள் இராதபடிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
19. சிலவேளை அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டபிற்பாடு தன்னைத்தானே நோக்கி: நான் என் மன விருப்பப்படி அக்கிரம வழியில் எவ்வளவு தூரம் நடந்தாலும் எனக்கு இனிப் பயமில்லை என்று வீண் எண்ணம் கொண்டு சொன்னாலும் சொல்லலாம். இது மழைநீரைக் குடிக்க விரும்பும் வேர். வெறிக்கக் குடித்த வேராலே உண்ணப்படுவதற்கு ஒப்பாகும்.
20. அப்படிப் பட்டவன்மேல் ஆண்டவர் இரங்கமாட்டார். அவருடைய கோபமும் எரிச்சலும் அவன்மேல் மிகக் கரிய புகையைப் புகைக்கும். இந்நுலில் எழுதப்பட்ட எல்லாச் சாபங்களும் அவன்மேல் விழும். ஆண்டவர் அவனுடைய பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவார்.
21. இந்தத் திருச்சட்ட நூலிலும் உடன்படிக்கையிலும் எழுதியிருக்கிற சாபங்களின்படியே (ஆண்டவர்) அவனை இஸ்ராயேலின் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் புறம்பாக்கி விடுவார்.
22. அப்பொழுது உங்களுக்குப் பின் வரும் தலைமுறைப் பிள்ளைகளும், இவர்களிடம் காலப்போக்கிலே பிறக்கும் சந்ததியார்களும் தொலைநாட்டிலிருந்து வரும் அந்நியர்களும் ஆண்டவர் இந்த நாட்டுக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் கண்டு,
23. ஆண்டவர் தம் கோப்த்தின் கடுமையிலே சோதோம், கொமோர், ஆதமா, செபோயீங் என்ற நகரங்களை அழித்துக் கவிழ்த்தது போல், இந்நாட்டின் நிலங்கள் விதைப்பும் விளைவும் இல்லாதிருக்கும்படி அவற்றின்மேல் கந்தகத்தையும் உப்பையும் பெய்வித்துப் பாழாக்கியிருப்பதையும் கண்டு, மக்களனைவரும்:
24. ஆண்டவர் இந்நாட்டை ஏன் இப்படித் தண்டித்தார் ? மிகவும் எரிச்சலான இந்தக் கோபம் அவருக்கு ஏன் வந்தது என்று வினவ,
25. அதற்கு மறுமொழியாக: ஆண்டவர் தங்களை எகிப்து நாட்டினின்று மீட்டபோது தங்கள் மூதாதையரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,
26. தாங்கள் அறிந்திராத, தங்களுக்கு உரிமையில்லாத புற தேவர்களுக்குப் பணிசெய்து அவர்களைத் தொழுதார்கள்.
27. அதனால் ஆண்டவர் கோபம் கொண்டு, இந்நூலிலே எழுதப்பட்டுள்ள சாபங்கள் எல்லாவற்றையும் இந்நாட்டின்மேல் வரச்செய்தார்.
28. அவர் தம்முடைய கோபத்தினாலும் சீற்றத்தினாலும் எரிச்சலினாலும் அவர்களைத் தங்கள் நாட்டினின்று துரத்திவிட்டு, இந்நாளில் அமைந்திருப்பதுபோல், அவர்களை வெளிநாட்டில் எடுத்தெறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.
29. மறைவான காரியங்கள் நம்முடைய கடவுளாகிய ஆண்டவருக்கே உரியவை. வெளிப்படுத்தப்பட்டவைகைளோ நாம் இந்நீதி முறைப்படியெல்லாம் நடந்துகொள்ளுமாறு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 34
1 ஓரேபிலே இஸ்ராயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மோவாபியர் நாட்டிலே அவர்களோடு உடன்படிக்கை செய்ய ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டார். அது பின்வருமாறு: 2 மோயீசன் இஸ்ராயேலர் எல்லாரையும் அழைத்து அவர்களை நோக்கி: எகிப்து நாட்டில் உங்கள் கண்களுக்கு எல்லா ஊழியர்களுக்கும் அவனுடைய நாடு முழுவதற்கும், 3 ஆண்டவர் செய்த பெரிய சோதனைகளையும், காண்பித்த மகத்தான அடையாளம் முதலிய அற்புத அதிசயங்களையும் கண்டீர்களே. 4 ஆயினும், உணரத்தக்க இதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க செவிகளையும் ஆண்டவர் இந்நாள் வரையிலும் உங்களுக்குத் தந்தாரில்லை. 5 ( அவர் உங்களை நேக்கி: ) நாம் உங்கள் கடவுளாகிய ஆண்டவரென்று நீங்கள் அறியும்வண்ணம் நாற்பது ஆண்டளவும் உங்களைப் பாலைவனத்தில் நடத்தி வந்தோம். 6 அப்பொழுது உங்கள் ஆடைகள் பழையதாய்ப் போனதுமில்லை; உங்கள் காலணிகள் பழுதாய்ப் போனதுமில்லை. நீங்கம் அப்பம் உண்டதுமில்லை; கொடிமுந்திரிப் பழச்சாறு முதலிய மதுவைக் குடித்ததுமில்லை. 7 பிறகு நீங்கள் இவ்விடம் வந்து சேர்ந்தபோது எஸெபோன் அரசனான செகோனும், பாசான் அரசனான ஓகும் நம்மோடு போர்புரியப் புறப்பட்டார்கள். நாமும் அவர்களை முறியடித்து, 8 அவர்களுடைய நாட்டைப் பிடித்து, ரூபன், காத் கோத்திரங்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் உரிமையாகக் கொடுத்தோம். 9 ஆகையால், நீங்கள் செய்ய வேண்டியதை அறிந்து செய்யும்படியாக இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கவனமாய்க் கேட்டு, அவைகளின்படி நடக்கக் கடவீர்களாக (என்றார்). 10 இன்று உங்கள் கோத்திரத் தலைவர்களும் உங்கள் வம்சங்களும் பெரியோர்களும் அறிஞர்களும், இஸ்ராயேலின் ஆடவர் அனைவரும், 11 உங்கள் பிள்ளைகளும் மனைவிகளும் விறகுக்காரனும் தண்ணீர்காரனும் நீங்கலாக, உங்கள் பாளையத்திற்குள் இருக்கிற அந்நியனுமாகிய எல்லா மக்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் இருக்கிறார்கள். 12 (எதற்கென்றால்) நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய உடன்படிக்கைக்கும், இன்று அவர் உன்னோடு செய்கிற அவருடைய ஆணை உறுதிக்கும் நீ உட்படுவதற்காகவும், 13 அவர் உனக்குச் சொன்னபடியும் உன் மூதாதையராகிய ஆபிரகாம் ஈசாக் யாக்கோபு என்பவர்களுக்கு ஆணையிட்டருளியபடியும் உன்னைத் தம் மக்களாக ஏற்படுத்தித் தாம் உனக்குக் கடவுளாக இருப்பதற்காகவுமேயாம். 14 நான் இவ்வுடன் படிக்கையையும் இந்த ஆணையின் உறுதியையும் உங்களோடு மட்டுமல்ல; 15 இவ்விடத்தில் வந்திருக்கிற அனைவரோடும் இங்கே நம்மோடு இராதவர்களோடேயும் அதைச் செய்கிறோம். 16 உள்ளபடி நாம் எகிப்து நாட்டில் குடியிருந்ததையும் நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த மக்களின் நடுவில் நடந்து வந்ததையும், அப்பொழுது, 17 அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்கள் கும்பிட்டு ஆராதிக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமாகிய நரகலான விக்கிரகங்களையும் நீங்கள் கண்ணாலே கண்டீர்கள். 18 ஆகையால் அந்த மக்களின் தேவர்களை கும்பிடத் தக்கவர்களென்று மதித்து, நம் கடவுளாகிய ஆண்டவரை விட்டு மறுதலிக்கும் மனத்தையுடைய ஓர் ஆடவனேனும் ஒரு பெண்ணேனும் குடும்பமேனும் வம்சமேனும் உங்களிடையே இராதபடிக்கும், உங்களுக்குள்ளே பித்தையும் கைப்பையும் விளைவிக்கத்தக்க வேர் போன்றவர்கள் இராதபடிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். 19 சிலவேளை அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டபிற்பாடு தன்னைத்தானே நோக்கி: நான் என் மன விருப்பப்படி அக்கிரம வழியில் எவ்வளவு தூரம் நடந்தாலும் எனக்கு இனிப் பயமில்லை என்று வீண் எண்ணம் கொண்டு சொன்னாலும் சொல்லலாம். இது மழைநீரைக் குடிக்க விரும்பும் வேர். வெறிக்கக் குடித்த வேராலே உண்ணப்படுவதற்கு ஒப்பாகும். 20 அப்படிப் பட்டவன்மேல் ஆண்டவர் இரங்கமாட்டார். அவருடைய கோபமும் எரிச்சலும் அவன்மேல் மிகக் கரிய புகையைப் புகைக்கும். இந்நுலில் எழுதப்பட்ட எல்லாச் சாபங்களும் அவன்மேல் விழும். ஆண்டவர் அவனுடைய பெயரை வானத்தின் கீழிருந்து அழித்து விடுவார். 21 இந்தத் திருச்சட்ட நூலிலும் உடன்படிக்கையிலும் எழுதியிருக்கிற சாபங்களின்படியே (ஆண்டவர்) அவனை இஸ்ராயேலின் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் புறம்பாக்கி விடுவார். 22 அப்பொழுது உங்களுக்குப் பின் வரும் தலைமுறைப் பிள்ளைகளும், இவர்களிடம் காலப்போக்கிலே பிறக்கும் சந்ததியார்களும் தொலைநாட்டிலிருந்து வரும் அந்நியர்களும் ஆண்டவர் இந்த நாட்டுக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் கண்டு, 23 ஆண்டவர் தம் கோப்த்தின் கடுமையிலே சோதோம், கொமோர், ஆதமா, செபோயீங் என்ற நகரங்களை அழித்துக் கவிழ்த்தது போல், இந்நாட்டின் நிலங்கள் விதைப்பும் விளைவும் இல்லாதிருக்கும்படி அவற்றின்மேல் கந்தகத்தையும் உப்பையும் பெய்வித்துப் பாழாக்கியிருப்பதையும் கண்டு, மக்களனைவரும்: 24 ஆண்டவர் இந்நாட்டை ஏன் இப்படித் தண்டித்தார் ? மிகவும் எரிச்சலான இந்தக் கோபம் அவருக்கு ஏன் வந்தது என்று வினவ, 25 அதற்கு மறுமொழியாக: ஆண்டவர் தங்களை எகிப்து நாட்டினின்று மீட்டபோது தங்கள் மூதாதையரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய், 26 தாங்கள் அறிந்திராத, தங்களுக்கு உரிமையில்லாத புற தேவர்களுக்குப் பணிசெய்து அவர்களைத் தொழுதார்கள். 27 அதனால் ஆண்டவர் கோபம் கொண்டு, இந்நூலிலே எழுதப்பட்டுள்ள சாபங்கள் எல்லாவற்றையும் இந்நாட்டின்மேல் வரச்செய்தார். 28 அவர் தம்முடைய கோபத்தினாலும் சீற்றத்தினாலும் எரிச்சலினாலும் அவர்களைத் தங்கள் நாட்டினின்று துரத்திவிட்டு, இந்நாளில் அமைந்திருப்பதுபோல், அவர்களை வெளிநாட்டில் எடுத்தெறிந்துவிட்டார் என்று சொல்லப்படும். 29 மறைவான காரியங்கள் நம்முடைய கடவுளாகிய ஆண்டவருக்கே உரியவை. வெளிப்படுத்தப்பட்டவைகைளோ நாம் இந்நீதி முறைப்படியெல்லாம் நடந்துகொள்ளுமாறு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 29 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References