தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உபாகமம்
1. அன்றியும், இஸ்ராயலின் பெரியோர்கள் சூழ மோயீசன் மக்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதக்கின்ற கட்டளையெல்லாம் கைக்கொள்ளுங்கள்.
2. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிற்குப் போக யோர்தானைக் கடந்த பின்பு, நீ பெரிய கற்களை நாட்டி அவைகளுக்குச் சாந்து பூசுவாய்.
3. ஏனேன்றால் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குள் புகும்படி நீ யோர்தானைக் கடந்த பின்பு, இந்த நீதிச்சட்டங்கள் யாவையும் மேற்படிக் கற்களில் எழுதக்கடவாய்.
4. ஆகையால், நீங்கள் யோர்தானைக் கடந்தவுடனே, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்ட கற்களை ஏபால் என்ற மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சுண்ணாம்புக் காரை இடுவாய்.
5. பிறகு அவ்விடத்திலே இருப்பாயுதம் படாதகற்களாலே உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்புவாய்.
6. கொத்தாத கற்களாலே நீ அதைக்கட்டி, அதன் மீது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழுத்தகனப் பலிகளை ஒப்புக்கொடுப்பதுமன்றி,
7. சமாதானப் பலிகளையும் கொடுத்த பின்பு, அங்கே உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வாய்.
8. இந்த நீதிச் சட்டங்களையெல்லாம் வழுவில்லாமலும் தெளிவாகவும் எழுதக்கடவாய் என்றார்.
9. பிறகு மோயீசனும் லேவி புதல்வர்களாகிய குருக்குளும், இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயலே, கவனித்துக் கேட்பாயாக. நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவருடைய இனமானாய்.
10. அவருடைய குரலொலிக்குச் செவிகொடுக்வும், நாங்கள் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் நீதிமுறைகளையும் நிறைவேற்றவும் கடவாயாக என்றார்கள்.
11. மேலும், அதே நாளில் மோயீசன் மக்களை நோக்கி:
12. யோர்தனைக் கடந்த பின்பு மக்களுக்கு ஆசீர் அளிக்குமாறு சிமையோன், லேவி, யூதா, இஸாக்கார், சூசை, பெஞ்சமின் கோத்திரத்தார்கள் கரிஸீம் என்னும் மலையில் நிற்பார்கள்.
13. இவர்களுக்கு எதிரிடையாக, சாபங்கூற ரூபன், காத், ஆஸேர், ஸாபுலோன், தான், நேப்தலி கோத்திரத்தார்கள் ஏபால் மலையில் நிற்பார்கள்.
14. அப்பொழுது லேவியர்கள் உரத்த குரலில் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் நோக்கி:
15. ஆண்டவருக்கு வெறுப் பூட்டும் காரியமாகிய விக்கிரகத்தை, உளியால் கல்லைக் கொத்தியாவது மாதிரியில் வெண்கலத்தை வார்த்தாவது தன் கையால் செய்து, அதை மறைவிடத்தில் வைத்திருக்கிற தொழிலாளிமேல் சாபம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக மக்களெல்லாரும்: ஆமென் என்று சொல்லக் கடவார்கள்.
16. தன் தாய் தந்தையரை மதித்து நடவாதவன்மேலே சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
17. பிறனுடைய எல்லைக் கல்லைப் புரட்டி ஒற்றிப் போடுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
18. குருடனை வழிதப்பச் செய்கிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
19. அகதி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நீதியைப் புரட்டுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
20. தன் தந்தையின் மனைவியோடு தகாத உறவு கொள்பவன் அல்லது அவளுடைய படுக்கையின் மேல்மூடியைத் திறப்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
21. யாதொரு மிருகத்தோடு கூடுபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
22. தன் தந்தைக்கேனும் தாய்கேனும் பிறந்த புதல்வியாகிய தன் சகோதரியோடு தகாத உறவு கொள்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
23. தன் மாமியோடு தகாத உறவு கொள்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
24. தன் பிறனை மறைவிடத்திலே சாகடிப்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
25. குற்றமற்றவனைக் கொலை செய்யும்படி கையூட்டு வாங்குபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
26. இந்த நீதிச் சட்டங்களைக் கைக்கொண்டு நடவாதவன் அல்லது தன் செயலிலே நிறைவேற்றாதவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 34
1 அன்றியும், இஸ்ராயலின் பெரியோர்கள் சூழ மோயீசன் மக்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதக்கின்ற கட்டளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். 2 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிற்குப் போக யோர்தானைக் கடந்த பின்பு, நீ பெரிய கற்களை நாட்டி அவைகளுக்குச் சாந்து பூசுவாய். 3 ஏனேன்றால் உன் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு ஆணையிட்டபடியே உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் பொழியும் நாட்டிற்குள் புகும்படி நீ யோர்தானைக் கடந்த பின்பு, இந்த நீதிச்சட்டங்கள் யாவையும் மேற்படிக் கற்களில் எழுதக்கடவாய். 4 ஆகையால், நீங்கள் யோர்தானைக் கடந்தவுடனே, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்ட கற்களை ஏபால் என்ற மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சுண்ணாம்புக் காரை இடுவாய். 5 பிறகு அவ்விடத்திலே இருப்பாயுதம் படாதகற்களாலே உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்புவாய். 6 கொத்தாத கற்களாலே நீ அதைக்கட்டி, அதன் மீது உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழுத்தகனப் பலிகளை ஒப்புக்கொடுப்பதுமன்றி, 7 சமாதானப் பலிகளையும் கொடுத்த பின்பு, அங்கே உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் உண்டு மகிழ்வாய். 8 இந்த நீதிச் சட்டங்களையெல்லாம் வழுவில்லாமலும் தெளிவாகவும் எழுதக்கடவாய் என்றார். 9 பிறகு மோயீசனும் லேவி புதல்வர்களாகிய குருக்குளும், இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ராயலே, கவனித்துக் கேட்பாயாக. நீ இன்று உன் கடவுளாகிய ஆண்டவருடைய இனமானாய். 10 அவருடைய குரலொலிக்குச் செவிகொடுக்வும், நாங்கள் உனக்குக் கற்பிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் நீதிமுறைகளையும் நிறைவேற்றவும் கடவாயாக என்றார்கள். 11 மேலும், அதே நாளில் மோயீசன் மக்களை நோக்கி: 12 யோர்தனைக் கடந்த பின்பு மக்களுக்கு ஆசீர் அளிக்குமாறு சிமையோன், லேவி, யூதா, இஸாக்கார், சூசை, பெஞ்சமின் கோத்திரத்தார்கள் கரிஸீம் என்னும் மலையில் நிற்பார்கள். 13 இவர்களுக்கு எதிரிடையாக, சாபங்கூற ரூபன், காத், ஆஸேர், ஸாபுலோன், தான், நேப்தலி கோத்திரத்தார்கள் ஏபால் மலையில் நிற்பார்கள். 14 அப்பொழுது லேவியர்கள் உரத்த குரலில் இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் நோக்கி: 15 ஆண்டவருக்கு வெறுப் பூட்டும் காரியமாகிய விக்கிரகத்தை, உளியால் கல்லைக் கொத்தியாவது மாதிரியில் வெண்கலத்தை வார்த்தாவது தன் கையால் செய்து, அதை மறைவிடத்தில் வைத்திருக்கிற தொழிலாளிமேல் சாபம் என்பார்கள். அதற்கு மறுமொழியாக மக்களெல்லாரும்: ஆமென் என்று சொல்லக் கடவார்கள். 16 தன் தாய் தந்தையரை மதித்து நடவாதவன்மேலே சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 17 பிறனுடைய எல்லைக் கல்லைப் புரட்டி ஒற்றிப் போடுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 18 குருடனை வழிதப்பச் செய்கிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 19 அகதி, திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நீதியைப் புரட்டுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 20 தன் தந்தையின் மனைவியோடு தகாத உறவு கொள்பவன் அல்லது அவளுடைய படுக்கையின் மேல்மூடியைத் திறப்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 21 யாதொரு மிருகத்தோடு கூடுபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 22 தன் தந்தைக்கேனும் தாய்கேனும் பிறந்த புதல்வியாகிய தன் சகோதரியோடு தகாத உறவு கொள்பவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 23 தன் மாமியோடு தகாத உறவு கொள்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 24 தன் பிறனை மறைவிடத்திலே சாகடிப்பவன் மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 25 குற்றமற்றவனைக் கொலை செய்யும்படி கையூட்டு வாங்குபவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள். 26 இந்த நீதிச் சட்டங்களைக் கைக்கொண்டு நடவாதவன் அல்லது தன் செயலிலே நிறைவேற்றாதவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References