தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
உபாகமம்
1. உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில், நீங்கள் மண்ணில் வாழும் நாளெல்லாம் அதை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டு, நீங்கள் அனுசரிக்க வேண்டிய கட்டளைகளும் நீதிமுறைகளுமாவன:
2. நீங்கள் கைப்பற்றவிருக்கும் மக்கள் உயர்ந்த மலைகளின் மேலும் குன்றுகளின் மேலும் தழைத்திருக்கிற மரங்களின் கீழும் தங்கள் தேவர்களைத் தொழுதுவரும் இடங்களையெல்லாம் அழித்து,
3. அவர்களின் பலிபீடங்களையும் இடித்து, அவர்களின் விக்கிரகங்களையும் தகர்த்து சோலைகளையும் நெருப்பினால் சுட்டெரித்து, அவர்கள் சிலைகளையும் நொறுக்கி, அவ்விடங்களின் பெயர் முதலாய் இராமல் அவைகளை முற்றிலும் அழித்து விடுங்கள்.
4. உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் காரியத்திலே (நீங்கள்) அவ்விதமாய்ச் செய்யாமல்,
5. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம்முடைய திருப்பெயர் விளங்கவும் தாம் தங்கியிருக்கவும் உங்கள் கோத்திரங்கள் எல்லாவற்றிலும் எந்த இடத்தைத் தேர்ந்து கொண்டிருப்பாரோ அந்த இடத்தையே நீங்கள் நாடியடைந்து,
6. அந்த இடத்திலேயே உங்கள் தகனம் முதலிய பலிகளையும், பத்திலொரு பகுதிகளையும், கைகளின் புதுப்பலன்களையும், நேர்ச்சிகளையும், காணிக்கைளையும், ஆடு மாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து செலுத்தி,
7. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் உண்டு, நீங்களும் உங்கள் வீட்டாரும் கையால் செய்தனவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு ஆசீர் அளித்த எல்லாவற்றிற்காகவும் அகமகிழ்வீர்கள்.
8. இங்கே இந்நாளில் நம்முள் அவனவன் தன் தன் பார்வைக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறதுபோல அங்கே நீங்கள் செய்யலாகாது.
9. உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் இளைப்பாற்றியிலும் உரிமையிலும் நீங்கள் இன்னும் நுழையவில்லை.
10. ஆனால், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீங்கள் குடியேறின பின்பு, சுற்றிலுமிருக்கிற உங்கள் பகைவர்களின் தொல்லையற்று, யாதொரு அச்சமுமின்றி அந்த நாட்டில் வாழ்ந்திருப்பீர்கள்.
11. அப்பொழுது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு நீங்கள் போய், நான் உங்களுக்குக் கற்பித்துள்ளபடி உங்கள் முழுத்தகனங்களையும் பலிகளையும் பத்திலொரு பகுதிகளையும், உங்கள் கைகளின் புதுப்பலன்களையும், நீங்கள் ஆண்டவருக்கு நேர்ந்துகொள்ளும் காணிக்கைகளில் சிறந்த பகுதியையும் கொண்டுவந்து படைக்கக்கடவீர்கள்.
12. அங்கே நீங்களும், உங்கள் புதல்வர் புதல்வியர்களும், ஊழியர் ஊழியக்காரிகளும், உங்கள் நகரங்களில் குடியிருக்கிறவர்களும் உங்களுக்குள் வேறு பங்கும் உரிமையும் கொண்டிராதவர்களுமாகிய லேவியர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் விருந்துண்டு களிப்பீர்கள்.
13. நீ கண்ட இடமெல்லாம் முழுத் தகனப்பலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
14. ஆனால் உன் கோத்திரங்களுள் ஒன்றில், ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் மட்டுமே, உன் முழுத் தகனப்பலிகளை இட்டு, நான் உனக்குக் கட்டளையிடுகிற யாவையும் அங்கே செய்வாய்.
15. விருந்தாடுவதற்கு இறைச்சி உண்ண விரும்புவாயாயின், கடவுளாகிய உன் ஆண்டவர் உன் நகரங்களில் உனக்கு அருளியிருக்கும் ஆசீரின்படி நீ அடித்து உண்ணலாம். அந்த மிருகவுயிர் மாசுள்ளதாய் அல்லது ஊனமானதாயிருந்து தீட்டுப்பட்டதானாலும் சரி, பழுதற்ற அங்க நிறைவுள்ள தீட்டில்லா மிருகமானாலும் சரி, காட்டாட்டையும் கலைமானையும் உண்பதுபோல் அதை உண்ணலாம்.
16. இரத்தத்தை மட்டும் உண்ண வேண்டாம். அதைத் தண்ணீரைப்போலத் தரையில் ஊற்றிவிடக்கடவாய்.
17. உன் தானியத்திலும் கொடிமுந்திரிப் பழச்சாற்றிலும் எண்ணெயிலும் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகத்தையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நேர்ந்து கொள்ளும் எல்லா நேர்ச்சிகளையும், மனமொத்த காணிக்கைகளையும், உன் கைகளின் புதுப்பலன்களையும் நீ உன் நகரங்களில் உண்ணாமல்,
18. உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வனும் புதல்வியும், வேலைக்காரன் வேலைக்காரியும், நகரங்களிலிருக்கிற லேவியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அவற்றை உண்டு, நீ கையால் செய்யும் எல்லாவற்றைப் பற்றியும் உன் கடவுளாகிய ஆண்டவரின் பார்வையிலே மகிழ்ச்சி கொள்வாய்.
19. நீ மண்ணில் வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு.
20. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி உன் எல்லைகளை விரிவாக்கிய பின்னர், உன் மன விருப்பப்படி நீ இறைச்சியை உண்ண விரும்பும்போது,
21. உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்ட இடம் உனக்கு மிகத்தூரமாயிருந்தால், நான் உனக்குக் கற்பித்தவாறு உனக்குள்ள ஆடு மாடு முதலியவற்றில் எதையேனும் நீ அடித்து உன் நகரங்களிலேயே உன் விருப்பப்படி உண்ணலாம்.
22. காட்டு வெள்ளாட்டையும் கலைமானையும் உண்பதுபோல நீ அதனை உண்ணலாம். தீட்டுப் பட்டவனும் தீட்டுப்படாதவனும் சேர்ந்து அதை உண்ணலாம்.
23. இரத்தத்தை மட்டும் உண்ணாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. ஏனென்றால், மிருகவுயிரில் இரத்தம் உயிர்க்குப் பதிலாக இருப்பதனால், இறைச்சியோடு இரத்தத்தையும் உண்ணலாகாது.
24. ஆதலால், அதை நீ தண்ணீரைப் போலத் தரையில் ஊற்றக்கடவாய்.
25. நீ ஆண்டவருடைய முன்னிலையில் செம்மையானதைச் செய்வாயாகில், நீயும் உனக்குப் பின்வரும் பிள்ளைகளும் நன்றாய் இருப்பீர்கள்.
26. நீ ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த பொருட்களையும், நேர்ந்து கொண்ட நேர்ச்சிகளையும், ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்திற்குக் கொண்டுவந்து,
27. உன் காணிக்கைகளாகிய இறைச்சியையும் இரத்தத்தையும் உன் கடவுளாகிய ஆண்டவருடைய பலிபீடத்தின்மீது ஒப்புக்கொடுத்து பலிப்பிராணிகளின் இரத்தத்தைப் பீடத்தின்மேல் ஊற்றிவிட்டபின் இறைச்சியை உண்பாய்.
28. நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய பார்வைக்கு நலமும் விருப்பமுமானதைச் செய்திருப்பதனால் உனக்கும், உனக்குப்பின் வரும் உன் புதல்வருக்கும் எப்போதும் நன்றாயிருக்கும்பொருட்டு, இன்று உனக்கு நான் கற்பிக்கின்ற எல்லாவற்றையும் உற்றுக் கேட்டு அனுசரிக்கக்கடவாய்.
29. உரிமையாக்கிக் கொள்ளும்படி நீ புகவிருக்கிற நாட்டு மக்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கண்களுக்குமுன் அழித்து விடும் போதும், நீ அவர்களுடைய நாட்டைப் பிடித்து அதிலே குடியேறியிருக்கும் போதும்,
30. அம்மக்கள் உன் வருகையால்தானே அழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து நீ அவர்களைப் போல நடக்காதபடிக்கும்; அவர்கள் தங்கள் தேவர்களுக்குப் பணிவிடை செய்ததுபோல் நானும் செய்வேன் என்று சொல்லி அவர்களுடைய சமயச் சடங்குகள் எப்படிப் பட்டவை என்று விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாய் இருக்கக்கடவாய்.
31. அப்படிப் பட்ட சடங்குகளைச் செய்து நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஆராதனையில் உபயோகிக்காதே. ஏனென்றால், ஆண்டவருக்கு வெறுப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் புதல்வர்களையும் புதல்வியர்களையும் படைத்து நெருப்பிலே அவர்களைச் சுட்டெரித்தார்கள்.
32. நான் உனக்கு விதிக்கிற யாவையும் நீ ஆண்டவருக்காக செய். அதிலே கூட்டவேண்டியதோ குறைக்கவேண்டியதோ ஒன்றுமில்லை.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 34
1 உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில், நீங்கள் மண்ணில் வாழும் நாளெல்லாம் அதை உரிமையாக்கிக் கொள்ளும் பொருட்டு, நீங்கள் அனுசரிக்க வேண்டிய கட்டளைகளும் நீதிமுறைகளுமாவன: 2 நீங்கள் கைப்பற்றவிருக்கும் மக்கள் உயர்ந்த மலைகளின் மேலும் குன்றுகளின் மேலும் தழைத்திருக்கிற மரங்களின் கீழும் தங்கள் தேவர்களைத் தொழுதுவரும் இடங்களையெல்லாம் அழித்து, 3 அவர்களின் பலிபீடங்களையும் இடித்து, அவர்களின் விக்கிரகங்களையும் தகர்த்து சோலைகளையும் நெருப்பினால் சுட்டெரித்து, அவர்கள் சிலைகளையும் நொறுக்கி, அவ்விடங்களின் பெயர் முதலாய் இராமல் அவைகளை முற்றிலும் அழித்து விடுங்கள். 4 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் காரியத்திலே (நீங்கள்) அவ்விதமாய்ச் செய்யாமல், 5 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம்முடைய திருப்பெயர் விளங்கவும் தாம் தங்கியிருக்கவும் உங்கள் கோத்திரங்கள் எல்லாவற்றிலும் எந்த இடத்தைத் தேர்ந்து கொண்டிருப்பாரோ அந்த இடத்தையே நீங்கள் நாடியடைந்து, 6 அந்த இடத்திலேயே உங்கள் தகனம் முதலிய பலிகளையும், பத்திலொரு பகுதிகளையும், கைகளின் புதுப்பலன்களையும், நேர்ச்சிகளையும், காணிக்கைளையும், ஆடு மாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து செலுத்தி, 7 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் உண்டு, நீங்களும் உங்கள் வீட்டாரும் கையால் செய்தனவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு ஆசீர் அளித்த எல்லாவற்றிற்காகவும் அகமகிழ்வீர்கள். 8 இங்கே இந்நாளில் நம்முள் அவனவன் தன் தன் பார்வைக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறதுபோல அங்கே நீங்கள் செய்யலாகாது. 9 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் இளைப்பாற்றியிலும் உரிமையிலும் நீங்கள் இன்னும் நுழையவில்லை. 10 ஆனால், நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டில் நீங்கள் குடியேறின பின்பு, சுற்றிலுமிருக்கிற உங்கள் பகைவர்களின் தொல்லையற்று, யாதொரு அச்சமுமின்றி அந்த நாட்டில் வாழ்ந்திருப்பீர்கள். 11 அப்பொழுது உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொள்ளும் இடத்திற்கு நீங்கள் போய், நான் உங்களுக்குக் கற்பித்துள்ளபடி உங்கள் முழுத்தகனங்களையும் பலிகளையும் பத்திலொரு பகுதிகளையும், உங்கள் கைகளின் புதுப்பலன்களையும், நீங்கள் ஆண்டவருக்கு நேர்ந்துகொள்ளும் காணிக்கைகளில் சிறந்த பகுதியையும் கொண்டுவந்து படைக்கக்கடவீர்கள். 12 அங்கே நீங்களும், உங்கள் புதல்வர் புதல்வியர்களும், ஊழியர் ஊழியக்காரிகளும், உங்கள் நகரங்களில் குடியிருக்கிறவர்களும் உங்களுக்குள் வேறு பங்கும் உரிமையும் கொண்டிராதவர்களுமாகிய லேவியர்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் விருந்துண்டு களிப்பீர்கள். 13 நீ கண்ட இடமெல்லாம் முழுத் தகனப்பலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. 14 ஆனால் உன் கோத்திரங்களுள் ஒன்றில், ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் மட்டுமே, உன் முழுத் தகனப்பலிகளை இட்டு, நான் உனக்குக் கட்டளையிடுகிற யாவையும் அங்கே செய்வாய். 15 விருந்தாடுவதற்கு இறைச்சி உண்ண விரும்புவாயாயின், கடவுளாகிய உன் ஆண்டவர் உன் நகரங்களில் உனக்கு அருளியிருக்கும் ஆசீரின்படி நீ அடித்து உண்ணலாம். அந்த மிருகவுயிர் மாசுள்ளதாய் அல்லது ஊனமானதாயிருந்து தீட்டுப்பட்டதானாலும் சரி, பழுதற்ற அங்க நிறைவுள்ள தீட்டில்லா மிருகமானாலும் சரி, காட்டாட்டையும் கலைமானையும் உண்பதுபோல் அதை உண்ணலாம். 16 இரத்தத்தை மட்டும் உண்ண வேண்டாம். அதைத் தண்ணீரைப்போலத் தரையில் ஊற்றிவிடக்கடவாய். 17 உன் தானியத்திலும் கொடிமுந்திரிப் பழச்சாற்றிலும் எண்ணெயிலும் கொடுக்க வேண்டிய பத்திலொரு பாகத்தையும், ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நேர்ந்து கொள்ளும் எல்லா நேர்ச்சிகளையும், மனமொத்த காணிக்கைகளையும், உன் கைகளின் புதுப்பலன்களையும் நீ உன் நகரங்களில் உண்ணாமல், 18 உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொண்டிருக்கும் இடத்தில் நீயும், உன் புதல்வனும் புதல்வியும், வேலைக்காரன் வேலைக்காரியும், நகரங்களிலிருக்கிற லேவியனும் உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் அவற்றை உண்டு, நீ கையால் செய்யும் எல்லாவற்றைப் பற்றியும் உன் கடவுளாகிய ஆண்டவரின் பார்வையிலே மகிழ்ச்சி கொள்வாய். 19 நீ மண்ணில் வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. 20 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு வாக்களித்தபடி உன் எல்லைகளை விரிவாக்கிய பின்னர், உன் மன விருப்பப்படி நீ இறைச்சியை உண்ண விரும்பும்போது, 21 உன் கடவுளாகிய ஆண்டவர் தமது பெயர் விளங்கும்படி தேர்ந்துகொண்ட இடம் உனக்கு மிகத்தூரமாயிருந்தால், நான் உனக்குக் கற்பித்தவாறு உனக்குள்ள ஆடு மாடு முதலியவற்றில் எதையேனும் நீ அடித்து உன் நகரங்களிலேயே உன் விருப்பப்படி உண்ணலாம். 22 காட்டு வெள்ளாட்டையும் கலைமானையும் உண்பதுபோல நீ அதனை உண்ணலாம். தீட்டுப் பட்டவனும் தீட்டுப்படாதவனும் சேர்ந்து அதை உண்ணலாம். 23 இரத்தத்தை மட்டும் உண்ணாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு. ஏனென்றால், மிருகவுயிரில் இரத்தம் உயிர்க்குப் பதிலாக இருப்பதனால், இறைச்சியோடு இரத்தத்தையும் உண்ணலாகாது. 24 ஆதலால், அதை நீ தண்ணீரைப் போலத் தரையில் ஊற்றக்கடவாய். 25 நீ ஆண்டவருடைய முன்னிலையில் செம்மையானதைச் செய்வாயாகில், நீயும் உனக்குப் பின்வரும் பிள்ளைகளும் நன்றாய் இருப்பீர்கள். 26 நீ ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்த பொருட்களையும், நேர்ந்து கொண்ட நேர்ச்சிகளையும், ஆண்டவர் தேர்ந்துகொண்ட இடத்திற்குக் கொண்டுவந்து, 27 உன் காணிக்கைகளாகிய இறைச்சியையும் இரத்தத்தையும் உன் கடவுளாகிய ஆண்டவருடைய பலிபீடத்தின்மீது ஒப்புக்கொடுத்து பலிப்பிராணிகளின் இரத்தத்தைப் பீடத்தின்மேல் ஊற்றிவிட்டபின் இறைச்சியை உண்பாய். 28 நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய பார்வைக்கு நலமும் விருப்பமுமானதைச் செய்திருப்பதனால் உனக்கும், உனக்குப்பின் வரும் உன் புதல்வருக்கும் எப்போதும் நன்றாயிருக்கும்பொருட்டு, இன்று உனக்கு நான் கற்பிக்கின்ற எல்லாவற்றையும் உற்றுக் கேட்டு அனுசரிக்கக்கடவாய். 29 உரிமையாக்கிக் கொள்ளும்படி நீ புகவிருக்கிற நாட்டு மக்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உன் கண்களுக்குமுன் அழித்து விடும் போதும், நீ அவர்களுடைய நாட்டைப் பிடித்து அதிலே குடியேறியிருக்கும் போதும், 30 அம்மக்கள் உன் வருகையால்தானே அழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து நீ அவர்களைப் போல நடக்காதபடிக்கும்; அவர்கள் தங்கள் தேவர்களுக்குப் பணிவிடை செய்ததுபோல் நானும் செய்வேன் என்று சொல்லி அவர்களுடைய சமயச் சடங்குகள் எப்படிப் பட்டவை என்று விசாரிக்காதபடிக்கும் எச்சரிக்கையாய் இருக்கக்கடவாய். 31 அப்படிப் பட்ட சடங்குகளைச் செய்து நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஆராதனையில் உபயோகிக்காதே. ஏனென்றால், ஆண்டவருக்கு வெறுப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் புதல்வர்களையும் புதல்வியர்களையும் படைத்து நெருப்பிலே அவர்களைச் சுட்டெரித்தார்கள். 32 நான் உனக்கு விதிக்கிற யாவையும் நீ ஆண்டவருக்காக செய். அதிலே கூட்டவேண்டியதோ குறைக்கவேண்டியதோ ஒன்றுமில்லை.
மொத்தம் 34 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References