தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உபாகமம்
1. இஸ்ராயேலர் யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்திலே பாலைவனத்தில் செங்கடலை நோக்கும் ஒரு சமவெளியில், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும், மிகுதியான பொன்விளையும் அசெரோட்டுக்கும் நடுப்புறத்திலுள்ள ஓர் இடத்தில் இருக்கும் போது, மோயீசன் அவர்களுடைய முழுச் சபையையும் நோக்கிப் பேசிய வார்த்தைகள் பின்வருமாறு.
2. மேற்படி இடம் காதேஸ் பார்னேயிலிருந்து செயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் போகிறவர்களுக்குப் பதினோரு நாள் பயணத் தொலைவில் இருக்கிறது.
3. அப்பொழுது ( பாலைவனப் பயணத்தின் ) நாற்பதாம் ஆண்டு, பதினோராம் மாதம், முதல் நாள். அந்நாளில் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களிடம் சொல்லுமாறு தனக்குக் கட்டளையிட்ட வார்த்தைகளை மோயீசன் சொல்லலானார்.
4. அதற்குமுன் அவர் எசெபோனில் குடியிருந்த அமோறையருடைய அரசனாகிய செகோனையும், அசெரோட்டிலும் எதிராயிலும் வாழ்ந்துவந்த பாசானின் அரசனாகிய ஓகையையும் முறியடித்திருந்தார்.
5. யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்தில் மோவாப் நாட்டில் அது நடந்தது. மோயீசன் (ஆண்டவருடைய) நியாய விதிகளை மக்களுக்குத் தெளிவித்துக் காட்டத் தொடங்கினார். எப்படியென்றால்:
6. ஓரேபில் நம்முடைய கடவுள் திருவுளம்பற்றினதாவது: நீங்கள் இந்த மலையருகில் இருந்தது போதும்.
7. நீங்கள் புறப்பட்டு அமோறையர் மலையையும் அதைச் சுற்றிலுமிருக்கிற மற்ற இடங்களையும், தென் புறமாயுள்ள சமவெளியையும் மலைக்கணவாய்களையும், கடற்கரையோரமாய்க் கானான், லாபான் நாடுகளையும், யூப்பிராத்து என்ற பெரிய நதியையும் சென்றடைவீர்கள்.
8. இதோ ( அவற்றை ) உங்கள் உடைமையாக்கினோம். நீங்கள் போய், ஆண்டவர் உங்கள் மூதாதையராகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோப்புக்கும், அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பதாக ஆணையிட்டுச் சொன்னாரே, அந்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.
9. அக்காலத்தில் நான் உங்களை நோக்கி:
10. நான் ஒருவனாய் உங்கள் பாரத்தைத் தாங்கக் கூடாதவனாய் இருக்கிறேன். ஏனென்றால், உங்கள் கடவுள் உங்களைப் பெருகச் செய்தார். நீங்கள் இப்பொழுது விண்மீன்களைப்போல் அளவற்றுப் பெருகி இருக்கிறீர்கள்.
11. உங்கள் தந்தையரின் கடவுளாகிய ஆண்டவர் நீங்கள் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் உங்களை இன்னும் ஆயிர மடங்காகும்படி செய்து, தாம் சொல்லிய வார்த்தையின்படியே உங்களுக்கு ஆசீர் அளிப்பாராக.
12. உங்கள் குறைகளையும் துன்பங்களையும் வழக்குகளையும் நான் ஒருவனாகத் தாங்குவது இயலாத காரியம்.
13. ஆதலால், உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் நன்னடத்தையுமுள்ள ஆடவர்களை நீங்கள் தெரிந்து கொண்டால் நான் அவர்களை உங்களுக்குத் தலைவர்களாக ஏற்படுத்துவேன் என்று நான் உங்களுக்குச் சொல்ல, நீங்கள் மறுமொழியாக:
14. தாங்கள் செய்யக் கருதினது நல்லது என்று எனக்குச் சொன்னீர்கள்.
15. ஆதலால், நான் உங்கள் கோத்திரங்களில் ஞானமும் மதிப்பும் பொருந்திய ஆடவர்களைத் தெரிந்துகொண்டு உங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கும் பொருட்டு அவர்களைத் தலைவர்களாகவும் ஆயிரவர்க்கும் ஐந்நூற்றுவர்க்கும் நூற்றுவர்க்கும் ஐம்பதின்மர்க்கும் தலைவராகவும் ஏற்படுத்தி வைத்தேன்.
16. பிறகு நான் அவர்களை நோக்கி: மக்களுடைய வழக்குகளைக் கேட்டு, அவர்கள் சகோதரரானாலும் அந்நியரானாலும், நீதிப்படி தீர்ப்புச் சொல்லுங்கள்.
17. நீதியிலே ஒருதலைச் சார்பில்லாமல், பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரியாகச் செவி கொடுப்பீர்கள். நடுநிலை தவறவே கூடாது. அதுவே இறை நீதி. உங்களுக்குக் கடினமாய்த் தோன்றும் காரியத்தை என்னிடம் கொண்டுவாருங்கள். நான் அதைக் கேட்டுத் தீர்ப்புச் சொல்வேன் என்று கட்டளையிட்டேன்.
18. நீங்கள் செய்ய வேண்டியன எல்லாவற்றையும் கட்டளையிட்டேன்.
19. அதன்பின், நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கட்டளையிட்டிருந்தபடி நாம் ஓரேபை விட்டுப் புறப்பட்டு, நீங்கள் கண்ட பயங்கரமான பெரும் பரப்புள்ள பாலையைக் கடந்து, அமோறையரின் மலை வழியாய்ச் சென்று காதேசுக்கு வந்துசேர்ந்தோம்.
20. அப்பொழுது, நான் உங்களை நோக்கி: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கிற அமோறையரின் மலைநாடு வரையிலும் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள்.
21. இதோ உன் கடவுள் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டைப் பார். நம் கடவுளாகிய ஆண்டவர் உன் மூதாதையருக்கு வாக்களித்தபடி நீ போய் அதை உரிமையாக்கிக்கொள். அஞ்சவும் வேண்டாம், கலங்கவும் வேண்டாம் என்றேன்.
22. அப்பொழுது நீங்கள் என்னிடம் வந்து: அந்த நாட்டை ஆராய்ந்து பார்க்கவும், நாம் எவ்வழியாகச் சென்று எந்தெந்த நகரங்களுக்குப் போகலாமென்று சொல்லவும், தக்கவர்களான மனிதர்களை அனுப்புவது நலம் என்றீர்கள்.
23. நான் ( உங்கள் ) சொல்லை ஏற்றுக்கொண்டு, உங்கள் கோத்திரங்களுக்கு ஒவ்வொருவராகப் பன்னிரண்டு மனிதர்களை அனுப்பினேன்.
24. அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறிக் கொடிமுந்திரிப் பழப் பள்ளத்தாக்கு வரையிலும் போய் நாட்டை நன்றாகப் பார்த்ததுமல்லாமல்,
25. நாட்டின் செழுமைக்கு அடையாளமாக அதன் பழங்களில் சிலவற்றை எடுத்து நம்மிடம் கொண்டுவந்து: நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கொடுக்கவிருக்கும் நாடு நல்ல நாடு என்று சொன்னார்கள்.
26. நீங்களோ: போகமாட்டோம் என்று நம் கடவுளின் வார்த்தையை நம்பாதவர்களாய்,
27. உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தீர்கள். ஆண்டவர் நம்மை வெறுத்திருக்கிறார். ஆகையால், அவர் அமோறையர் கையில் நம்மை ஒப்புவித்து நம்மை அழித்துவிடுவதற்காகவே, எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.
28. நாம் போவது எவ்வாறு ? அந்த மக்கள் கணக்கில்லாதவர்களும் நம்மைவிட நெட்டையர்களுமாவர் என்றும், அவர்களுடைய நகரங்கள் பெரியவைகளும் வானளாவிய கோபுரங்கள் கொண்டவைகளுமாய் இருக்கின்றன என்றும், அவ்விடத்தில் ஏனோக்கின் புதல்வர்களையும் கண்டோம் என்றும், போய்ப் பார்த்தவர்கள் சொல்லி அச்சுறுத்தினார்களே என்று சொன்னீர்கள்.
29. அதைக்கேட்ட நான்: அஞ்சாதீர்கள்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.
30. உங்களை நடத்துகின்ற கடவுளாகிய ஆண்டவர் உங்களை ஆதரித்து, எகிப்து நாட்டிலே உங்கள் கண்களுக்கு முன்பாக அவர் எப்படி உங்களோடிருந்து போர்புரிந்தாரோ, அப்படியே செய்வார்.
31. பாலைவனத்தில் அவர் செய்ததும் உங்களுக்குத் தெரியுமன்றோ ? ஒரு மனிதன் தன் குழந்தையை ஏந்திக் கொள்வதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் ( உங்களைப் பேணி ) நீங்கள் இவ்விடம் வந்து சேரும்வரையில் நடந்துவந்த வழிதோறும் உங்களை ஏந்திக்கொண்டாரன்றோ ?
32. ஆனால் நீங்கள் அப்பொழுதுமுதலாய்,
33. உங்களுக்கு முன் வழியைத் திறந்து நீங்கள் பாளையம் இறங்கவேண்டிய இடத்தை அளந்து கொடுத்தவரும், உங்கள் வழிகாட்டியாக இரவில் நெருப்புத்தூணிலும் பகலில் மேகத்தூணிலும் உங்களுக்கு முன்சென்றவரும் உங்கள் கடவுளுமாகிய ஆண்டவரை நம்பினீர்களோ ? இல்லை.
34. ஆகையால், ஆண்டவர் உங்கள் வார்த்தைகளின் குரலைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்டு:
35. உங்கள் மூதாதையருக்குக் கொடுப்போமென்று நாம் ஆணையிட்டுச் சொல்லிய அந்த நல்ல நாட்டை இந்தக் கெட்ட மக்களில் ஒருவனும் காணப்போவதில்லை என்றும்;
36. ஜெப்போனேயின் புதல்வனாகிய காலேப் ஆண்டவரைப் பின்பற்றி நடந்தான்; ஆதலால், அவன் அதைக் காண்பான் என்றும்; அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் அவன் மிதித்து வந்த நாட்டைத் தருவோம் என்றும் சொன்னார்.
37. அவர் இப்படி ( மக்கள்மீது ) கோபம் கொண்டதில் வியப்பு என்ன ? உங்கள் பொருட்டு அவர் என்மேலும் கோபம் கொண்டு: நீயும் அதில் புகுவதில்லை.
38. ஆனால், உன் ஊழியனாய் இருக்கிற நூனின் புதல்னாகிய யோசுவா அதில் உனக்குப் பதிலாய்ப் புகுவான். அவனுக்கு நீ அறிவுரை சொல்லி அவனைத் திடப்படுத்து. ஏனென்றால், அவனே திருவுளச் சீட்டுப்போட்டு அதை இஸ்ராயேலுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான்.
39. சிறையாய்க் கொண்டுபோகப்படுவார்களென்று நீங்கள் சொன்ன உங்கள் சிறுவர்களும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத ( உங்கள் ) பிள்ளைகளும், அந்நாட்டில் புகுவார்கள். அவர்களுக்கே அதைக் கொடுப்போம். அவர்கள் அதை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
40. நீங்களோ திரும்பிச் சென்று, செங்கடல் வழியாய்ப் பாலைவனத்திற்குப் புறப்பட்டுச் செல்லுங்கள் என்றருளினார் என்றேன்.
41. அப்பொழுது நீங்கள் என்னை நோக்கி: நாங்கள் ஆண்டவருக்குத் துரோகம் செய்தோம். நம் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி இதோ போய்ப் போர் புரிவோம் எனப் பதில் கூறினீர்கள். ஆயுதம் தாங்கியவர்களாய் மலைமேல் ஏறத் தயாராய் இருக்கையில், ஆண்டவர் என்னை நோக்கி:
42. நீங்கள் உங்கள் பகைவர் முன்பாக முறிந்துபோவீர்கள். ஆதலால், நீங்கள் போகவும் போர்புரியவும் வேண்டாம். நாம் உங்கள் நடுவே இருக்கமாட்டோம் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
43. நான் அப்படியே உங்களுக்குச் சொன்னேன். ஆனால், நீங்கள் செவிகொடாமல் ஆண்டவருடைய கட்டளையை மீறி, செருக்குற்றோராய் மலைமேல் ஏறத்துணிந்தமையால்,
44. அந்த மலைகளில் குடியிருந்த அமோறையர் உங்களை எதிர்க்கப் புறப்பட்டு வந்து, தேனீக்கள் துரத்துவதுபோல உங்களைத் துரத்தி, செயீர் தொடங்கி ஓர்மாவரையிலும் உங்களை முறியடித்தார்கள்.
45. அப்பொழுது நீங்கள் திரும்பி வந்து ஆண்டவருடைய முன்னிலையிலே அழுதபோது, அவர் உங்களுக்குச் செவிகொடுக்கவுமில்லை; உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவுமில்லை.
46. ஆகையால் நீங்கள் காதேஸ் பர்னேயில் நீண்ட நாட்கள் தங்கினீர்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 34 Chapters, Current Chapter 1 of Total Chapters 34
உபாகமம் 1:22

×

Alert

×

tamil Letters Keypad References