தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
தானியேல்
1. "அக்காலத்தில், உன் இனத்தார்க்குக் காவலராக சேனைத் தலைவரான மிக்கேல் எழும்புவார்; மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்; அக்காலத்தில் உன் இனத்தார் தப்பித்துக் கொள்வர்: யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள்.
2. இறந்து போய் மண்ணில் உறங்குகிற பலருள் சிலர் முடிவில்லா வாழ்வடைவதற்கும், சிலர் முடிவில்லா இழிவுக்கும் நிந்தைக்கும் ஆளாவதற்கும் எழுந்திருப்பார்கள்.
3. ஞானிகள் வானத்தின் ஒளியைப் போலும், பலரை நல்வழியில் திருப்பியவர்கள் விண்மீன்களைப் போலவும் என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் பட்டொளி வீசுவார்கள்.
4. தானியேலே, நீ குறித்த காலம்வரை இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த நூலை முத்திரையிட்டு வை; பலர் அதைப் படிப்பார்கள்; அறிவு பெருகும்."
5. அப்போது தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும், அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைக் கண்டேன்.
6. அப்போது நான், மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்றுத் தண்ணிரின் மேல் நின்ற அந்த மனிதரை நோக்கி, "இந்த விந்தைகள் எப்போது முடிவுக்கு வரும்" என்று கேட்டேன்.
7. அப்போது மெல்லிய பட்டாடை உடுத்தி, ஆற்றின் தண்ணீர் மேல் நின்ற அந்த மனிதர் தம் வலக்கையையும் இடக்கையையும் வானத்துக்கு நேராகத் தூக்கி, "ஒரு காலமும் இரு காலமும் அரைக் காலமும் செல்லும்; பரிசுத்த மக்களின் கூட்டம் சிதறடிக்கப்பட்டு முடிவுறும் போது இவை யாவும் நிறைவேறும்" என்று என்றென்றும் வாழ்கிறவர் பேரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன்.
8. நான் அதைக் கேட்டும் அதன் பொருளை அறியவில்லை; அப்பொழுது அவரைப் பார்த்து, "ஐயா, இவற்றுக்குப் பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டேன்.
9. அதற்கு அவர், "தானியேலே, நீ போகலாம்; குறிக்கப்பட்ட நாள்வரையில் இந்த வார்த்தைகள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும்.
10. பலர் தேர்ந்து கொள்ளப்பட்டு வெண்மையாக்கப்படுவர்; நெருப்பிலிட்டாற் போல்ப் புடம்போடப்படுவர்; தீயவர்கள் தீய நெறியில் நடப்பார்கள்; அவர்கள் அதை உணரவு மாட்டார்கள்; ஆனால் ஞானிகள் உணர்வார்கள்
11. அன்றாடப்பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நாட்டி வைக்கப்படும் காலமுதல், ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணுறு நாள் செல்லும்;
12. ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் வரை காத்திருப்பவனே பேறு பெற்றவன்.
13. ஆனால் முடிவு வரும் வரை நீ போய் இரு; ஒருநாள் இளைப்பாற்றி அடைவாய். காலம் முடியும் போது, உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள எழுவாய்" என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 12 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
தானியேல் 12:27
1 "அக்காலத்தில், உன் இனத்தார்க்குக் காவலராக சேனைத் தலைவரான மிக்கேல் எழும்புவார்; மக்களினம் தோன்றியது முதல் அக்காலம் வரை இருந்திராத துன்ப காலம் வரும்; அக்காலத்தில் உன் இனத்தார் தப்பித்துக் கொள்வர்: யார் யார் பெயர் நூலில் எழுதப்பட்டள்ளதோ அவர்கள் அனைவரும் மீட்கப்படுவார்கள். 2 இறந்து போய் மண்ணில் உறங்குகிற பலருள் சிலர் முடிவில்லா வாழ்வடைவதற்கும், சிலர் முடிவில்லா இழிவுக்கும் நிந்தைக்கும் ஆளாவதற்கும் எழுந்திருப்பார்கள். 3 ஞானிகள் வானத்தின் ஒளியைப் போலும், பலரை நல்வழியில் திருப்பியவர்கள் விண்மீன்களைப் போலவும் என்றென்றும் முடிவில்லாக் காலத்திற்கும் பட்டொளி வீசுவார்கள். 4 தானியேலே, நீ குறித்த காலம்வரை இந்த வார்த்தைகளை மூடி வைத்து இந்த நூலை முத்திரையிட்டு வை; பலர் அதைப் படிப்பார்கள்; அறிவு பெருகும்." 5 அப்போது தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவரும், அக்கரையில் ஒருவருமாக இருவர் நிற்பதைக் கண்டேன். 6 அப்போது நான், மெல்லிய பட்டாடை உடுத்தி ஆற்றுத் தண்ணிரின் மேல் நின்ற அந்த மனிதரை நோக்கி, "இந்த விந்தைகள் எப்போது முடிவுக்கு வரும்" என்று கேட்டேன். 7 அப்போது மெல்லிய பட்டாடை உடுத்தி, ஆற்றின் தண்ணீர் மேல் நின்ற அந்த மனிதர் தம் வலக்கையையும் இடக்கையையும் வானத்துக்கு நேராகத் தூக்கி, "ஒரு காலமும் இரு காலமும் அரைக் காலமும் செல்லும்; பரிசுத்த மக்களின் கூட்டம் சிதறடிக்கப்பட்டு முடிவுறும் போது இவை யாவும் நிறைவேறும்" என்று என்றென்றும் வாழ்கிறவர் பேரால் ஆணையிட்டுக் கூறியதைக் கேட்டேன். 8 நான் அதைக் கேட்டும் அதன் பொருளை அறியவில்லை; அப்பொழுது அவரைப் பார்த்து, "ஐயா, இவற்றுக்குப் பிறகு என்ன நடக்கும்?" என்று கேட்டேன். 9 அதற்கு அவர், "தானியேலே, நீ போகலாம்; குறிக்கப்பட்ட நாள்வரையில் இந்த வார்த்தைகள் மறைக்கப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்கும். 10 பலர் தேர்ந்து கொள்ளப்பட்டு வெண்மையாக்கப்படுவர்; நெருப்பிலிட்டாற் போல்ப் புடம்போடப்படுவர்; தீயவர்கள் தீய நெறியில் நடப்பார்கள்; அவர்கள் அதை உணரவு மாட்டார்கள்; ஆனால் ஞானிகள் உணர்வார்கள் 11 அன்றாடப்பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நாட்டி வைக்கப்படும் காலமுதல், ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணுறு நாள் செல்லும்; 12 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் வரை காத்திருப்பவனே பேறு பெற்றவன். 13 ஆனால் முடிவு வரும் வரை நீ போய் இரு; ஒருநாள் இளைப்பாற்றி அடைவாய். காலம் முடியும் போது, உனக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ள எழுவாய்" என்றார்.
மொத்தம் 12 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References