தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
ஆமோஸ்
1. இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, கனிந்த பழங்களுள்ள கூடையொன்று கண்டேன்.
2. அவர், "ஆமோசே, என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்; நான், "கனிந்த பழங்களுள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: "நம் மக்களாகிய இஸ்ராயேல் மீது முடிவு வந்து விட்டது, இனி அவர்களை ஒருபோதும் மன்னியோம்.
3. அந்நாளில் கோயில் பாடல்கள் புலம்பல்களாய் மாறும், திரளான மக்கள் மாண்டு கிடப்பார்கள், கண்ட கண்ட இடங்களில் அவை எறியப்படும், எங்கும் மயான அமைதி! " என்கிறார் இறைவனாகிய ஆண்டவர்.
4. எளியவர்களை நசுக்கி, நாட்டில் உள்ள ஏழைகளை ஒழிக்கத் தேடுகிறவர்களே, இதைக் கேளுங்கள்:
5. நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? முடிந்தால், கோதுமையை நல்ல விலைக்கு விற்கலாம், படியைச் சிறிதாக்கி, ஷூக்கெல் நிறையை உயர்த்தி கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்;
6. பணத்துக்கு ஏழைகளையும், ஒரு சோடி செருப்புக்கு எளியவர்களையும் வாங்கலாம், கோதுமைப் பதர்களையும் விற்கலாம்" என்றெல்லாம் நீங்கள் ஏங்குகிறீர்கள்.
7. ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: "அவர்களுடைய இந்தச் செயல்களில் ஒன்றையேனும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
8. இதனாலன்றோ நிலம் நடுங்குகிறது? இதில் வாழ்பவர் யாவரும் புலம்புகின்றனர்? நிலம் முழுவதும் நைல் நதியின் வெள்ளம் போலப் பொங்கி, எகிப்து நாட்டு நைல் நதி போல் அலை மோதி அடங்குகிறது?
9. இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "அந்நாளில், நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப் பகலிலே நாம் பூமியை இருள் சூழச் செய்வோம்.
10. உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களையெல்லாம் புலம்பல்களாகவும் மாற்றுவோம்; ஒவ்வொருவனையும் இடையில் கோணியுடுத்தவும், ஒவ்வொரு தலையும் மழிக்கப்படவும் செய்வோம். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்துப் புலம்புவது போலப் புலம்பச் செய்வோம்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்.
11. இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது நாட்டில் பஞ்சம் அனுப்புவோம்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்காதிருக்கும் பஞ்சமே அது.
12. ஒரு கடல் முதல் இன்னொரு கடல் வரைக்கும் வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடியலைந்து அங்குமிங்கும் தள்ளாடி ஆண்டவரின் வார்த்தையைத் தேடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைக் கண்டடைய மாட்டார்கள்.
13. அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள்.
14. சமாரியா நாட்டு அஷீமா தெய்வத்தின் பேரால் ஆணையிட்டு, ' தாண் நாடே, உன் கடவுளின் உயிர் மேல் ஆணை!' என்றும், 'பெயேர்ஷூபாவே, உன் அன்பரின் உயிர் மேல் ஆணை!' என்றும் சொல்லுகிறவர்கள் (மாண்டு) வீழ்வார்கள், வீழ்ந்தவர்கள் எழவே மாட்டார்கள்."

பதிவுகள்

மொத்தம் 9 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 9
1 2 3 4 5 6 7 8 9
1 இறைவனாகிய ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே: இதோ, கனிந்த பழங்களுள்ள கூடையொன்று கண்டேன். 2 அவர், "ஆமோசே, என்ன காண்கிறாய்?" என்று கேட்டார்; நான், "கனிந்த பழங்களுள்ள கூடை" என்றேன். ஆண்டவர் என்னிடம் தொடர்ந்து பேசினார்: "நம் மக்களாகிய இஸ்ராயேல் மீது முடிவு வந்து விட்டது, இனி அவர்களை ஒருபோதும் மன்னியோம். 3 அந்நாளில் கோயில் பாடல்கள் புலம்பல்களாய் மாறும், திரளான மக்கள் மாண்டு கிடப்பார்கள், கண்ட கண்ட இடங்களில் அவை எறியப்படும், எங்கும் மயான அமைதி! " என்கிறார் இறைவனாகிய ஆண்டவர். 4 எளியவர்களை நசுக்கி, நாட்டில் உள்ள ஏழைகளை ஒழிக்கத் தேடுகிறவர்களே, இதைக் கேளுங்கள்: 5 நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? முடிந்தால், கோதுமையை நல்ல விலைக்கு விற்கலாம், படியைச் சிறிதாக்கி, ஷூக்கெல் நிறையை உயர்த்தி கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; 6 பணத்துக்கு ஏழைகளையும், ஒரு சோடி செருப்புக்கு எளியவர்களையும் வாங்கலாம், கோதுமைப் பதர்களையும் விற்கலாம்" என்றெல்லாம் நீங்கள் ஏங்குகிறீர்கள். 7 ஆண்டவர் யாக்கோபின் பெருமை மீது ஆணையிட்டுக் கூறுகிறார்: "அவர்களுடைய இந்தச் செயல்களில் ஒன்றையேனும் நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். 8 இதனாலன்றோ நிலம் நடுங்குகிறது? இதில் வாழ்பவர் யாவரும் புலம்புகின்றனர்? நிலம் முழுவதும் நைல் நதியின் வெள்ளம் போலப் பொங்கி, எகிப்து நாட்டு நைல் நதி போல் அலை மோதி அடங்குகிறது? 9 இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "அந்நாளில், நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப் பகலிலே நாம் பூமியை இருள் சூழச் செய்வோம். 10 உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களையெல்லாம் புலம்பல்களாகவும் மாற்றுவோம்; ஒவ்வொருவனையும் இடையில் கோணியுடுத்தவும், ஒவ்வொரு தலையும் மழிக்கப்படவும் செய்வோம். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்துப் புலம்புவது போலப் புலம்பச் செய்வோம்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும். 11 இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: "இதோ நாட்கள் வருகின்றன; அப்போது நாட்டில் பஞ்சம் அனுப்புவோம்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று, ஆண்டவரின் வார்த்தையைக் கேட்காதிருக்கும் பஞ்சமே அது. 12 ஒரு கடல் முதல் இன்னொரு கடல் வரைக்கும் வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடியலைந்து அங்குமிங்கும் தள்ளாடி ஆண்டவரின் வார்த்தையைத் தேடுவார்கள்; ஆனால் அவர்கள் அதைக் கண்டடைய மாட்டார்கள். 13 அந்நாளில் அழகிய கன்னிப் பெண்களும் இளைஞர்களும் நீர் வேட்கையால் சோர்ந்து வீழ்வார்கள். 14 சமாரியா நாட்டு அஷீமா தெய்வத்தின் பேரால் ஆணையிட்டு, ' தாண் நாடே, உன் கடவுளின் உயிர் மேல் ஆணை!' என்றும், 'பெயேர்ஷூபாவே, உன் அன்பரின் உயிர் மேல் ஆணை!' என்றும் சொல்லுகிறவர்கள் (மாண்டு) வீழ்வார்கள், வீழ்ந்தவர்கள் எழவே மாட்டார்கள்."
மொத்தம் 9 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 8 / 9
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Tamil Letters Keypad References