தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
அப்போஸ்தலர்கள்
1. அந்நாளில், சீடர்களின் தொகை பெருகவே, அவர்களிடையே கிரேக்கமொழி பேசுவோர், நாள்தோறும் நிகழும் அறப்பணியில், தங்கள் கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லையென எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முறையிட்டனர்.
2. எனவே, பன்னிருவரும் சீடர்களை ஒன்றாகக் கூட்டி, "பந்தியில் பணிவிடை செய்வதற்காகக் கடவுளின் வார்த்தையைப் போதியாமல் விடுவது முறையன்று.
3. ஆதலால் சகோதரரே உங்களிடையே நன்மதிப்புள்ளவர்களாய்த் தேவ ஆவியும் ஞானமும் நிரம்பப்பெற்ற எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை நாம் இப்பணிக்காக ஏற்படுத்துவோம்.
4. நாங்களோ செபத்திலும், தேவ வார்த்தையைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்போம்" என்றனர்.
5. இவ்வேற்பாடு அங்குக் கூடியிருந்த அனைவர்க்கும் ஏற்புடையதாய் இருந்தது. அப்போது அவர்கள் விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்து விளங்கிய முடியப்பரையும், பிலிப்பு, பிரொக்கோரு, நிக்கானோர், தீமோன், பர்மேனா, அந்தியோகிய நகரத்தினரும் யூத மதத்தைத் தழுவியவருமான நிக்கொலா இவர்களையும் தேர்ந்தெடுத்து அப்போஸ்தலர்முன் நிறுத்தினர்.
6. அப்போஸ்தலர்கள் செபம் செய்து, அவர்கள் மேல் கைகளை விரித்தனர்.
7. கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவிவந்தது. யெருசலேமில் சீடர்களின் தொகை மிகப் பெருகிற்று. யூத குருக்கள் பலரும் விசுவாசத்திற்குப் பணிந்தனர்.
8. முடியப்பர் அருளும் ஆற்றலும் நிறைந்தவராய் மக்களிடையே மாபெரும் அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்து வந்தார்.
9. அப்போது, உரிமை அடைந்தோரின் செபக் கூடத்தைச் சார்ந்த சிலரும், சிரேனே, அலெக்சந்திரியா நகரினர் சிலரும், சிலிசியா, ஆசியா நாட்டினர் சிலரும் முடியப்பரோடு தர்க்கம் செய்யக் கிளம்பினர்.
10. ஆனால் அவரது ஞானத்தையும் அவர் வழியாய்ப் பேசிய தேவ ஆவியையும் அவர்கள் எதிர்த்து நிற்க முடியவில்லை.
11. ஆதலால், "இவன் கடவுளுக்கும் மோயீசனுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் கூறியதைக் கேட்டோம்" என்று சொல்லச் சிலரைத் தூண்டிவிட்டனர்.
12. அப்படியே மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் ஏவினர். அவர்கள் உடனடியாகக் கிளம்பிப் போய் அவரைப் பிடித்து, தலைமைச் சங்கத்திற்கு இழுத்து வந்தனர்.
13. பொய்ச்சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினர். இச்சாட்சிகள், "இவன் புனித இடத்திற்கும் திருச்சட்டத்திற்கும் எதிராக ஓயாது பேசி வருகிறான்.
14. 'நாசரேத்தூர் இயேசு இவ்விடத்தை அழித்து விடுவார், மோயீசன் நமக்குக் காட்டிய முறைமைகளை மாற்றிவிடுவார்' என்று இவன் செல்லக் கேட்டோம்" என்றனர்.
15. சங்கத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் அவரை உற்று நோக்கியபோது, அவரது முகம் வானதூதரின் முகத்தைப் போல் இருப்பதைக் கண்டனர்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 28
1 அந்நாளில், சீடர்களின் தொகை பெருகவே, அவர்களிடையே கிரேக்கமொழி பேசுவோர், நாள்தோறும் நிகழும் அறப்பணியில், தங்கள் கைம்பெண்கள் கவனிக்கப்படவில்லையென எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முறையிட்டனர். 2 எனவே, பன்னிருவரும் சீடர்களை ஒன்றாகக் கூட்டி, "பந்தியில் பணிவிடை செய்வதற்காகக் கடவுளின் வார்த்தையைப் போதியாமல் விடுவது முறையன்று. 3 ஆதலால் சகோதரரே உங்களிடையே நன்மதிப்புள்ளவர்களாய்த் தேவ ஆவியும் ஞானமும் நிரம்பப்பெற்ற எழுவரைத் தேர்ந்தெடுங்கள். அவர்களை நாம் இப்பணிக்காக ஏற்படுத்துவோம். 4 நாங்களோ செபத்திலும், தேவ வார்த்தையைப் போதிக்கும் பணியிலும் ஈடுபட்டிருப்போம்" என்றனர். 5 இவ்வேற்பாடு அங்குக் கூடியிருந்த அனைவர்க்கும் ஏற்புடையதாய் இருந்தது. அப்போது அவர்கள் விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்து விளங்கிய முடியப்பரையும், பிலிப்பு, பிரொக்கோரு, நிக்கானோர், தீமோன், பர்மேனா, அந்தியோகிய நகரத்தினரும் யூத மதத்தைத் தழுவியவருமான நிக்கொலா இவர்களையும் தேர்ந்தெடுத்து அப்போஸ்தலர்முன் நிறுத்தினர். 6 அப்போஸ்தலர்கள் செபம் செய்து, அவர்கள் மேல் கைகளை விரித்தனர். 7 கடவுளின் வார்த்தை மேன்மேலும் பரவிவந்தது. யெருசலேமில் சீடர்களின் தொகை மிகப் பெருகிற்று. யூத குருக்கள் பலரும் விசுவாசத்திற்குப் பணிந்தனர். 8 முடியப்பர் அருளும் ஆற்றலும் நிறைந்தவராய் மக்களிடையே மாபெரும் அற்புதங்களையும் அருங்குறிகளையும் செய்து வந்தார். 9 அப்போது, உரிமை அடைந்தோரின் செபக் கூடத்தைச் சார்ந்த சிலரும், சிரேனே, அலெக்சந்திரியா நகரினர் சிலரும், சிலிசியா, ஆசியா நாட்டினர் சிலரும் முடியப்பரோடு தர்க்கம் செய்யக் கிளம்பினர். 10 ஆனால் அவரது ஞானத்தையும் அவர் வழியாய்ப் பேசிய தேவ ஆவியையும் அவர்கள் எதிர்த்து நிற்க முடியவில்லை. 11 ஆதலால், "இவன் கடவுளுக்கும் மோயீசனுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் கூறியதைக் கேட்டோம்" என்று சொல்லச் சிலரைத் தூண்டிவிட்டனர். 12 அப்படியே மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் ஏவினர். அவர்கள் உடனடியாகக் கிளம்பிப் போய் அவரைப் பிடித்து, தலைமைச் சங்கத்திற்கு இழுத்து வந்தனர். 13 பொய்ச்சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினர். இச்சாட்சிகள், "இவன் புனித இடத்திற்கும் திருச்சட்டத்திற்கும் எதிராக ஓயாது பேசி வருகிறான். 14 'நாசரேத்தூர் இயேசு இவ்விடத்தை அழித்து விடுவார், மோயீசன் நமக்குக் காட்டிய முறைமைகளை மாற்றிவிடுவார்' என்று இவன் செல்லக் கேட்டோம்" என்றனர். 15 சங்கத்தில் அமர்ந்திருந்தோர் அனைவரும் அவரை உற்று நோக்கியபோது, அவரது முகம் வானதூதரின் முகத்தைப் போல் இருப்பதைக் கண்டனர்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References