தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
அப்போஸ்தலர்கள்
1. அதன்பின் சின்னப்பர் ஏத்தென்ஸ் நகரைவிட்டுக் கொரிந்துவுக்கு வந்தார்.
2. அங்கு பொந்த்து நாட்டைச் சேர்ந்த ஆக்கிலா என்ற யூதன் ஒருவனையும், அவனுடைய மனைவி பிரிஸ்கிலாவையும் கண்டார். கிலவுதியு பேரரசன் யூதர் எல்லாரையும் உரோமையினின்று வெளியேறக் கட்டளையிட்டதால், அவர்கள் அண்மையில்தான் இத்தாலியாவிலிருந்து வந்திருந்தார்கள். சின்னப்பர் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்.
3. அவர்கள் கூடாரம் செய்பவர்கள். சின்னப்பரும் அதே தொழிலைச் செய்பவராதலால் அவர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார்.
4. ஓய்வு நாள்தோறும் செபக்கூடத்தில் விவாதித்து யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் விசுவாசமூட்ட முயன்றார்.
5. மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்த பின்னர், சின்னப்பர், தேவ வார்த்தையைப் போதிப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தார். ' இயேசுதான் மெசியா ' என்று யூதர்களிடம் வலியுறுத்திக் கூறுவார்.
6. ஆனால் அவர்கள் அதை எதிர்த்துப் பழித்தபோது, அவர் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, ' உங்கள் குற்றத்தின் விளைவு உங்கள் தலைமேல் விழட்டும். அது என் குற்றமில்லை.
7. இனி, நான் புற இனத்தாரிடம் போகிறேன்" என்றார். அவ்விடத்தை விட்டுவிட்டு, யூத மறையைத் தழுவிய தித்தியுயுஸ்து என்பவரின் வீட்டுக்குப் போனார். அவ்வீடு செபக்கூடத்தை அடுத்திருந்தது.
8. அந்தச் செபக்கூடத்தலைவன் கிறிஸ்பு, தன் குடும்பத்தார் அனைவருடன் ஆண்டவரில் விசுவாசம் கொண்டான். சின்னப்பர் கூறியதைக் கேட்ட கொரிந்தியர் பலரும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர்.
9. ஓரிரவு ஆண்டவர் சின்னப்பருக்குக் காட்சியில் தோன்றி, "அஞ்சாதே, போதித்துக் கொண்டேயிரு, நிறுத்திவிடாதே, நான் உன்னோடிருக்கிறேன்.
10. உனக்குத் தீங்கிழைக்க எவனும் எதிர்த்தெழமாட்டான். இந்நகரில் எனக்குரிய மக்கள் பலர் உள்ளனர்" என்றார்.
11. எனவே, சின்னப்பர் தேவவார்த்தையை மக்களுக்குப் போதித்துக்கொண்டு ஓராண்டு ஆறுமாதம் அங்கே தங்கியிருந்தார். நீதி மன்றத்தில் சின்னப்பர்
12. ஆனால் கல்லியோன் என்பவன் அகாயாப் பகுதியில் ஆளுநனாக இருக்கையில், யூதர்கள் சின்னப்பருக்கு எதிராக ஒருமிக்க எழுந்து,
13. "சட்டத்துக்கு முரணான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களை இவன் தூண்டிவிடுகிறான்" என்று அவரை நீதிமன்றத்திற்கு இழுத்துவந்தனர்.
14. சின்னப்பர் பேச வாயெடுக்குமுன், கல்லியோன் யூதர்களைப் பார்த்து, "யூதர்களே, இதில் ஏதாவது அநீதியோ, அக்கிரமமோ இருந்திருக்குமானால், நான் முறைப்படி விசாரித்திருப்பேன்.
15. ஆனால், இதெல்லாம் வெறும் சொற்களையும் பெயர்களையும் உங்கள் சட்டத்தையும் பற்றிய பூசல்தான். ஆதலின் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நடுவனாயிருக்க எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லி,
16. அவர்களை நீதிமன்றத்திலிருந்து துரத்திவிட்டான்.
17. அவர்கள் அனைவரும் செபக்கூடத் தலைவனான சொஸ்தேனேயைப் பிடித்து மன்றத்திற்கு எதிரே அடித்தனர். ஆனால், கல்லியோன் இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
18. சின்னப்பர் இன்னும் பல நாட்கள் கொரிந்து நகரில் தங்கினார். பின்பு, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சீரிய நாட்டுக்குக் கப்பல் ஏறினார். பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவருடன் சென்றனர். தாம் செய்திருந்த பொருத்தனையின்படி, கெங்கிரைத் துறையில் அவர் முடிவெட்டிக்கொண்டார்.
19. எபேசு நகரை அடைந்ததும் அவர்களை அங்குவிட்டுப் பிரிந்து, செபக்கூடத்திற்குப் போய் யூதர்களுடன் விவாதித்தார்.
20. இன்னும் சிறிதுகாலம் தங்களுடன் தங்கவேண்டுமென்று அவர்கள் அவரை வேண்டினர். ஆனால் அதற்கு அவர் இணங்காமல் "கடவுளுக்கு விருப்பமானால் மீண்டும் உங்களிடம் வருவேன்" என்று சொல்லி, விடைபெற்று, எபேசு நகரிலிருந்து புறப்பட்டார்.
21. அவர் செசரியாவில் இறங்கி யெருசலேமுக்குச் சென்றார்.
22. அங்குள்ள சபையினரைப் பார்த்துவிட்டு அந்தியோகியா திரும்பினார்.
23. அந்நகரில் சிறிது காலம் தங்கிய பின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிசியா ஆகிய நாடுகளெங்கும் சுற்றி, சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்.
24. அலெக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ என்ற யூதர் ஒருவர் எபேசுக்கு வந்திருந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர். மறைநூல் வல்லுநர்.
25. ஆண்டவரது அருள்நெறியைக் கற்றறிந்த ஆர்வமிக்க உள்ளத்துடன் இயேசுவைப் பற்றிய செய்திகளைப் பிழையறப் போதித்து வந்தார். ஆனால், அருளப்பரின் ஞானஸ்நானம் மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது.
26. அவர் செபக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போய், கடவுளின் அருள்நெறியை அவருக்குத் திட்டவட்டமாய் விளக்கினர்.
27. அவர் அகாயாவிற்குப் போகவிரும்பவே, சகோதரர் அவரை ஊக்குவித்து, வரவேற்கும்படி சீடர்களுக்கு எழுதினர். அவர் அங்குச் சேர்ந்தபொழுது விசுவாசத்தின் அருளைப் பெற்றவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தார்.
28. இயேசுவை மெசியா என்று மறைநூலின் வாயிலாக எண்பித்து யூதர்களோடு எல்லாருக்குமுன் வன்மையாய் வாதாடி அவர்களுடைய தவற்றை, எடுத்துக்காட்டினார்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 28
1 அதன்பின் சின்னப்பர் ஏத்தென்ஸ் நகரைவிட்டுக் கொரிந்துவுக்கு வந்தார். 2 அங்கு பொந்த்து நாட்டைச் சேர்ந்த ஆக்கிலா என்ற யூதன் ஒருவனையும், அவனுடைய மனைவி பிரிஸ்கிலாவையும் கண்டார். கிலவுதியு பேரரசன் யூதர் எல்லாரையும் உரோமையினின்று வெளியேறக் கட்டளையிட்டதால், அவர்கள் அண்மையில்தான் இத்தாலியாவிலிருந்து வந்திருந்தார்கள். சின்னப்பர் அவர்கள் வீட்டுக்குச் சென்றார். 3 அவர்கள் கூடாரம் செய்பவர்கள். சின்னப்பரும் அதே தொழிலைச் செய்பவராதலால் அவர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். 4 ஓய்வு நாள்தோறும் செபக்கூடத்தில் விவாதித்து யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் விசுவாசமூட்ட முயன்றார். 5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயுவும் வந்த பின்னர், சின்னப்பர், தேவ வார்த்தையைப் போதிப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தார். ' இயேசுதான் மெசியா ' என்று யூதர்களிடம் வலியுறுத்திக் கூறுவார். 6 ஆனால் அவர்கள் அதை எதிர்த்துப் பழித்தபோது, அவர் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, ' உங்கள் குற்றத்தின் விளைவு உங்கள் தலைமேல் விழட்டும். அது என் குற்றமில்லை. 7 இனி, நான் புற இனத்தாரிடம் போகிறேன்" என்றார். அவ்விடத்தை விட்டுவிட்டு, யூத மறையைத் தழுவிய தித்தியுயுஸ்து என்பவரின் வீட்டுக்குப் போனார். அவ்வீடு செபக்கூடத்தை அடுத்திருந்தது. 8 அந்தச் செபக்கூடத்தலைவன் கிறிஸ்பு, தன் குடும்பத்தார் அனைவருடன் ஆண்டவரில் விசுவாசம் கொண்டான். சின்னப்பர் கூறியதைக் கேட்ட கொரிந்தியர் பலரும் விசுவசித்து ஞானஸ்நானம் பெற்றனர். 9 ஓரிரவு ஆண்டவர் சின்னப்பருக்குக் காட்சியில் தோன்றி, "அஞ்சாதே, போதித்துக் கொண்டேயிரு, நிறுத்திவிடாதே, நான் உன்னோடிருக்கிறேன். 10 உனக்குத் தீங்கிழைக்க எவனும் எதிர்த்தெழமாட்டான். இந்நகரில் எனக்குரிய மக்கள் பலர் உள்ளனர்" என்றார். 11 எனவே, சின்னப்பர் தேவவார்த்தையை மக்களுக்குப் போதித்துக்கொண்டு ஓராண்டு ஆறுமாதம் அங்கே தங்கியிருந்தார். நீதி மன்றத்தில் சின்னப்பர் 12 ஆனால் கல்லியோன் என்பவன் அகாயாப் பகுதியில் ஆளுநனாக இருக்கையில், யூதர்கள் சின்னப்பருக்கு எதிராக ஒருமிக்க எழுந்து, 13 "சட்டத்துக்கு முரணான முறையில் கடவுளை வழிபடுமாறு மக்களை இவன் தூண்டிவிடுகிறான்" என்று அவரை நீதிமன்றத்திற்கு இழுத்துவந்தனர். 14 சின்னப்பர் பேச வாயெடுக்குமுன், கல்லியோன் யூதர்களைப் பார்த்து, "யூதர்களே, இதில் ஏதாவது அநீதியோ, அக்கிரமமோ இருந்திருக்குமானால், நான் முறைப்படி விசாரித்திருப்பேன். 15 ஆனால், இதெல்லாம் வெறும் சொற்களையும் பெயர்களையும் உங்கள் சட்டத்தையும் பற்றிய பூசல்தான். ஆதலின் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நடுவனாயிருக்க எனக்கு விருப்பமில்லை" என்று சொல்லி, 16 அவர்களை நீதிமன்றத்திலிருந்து துரத்திவிட்டான். 17 அவர்கள் அனைவரும் செபக்கூடத் தலைவனான சொஸ்தேனேயைப் பிடித்து மன்றத்திற்கு எதிரே அடித்தனர். ஆனால், கல்லியோன் இதையெல்லாம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. 18 சின்னப்பர் இன்னும் பல நாட்கள் கொரிந்து நகரில் தங்கினார். பின்பு, சகோதரர்களிடம் விடைபெற்றுக்கொண்டு சீரிய நாட்டுக்குக் கப்பல் ஏறினார். பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவருடன் சென்றனர். தாம் செய்திருந்த பொருத்தனையின்படி, கெங்கிரைத் துறையில் அவர் முடிவெட்டிக்கொண்டார். 19 எபேசு நகரை அடைந்ததும் அவர்களை அங்குவிட்டுப் பிரிந்து, செபக்கூடத்திற்குப் போய் யூதர்களுடன் விவாதித்தார். 20 இன்னும் சிறிதுகாலம் தங்களுடன் தங்கவேண்டுமென்று அவர்கள் அவரை வேண்டினர். ஆனால் அதற்கு அவர் இணங்காமல் "கடவுளுக்கு விருப்பமானால் மீண்டும் உங்களிடம் வருவேன்" என்று சொல்லி, விடைபெற்று, எபேசு நகரிலிருந்து புறப்பட்டார். 21 அவர் செசரியாவில் இறங்கி யெருசலேமுக்குச் சென்றார். 22 அங்குள்ள சபையினரைப் பார்த்துவிட்டு அந்தியோகியா திரும்பினார். 23 அந்நகரில் சிறிது காலம் தங்கிய பின் அங்கிருந்து புறப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாகக் கலாத்தியா, பிரிசியா ஆகிய நாடுகளெங்கும் சுற்றி, சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார். 24 அலெக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ என்ற யூதர் ஒருவர் எபேசுக்கு வந்திருந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர். மறைநூல் வல்லுநர். 25 ஆண்டவரது அருள்நெறியைக் கற்றறிந்த ஆர்வமிக்க உள்ளத்துடன் இயேசுவைப் பற்றிய செய்திகளைப் பிழையறப் போதித்து வந்தார். ஆனால், அருளப்பரின் ஞானஸ்நானம் மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது. 26 அவர் செபக்கூடத்தில் துணிவுடன் பேசத் தொடங்கினார். அவர் பேசியதைக் கேட்ட பிரிஸ்கிலாவும் ஆக்கிலாவும் அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போய், கடவுளின் அருள்நெறியை அவருக்குத் திட்டவட்டமாய் விளக்கினர். 27 அவர் அகாயாவிற்குப் போகவிரும்பவே, சகோதரர் அவரை ஊக்குவித்து, வரவேற்கும்படி சீடர்களுக்கு எழுதினர். அவர் அங்குச் சேர்ந்தபொழுது விசுவாசத்தின் அருளைப் பெற்றவர்களுக்குப் பெரிதும் உதவியாய் இருந்தார். 28 இயேசுவை மெசியா என்று மறைநூலின் வாயிலாக எண்பித்து யூதர்களோடு எல்லாருக்குமுன் வன்மையாய் வாதாடி அவர்களுடைய தவற்றை, எடுத்துக்காட்டினார்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 18 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References