தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
அப்போஸ்தலர்கள்
1. அம்பிப்பொலிஸ், அப்பொலொனியா ஊர்களைக் கடந்து தெசலோனிக்கே நகரை அடைந்தனர்.
2. சின்னப்பர் தம் வழக்கப்படி யூதர்களிடம் சென்று, தொடர்ச்சியாக மூன்று ஓய்வுநாட்கள் அவர்களுடன் வாதாடலானார்.
3. மறை நூலை எடுத்துரைத்து, மெசியா பாடுபடவும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவும் வேண்டும் என விளக்கிக்காட்டுவார். "நான் உங்களுக்கு அறிவிக்கும் இந்த இயேசுதான் அந்த மெசியா" என்று கூறி முடிப்பார்.
4. அவர் சொன்னதை யூதர்கள் சிலரும், யூத மறையைத் தழுவிய திரளான கிரேக்கர்களும், பெருங்குடி மகளிர் பலரும் உண்மையென ஒப்புக்கொண்டு சின்னப்பர், சீலா இவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.
5. யூதர்களோ பொறாமைகொண்டு பொல்லாத போக்கிரிகள் சிலரைக் கூட்டமாகத் திரட்டி, நகரிலே அமளி உண்டாக்கினர். சின்னப்பரையும் சீலாவையும் பொது மக்கள் அவைக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று யாசோனின் வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
6. அவர்களைக் காணாது, யாசோனையும் சகோதரர் சிலரையும், நகராட்சிக் குழுவினரிடம் இழுத்து வந்து, "உலகமெங்கும் குழப்பம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்துவிட்டனர்.
7. யாசோன் இவர்களைத் தன் வீட்டில் ஏற்றுள்ளான். இவர்கள் அனைவரும் இயேசு என்ற வேறு ஓர் அரசன் இருப்பதாகச் சொல்லி, செசாரின் கட்டளையை எதிர்த்து நடக்கிறார்கள்" என்று கூச்சலிட்டனர்.
8. இதைக் கேட்ட மக்களிடையிலும், நகராட்சிக் குழுவினரிடையிலும் அவர்கள் கலக மூட்டினர்.
9. யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிணைபெற்றுக் கொண்டு அவர்களை விட்டுவிட்டனர்.
10. அன்றிரவே, சகோதரர்கள் தாமதமின்றிச் சின்னப்பரையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவிட்டனர். அவர்கள் அங்குச் சேர்ந்தபின் யூதர்களின் செபக் கூடத்திற்குப் போனார்கள்.
11. அங்குள்ளவர்கள் தெசலோனிக்கே நகர் யூதர்களைவிடப் பெருந்தன்மையுள்ளவர்கள். தேவ வார்த்தையை மிக்க ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர்கள் போதிப்பது மறைநூலுடன் ஒத்துள்ளதா என்று நாள்தோறும் ஆராய்ந்து வந்தனர்.
12. யூதர் பலரும் கிரேக்கர்களுள் பெருங்குடி மகளிரும், ஆண்கள் பலரும் விசுவசித்தனர்.
13. ஆனால், சின்னப்பர் பெரோயாவிலும் கடவுளின் வார்த்தையை அறிவித்த செய்தி, தெசலோனிக்கே நகரின் யூதர்களுக்கு எட்டவே. அங்கேயும் அவர்கள் வந்து, மக்கட் கூட்டத்தைத் தூண்டிக் கலக மூட்டினர்.
14. உடனே, சகோதரர்கள் சின்னப்பரைக் கடற்கரை வரைக்கும் செல்லுமாறு அனுப்பினர். ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் ஊரிலேயே தங்கினர்.
15. சின்னப்பருடன் சென்றவர்கள் அவரை ஏத்தென்ஸ் வரை அழைத்துக் கொண்டு போனார்கள். அதிவிரைவில் தம்மிடம் வந்து சேரவேண்டும் என்று சீலாவுக்கும் தீமோத்தேயுக்கும் அவர் கொடுத்த கட்டளையைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ஊர் திரும்பினர்.
16. ஏத்தென்ஸ் நகரில் அவர்களைச் சின்னப்பர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்நகரில் சிலைகள் நிறைந்து இருப்பதைக் கண்டு, அவர் உள்ளத்தில் சீற்றம் பொங்கியது.
17. எனவே, அவர் செபக்கூடத்தில் யூதரோடும், யூதமறை தழுவியவரோடும், பொதுவிடத்தில் எதிர்ப்பட்டவர்களோடும் ஒவ்வொரு நாளும் வாதாடி வந்தார்.
18. எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்ந்நூல் அறிஞர் சிலர், அவருடன் கலந்து உரையாடினர். சிலர், "இவன் என்ன பிதற்றுகிறான் ? என்னதான் சொல்லுகிறான்?" என்றனர். இயேசுவையும் உத்தானத்தையும் பற்றி அவர் அறிவித்து வந்ததால் வேறு சிலர், "இவன் அன்னிய தெய்வங்களுக்காகப் பிரச்சாரம் செய்பவன் போலும்" என்றனர்.
19. பிறகு அவரை அரையொபாகு என்னும் மன்றத்திற்கு அழைத்துச் சென்று, "நீர் கூறும் இப்புதிய போதனை என்னவென்று நாங்கள் அறியலாமா?
20. நீர் எங்களுக்குச் சொல்லுவது நூதனமாயுள்ளதே; அதன் பொருள் என்னவென அறிய விரும்புகிறோம்" என்றனர்.
21. ஏத்தென்ஸ் நகரத்தாரும் அங்கு வாழும் அந்நியர்களும் புதுப்புதுச் செய்திகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் மட்டுமே காலம் கழித்து வந்தனர்.
22. சின்னப்பர் அரையொபாகு மன்ற நடுவில் எழுந்து நின்று, "ஏத்தென்ஸ் நகரப்பெருமக்களே, நீங்கள் எவ்வகையிலும் மிக்க மதப்பற்றுள்ளவர்கள் என்று தெரிகிறது.
23. நீங்கள் வழிபடுபவற்றைச் சுற்றிப்பார்த்து" வருகையில் ' நாம் அறியாத தெய்வத்திற்கு ' என்று எழுதியிருந்த பீடம் ஒன்றையும் கண்டேன். சரி, யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன்.
24. உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராம் அவர், மனிதனின் கையால் உருவான கோயில்களில் வாழ்வதில்லை.
25. அனைத்திற்கும் மூச்சு, உயிர் எல்லாமே அளிக்கும் அவர், மக்களின் கையால் பணிவிடை பெறுவது தமக்கு ஏதோ தேவைப்படுவதாலன்று.
26. ஒரே மூலத்திலிருந்து மனுக்குலம் முழுவதையும் உண்டுபண்ணி, அதை மாநிலத்தில் வாழச் செய்தார். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலப் பகுதிகளையும், அவர்கள் குடியிருக்கவேண்டிய எல்லைகளையும் அவர்களுக்கு வரையறுத்துக் கொடுத்தார்.
27. அவர்கள் தம்மைத் தேடவேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தார். இருட்டில் தடவித்தேடுவது போலாவது ஒருவேளை அவர்கள் தம்மைத் தேடிக் கண்பிடிக்கக் கூடுமென்றே இங்ஙனம் கடவுள் செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்.
28. ' நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் அவரிலேதான். ' உங்கள் புலவர்களில் ஒருவர் கூறுவதுபோல், நாமும் அவரினமே.
29. நாம் கடவுளின் இனத்தவராதலால், பொன், வெள்ளி, கல் இவற்றைக் கொண்டு மனிதனின் கலைத்திறனும் அறிவும் அமைத்த வேலைப்பாட்டிற்குத் தெய்வீகம் ஒப்பானதென்று எண்ணலாகாது.
30. மக்கள் அறியாமையால் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததைக் கடவுள் பொருட்படுத்தாமல், இப்போது உலகெங்கும் எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
31. ஏனெனில், அவர் ஒரு நாளைக் குறித்துள்ளார். அந்நாளில் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு ' உலகை நீதியோடு தீர்ப்பிடுவார். இதை அனைவருக்கும் எண்பிக்க, இறந்தோரிடமிருந்து அவரை உயிர்ப்பித்தார்" என்றார்.
32. இறந்தோரின் உயிர்ப்பு என்று கேட்டதும் சிலர் ஏளனம் செய்தனர். வேறு சிலரோ, இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும் கேட்போம் என்றனர்.
33. இத்துடன் சின்னப்பர் மன்றத்தை விட்டு வெளியே சென்றார்.
34. ஒரு சிலர் விசுவாசங்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டனர். அவர்களில் அரையொப்பாகு சங்கத்தின் உறுப்பினராகிய தியொனீசியூஸ் ஒருவர். மற்றும் தாமரி என்பவளும், வேறு சிலரும் இருந்தனர்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 28
1 அம்பிப்பொலிஸ், அப்பொலொனியா ஊர்களைக் கடந்து தெசலோனிக்கே நகரை அடைந்தனர். 2 சின்னப்பர் தம் வழக்கப்படி யூதர்களிடம் சென்று, தொடர்ச்சியாக மூன்று ஓய்வுநாட்கள் அவர்களுடன் வாதாடலானார். 3 மறை நூலை எடுத்துரைத்து, மெசியா பாடுபடவும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவும் வேண்டும் என விளக்கிக்காட்டுவார். "நான் உங்களுக்கு அறிவிக்கும் இந்த இயேசுதான் அந்த மெசியா" என்று கூறி முடிப்பார். 4 அவர் சொன்னதை யூதர்கள் சிலரும், யூத மறையைத் தழுவிய திரளான கிரேக்கர்களும், பெருங்குடி மகளிர் பலரும் உண்மையென ஒப்புக்கொண்டு சின்னப்பர், சீலா இவர்களுடன் சேர்ந்துகொண்டனர். 5 யூதர்களோ பொறாமைகொண்டு பொல்லாத போக்கிரிகள் சிலரைக் கூட்டமாகத் திரட்டி, நகரிலே அமளி உண்டாக்கினர். சின்னப்பரையும் சீலாவையும் பொது மக்கள் அவைக்கு அழைத்துச் செல்லவேண்டுமென்று யாசோனின் வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். 6 அவர்களைக் காணாது, யாசோனையும் சகோதரர் சிலரையும், நகராட்சிக் குழுவினரிடம் இழுத்து வந்து, "உலகமெங்கும் குழப்பம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்துவிட்டனர். 7 யாசோன் இவர்களைத் தன் வீட்டில் ஏற்றுள்ளான். இவர்கள் அனைவரும் இயேசு என்ற வேறு ஓர் அரசன் இருப்பதாகச் சொல்லி, செசாரின் கட்டளையை எதிர்த்து நடக்கிறார்கள்" என்று கூச்சலிட்டனர். 8 இதைக் கேட்ட மக்களிடையிலும், நகராட்சிக் குழுவினரிடையிலும் அவர்கள் கலக மூட்டினர். 9 யாசோனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பிணைபெற்றுக் கொண்டு அவர்களை விட்டுவிட்டனர். 10 அன்றிரவே, சகோதரர்கள் தாமதமின்றிச் சின்னப்பரையும் சீலாவையும் பெரோயாவுக்கு அனுப்பிவிட்டனர். அவர்கள் அங்குச் சேர்ந்தபின் யூதர்களின் செபக் கூடத்திற்குப் போனார்கள். 11 அங்குள்ளவர்கள் தெசலோனிக்கே நகர் யூதர்களைவிடப் பெருந்தன்மையுள்ளவர்கள். தேவ வார்த்தையை மிக்க ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர்கள் போதிப்பது மறைநூலுடன் ஒத்துள்ளதா என்று நாள்தோறும் ஆராய்ந்து வந்தனர். 12 யூதர் பலரும் கிரேக்கர்களுள் பெருங்குடி மகளிரும், ஆண்கள் பலரும் விசுவசித்தனர். 13 ஆனால், சின்னப்பர் பெரோயாவிலும் கடவுளின் வார்த்தையை அறிவித்த செய்தி, தெசலோனிக்கே நகரின் யூதர்களுக்கு எட்டவே. அங்கேயும் அவர்கள் வந்து, மக்கட் கூட்டத்தைத் தூண்டிக் கலக மூட்டினர். 14 உடனே, சகோதரர்கள் சின்னப்பரைக் கடற்கரை வரைக்கும் செல்லுமாறு அனுப்பினர். ஆனால், சீலாவும் தீமோத்தேயுவும் ஊரிலேயே தங்கினர். 15 சின்னப்பருடன் சென்றவர்கள் அவரை ஏத்தென்ஸ் வரை அழைத்துக் கொண்டு போனார்கள். அதிவிரைவில் தம்மிடம் வந்து சேரவேண்டும் என்று சீலாவுக்கும் தீமோத்தேயுக்கும் அவர் கொடுத்த கட்டளையைப் பெற்றுக் கொண்டு அவர்கள் ஊர் திரும்பினர். 16 ஏத்தென்ஸ் நகரில் அவர்களைச் சின்னப்பர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அந்நகரில் சிலைகள் நிறைந்து இருப்பதைக் கண்டு, அவர் உள்ளத்தில் சீற்றம் பொங்கியது. 17 எனவே, அவர் செபக்கூடத்தில் யூதரோடும், யூதமறை தழுவியவரோடும், பொதுவிடத்தில் எதிர்ப்பட்டவர்களோடும் ஒவ்வொரு நாளும் வாதாடி வந்தார். 18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் ஆகிய மெய்ந்நூல் அறிஞர் சிலர், அவருடன் கலந்து உரையாடினர். சிலர், "இவன் என்ன பிதற்றுகிறான் ? என்னதான் சொல்லுகிறான்?" என்றனர். இயேசுவையும் உத்தானத்தையும் பற்றி அவர் அறிவித்து வந்ததால் வேறு சிலர், "இவன் அன்னிய தெய்வங்களுக்காகப் பிரச்சாரம் செய்பவன் போலும்" என்றனர். 19 பிறகு அவரை அரையொபாகு என்னும் மன்றத்திற்கு அழைத்துச் சென்று, "நீர் கூறும் இப்புதிய போதனை என்னவென்று நாங்கள் அறியலாமா? 20 நீர் எங்களுக்குச் சொல்லுவது நூதனமாயுள்ளதே; அதன் பொருள் என்னவென அறிய விரும்புகிறோம்" என்றனர். 21 ஏத்தென்ஸ் நகரத்தாரும் அங்கு வாழும் அந்நியர்களும் புதுப்புதுச் செய்திகளைச் சொல்வதிலும் கேட்பதிலும் மட்டுமே காலம் கழித்து வந்தனர். 22 சின்னப்பர் அரையொபாகு மன்ற நடுவில் எழுந்து நின்று, "ஏத்தென்ஸ் நகரப்பெருமக்களே, நீங்கள் எவ்வகையிலும் மிக்க மதப்பற்றுள்ளவர்கள் என்று தெரிகிறது. 23 நீங்கள் வழிபடுபவற்றைச் சுற்றிப்பார்த்து" வருகையில் ' நாம் அறியாத தெய்வத்திற்கு ' என்று எழுதியிருந்த பீடம் ஒன்றையும் கண்டேன். சரி, யாரென்று அறியாமலே நீங்கள் வழிபடும் தெய்வத்தையே உங்களுக்கு நான் அறிவிக்கப்போகிறேன். 24 உலகையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள், விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவராம் அவர், மனிதனின் கையால் உருவான கோயில்களில் வாழ்வதில்லை. 25 அனைத்திற்கும் மூச்சு, உயிர் எல்லாமே அளிக்கும் அவர், மக்களின் கையால் பணிவிடை பெறுவது தமக்கு ஏதோ தேவைப்படுவதாலன்று. 26 ஒரே மூலத்திலிருந்து மனுக்குலம் முழுவதையும் உண்டுபண்ணி, அதை மாநிலத்தில் வாழச் செய்தார். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலப் பகுதிகளையும், அவர்கள் குடியிருக்கவேண்டிய எல்லைகளையும் அவர்களுக்கு வரையறுத்துக் கொடுத்தார். 27 அவர்கள் தம்மைத் தேடவேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தார். இருட்டில் தடவித்தேடுவது போலாவது ஒருவேளை அவர்கள் தம்மைத் தேடிக் கண்பிடிக்கக் கூடுமென்றே இங்ஙனம் கடவுள் செய்தார். ஏனெனில், அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். 28 ' நாம் வாழ்வதும் இயங்குவதும் இருப்பதும் அவரிலேதான். ' உங்கள் புலவர்களில் ஒருவர் கூறுவதுபோல், நாமும் அவரினமே. 29 நாம் கடவுளின் இனத்தவராதலால், பொன், வெள்ளி, கல் இவற்றைக் கொண்டு மனிதனின் கலைத்திறனும் அறிவும் அமைத்த வேலைப்பாட்டிற்குத் தெய்வீகம் ஒப்பானதென்று எண்ணலாகாது. 30 மக்கள் அறியாமையால் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததைக் கடவுள் பொருட்படுத்தாமல், இப்போது உலகெங்கும் எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார். 31 ஏனெனில், அவர் ஒரு நாளைக் குறித்துள்ளார். அந்நாளில் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு ' உலகை நீதியோடு தீர்ப்பிடுவார். இதை அனைவருக்கும் எண்பிக்க, இறந்தோரிடமிருந்து அவரை உயிர்ப்பித்தார்" என்றார். 32 இறந்தோரின் உயிர்ப்பு என்று கேட்டதும் சிலர் ஏளனம் செய்தனர். வேறு சிலரோ, இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும் கேட்போம் என்றனர். 33 இத்துடன் சின்னப்பர் மன்றத்தை விட்டு வெளியே சென்றார். 34 ஒரு சிலர் விசுவாசங்கொண்டு அவருடன் சேர்ந்துகொண்டனர். அவர்களில் அரையொப்பாகு சங்கத்தின் உறுப்பினராகிய தியொனீசியூஸ் ஒருவர். மற்றும் தாமரி என்பவளும், வேறு சிலரும் இருந்தனர்.
மொத்தம் 28 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References