தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
1. அவர் தெர்பேவுக்குச் சென்று, அங்கிருந்து லீஸ்திராவுக்கு வந்து சேர்ந்தார். அங்கே தீமோத்தேயு என்ற சீடர் ஒருவர் இருந்தார். அவருடைய தாய் யூத இனத்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்துவப் பெண். தந்தையோ கிரேக்க இனத்தினன்.
2. இந்தத் தீமோத்தேயு லீஸ்திரா, இக்கோனியா நகரங்களிலுள்ள சகோதரர்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்,
3. சின்னப்பர் அவரைத் தம்முடன் அழைத்துச் செல்ல விரும்பினார். அவருடைய தந்தை கிரேக்க இனத்தினன் என அனைவரும் அறிந்திருந்ததால் அவ்விடங்களிலிருந்த யூதர்களின் பொருட்டு அவருக்கு விருத்தசேதனம் செய்வித்தார்.
4. அவர்கள் ஊர்தோறும் செல்லுகையில், யெருசலேமிலிருந்த அப்போஸ்தலரும், மூப்பரும் தீர்மானித்த கட்டளைகளை அங்குள்ளோரிடம் ஒப்படைத்து அவற்றைக் கடைப்பிடிக்கக் கற்பித்தனர்.
5. ஆகவே சபைகள் விசுவாசத்தில் வேரூன்றி நாடோறும் தொகையிற் பெருகிவந்தன.
6. பிறகு, தேவ வார்த்தையை ஆசியாவில் போதிக்காதபடி பரிசுத்த ஆவி அவர்களைத் தடுக்கவே, அவர்கள் பிரிகியா, கலாத்தியா பகுதிகளைக் கடந்து சென்றனர்.
7. அவர்கள் மீசியாவின் எல்லைக்கு வந்தபொழுது பித்தினியாவுக்குச் செல்லப் பார்த்தனர். ஆனால் இயேசுவின் ஆவி அவர்களைப் போகவிடவில்லை.
8. எனவே, மீசியாவைக் கடந்து துரோவா நகரை அடைந்தனர்.
9. அங்கே சின்னப்பர், இரவில் ஒரு காட்சி கண்டார். அதில் மகெதோனியா நாட்டினன் ஒருவன் தோன்றி, "நீர் மகெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும்" என்று தம்மை வேண்டுவதாகக் கண்டார்.
10. காட்சி முடிந்ததும் நற்செய்தியை அவர்களுக்கு அறிவிக்கக் கடவுள் எங்களை அழைத்துள்ளார் என்று முடிவு செய்து உடனே மகெதோனியா செல்ல வழி தேடினோம்.
11. துரோவாவில் கப்பலேறி சமெத்ராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்பொலிக்கும் நேராகப் போனோம்.
12. அங்கிருந்து பிலிப்பி நகருக்கு வந்து சேர்ந்து, அங்கே சில நாட்கள் தங்கியிருந்தோம். அது மகெதோனியா நாட்டில் உள்ள ஒரு மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்று, உரோமையர்களின் குடியேற்ற நகரம்.
13. ஓய்வுநாளில் நகர வாயிலைக் கடந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கே யூதர்கள் செபிக்கும் இடம் இருக்குமெனக் கருதினோம். அப்படியே பெண்கள் சிலர் அங்குக் கூடியிருந்தனர். அமர்ந்து அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினோம்.
14. தியத்தைரா நகரைச் சார்ந்த பெண்ணொருத்தி அங்கிருந்தாள். அவள் பெயர் லீதியா; இரத்தாம்பரம் விற்பவள், யூதமறையைத் தழுவியவள். சின்னப்பருடைய போதனையை அவள் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் கூறியதை மனத்தில் இருத்தும்படி ஆண்டவர் அவளது இருதயத்தில் அருளொளி வீசினார்.
15. அவளும் அவளுடைய வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றதும், "ஆண்டவரிடம் நான் விசுவாசமுள்ளவள் என்று நீங்கள் கருதினால், என் வீட்டிற்கு வந்து தங்குங்கள்" என்று எங்களை இறைஞ்சி வற்புறுத்திக் கேட்டுக்கொண்டாள்.
16. ஒருநாள் நாங்கள் செபம் செய்யும் இடத்திற்குச் செல்லும்போது குறி சொல்ல ஏவும் ஆவியால் பீடிக்கப்பட்டிருந்த பணிப்பெண் ஒருத்தி எங்களுக்கு எதிரே வந்தாள்.
17. அவள் தன் மாந்திரகத்தால் தன்னுடைய எசமானர்களுக்கு ஏராளமான வருவாய் சம்பாதித்துக் கொடுப்பாள். "இவர்கள் உன்னத கடவுளின் ஊழியர்கள். மீட்பின் வழியை உங்களுக்கு அறிவிக்கிறார்கள்" என்று கத்திக்கொண்டே அவள் சின்னப்பரையும் எங்களையும் பின் தொடர்ந்தாள்.
18. இவ்வாறு அவன் பலநாள் செய்துவந்தாள். சின்னப்பர் எரிச்சல் கொண்டு அவள் பக்கம் திரும்பி, "இயேசு கிறிஸ்துவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இவளை விட்டுப் போ" என்று அந்த ஆவியிடம் கூறினார். அந்நேரமே அது வெளியேறியது.
19. அவளுடைய எசமானர்கள் தங்கள் வருவாய்க்குரிய வாய்ப்பெல்லாம் போய்விட்டதே என்று சின்னப்பரையும் சீலாவையும் பிடித்து நகரத் தலைவர்கள்முன் நிறுத்தப் பொதுவிடத்திற்கு இழுத்துச் சென்றனர்.
20. அவர்களை நடுவர்கள் முன் கொண்டுபோய், ' இவர்கள் நம் நகரில் கலகம் விளைவிக்கிறார்கள்.
21. யூதர்களாகிய இவர்கள் இங்கே வந்து உரோமையர்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ பின்பற்றவோ தகாத ஒழுக்க முறைமைகளைப் பரப்புகிறார்கள்" என்றனர்.
22. மக்கட் கூட்டம் அவர்களை எதிர்த்தெழுந்தது; நடுவர்கள் அவர்களுடைய மேலாடைகளைக் கிழித்தெறிந்து, அவர்களைச் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டனர்.
23. அவர்களை நையப் புடைத்தபின் சிறையில் தள்ளி, பத்திரமாகக் காவல் செய்யுமாறு சிறைக் காவலனுக்குக் கட்டளையிட்டனர்.
24. இக்கட்டளையின்படி அவன் அவர்களை உட்சிறையில் தள்ளி, கால்களைத் தொழு மரத்தில் சேர்த்துப் பிணித்துவிட்டான்.
25. நள்ளிரவு வந்தது. சின்னப்பரும் சீலாவும் கடவுளைப் புகழ்ந்து பாடிச் செபித்துக்கொண்டு இருந்தனர். மற்றக் கைதிகளோ கேட்டுக் கொண்டிருந்தனர்.
26. அப்பொழுது திடீரெனச் சிறைக்கூடத்தின் அடித்தளமே ஆடும் அளவுக்கு, பெரியதொரு நில நடுக்கம் ஏற்பட்டது. உடனே, கதவுகளெல்லாம் திறந்தன; அனைவரின் விலங்குகளும் தகர்ந்து விழுந்தன.
27. சிறைக் காவலன் விழித்துக் கொண்டான். சிறைக் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கைதிகள் தப்பி ஓடியிருப்பர் என்று எண்ணி, வாளை உருவித் தன் உயிரை மாய்த்துக் கொள்ளப்போனான்.
28. ஆனால், சின்னப்பர் உரத்த குரலில், "தீங்கு எதுவும் செய்து கொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குத்தான் இருக்கிறோம்" என்று கத்தினார்.
29. சிறைக்காவலன் விளக்கைக் கொண்டு வரச்சொல்லி உள்ளே ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டே சின்னப்பர், சீலா இவர்களின் காலில் விழுந்தான்.
30. அவர்களை வெளியே அழைத்து வந்து, "ஐயன்மீர், மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான்.
31. அதற்கு அவர்கள், "ஆண்டவராகிய இயேசுவின்மேல் விசுவாசம் கொள். நீயும் உன் வீட்டாரும் மீட்படைவீர்கள்" என்றனர்.
32. பிறகு அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த அனைவருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்தனர்.
33. அவ்விரவு நேரத்திலேயே அவர்களை அழைத்துச்சென்று, அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவன் குடும்பத்தார் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றனர்.
34. அப்போது அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து, விருந்து வைத்தான். கடவுளை விசுவசிக்கும் பேறு கிடைத்தது பற்றி தன் வீட்டார் அனைவரோடும் கூடிக் களிகூர்ந்தான்.
35. விடிந்தபின், நடுவர்கள் அம்மனிதர்களை விடுதலை செய்யச் சொல்லி, நகர்க் காவலர்களை அனுப்பினர்.
36. சிறைக்காவலன் இச்செய்தியைச் சின்னப்பருக்கு அறிவித்து, "உங்களை விடுதலை செய்ய வேண்டுமென நடுவர்கள் சொல்லி அனுப்பியுள்ளனர். எனவே நீங்கள் சமாதானமாகப் போய் விடலாம்" என்றான்.
37. ஆனால், சின்னப்பர் அவர்களிடம் "உரோமைக் குடிமக்களாகிய எங்களை அவர்கள் தண்டனைத் தீர்ப்பிடாமலே பொது மக்கள் முன்னிலையில் சாட்டையால் அடித்துச் சிறையில் தள்ளினார்கள். இப்பொழுது யாருக்கும் தெரியாமல் அனுப்பிவிடுகிறார்களா? முடியாது; அவர்களே வந்து எங்களை விடுதலை செய்யட்டும்" என்றார்.
38. நகர்க் காவலர்கள் இச்செய்தியை நடுவர்களுக்கு அறிவித்தார்கள். கைதிகள் உரோமைக் குடிமக்கள் எனக் கேட்டு நடுவர் அஞ்சி,
39. அவர்களிடம் வந்து, அவர்களுடன் நயந்து பேசி, நகரை விட்டு அகலுமாறு கேட்டுக் கொண்டே, அவர்களை வெளியே அழைத்துச் சென்றனர்.
40. அவர்களும் சிறையினின்று வெளியேறி லீதியாவின் வீட்டிற்குச் சென்றனர். சகோதரர்களைக் கண்டு ஆறுதல் கூறியபின், அங்கிருந்து பயணமாயினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 16 of Total Chapters 28
அப்போஸ்தலர்கள் 16:39

×

Alert

×

tamil Letters Keypad References