தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
அப்போஸ்தலர்கள்
1. இக்கோனியாவிலும் அவ்வாறே நிகழ்ந்தது. அந்நகரில் யூதர்களின் செபக்கூடத்துக்குச்சென்று பேசியபோது யூதர், கிரேக்கர் பலரும் விசுவாசங்கொண்டனர்.
2. விசுவசியாத யூதர்கள் புறவினத்தாரைத் தூண்டி, சகோதரர்களுக்கு எதிராக அவர்கள் மனத்தைக் கெடுத்தனர்.
3. அப்போஸ்தலர்கள் இருவரும் அங்கே பல நாள் தங்கி, ஆண்டவரை நம்பி, துணிவுடன் பேசினர். ஆண்டவரும் தம் கருணையை வெளிப்படுத்தும் இப்போதனையை உறுதிப்படுத்த அவர்கள் கையால் அருங்குறிகளும் அற்புதங்களும் நிகழச் செய்தார்.
4. நகரமக்களோ இரண்டுபட்டனர். ஒரு சாரார் யூதரோடும், மற்றொரு சாரார் அப்போஸ்தலரோடும் சேர்ந்து கொண்டனர்.
5. புறவினத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து அப்போஸ்தலர்களை இழிவுபடுத்தி, கல்லாலெறியத் திட்டமிட்டனர்.
6. அப்போஸ்தலர்களோ அதை அறிந்து லிக்கவோனியா நாட்டு லீஸ்திரா, தெர்பை என்னும் ஊர்களுக்கும் சுற்றுப் புறங்களுக்கும் ஓடினர்.
7. அங்கெல்லாம் நற்செய்தி அறிவித்தனர்.
8. கால் வழங்காத ஒருவன் லீஸ்திராவில் இருந்தான்.
9. அவன் பிறவி முடவன், என்றுமே நடந்ததில்லை. சின்னப்பர் பேசுவதை அவன் கேட்டான். அவர் அவனை உற்று நோக்கி, குணம் பெறுவதற்கான விசுவாசம் அவனிடம் உள்ளதை உணர்ந்து,
10. உரத்த குரலில், "எழுந்திரு, கால் ஊன்றி நேராக நில்" என்றார். அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான்.
11. மக்கட் கூட்டம் சின்னப்பர் செய்ததைக் கண்டு லிக்கவோனிய மொழியில், "தெய்வங்களே மனித உருவில் நம்மிடையே இறங்கிவந்துள்ளன" என்று கூச்சலிட்டனர்.
12. சின்னப்பர் முக்கிய பேச்சாளராயிருந்ததால், அவரை மெர்க்குரி என்றும், பர்னபாவை ஜூப்பிட்டர் என்றும் அழைத்தனர்:
13. அப்போது, நகருக்கு எதிரிலுள்ள ஜூப்பிட்டர் கோயில் அர்ச்சகன், எருதுகளையும் மாலைகளையும் வாயிலுக்குக் கொண்டுவந்து, மக்களுடன் சேர்ந்து பலியிட முற்பட்டான்.
14. ஆனால், இதைக் கேள்வியுற்ற அப்போஸ்தலர் பர்னபாவும் சின்னப்பரும் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள் ஓடி உரத்த குரலில்,
15. "நண்பர்களே, என்ன செய்கிறீர்கள்? நாங்களும், உங்களைப்போல எளிய நிலைக்குட்பட்ட மனிதர்கள்தானே. இப்பயனற்ற சிலைகளை விட்டுவிட்டு உயிருள்ள கடவுள் பக்கம் திரும்ப வேண்டுமென்று நற்செய்தியை அறிவிக்கிறோம். விண், மண், கடல் யாவற்றையும் அவற்றிலடங்கிய அனைத்தையும் ஆக்கியவர் அவரே.
16. கடந்த காலங்களில் அவர் எல்லா இனத்தாரும் தங்கள் மனம் போனபோக்கில் நடக்கவிட்டுவிட்டார்.
17. ஆயினும், தம்மை அறிந்துகொள்ள எத்தகைய சான்றும் இல்லாதபடி விட்டுவிடவில்லை. எவ்வாறெனில், வானினின்று உங்களுக்கு மழையைப் பொழிந்து, செழிப்புமிக்கப் பருவங்களை அளித்து, உங்கள் உள்ளம் மகிழ்ச்சி பொங்க, நிறைய உணவு கொடுத்து உங்களுக்கு நன்மை புரிந்துவந்தார்" என்றனர்.
18. இவ்வாறு பேசியதால் தங்களுக்கு மக்கட் கூட்டம் பலியிடுவதை ஒருவாறு தடுக்கமுடிந்தது.
19. அப்போது அந்தியோகியாவிலிருந்தும் இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களை ஏவி, சின்னப்பரைக் கல்லாலெறிந்தார்கள். அவர் இறந்துவிட்டதாக எண்ணி நகருக்கு வெளியே இழுத்துப் போட்டார்கள்.
20. சீடர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர். பிறகு அவர் எழுந்து நகருக்குள் சென்றார். மறுநாள் பர்னபாவுடன் தெர்பைக்குப் புறப்பட்டார்.
21. அந்நகர மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, பலரைச் சீடராக்கிய பின் லீஸ்திரா, இக்கோனியா, அந்தியோகியா ஆகிய ஊர்களுக்குத் திரும்பினர்.
22. சீடர்களின் மனத்தை உறுதிப்படுத்தி விசுவாசத்தில் நிலைத்துநிற்க வேண்டுமென்றும், ' பல துன்பங்களின் வழியாகவே நாம் கடவுளின் அரசிற்குள் நுழைய வேண்டுமென்றும் ' அறிவுறுத்தினர்.
23. ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை ஏற்படுத்தினர். நோன்பிருந்து செபம் செய்த பின்னர், அவர்கள் விசுவசித்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
24. பிசீதியாவைக் கடந்து பம்பிலியாவிற்கு வந்தனர்.
25. பெர்கேயில் தேவ வார்த்தையைப் போதித்து அத்தாலியாவிற்குச் சென்றனர்.
26. அவர்கள் இப்போது செய்து முடித்த பணிக்காக, கடவுளின் அருளுக்கு ஒப்படைக்கப்பட்டுச் சென்றது அந்தியோகியாவிலிருந்துதான்.
27. அங்கே வந்து சேர்ந்ததும், சபையைக் கூட்டிக் கடவுள் தங்களுக்காக அரிய பெரிய செயல்களைப் புரிந்ததையும், புறவினத்தாருக்கு விசுவாச வாயிலைத் திறந்துவிட்டதையும் எடுத்துரைத்தனர்.
28. அங்கே சீடர்களுடன் பலநாள் தங்கியிருந்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 14 of Total Chapters 28
அப்போஸ்தலர்கள் 14

×

Alert

×

tamil Letters Keypad References