தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 தெசலோனிக்கேயர்
1. இறுதியாக, சகோதரர்களே, எங்களுக்காகச் செபியுங்கள்,. ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே பரவியதுபோல,
2. எங்கும் விரைந்து பரவி மகிமை பெறவும், முறை கெட்டவர் தீயவர் கைக்கு நாங்கள் தப்பவும் வேண்டிக்கொள்ளுங்கள்: விசுவாசம் என்பது எல்லாரிடமும் இல்லயைன்றோ? ஆண்டவரோ நம்பிக்கைக்குரியவர்.
3. அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காப்பாற்றுவார்.
4. நாங்கள் கட்டளையிட்டதை எல்லாம் நீங்கள் செய்து வருவீர்கள், இனியும் செய்து வருவீர்கள் என்று ஆண்டவரின் அருளால் உங்கள்மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
5. கடவுளின் அன்பைப்பெறவும், கிறிஸ்துவின் பொறுமையை அடையவும் ஆண்டவர் உங்கள் உள்ளங்களுக்கு வழிகாட்டுவாராக.
6. சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது: எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைக்கு ஏற்ப நடக்காமல் சோம்பித்திரியும் எந்தச் சகோதரனிடமிருந்து விலகி நில்லுங்கள்.
7. எங்களைப் போல் நடப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமே. உங்களோடிருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை.
8. யாரிடமும் நாங்கள் இலவசமாக உணவு கொள்ளவில்லை. மாறாக, உங்களுள் யாருக்கும் சுமையாய் இராதபடி பிழைப்புக்காக இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
9. உங்களிடமிருந்து பிழைப்புக்குத் தேவையானதைப் பெற எங்களுக்கு உரிமையில்லை என்பதனால் இவ்வாறு உழைக்கவில்லை. நாங்கள் செய்வதுபோலவே நீங்களும் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு முன்மாதிரியாய் இருக்கவே அப்படிச் செய்தோம்.
10. நாங்கள் உங்களோடிருந்தபொழுது, 'உழைக்க மனமில்லாத எவனும் உண்ணலாகாது' என்ற கட்டளை கொடுத்தோம்.
11. உங்களுள் சிலர் எவ்வேலையும் செய்யாமல், இங்கும் அங்கும் சோம்பித் திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
12. இத்தகையோர் தங்கள் உணவுக்காக அமைதியோடு உழைக்க வேண்டுமேன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.
13. சகோதரர்களே, நன்மை செய்வதில் மனந்தளர வேண்டாம்.
14. இக்கடிதத்தில் நாங்கள் சொல்வதற்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அவனுக்கு வெட்க முண்டாகும்படி, சபையில் அவன் பெயரைக் குறிப்பிட்டு அவனோடு உறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.
15. எனினும், அவனைப் பகைவனாகக் கொள்ளாமல், சகோதரனாகவே கருதி, அவனுக்கு அறிவு புகட்டுங்கள்.
16. சமாதானத்தின் ஊற்றாகிய ஆண்டவர் எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்குச் சமாதானம் அருள்வாராக.
17. ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. இவ்வாழ்த்து சின்னப்பனான நான் என் கைப்பட எழுதியது. என் கடிதம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்.
18. நான் எழுதுவது இப்படித்தான், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
1 இறுதியாக, சகோதரர்களே, எங்களுக்காகச் செபியுங்கள்,. ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே பரவியதுபோல, 2 எங்கும் விரைந்து பரவி மகிமை பெறவும், முறை கெட்டவர் தீயவர் கைக்கு நாங்கள் தப்பவும் வேண்டிக்கொள்ளுங்கள்: விசுவாசம் என்பது எல்லாரிடமும் இல்லயைன்றோ? ஆண்டவரோ நம்பிக்கைக்குரியவர். 3 அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காப்பாற்றுவார். 4 நாங்கள் கட்டளையிட்டதை எல்லாம் நீங்கள் செய்து வருவீர்கள், இனியும் செய்து வருவீர்கள் என்று ஆண்டவரின் அருளால் உங்கள்மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். 5 கடவுளின் அன்பைப்பெறவும், கிறிஸ்துவின் பொறுமையை அடையவும் ஆண்டவர் உங்கள் உள்ளங்களுக்கு வழிகாட்டுவாராக. 6 சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறதாவது: எங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட படிப்பினைக்கு ஏற்ப நடக்காமல் சோம்பித்திரியும் எந்தச் சகோதரனிடமிருந்து விலகி நில்லுங்கள். 7 எங்களைப் போல் நடப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமே. உங்களோடிருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை. 8 யாரிடமும் நாங்கள் இலவசமாக உணவு கொள்ளவில்லை. மாறாக, உங்களுள் யாருக்கும் சுமையாய் இராதபடி பிழைப்புக்காக இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம். 9 உங்களிடமிருந்து பிழைப்புக்குத் தேவையானதைப் பெற எங்களுக்கு உரிமையில்லை என்பதனால் இவ்வாறு உழைக்கவில்லை. நாங்கள் செய்வதுபோலவே நீங்களும் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு முன்மாதிரியாய் இருக்கவே அப்படிச் செய்தோம். 10 நாங்கள் உங்களோடிருந்தபொழுது, 'உழைக்க மனமில்லாத எவனும் உண்ணலாகாது' என்ற கட்டளை கொடுத்தோம். 11 உங்களுள் சிலர் எவ்வேலையும் செய்யாமல், இங்கும் அங்கும் சோம்பித் திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். 12 இத்தகையோர் தங்கள் உணவுக்காக அமைதியோடு உழைக்க வேண்டுமேன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம். 13 சகோதரர்களே, நன்மை செய்வதில் மனந்தளர வேண்டாம். 14 இக்கடிதத்தில் நாங்கள் சொல்வதற்கு யாராவது கீழ்ப்படியாவிட்டால், அவனுக்கு வெட்க முண்டாகும்படி, சபையில் அவன் பெயரைக் குறிப்பிட்டு அவனோடு உறவு வைத்துக்கொள்ளாதீர்கள். 15 எனினும், அவனைப் பகைவனாகக் கொள்ளாமல், சகோதரனாகவே கருதி, அவனுக்கு அறிவு புகட்டுங்கள். 16 சமாதானத்தின் ஊற்றாகிய ஆண்டவர் எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்குச் சமாதானம் அருள்வாராக. 17 ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக. இவ்வாழ்த்து சின்னப்பனான நான் என் கைப்பட எழுதியது. என் கடிதம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம். 18 நான் எழுதுவது இப்படித்தான், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
மொத்தம் 3 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 3
1 2 3
×

Alert

×

Tamil Letters Keypad References