தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
1. தாவீது, "சவுலின் வீட்டாரில் இன்னும் எவனாவது விடுபட்டிருக்கிறானா? இருந்தால் யோனத்தாசின் பொருட்டு நான் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்றார்.
2. சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்ற ஒருவன் இருந்தான். அரசர் அவனைத் தம்மிடம் வரச் சொல்லி அவனை நோக்கி, "சீபா நீ தானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அடியேன் தான்" என்றான்.
3. அப்போது அரசர், "கடவுளின் பொருட்டு நான் சவுலின் குடும்பத்தாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேன். அவருடைய வீட்டாரில் யாரேனும் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?" என்று வினவினார். சீபா அரசரை நோக்கி, "ஆம், யோனத்தாசுக்குப் பிறந்து இரு கால்களும் முடமான ஒருவன் இருக்கிறான்" என்றான்.
4. அதற்குத் தாவீது, "அவன் எங்கே?" என, சீபா அரசரைப் பார்த்து, "அவன் அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருக்கிறான்" என்றான்.
5. அப்போது தாவீது அரசர் ஆட்களை அனுப்பி லோதாபாரிலிருக்கிற அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருந்து அவனைக் கொண்டுவரச் செய்தார்.
6. சவுலின் மகனான யோனத்தாசின் மகன் மிபிபோசேத் தாவீதிடம் வந்த போது முகங்குப்புற விழுந்து அவரை வணங்கினான். அப்பொழுது தாவீது, "மிபிபோசேத்" என்று கூப்பிட, அவன், "அடியேன் இருக்கிறேன்" என்றான்.
7. தாவீது அவனை நோக்கி, "அஞ்சாதே, உன் தந்தை யோனத்தாசை முன்னிட்டு நான் உனக்குக் கட்டாயம் இரக்கம் காட்டுவேன். உன் பாட்டனாகிய சவுலின் நிலங்களை எல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும், நீ என் பந்தியில் நாளும் உணவு அருந்துவாய்" என்றார்.
8. அவன் அரசரை வணங்கி, "என் போன்ற செத்த நாயின் மேல் நீர் பரிவு காட்டுவதற்கு உம் அடியான் யார்?" என்றான்.
9. அரசரோ சவுலின் ஊழியனான சீபாவைக் கூப்பிட்டு, "சவுலுக்குச் சொந்தமான யாவற்றையும், அவன் வீட்டையும் உன் தலைவரின் மகனுக்குக் கொடுத்துள்ளேன்.
10. ஆகையால் நீயும் உன் புதல்வர்களும் உன் ஊழியர்களும் நிலத்தைப் பயிரிடுங்கள்; அதனால் உன் தலைவரின் மகன் உண்ண உணவு கிடைக்கும். உன் தலைவரின் மகன் மிபிபோசேத் நாளும் என் பந்தியில் உணவு அருந்துவான்" என்றார். சீபாவுக்கோ பதினைந்து மக்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்ததார்கள்.
11. சீபா அரசரை நோக்கி, "என் தலைவராகிய அரசே, நீர் அடியேனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அடியேன் செய்வேன்" என்றான். அரச புதல்வரில் ஒருவரைப்போல் மிபிபோசேத் தாவீதின் பந்தியில் உணவு அருந்தி வந்தான்.
12. மிபிபோசேத்துக்கு மிக்கா என்ற ஒரு சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மிபிபோசேத்துக்கு வேலை செய்து வந்தார்கள்.
13. மிபிபோசேத்தோ யெருசலேமில் வாழ்ந்து வந்தான். ஏனெனில் அவன் அரசரின் பந்தியில் சாப்பிடுவது வழக்கம். அவனுக்கு இரு கால்களும் முடமாயிருந்தன.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 24
2 சாமுவேல் 9:8
1 தாவீது, "சவுலின் வீட்டாரில் இன்னும் எவனாவது விடுபட்டிருக்கிறானா? இருந்தால் யோனத்தாசின் பொருட்டு நான் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்றார். 2 சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்ற ஒருவன் இருந்தான். அரசர் அவனைத் தம்மிடம் வரச் சொல்லி அவனை நோக்கி, "சீபா நீ தானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "அடியேன் தான்" என்றான். 3 அப்போது அரசர், "கடவுளின் பொருட்டு நான் சவுலின் குடும்பத்தாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேன். அவருடைய வீட்டாரில் யாரேனும் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா?" என்று வினவினார். சீபா அரசரை நோக்கி, "ஆம், யோனத்தாசுக்குப் பிறந்து இரு கால்களும் முடமான ஒருவன் இருக்கிறான்" என்றான். 4 அதற்குத் தாவீது, "அவன் எங்கே?" என, சீபா அரசரைப் பார்த்து, "அவன் அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருக்கிறான்" என்றான். 5 அப்போது தாவீது அரசர் ஆட்களை அனுப்பி லோதாபாரிலிருக்கிற அம்மியேலின் மகனாகிய மக்கீருடைய வீட்டிலிருந்து அவனைக் கொண்டுவரச் செய்தார். 6 சவுலின் மகனான யோனத்தாசின் மகன் மிபிபோசேத் தாவீதிடம் வந்த போது முகங்குப்புற விழுந்து அவரை வணங்கினான். அப்பொழுது தாவீது, "மிபிபோசேத்" என்று கூப்பிட, அவன், "அடியேன் இருக்கிறேன்" என்றான். 7 தாவீது அவனை நோக்கி, "அஞ்சாதே, உன் தந்தை யோனத்தாசை முன்னிட்டு நான் உனக்குக் கட்டாயம் இரக்கம் காட்டுவேன். உன் பாட்டனாகிய சவுலின் நிலங்களை எல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன். மேலும், நீ என் பந்தியில் நாளும் உணவு அருந்துவாய்" என்றார். 8 அவன் அரசரை வணங்கி, "என் போன்ற செத்த நாயின் மேல் நீர் பரிவு காட்டுவதற்கு உம் அடியான் யார்?" என்றான். 9 அரசரோ சவுலின் ஊழியனான சீபாவைக் கூப்பிட்டு, "சவுலுக்குச் சொந்தமான யாவற்றையும், அவன் வீட்டையும் உன் தலைவரின் மகனுக்குக் கொடுத்துள்ளேன். 10 ஆகையால் நீயும் உன் புதல்வர்களும் உன் ஊழியர்களும் நிலத்தைப் பயிரிடுங்கள்; அதனால் உன் தலைவரின் மகன் உண்ண உணவு கிடைக்கும். உன் தலைவரின் மகன் மிபிபோசேத் நாளும் என் பந்தியில் உணவு அருந்துவான்" என்றார். சீபாவுக்கோ பதினைந்து மக்களும் இருபது வேலைக்காரர்களும் இருந்ததார்கள். 11 சீபா அரசரை நோக்கி, "என் தலைவராகிய அரசே, நீர் அடியேனுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அடியேன் செய்வேன்" என்றான். அரச புதல்வரில் ஒருவரைப்போல் மிபிபோசேத் தாவீதின் பந்தியில் உணவு அருந்தி வந்தான். 12 மிபிபோசேத்துக்கு மிக்கா என்ற ஒரு சிறிய மகன் இருந்தான். சீபாவின் குடும்பத்தார் அனைவரும் மிபிபோசேத்துக்கு வேலை செய்து வந்தார்கள். 13 மிபிபோசேத்தோ யெருசலேமில் வாழ்ந்து வந்தான். ஏனெனில் அவன் அரசரின் பந்தியில் சாப்பிடுவது வழக்கம். அவனுக்கு இரு கால்களும் முடமாயிருந்தன.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References