தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
1. தாவீது அரசர் தம் மாளிகையில் குடியேறின பிறகு, நாற்புறத்திலுமுள்ள அவருடைய பகைவர் அனைவரும் ஆண்டவருடைய அருளால் அவரோடு சமாதானமாய் இருந்ததைக் கண்டு,
2. அவர் இறைவாக்கினர் நாத்தானை நோக்கி, "கேதுரு மரங்களால் கட்டப்பட்ட வீட்டில் நான் வாழும்போது, ஆண்டவருடைய பேழை தோல் திரைகளின் நடுவில் வைக்கப்பட்டிருப்பதை நீர் பார்ப்பதில்லையா?" என்றார்.
3. அப்பொழுது நாத்தான் அரசரை நோக்கி, "ஆண்டவர் உம்மோடு இருப்பதால் நீர் விரும்பியபடி எல்லாம் செய்யும்" என்றார்.
4. அன்றிரவே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது.
5. நீ போய் நம் ஊழியன் தாவீதை நோக்கி 'ஆண்டவர் சொல்லுகிறதாவது: நாம் வாழ்வதற்கு ஒரு வீட்டை நீ கட்டமாட்டாயோ?
6. இஸ்ராயேல் மக்களை எகிப்திலிருந்து மீட்ட நாள் முதல் இன்று வரை நாம் வீட்டில் தங்காது கூடாரத்திலும் பேழையிலும் அன்றோ உலாவி வந்தோம்?
7. இஸ்ராயேல் மக்கள் எல்லாரோடும் நாம் பயணம் செய்து வந்தோம் அன்றோ? நம்முடைய மக்களாகிய இஸ்ராயேலை வழி நடத்த வேண்டும் என்று நாம் கட்டளையிட்டபொழுது எவ்விடத்திலேனும் நம் கோத்திரங்களில் ஒன்றைப் பார்த்து, "நீங்கள் நமக்குக் கேதுரு மரங்களால் ஓர் ஆலயத்தை ஏன் கட்டவில்லை?" என்று எப்போதாவது நாம் சொன்னதுண்டா?'
8. ஆகையால், இப்போது நீ போய் நம் ஊழியன் தாவீதைப் பார்த்து, 'சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறதாவது: நீ ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் நாம் உன்னை அழைத்து நம் மக்கள் இஸ்ராயேலுக்குத் தலைவனாய் இருக்கச் செய்தோம்.
9. நீ சென்ற இடங்களில் எல்லாம் நாம் உன்னோடு இருந்து, உன் எதிரிகளை எல்லாம் உனக்கு முன்பாக அழித்துப் பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயருக்கொத்த சிறந்த பெயரை உனக்குத் தந்தோம்.
10. நம் மக்கள் இஸ்ராயேலை ஓர் இடத்தில் நிலை நிறுத்துவோம்; அவர்களை அவ்விடத்தில் உறுதிப்படுத்துவோம். அவர்கள் அங்குக் குடியேறி முன்போல் அலைக்கழிக்கப்படமாட்டார்கள்;
11. நம் மக்கள் இஸ்ராயேலின்மேல் நீதிபதிகளை ஏற்படுத்தின நாள்வரை நடந்தது போல், அக்கிரமிகள் அவர்களை மறுபடியும் துன்பப்படுத்த மாட்டார்கள். உன் எதிரிகளில் யாரும் உன்னைச் சிறுமைப் படுத்தாமல் சமாதானமாய் இருக்கச் செய்வோம். மேலும் ஆண்டவரே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று உனக்கு அநிவிக்கிறார்.
12. பிறகு உன் வாழ்நாள் முடிந்து நீ உன் முன்னோருடன் துயில் கொள்ளும் பொழுது உனக்குப் பிறக்கும் ஒரு மகனை உனக்குப்பின் நாம் உயர்த்தி அவனது அரசை நிலை நாட்டுவோம்.
13. அவனே நமது பெயரால் ஓர் ஆலயத்தைக் கட்டுவான்; நாமோ அவனுடைய அரியணையை என்றும் நிலைநிறுத்துவோம்.
14. நாம் அவனுக்குத் தந்தையாக இருப்போம்; அவனும் நமக்கு மகனாக இருப்பான். அவன் ஏதாவது கொடுஞ்செயல் புரிந்தால், மனிதர்கள் பயன்படுத்தும் கோலால் நாம் அவனை அடிப்போம்; மனிதப் புதல்வருக்கேற்ற வாதையால் கண்டிப்போம்.
15. ஆயினும், இரக்கமே காட்டாது சவுலை நம் திருமுன் அழித்து விட்டது போல் உன் மீதும் இரக்கம் காட்டாது இருக்க மாட்டோம்.
16. உன் வீடோ பிரமாணிக்கமாய் இருக்கும். உன் அரசோ என்றென்றும் உனக்கு முன்பாக இருக்கும்; உன் அரியணை என்றும் நிலைபெற்றிருக்கும்' என்கிறார் என்று சொல்லச் சொன்னார்."
17. நாத்தான் இவ்வார்த்தைகள் எல்லாவற்றையும், காட்சி முழுவதையும் தாவீதிடம் கூறினார்.
18. அப்போது தாவீது அரசர் உட்புகுந்து ஆண்டவர் திருமுன் அமர்ந்து, "ஆண்டவராகிய கடவுளே, இதுவரை நீர் என்னைக் கொண்டு வந்ததற்கு நான் யார்? ஆயினும்,
19. ஆண்டவராகிய கடவுளே, உமது பார்வைக்கு அது எளிதாய் இருப்பது போல், நீண்ட நாட்களுக்குப் பின் நடக்கவிருக்கும் உம் அடியான் வீட்டைப் பற்றிய செய்தியையும் நீர் சொல்லத் திருவுளமானீரே! ஆண்டவராகிய கடவுளே, இது ஆதாமின் சந்ததியாருக்குள்ள முறைமையே.
20. இன்னும் தாவீது உம்மிடம் சொல்லக் கூடியது வேறு என்ன? ஆண்டவராகிய கடவுளே, உம் அடியானை நீர் அறிவீர் அன்றோ?
21. உம் வாக்கின் பொருட்டும், உம் அன்பின் பொருட்டும் உம் அடியானுக்கு அறிவிக்கும் படியன்றோ நீர் இம்மகத்தான காரியங்களைச் செய்தருளினீர்!
22. ஆகையால், ஓ ஆண்டவராகிய கடவுளே! நீர் பெரியவர். ஏனெனில் நாங்கள் காதால் கேட்டவற்றின்படி உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்றும், உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை என்றும் அறிந்திருக்கிறோம்.
23. உம்முடைய மக்களாகிய இஸ்ராயேலைப் போல் இவ்வுலகில் வேறு மக்களும் உண்டோ? புறவினத்தாருள் இந்த இனத்தை மட்டுமே கடவுள் மீட்டு, அவர்களைத் தம் சொந்த மக்களாக ஏற்படுத்தித் தமது புகழ் விளங்கச் செய்துள்ளார்; நீர் எகிப்திலிருந்து மீட்ட உம்முடைய மக்களுக்கு முன்பாக மகத்தானவற்றையும் பயங்கரமானவற்றையும் அவர்களுக்காகச் செய்து, அந்த எகிப்தியரையும் அவர்களுடைய தேவர்களையும் வதைத்தீர்!
24. ஏனெனில் உம்முடைய மக்களாகிய இஸ்ராயேலர் என்றும் உமக்குச் சொந்த மக்களாயிருக்கும் படி தேர்ந்து கொண்டீர். ஆண்டவராகிய கடவுளே, நீரே அவர்களுக்குக் கடவுளானீர்.
25. இப்பொழுதும், ஆண்டவாராகிய கடவுளே, உம் ஊழியனையும் அவன் வீட்டையும் குறித்து நீர் அருளிச் செய்த வாக்கியத்தை என்றென்றும் நிறைவேற்றி நீர் சொன்னபடியே செய்தருளும்.
26. அப்படிச் செய்தால், சேனைகளின் ஆண்டவராகிய கடவுள் இஸ்ராயேலின் கடவுள் என்று உமது பெயர் என்றென்றும் புகழப்படும். மேலும் உன் அடியான் தாவீதின் வீடும் ஆண்டவருக்கு முன்பாக நிலைநிற்கும்.
27. ஏனெனில், சேனைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, 'நாம் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவோம்' என்று நீரே உம் அடியானுக்கு வெளிப்படுத்தியிருந்ததினாலன்றோ உம் அடியான் நான் உம்மை நோக்கி இத்தகைய வேண்டுதலைச் செய்யத் துணிந்தேன்?
28. இப்பொழுது, ஆண்டவராகிய கடவுளே, நீரே கடவுள்; உமது வார்த்தையே உண்மை; ஏனெனில், நீரே உம் அடியானுக்கு மேற்கூறிய நற்செய்திகளைச் சொன்னீர்.
29. எனவே, நீர் அவ்வார்த்தைகளின்படி செய்யத் தொடங்கி அடியேனுடைய வீடு உம் திருமுன் என்றென்றும் நிலை நிற்கும்படி, அதை ஆசீர்வதித்தருளும். ஏனெனில் ஆண்டவராகிய கடவுளே, நீரே திருவுளம் பற்றியிருக்கிறீர். உம்முடைய ஆசீரால் தான் உம் அடியானுடைய வீடு என்றென்றும் ஆசீர் பெற்றிருக்கும்" என்றார்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 24
1 தாவீது அரசர் தம் மாளிகையில் குடியேறின பிறகு, நாற்புறத்திலுமுள்ள அவருடைய பகைவர் அனைவரும் ஆண்டவருடைய அருளால் அவரோடு சமாதானமாய் இருந்ததைக் கண்டு, 2 அவர் இறைவாக்கினர் நாத்தானை நோக்கி, "கேதுரு மரங்களால் கட்டப்பட்ட வீட்டில் நான் வாழும்போது, ஆண்டவருடைய பேழை தோல் திரைகளின் நடுவில் வைக்கப்பட்டிருப்பதை நீர் பார்ப்பதில்லையா?" என்றார். 3 அப்பொழுது நாத்தான் அரசரை நோக்கி, "ஆண்டவர் உம்மோடு இருப்பதால் நீர் விரும்பியபடி எல்லாம் செய்யும்" என்றார். 4 அன்றிரவே ஆண்டவருடைய வார்த்தை நாத்தானுக்கு வந்தது. 5 நீ போய் நம் ஊழியன் தாவீதை நோக்கி 'ஆண்டவர் சொல்லுகிறதாவது: நாம் வாழ்வதற்கு ஒரு வீட்டை நீ கட்டமாட்டாயோ? 6 இஸ்ராயேல் மக்களை எகிப்திலிருந்து மீட்ட நாள் முதல் இன்று வரை நாம் வீட்டில் தங்காது கூடாரத்திலும் பேழையிலும் அன்றோ உலாவி வந்தோம்? 7 இஸ்ராயேல் மக்கள் எல்லாரோடும் நாம் பயணம் செய்து வந்தோம் அன்றோ? நம்முடைய மக்களாகிய இஸ்ராயேலை வழி நடத்த வேண்டும் என்று நாம் கட்டளையிட்டபொழுது எவ்விடத்திலேனும் நம் கோத்திரங்களில் ஒன்றைப் பார்த்து, "நீங்கள் நமக்குக் கேதுரு மரங்களால் ஓர் ஆலயத்தை ஏன் கட்டவில்லை?" என்று எப்போதாவது நாம் சொன்னதுண்டா?' 8 ஆகையால், இப்போது நீ போய் நம் ஊழியன் தாவீதைப் பார்த்து, 'சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறதாவது: நீ ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் நாம் உன்னை அழைத்து நம் மக்கள் இஸ்ராயேலுக்குத் தலைவனாய் இருக்கச் செய்தோம். 9 நீ சென்ற இடங்களில் எல்லாம் நாம் உன்னோடு இருந்து, உன் எதிரிகளை எல்லாம் உனக்கு முன்பாக அழித்துப் பூமியிலிருக்கிற பெரியோர்களின் பெயருக்கொத்த சிறந்த பெயரை உனக்குத் தந்தோம். 10 நம் மக்கள் இஸ்ராயேலை ஓர் இடத்தில் நிலை நிறுத்துவோம்; அவர்களை அவ்விடத்தில் உறுதிப்படுத்துவோம். அவர்கள் அங்குக் குடியேறி முன்போல் அலைக்கழிக்கப்படமாட்டார்கள்; 11 நம் மக்கள் இஸ்ராயேலின்மேல் நீதிபதிகளை ஏற்படுத்தின நாள்வரை நடந்தது போல், அக்கிரமிகள் அவர்களை மறுபடியும் துன்பப்படுத்த மாட்டார்கள். உன் எதிரிகளில் யாரும் உன்னைச் சிறுமைப் படுத்தாமல் சமாதானமாய் இருக்கச் செய்வோம். மேலும் ஆண்டவரே உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்று உனக்கு அநிவிக்கிறார். 12 பிறகு உன் வாழ்நாள் முடிந்து நீ உன் முன்னோருடன் துயில் கொள்ளும் பொழுது உனக்குப் பிறக்கும் ஒரு மகனை உனக்குப்பின் நாம் உயர்த்தி அவனது அரசை நிலை நாட்டுவோம். 13 அவனே நமது பெயரால் ஓர் ஆலயத்தைக் கட்டுவான்; நாமோ அவனுடைய அரியணையை என்றும் நிலைநிறுத்துவோம். 14 நாம் அவனுக்குத் தந்தையாக இருப்போம்; அவனும் நமக்கு மகனாக இருப்பான். அவன் ஏதாவது கொடுஞ்செயல் புரிந்தால், மனிதர்கள் பயன்படுத்தும் கோலால் நாம் அவனை அடிப்போம்; மனிதப் புதல்வருக்கேற்ற வாதையால் கண்டிப்போம். 15 ஆயினும், இரக்கமே காட்டாது சவுலை நம் திருமுன் அழித்து விட்டது போல் உன் மீதும் இரக்கம் காட்டாது இருக்க மாட்டோம். 16 உன் வீடோ பிரமாணிக்கமாய் இருக்கும். உன் அரசோ என்றென்றும் உனக்கு முன்பாக இருக்கும்; உன் அரியணை என்றும் நிலைபெற்றிருக்கும்' என்கிறார் என்று சொல்லச் சொன்னார்." 17 நாத்தான் இவ்வார்த்தைகள் எல்லாவற்றையும், காட்சி முழுவதையும் தாவீதிடம் கூறினார். 18 அப்போது தாவீது அரசர் உட்புகுந்து ஆண்டவர் திருமுன் அமர்ந்து, "ஆண்டவராகிய கடவுளே, இதுவரை நீர் என்னைக் கொண்டு வந்ததற்கு நான் யார்? ஆயினும், 19 ஆண்டவராகிய கடவுளே, உமது பார்வைக்கு அது எளிதாய் இருப்பது போல், நீண்ட நாட்களுக்குப் பின் நடக்கவிருக்கும் உம் அடியான் வீட்டைப் பற்றிய செய்தியையும் நீர் சொல்லத் திருவுளமானீரே! ஆண்டவராகிய கடவுளே, இது ஆதாமின் சந்ததியாருக்குள்ள முறைமையே. 20 இன்னும் தாவீது உம்மிடம் சொல்லக் கூடியது வேறு என்ன? ஆண்டவராகிய கடவுளே, உம் அடியானை நீர் அறிவீர் அன்றோ? 21 உம் வாக்கின் பொருட்டும், உம் அன்பின் பொருட்டும் உம் அடியானுக்கு அறிவிக்கும் படியன்றோ நீர் இம்மகத்தான காரியங்களைச் செய்தருளினீர்! 22 ஆகையால், ஓ ஆண்டவராகிய கடவுளே! நீர் பெரியவர். ஏனெனில் நாங்கள் காதால் கேட்டவற்றின்படி உமக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை என்றும், உம்மைத் தவிர வேறு கடவுளும் இல்லை என்றும் அறிந்திருக்கிறோம். 23 உம்முடைய மக்களாகிய இஸ்ராயேலைப் போல் இவ்வுலகில் வேறு மக்களும் உண்டோ? புறவினத்தாருள் இந்த இனத்தை மட்டுமே கடவுள் மீட்டு, அவர்களைத் தம் சொந்த மக்களாக ஏற்படுத்தித் தமது புகழ் விளங்கச் செய்துள்ளார்; நீர் எகிப்திலிருந்து மீட்ட உம்முடைய மக்களுக்கு முன்பாக மகத்தானவற்றையும் பயங்கரமானவற்றையும் அவர்களுக்காகச் செய்து, அந்த எகிப்தியரையும் அவர்களுடைய தேவர்களையும் வதைத்தீர்! 24 ஏனெனில் உம்முடைய மக்களாகிய இஸ்ராயேலர் என்றும் உமக்குச் சொந்த மக்களாயிருக்கும் படி தேர்ந்து கொண்டீர். ஆண்டவராகிய கடவுளே, நீரே அவர்களுக்குக் கடவுளானீர். 25 இப்பொழுதும், ஆண்டவாராகிய கடவுளே, உம் ஊழியனையும் அவன் வீட்டையும் குறித்து நீர் அருளிச் செய்த வாக்கியத்தை என்றென்றும் நிறைவேற்றி நீர் சொன்னபடியே செய்தருளும். 26 அப்படிச் செய்தால், சேனைகளின் ஆண்டவராகிய கடவுள் இஸ்ராயேலின் கடவுள் என்று உமது பெயர் என்றென்றும் புகழப்படும். மேலும் உன் அடியான் தாவீதின் வீடும் ஆண்டவருக்கு முன்பாக நிலைநிற்கும். 27 ஏனெனில், சேனைகளின் ஆண்டவரே, இஸ்ராயேலின் கடவுளே, 'நாம் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவோம்' என்று நீரே உம் அடியானுக்கு வெளிப்படுத்தியிருந்ததினாலன்றோ உம் அடியான் நான் உம்மை நோக்கி இத்தகைய வேண்டுதலைச் செய்யத் துணிந்தேன்? 28 இப்பொழுது, ஆண்டவராகிய கடவுளே, நீரே கடவுள்; உமது வார்த்தையே உண்மை; ஏனெனில், நீரே உம் அடியானுக்கு மேற்கூறிய நற்செய்திகளைச் சொன்னீர். 29 எனவே, நீர் அவ்வார்த்தைகளின்படி செய்யத் தொடங்கி அடியேனுடைய வீடு உம் திருமுன் என்றென்றும் நிலை நிற்கும்படி, அதை ஆசீர்வதித்தருளும். ஏனெனில் ஆண்டவராகிய கடவுளே, நீரே திருவுளம் பற்றியிருக்கிறீர். உம்முடைய ஆசீரால் தான் உம் அடியானுடைய வீடு என்றென்றும் ஆசீர் பெற்றிருக்கும்" என்றார்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References