தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
1. மறுபடியும் தாவீது எல்லா இஸ்ராயேலருக்குள்ளும் தேர்ந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரை ஒன்று திரட்டினார்.
2. தாவீதும் அவரோடு இருந்த யூதாவின் மனிதர்களும் புறப்பட்டுக் கடவுளின் பேழையைக் கொண்டு வரும்படி சென்றார்கள். அப்பேழை கெருபீம்களின் நடுவே வீற்றிருக்கும் சேனைகளின் ஆண்டவருடைய பெயரால் புனிதமாக்கப்பட்டுள்ளமையால் ஆண்டவர் அதன் மேல் தங்கியிருக்கிறார்.
3. அவர்கள் அந்தக் கடவுட் பேழையை ஒரு புதுத் தேரின் மேல் ஏற்றி, அதைக் காபாவில் உள்ள அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபுடைய புதல்வர்களான ஓசாவும் ஆகியோவும் அப் புதுத்தேரை ஓட்டினார்கள்.
4. இவர்கள் கடவுட் பேழையை ஏற்றிக் காபாவில் அதை வைத்திருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டு வருகையில், ஆகியோ கடவுட் பேழைக்கு முன் நடக்க,
5. தாவீதும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மரத்தால் செய்யப்பட்ட யாழ், வீணை, சுரமண்டலத்தோடும், மேளதாளம் முதலிய இசைக் கருவிகளோடும் ஆடிப்பாடி வந்து கொண்டிருந்தார்கள்.
6. அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்த போது மாடுகள் மிரண்டு பேழையைக் கீழே சாய்த்துப் போட்டன. இதைக் கண்ட ஓசா அதைத் தன் கையால் தாங்கினான்.
7. அப்பொழுது ஆண்டவருக்கு ஓசாவின் மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவை முன்னிட்டு அவர் அவனை வீழ்த்தினார். ஓசா பேழையின் பக்கத்திலேயே விழுந்து இறந்தான்.
8. ஆண்டவர் ஓசாவை வீழ்த்தியதைப் பற்றித் தாவீது கவலைப் பட்டார். அவ்விடத்திற்கு இன்று வரை ஓசாவின் வீழ்ச்சி என்று பெயர்.
9. அன்று தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவராய், "ஆண்டவருடைய பேழை என்னிடத்தில் வருவது எப்படி" என்று சொல்லி,
10. அதை தாவீதின் நகருக்குக் கொண்டு வர விரும்பாது கேத்தையனான ஒபேதெதோமின் வீட்டிற்கு அதைத் திருப்பி விட்டார்.
11. ஆண்டவருடைய பேழை கேத்தையனான ஒபேதெதோம் வீட்டில் மூன்று திங்கள் தங்கியிருக்கையில், ஆண்டவர் ஒபேதெதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.
12. பல நாள் சென்ற பின்பு கடவுட் பேழையின் பொருட்டு ஆண்டவர் ஒபேதெதோமையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது போய் ஒபேதெதோமின் வீட்டிலிருந்து கடவுட் பேழையை மகிழ்ச்சியுடன் தாவீதின் நகருக்குக் கொண்டு வந்தார். தாவீதுடன் ஏழு பாடகர்க் குழுக்களும், பலிக்கு ஓர் இளங்கன்றும் இருந்தன.
13. ஆண்டவருடைய பேழையைத் தூக்கிச் சென்றவர்கள் ஆறு காலடி தூரம் சென்ற பின் அவர் ஒரு மாட்டையும் ஓர் ஆட்டுக் கடாயையும் பலியிடுவார்.
14. தாவீது சணல் நூலால் நெய்யப்பட்ட எபோதை அணிந்து கொண்டு முழு வலிமையோடும் ஆண்டவர் திருமுன் நடனமாடுவார்.
15. அவ்விதமே தாவீதும் இஸ்ராயேல் குடும்பத்தார் அனைவரும் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் எக்காளத் தொனியோடும் கொண்டு வந்தனர்.
16. ஆண்டவரின் பேழை தாவீதின் நகருக்குள் நுழைந்தபோது சவுலின் மகள் மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்து, தாவீது அரசர் ஆண்டவர் முன்னிலையில் குதித்துக் கூத்தாடுவதைக் கண்டு தனக்குள்ளே அவரைப் பழித்தாள்.
17. பிறகு அவர்கள் கடவுட் பேழையை உள்ளே கொண்டு வந்து, தாவீது அதற்கெனத் தயாரித்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தார்கள். அப்பொழுது தாவீது ஆண்டவர் திருமுன் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தினார்.
18. அவர் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்திய பின், சேனைகளின் ஆண்டவருடைய பெயரால் மக்களை ஆசீர்வதித்து,
19. பெரும் திரளாய்க் கூடியிருந்த இஸ்ராயேலின் ஆண், பெண் அனைவருக்கும் ஆளுக்கொரு மாட்டுக்கறித் துண்டும் அப்பமும் எண்ணெயில் பொரித்த மிருதுவான மாவுமாகப் பகிர்ந்துகொடுத்தார். பிறகு மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் ஏகினர்.
20. அப்பொழுது தாவீது தம் வீட்டாரை ஆசீர்வதிக்கத் திரும்பி வந்த போது, சவுலின் மகள் மிக்கோல் தாவீதை எதிர் கொண்டு வந்து அவரை நோக்கி, "கோமாளி தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல் இன்று இஸ்ராயேலின் அரசர் தம் ஊழியர்களுடைய பணிப் பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளை உரிந்து போட்டாரே; இது அவருக்கு எவ்வளவு பெருமை!" என்று சொன்னாள்.
21. அதற்கு தாவீது, "உன் தந்தையையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் விட என்னைத் தேர்ந்துகொண்டு, இஸ்ராயேலில் ஆண்டவரின் மக்களுக்குத் தலைவனாய் இருக்கும்படி எனக்குக் கட்டளையிட்ட ஆண்டவர் திருமுன், நான் ஆடிப்பாடி நடனம் செய்தது முறையே;
22. நான் அதை விட இன்னும் கடையனும், என் கண்களுக்குத் தாழ்ந்தவனும் ஆவேன்; ஆயினும் நீ சொன்ன பணிப் பெண்களுக்கு முன் நான் மாட்சி பெற்றவனாய் விளங்குவேன்" என்று பதில் சொன்னார்.
23. அதனால் சவுலின் மகளாகிய மிக்கோலுக்குச் சாகும் வரை ஒரு பிள்ளை கூடப் பிறக்கவில்லை.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 24
1 மறுபடியும் தாவீது எல்லா இஸ்ராயேலருக்குள்ளும் தேர்ந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம் பேரை ஒன்று திரட்டினார். 2 தாவீதும் அவரோடு இருந்த யூதாவின் மனிதர்களும் புறப்பட்டுக் கடவுளின் பேழையைக் கொண்டு வரும்படி சென்றார்கள். அப்பேழை கெருபீம்களின் நடுவே வீற்றிருக்கும் சேனைகளின் ஆண்டவருடைய பெயரால் புனிதமாக்கப்பட்டுள்ளமையால் ஆண்டவர் அதன் மேல் தங்கியிருக்கிறார். 3 அவர்கள் அந்தக் கடவுட் பேழையை ஒரு புதுத் தேரின் மேல் ஏற்றி, அதைக் காபாவில் உள்ள அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். அபினதாபுடைய புதல்வர்களான ஓசாவும் ஆகியோவும் அப் புதுத்தேரை ஓட்டினார்கள். 4 இவர்கள் கடவுட் பேழையை ஏற்றிக் காபாவில் அதை வைத்திருந்த அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டு வருகையில், ஆகியோ கடவுட் பேழைக்கு முன் நடக்க, 5 தாவீதும் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் மரத்தால் செய்யப்பட்ட யாழ், வீணை, சுரமண்டலத்தோடும், மேளதாளம் முதலிய இசைக் கருவிகளோடும் ஆடிப்பாடி வந்து கொண்டிருந்தார்கள். 6 அவர்கள் நாக்கோனின் களத்திற்கு வந்த போது மாடுகள் மிரண்டு பேழையைக் கீழே சாய்த்துப் போட்டன. இதைக் கண்ட ஓசா அதைத் தன் கையால் தாங்கினான். 7 அப்பொழுது ஆண்டவருக்கு ஓசாவின் மேல் கோபம் மூண்டது. அவனுடைய துணிவை முன்னிட்டு அவர் அவனை வீழ்த்தினார். ஓசா பேழையின் பக்கத்திலேயே விழுந்து இறந்தான். 8 ஆண்டவர் ஓசாவை வீழ்த்தியதைப் பற்றித் தாவீது கவலைப் பட்டார். அவ்விடத்திற்கு இன்று வரை ஓசாவின் வீழ்ச்சி என்று பெயர். 9 அன்று தாவீது ஆண்டவருக்கு மிகவும் அஞ்சினவராய், "ஆண்டவருடைய பேழை என்னிடத்தில் வருவது எப்படி" என்று சொல்லி, 10 அதை தாவீதின் நகருக்குக் கொண்டு வர விரும்பாது கேத்தையனான ஒபேதெதோமின் வீட்டிற்கு அதைத் திருப்பி விட்டார். 11 ஆண்டவருடைய பேழை கேத்தையனான ஒபேதெதோம் வீட்டில் மூன்று திங்கள் தங்கியிருக்கையில், ஆண்டவர் ஒபேதெதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். 12 பல நாள் சென்ற பின்பு கடவுட் பேழையின் பொருட்டு ஆண்டவர் ஒபேதெதோமையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது தாவீது போய் ஒபேதெதோமின் வீட்டிலிருந்து கடவுட் பேழையை மகிழ்ச்சியுடன் தாவீதின் நகருக்குக் கொண்டு வந்தார். தாவீதுடன் ஏழு பாடகர்க் குழுக்களும், பலிக்கு ஓர் இளங்கன்றும் இருந்தன. 13 ஆண்டவருடைய பேழையைத் தூக்கிச் சென்றவர்கள் ஆறு காலடி தூரம் சென்ற பின் அவர் ஒரு மாட்டையும் ஓர் ஆட்டுக் கடாயையும் பலியிடுவார். 14 தாவீது சணல் நூலால் நெய்யப்பட்ட எபோதை அணிந்து கொண்டு முழு வலிமையோடும் ஆண்டவர் திருமுன் நடனமாடுவார். 15 அவ்விதமே தாவீதும் இஸ்ராயேல் குடும்பத்தார் அனைவரும் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை மகிழ்ச்சி ஆரவாரத்தோடும் எக்காளத் தொனியோடும் கொண்டு வந்தனர். 16 ஆண்டவரின் பேழை தாவீதின் நகருக்குள் நுழைந்தபோது சவுலின் மகள் மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்து, தாவீது அரசர் ஆண்டவர் முன்னிலையில் குதித்துக் கூத்தாடுவதைக் கண்டு தனக்குள்ளே அவரைப் பழித்தாள். 17 பிறகு அவர்கள் கடவுட் பேழையை உள்ளே கொண்டு வந்து, தாவீது அதற்கெனத் தயாரித்திருந்த கூடாரத்தின் நடுவே வைத்தார்கள். அப்பொழுது தாவீது ஆண்டவர் திருமுன் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தினார். 18 அவர் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்திய பின், சேனைகளின் ஆண்டவருடைய பெயரால் மக்களை ஆசீர்வதித்து, 19 பெரும் திரளாய்க் கூடியிருந்த இஸ்ராயேலின் ஆண், பெண் அனைவருக்கும் ஆளுக்கொரு மாட்டுக்கறித் துண்டும் அப்பமும் எண்ணெயில் பொரித்த மிருதுவான மாவுமாகப் பகிர்ந்துகொடுத்தார். பிறகு மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் ஏகினர். 20 அப்பொழுது தாவீது தம் வீட்டாரை ஆசீர்வதிக்கத் திரும்பி வந்த போது, சவுலின் மகள் மிக்கோல் தாவீதை எதிர் கொண்டு வந்து அவரை நோக்கி, "கோமாளி தன் ஆடைகளைக் கழற்றுவதுபோல் இன்று இஸ்ராயேலின் அரசர் தம் ஊழியர்களுடைய பணிப் பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளை உரிந்து போட்டாரே; இது அவருக்கு எவ்வளவு பெருமை!" என்று சொன்னாள். 21 அதற்கு தாவீது, "உன் தந்தையையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் விட என்னைத் தேர்ந்துகொண்டு, இஸ்ராயேலில் ஆண்டவரின் மக்களுக்குத் தலைவனாய் இருக்கும்படி எனக்குக் கட்டளையிட்ட ஆண்டவர் திருமுன், நான் ஆடிப்பாடி நடனம் செய்தது முறையே; 22 நான் அதை விட இன்னும் கடையனும், என் கண்களுக்குத் தாழ்ந்தவனும் ஆவேன்; ஆயினும் நீ சொன்ன பணிப் பெண்களுக்கு முன் நான் மாட்சி பெற்றவனாய் விளங்குவேன்" என்று பதில் சொன்னார். 23 அதனால் சவுலின் மகளாகிய மிக்கோலுக்குச் சாகும் வரை ஒரு பிள்ளை கூடப் பிறக்கவில்லை.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References