தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
1. தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரை ஆலோசனை கேட்டபோது ஆண்டவர், "சவுலின் பொருட்டு, இரத்த வெறியரான அவன் வீட்டார் பொருட்டும் இது உண்டாயிற்று; ஏனென்றால் சவுல் காபாவோனியரைச் கொலை செய்தான் அல்லவா?" என்று விடை பகர்ந்தார்.
2. ஆகையால் அரசர் காபாவோனியரை வரவழைத்தார். இந்தக் காபாவோனியர் இஸ்ராயேல் மக்கள் அல்லர்; எஞ்சியிருந்த அமோறையரே. இஸ்ராயேல் மக்கள் அவர்களைக் காப்பதாக வாக்களித்திருந்தனர். சவுலோ இஸ்ராயேல் புதல்வர்பாலும், யூதா புதல்வர்பாலும் ஆர்வம் கொண்டவர் போன்று அவர்களை அழிக்க விரும்பினார்.
3. தாவீது காபாவோனியரைப் பார்த்து, "நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவருடைய உரிமைப் பங்கை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் செய்யவேண்டிய பரிகாரம் என்ன?" என்று கேட்டார்.
4. காபாவோனியர் அவரை நோக்கி, "எங்கள் பிரச்சனை பொன்னைப் பற்றியோ வெள்ளியைப் பற்றியோ அன்று; சவுலையும் அவர் வீட்டாரையும் பற்றியதே. அன்றியும் இஸ்ராயேலரில் யாராவது சாக வேண்டும் என்று நாங்கள் விரும்புவதில்லை" என்றார்கள். அப்பொழுது அரசர், "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார்.
5. அவர்கள் அரசரை நோக்கி, "எங்களை நசுக்கி அநீதியாய்த் துன்பப்படுத்தின மனிதன் எவனோ அவனுடைய வம்சத்தில் ஒருவன் முதலாய் இஸ்ராயேலின் எல்லைகளுக்குள் இராதபடி நாங்கள் அழித்தொழிக்க வேண்டும்.
6. சவுலின் புதல்வரில் எழுவரை எங்கள் கையில் ஒப்படைக்கட்டும் எற்கெனவே ஆண்டவர் தேர்ந்து கொண்ட சவுலின் நகராகிய காபாவோன் நகரத்திலேயே நாங்கள் ஆண்டவருக்கென்று அவர்களைச் சிலுவையில் அறைவோம்" என்றனர். அதற்குத் தாவீது, "அவர்களை நான் ஒப்படைப்பேன்" என்றார்.
7. ஆயினும் தாவீது சவுலின் மகனான யோனத்தாசுக்குப் பிறந்த மிபிபோசேத்தை உயிருடன் காப்பாற்றினார். ஏனெனில், சவுலின் மகனான யோனத்தாசும் தாவீதும் மிபிபோசேத்தைக் குறித்து ஆண்டவர் பெயரில் ஆணையிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குறுதி அளித்திருந்தனர்.
8. ஆயாவின் மகளான ரெசுபா சவுலுக்குப் பெற்ற இரு புதல்வரான ஆர்மோனியையும் மிபிபோசேத்தையும், சவுலின் புதல்வியான மிக்கோலாள் மோலாத்தியனான பெர்செல்லாயின் மகன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து புதல்வரையும் அவர் பிடித்து,
9. அவர்களைக் காபாவோனியரின் கையில் ஒப்படைத்தார். காபாவோனியர் அவர்களை ஆண்டவர் திருமுன் மலையின் மேல் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் எழுவரும் வாற்கோதுமை அறுவடைக் கால ஆரம்ப நாட்களில் கொலை செய்யப்பட்டனர்.
10. அப்போது ஆயாவின் புதல்வியான ரெசுபா ஒரு கம்பளித் துணியை எடுத்து ஒரு பாறையின் மேல் அதை விரித்து, அறுவடை தொடங்கிய நாள் முதல் மழைக்காலம் வரை காவல் காவல் பூண்டு, பகலில் வானத்துப் பறைவகளாகிலும், இரவில் காட்டு விலங்குகளாகிலும் அவர்களின் உடல்களை உண்ணாதபடி பார்த்து வந்தாள்.
11. சவுலின் வைப்பாட்டியும் ஆயாவின் மகளுமான ரெசுபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
12. முன்பு பிலிஸ்தியர் கெல்போயே மலையில் சவுலைக் கொன்ற பிற்பாடு, சவுலையும் அவர் மகன் யோனத்தாசையும் பெத்சான் நகர வீதியில் தொங்க விட்டிருந்தனர்; யாபேசு காலாத் மனிதரோ அவர்களுடைய எலும்புகளைத் திருடிச் சென்றிருந்தனர். எனவே தாவீது புறப்பட்டுச் சென்று அவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வந்தார்.
13. சவுலின் எலும்புகளையும், அவர் மகன் யோனத்தாசின் எலும்புகளையும் அங்கிருந்து கொணர்ந்து, சிலுவையில் அறையப்பட்டோரின் எலும்புகளோடு அவற்றைச் சேர்த்து வைத்தார்.
14. இவற்றோடு சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தாசின் எலும்புகளையும் பெஞ்சமின் நாட்டில் சவுலின் தந்தையான சீசு என்பவருடைய கல்லறைக்குப் பக்கத்தில் புதைத்தார். அரசர் கட்டளையிட்டபடி எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் ஆண்டவர் நாட்டின் மீது இரக்கம் காட்டினார்.
15. பின்பு பிலிஸ்தியர் இஸ்ராயேலரோடு திரும்பவும் போர் தொடுத்தனர். எனவே, தாவீதும் அவர் படைவீரர்களும் புறப்பட்டு வந்து பிலிஸ்தியரோடு போராடிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் தாவீது களைப்புற்று இருந்தார்.
16. அந்நேரத்தில் முந்நூறு பலம் நிறையுள்ள வெண்கல ஈட்டியைக் கையிலேந்திப் புது வாளை அரையிலே கட்டிக் கொண்டிருந்த எஸ்பிபெனோப் என்னும் அரபா குலத்தினன் ஒருவன் தாவீதைக் கொல்ல முயன்றான்.
17. ஆனால் சார்வியாவின் மகன் அபிசாயி தாவீதுக்கு உதவியாக வந்து பிலிஸ்தியனைக் கொன்று போட்டான். அப்போது தாவீதுடைய மனிதர், "நீர் இஸ்ராயேலின் ஒளி விளக்கு; அது அணைந்து போகாதபடி நீர் இனி எங்களோடு போருக்கு வர வேண்டாம்" என்று அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.
18. பிலிஸ்தியரோடு திரும்பவும் கோபில் போர் நடந்தது. அப்போது உசாத்தியனான சொபொக்காயி என்பவன் அரக்கர் இனத்தைச் சேர்ந்த அரபா குலத்தினனான சாப் என்பவனைக் கொன்று போட்டான்.
19. பிலிஸ்தியரோடு மூன்றாம் முறையும் போர் மூண்டது, அதில் பெத்லகேம் ஊரைச் சேர்ந்த பலவண்ண நெசவாளனான சால்தூசின் மகன் அதேயோதாத் என்பவன் கேத்தையனான கோலியாத்தை வெட்டி வீழ்த்தினான். கோலியாத்தினுடைய ஈட்டியின் கோல் நெசவாளர் பயன் படுத்தும் படைமரம் போல் இருக்கும்.
20. கேத்தில் நான்காவது போர் நடந்தது. அதில் அரபா குலத்தைச் சேர்ந்த மிக வளர்த்தியான ஒரு மனிதன் இருந்தான். கைகளிலும் கால்களிலும் ஆறு ஆறு விரல்களிருந்ததால் அவனுக்கு மொத்தம் இருபத்து நான்கு விரல்கள் இருந்தன.
21. அவன் இஸ்ராயேலரைப் பழித்துப் பேசினான். தாவீதின் சகோதரனான சாமாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்று போட்டான்.
22. இந் நால்வரும் கேத்தில் அரபா குலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவர்தம் வீரருடைய கையினாலும் கொலையுண்டு மடிந்தனர்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 24
1 தாவீதின் காலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பஞ்சம் ஏற்பட்டது. தாவீது ஆண்டவரை ஆலோசனை கேட்டபோது ஆண்டவர், "சவுலின் பொருட்டு, இரத்த வெறியரான அவன் வீட்டார் பொருட்டும் இது உண்டாயிற்று; ஏனென்றால் சவுல் காபாவோனியரைச் கொலை செய்தான் அல்லவா?" என்று விடை பகர்ந்தார். 2 ஆகையால் அரசர் காபாவோனியரை வரவழைத்தார். இந்தக் காபாவோனியர் இஸ்ராயேல் மக்கள் அல்லர்; எஞ்சியிருந்த அமோறையரே. இஸ்ராயேல் மக்கள் அவர்களைக் காப்பதாக வாக்களித்திருந்தனர். சவுலோ இஸ்ராயேல் புதல்வர்பாலும், யூதா புதல்வர்பாலும் ஆர்வம் கொண்டவர் போன்று அவர்களை அழிக்க விரும்பினார். 3 தாவீது காபாவோனியரைப் பார்த்து, "நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன? நீங்கள் ஆண்டவருடைய உரிமைப் பங்கை ஆசீர்வதிக்கும் பொருட்டு நான் செய்யவேண்டிய பரிகாரம் என்ன?" என்று கேட்டார். 4 காபாவோனியர் அவரை நோக்கி, "எங்கள் பிரச்சனை பொன்னைப் பற்றியோ வெள்ளியைப் பற்றியோ அன்று; சவுலையும் அவர் வீட்டாரையும் பற்றியதே. அன்றியும் இஸ்ராயேலரில் யாராவது சாக வேண்டும் என்று நாங்கள் விரும்புவதில்லை" என்றார்கள். அப்பொழுது அரசர், "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார். 5 அவர்கள் அரசரை நோக்கி, "எங்களை நசுக்கி அநீதியாய்த் துன்பப்படுத்தின மனிதன் எவனோ அவனுடைய வம்சத்தில் ஒருவன் முதலாய் இஸ்ராயேலின் எல்லைகளுக்குள் இராதபடி நாங்கள் அழித்தொழிக்க வேண்டும். 6 சவுலின் புதல்வரில் எழுவரை எங்கள் கையில் ஒப்படைக்கட்டும் எற்கெனவே ஆண்டவர் தேர்ந்து கொண்ட சவுலின் நகராகிய காபாவோன் நகரத்திலேயே நாங்கள் ஆண்டவருக்கென்று அவர்களைச் சிலுவையில் அறைவோம்" என்றனர். அதற்குத் தாவீது, "அவர்களை நான் ஒப்படைப்பேன்" என்றார். 7 ஆயினும் தாவீது சவுலின் மகனான யோனத்தாசுக்குப் பிறந்த மிபிபோசேத்தை உயிருடன் காப்பாற்றினார். ஏனெனில், சவுலின் மகனான யோனத்தாசும் தாவீதும் மிபிபோசேத்தைக் குறித்து ஆண்டவர் பெயரில் ஆணையிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குறுதி அளித்திருந்தனர். 8 ஆயாவின் மகளான ரெசுபா சவுலுக்குப் பெற்ற இரு புதல்வரான ஆர்மோனியையும் மிபிபோசேத்தையும், சவுலின் புதல்வியான மிக்கோலாள் மோலாத்தியனான பெர்செல்லாயின் மகன் ஆதரியேலுக்குப் பெற்ற ஐந்து புதல்வரையும் அவர் பிடித்து, 9 அவர்களைக் காபாவோனியரின் கையில் ஒப்படைத்தார். காபாவோனியர் அவர்களை ஆண்டவர் திருமுன் மலையின் மேல் சிலுவையில் அறைந்தார்கள். அவர்கள் எழுவரும் வாற்கோதுமை அறுவடைக் கால ஆரம்ப நாட்களில் கொலை செய்யப்பட்டனர். 10 அப்போது ஆயாவின் புதல்வியான ரெசுபா ஒரு கம்பளித் துணியை எடுத்து ஒரு பாறையின் மேல் அதை விரித்து, அறுவடை தொடங்கிய நாள் முதல் மழைக்காலம் வரை காவல் காவல் பூண்டு, பகலில் வானத்துப் பறைவகளாகிலும், இரவில் காட்டு விலங்குகளாகிலும் அவர்களின் உடல்களை உண்ணாதபடி பார்த்து வந்தாள். 11 சவுலின் வைப்பாட்டியும் ஆயாவின் மகளுமான ரெசுபா செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. 12 முன்பு பிலிஸ்தியர் கெல்போயே மலையில் சவுலைக் கொன்ற பிற்பாடு, சவுலையும் அவர் மகன் யோனத்தாசையும் பெத்சான் நகர வீதியில் தொங்க விட்டிருந்தனர்; யாபேசு காலாத் மனிதரோ அவர்களுடைய எலும்புகளைத் திருடிச் சென்றிருந்தனர். எனவே தாவீது புறப்பட்டுச் சென்று அவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வந்தார். 13 சவுலின் எலும்புகளையும், அவர் மகன் யோனத்தாசின் எலும்புகளையும் அங்கிருந்து கொணர்ந்து, சிலுவையில் அறையப்பட்டோரின் எலும்புகளோடு அவற்றைச் சேர்த்து வைத்தார். 14 இவற்றோடு சவுலின் எலும்புகளையும் அவர் மகன் யோனத்தாசின் எலும்புகளையும் பெஞ்சமின் நாட்டில் சவுலின் தந்தையான சீசு என்பவருடைய கல்லறைக்குப் பக்கத்தில் புதைத்தார். அரசர் கட்டளையிட்டபடி எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் ஆண்டவர் நாட்டின் மீது இரக்கம் காட்டினார். 15 பின்பு பிலிஸ்தியர் இஸ்ராயேலரோடு திரும்பவும் போர் தொடுத்தனர். எனவே, தாவீதும் அவர் படைவீரர்களும் புறப்பட்டு வந்து பிலிஸ்தியரோடு போராடிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் தாவீது களைப்புற்று இருந்தார். 16 அந்நேரத்தில் முந்நூறு பலம் நிறையுள்ள வெண்கல ஈட்டியைக் கையிலேந்திப் புது வாளை அரையிலே கட்டிக் கொண்டிருந்த எஸ்பிபெனோப் என்னும் அரபா குலத்தினன் ஒருவன் தாவீதைக் கொல்ல முயன்றான். 17 ஆனால் சார்வியாவின் மகன் அபிசாயி தாவீதுக்கு உதவியாக வந்து பிலிஸ்தியனைக் கொன்று போட்டான். அப்போது தாவீதுடைய மனிதர், "நீர் இஸ்ராயேலின் ஒளி விளக்கு; அது அணைந்து போகாதபடி நீர் இனி எங்களோடு போருக்கு வர வேண்டாம்" என்று அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர். 18 பிலிஸ்தியரோடு திரும்பவும் கோபில் போர் நடந்தது. அப்போது உசாத்தியனான சொபொக்காயி என்பவன் அரக்கர் இனத்தைச் சேர்ந்த அரபா குலத்தினனான சாப் என்பவனைக் கொன்று போட்டான். 19 பிலிஸ்தியரோடு மூன்றாம் முறையும் போர் மூண்டது, அதில் பெத்லகேம் ஊரைச் சேர்ந்த பலவண்ண நெசவாளனான சால்தூசின் மகன் அதேயோதாத் என்பவன் கேத்தையனான கோலியாத்தை வெட்டி வீழ்த்தினான். கோலியாத்தினுடைய ஈட்டியின் கோல் நெசவாளர் பயன் படுத்தும் படைமரம் போல் இருக்கும். 20 கேத்தில் நான்காவது போர் நடந்தது. அதில் அரபா குலத்தைச் சேர்ந்த மிக வளர்த்தியான ஒரு மனிதன் இருந்தான். கைகளிலும் கால்களிலும் ஆறு ஆறு விரல்களிருந்ததால் அவனுக்கு மொத்தம் இருபத்து நான்கு விரல்கள் இருந்தன. 21 அவன் இஸ்ராயேலரைப் பழித்துப் பேசினான். தாவீதின் சகோதரனான சாமாவின் மகன் யோனத்தான் அவனைக் கொன்று போட்டான். 22 இந் நால்வரும் கேத்தில் அரபா குலத்தில் பிறந்தவர்கள். இவர்கள் தாவீதின் கையினாலும் அவர்தம் வீரருடைய கையினாலும் கொலையுண்டு மடிந்தனர்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 21 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References