தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
1. அப்போது அக்கித்தோபேல் அப்சலோமை நேக்கி, "நான் பன்னீராயிரம் மனிதரைத் தேர்ந்து கொண்டு இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின் தொடர்வேன்.
2. இளைத்துக் களைத்துக் கைதளர்ந்துள்ள அவர் மேல் நான் பாய்ந்து, அவருடன் இருக்கிற மக்கள் அனைவரும் அவரை விட்டு ஓடிப்போகச் செய்வேன். பின்னர் அவரை வெட்டி வீழ்த்துவேன்.
3. பிறகு ஒரு மனிதன் திரும்பி வருவது போல் நான் மக்கள் எல்லாரையும் கொண்டு வருவேன். நீர் அவர் ஒருவரையே தேடுகிறீர் அன்றோ? அவ்விதம் செய்தால் மக்கள் எல்லாரும் சமாதானமாய் இருப்பார்கள்" என்றான்.
4. அவனது இக்கூற்று அப்சலோமுக்கும் இஸ்ராயேலின் பெரியோர் அனைவருக்கும் பிடித்திருந்தது.
5. ஆயினும் அப்சலோம், "அரக்கித்தனான கூசாயியை வரச் சொல்லுங்கள்; அவன் வாய்மொழியையும் கேட்போம்" என்றான்.
6. கூசாயி அப்சலோமிடம் வந்த போது, அப்சலோம் அவனைப் பார்த்து, "அக்கித்தோபேல் இவ்வாறு கூறியிருக்கிறாரே, நாம் அவ்வாறு செய்யலாமா? நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டான்.
7. கூசாயி அப்சலோமை நோக்கி, "அக்கித்தோபேல் இம்முறை சொன்ன ஆலோசனை நல்லதன்று" என்றான்.
8. மீண்டும் கூசாயி, "உம் தந்தையும் அவருடன் இருக்கிற மனிதரும் மிக்க வல்லமை வாய்ந்தவர்கள் என்றும், தன் குட்டிகளைப் பறிகொடுத்த பெண் கரடி காட்டைப் பாழாக்கி விடுவதுபோல் அவர்கள் அவ்வளவு வயிற்றெரிச்சல் கொண்டிருக்கிறார்கள் என்றும், சிறப்பாக உம் தந்தை போரில் சிறந்தவர் என்றும், அவர் மக்களோடு தங்குவதில்லை என்றும் நீர் அறிவீரே.
9. அவர் இப்பொழுது ஒரு குகையிலாவது தனக்குப் பிடித்தமான வேறெந்த இடத்திலாவது ஒளிந்திருப்பார். நம் வீரர்களில் யாரேனும் ஆரம்பத்திலேயே அடிபட்டு விழுந்தால் அதைக் கேட்கிற யாவரும் என்ன சொல்வார்கள்? அப்சலோமைப் பின்செல்லும் மக்களிடயே வீழ்ச்சி உண்டாயிற்று என்று அன்றோ சொல்லுவார்கள்?
10. அப்போது ஏறு போன்ற வீரர்கள் முதலாய்த் திடுக்கிட்டு அஞ்சி நடுங்குவார்கள். ஏனெனில் உம் தந்தை வலிமை வாய்ந்தவர் என்றும், அவரோடு இருக்கிறவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்தவர்கள் என்றும் இஸ்ராயேலர் எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.
11. ஆதலால் இது நல்ல யோசனை என்று எனக்குத் தோன்றுகிறது: அதாவது, தான் முதல் பெர்சபே வரை உள்ள கடற்கரை மணலைப்போல் இஸ்ராயேலர் எல்லாரும் முதன் முதல் உம்மிடம் திரண்டு வரட்டும்; நீர் அவர்களோடு இருக்க வேண்டும்.
12. அப்போது தாவீது எந்த இடத்தில் இருந்தாலும் சரி, நாம் அனைவரும் போய், பனி பூமியின் மேல் பெய்வது போல், அவர் மேல் பாய்ந்து அவரோடு இருக்கிற மனிதரில் ஒருவரையும் விட்டுவையோம்.
13. அவர் ஏதாவது ஒரு நகருக்குள் நுழைய நேரிட்டால், இஸ்ராயேலர் எல்லாரும் கூடி அந்நகரின் மதிலைச் சுற்றிலும் கயிறுகளைப் போட்டு அதன் ஒரு கல்கூட அங்கே நிற்காதபடி அதை முழுவதும் இடித்து ஆற்றில் போடுவார்கள்" என்றான்.
14. அப்சலோமும் இஸ்ராயேல் மனிதர் அனைவரும், "அக்கித்தோபேலின் ஆலோசனையை விட அரக்கித்தனான கூசாயியுடைய இந்த ஆலோசனையே சிறந்தது" என்றனர். இவ்வாறு ஆண்டவர், அப்சலோமுக்குத் தீங்கு நேரிடும் படி, அக்கித்தோபேலின் பயனுள்ள ஆலோசனை எடுபடாது போகச் செய்தார்.
15. பின்னர் கூசாயி குருக்களாகிய சாதோக்கையும் அபியாத்தாரையும் நோக்கி, "இவ்வாறெல்லாம் அக்கித்தோபேல் அப்சலோமுக்கும் இஸ்ராயேலின் பெரியோர்களுக்கும் அறிவுரை கூறியிருக்கிறார்; அதற்கு மாறாக நான் இவ்வாறெல்லாம் சொல்லியிருக்கிறேன்.
16. இப்பொழுதாவது நீங்கள் விரைவாய்த் தாவீதுக்கு ஆள் அனுப்பி, 'நீர் இன்று இரவு பாலைவனத்தின் வெளிகளில் தங்க வேண்டாம்; உமக்கும் உம்மோடு இருக்கிற மக்கள் எல்லாருக்கும் தீங்கு நேரிடாதபடிக்கு நீர் தாமதஞ் செய்யாமல் அக்கரைக்குப் போக வேண்டும்' என்று சொல்லச் சொல்லுங்கள்" என்றான்.
17. அந்நேரத்தில் யோனத்தாசும் அக்கிமாசும் ரோகேல் நீரூற்றண்டையில் இருந்தார்கள். ஓர் ஊழியக்காரி போய் அவர்களிடம் அதைச் சொல்ல, அவர்கள் தாவீது அரசருக்கு அச்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுப் போனார்கள். ஏனெனில் யாரும் காணாமலே அவர்கள் நகரில் நுழைதல் வேண்டும்.
18. ஆனால் ஒரு சிறுவன் அவர்களைக் கண்டு அதை அப்சலோமுக்கு அறிவித்தான். அவர்களோ விரைந்து சென்று பாகூரிமில் இருந்த ஒரு மனிதன் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கே கிணறு ஒன்று முற்றத்தில் இருந்தது; அதில் இறங்கினார்கள்.
19. அப்பொழுது வீட்டுக்காரி ஒரு போர்வையை எடுத்துக் கிணற்று வாயில் மேல் விரித்து அதன் மேல் தானியங்களைக் காயவைப்பது போல் அவற்றைப் பரப்பி வைத்தாள். இவ்வாறு அவர்கள் மறைந்திருந்த இடம் ஒருவருக்கும் தெரியாமல் போனது.
20. அப்சலோமின் ஊழியர்கள் அவ்வீட்டிற்குள் வந்து அப்பெண்ணை நோக்கி, "அக்கிமாசும் யோனத்தாசும் எங்கே?" என்று கேட்டனர். அவர்களுக்கு அப்பெண், "அவர்கள் இங்கே வந்து சிறிது நீர் பருகி விட்டு விரைவாய் வெளியேறி விட்டனர்" என்றாள். இவர்கள் தேடியும் காணாது யெருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
21. இவர்கள் போனபிறகு, அவர்கள் கிணற்றிலிருந்து மேலே ஏறிவந்து, தாவீது அரசரிடம் போய், "எழுந்து உடனே நதியைக் கடந்து போங்கள்; ஏனென்றால் அக்கித்தோபேல் தங்களுக்கு எதிராய் இவ்வாறெல்லாம் ஆலோசனை சொல்லி இருக்கிறான்" என்றார்கள்.
22. அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தார்கள். பொழுது விடியு முன் ஆற்றைக் கடக்காதவன் ஒருவனுமில்லை.
23. அக்கித்தோபேல் தான் கூறியபடி அவர்கள் நடக்கவில்லை என்று கண்டு, தன் கழுதைக்குச் சேணம் இட்டு அதன் மேலேறித் தன் ஊரிலிருக்கிற வீட்டுக்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்கு படுத்தி விட்டு, நான்று கொண்டு மடிந்தான். அவன் தந்தையின் கல்லறையில் அவனைப் புதைத்தார்கள்.
24. தாவீது தம் பாளையத்திற்கு வந்து சேர்ந்தார். அப்சலோமோ இஸ்ராயேலின் எல்லா மனிதரோடும் யோர்தானைக் கடந்து சென்றான்.
25. அப்சலோம் யோவாபுக்கு பதிலாக அமாசாவைப் படைத் தலைவனாக ஏற்படுத்தினான். அமாசாவோ எஸ்ராயேலியனான எத்திரா என்றதொரு மனிதனுக்குப் பிறந்தவன். இவன் அபிகாயிலை மணந்திருந்தான். இவள் நாவாசின் மகளும் யோவாபைப் பெற்ற தாயாகிய சார்வியாவின் சகோதரியும் ஆவாள்.
26. இஸ்ராயேல் மக்களும் அப்சலோமும் காலாத் நாட்டில் பாளையம் இறங்கினார்கள்.
27. தாவீது கஸ்திரா என்ற பாளையத்தை அடைந்த போது, அம்மோன் புதல்வருடைய நாட்டின் இராப்பாத் ஊரானாகிய சோபி என்ற நாகாசின் மகனும், லோதேபார் ஊரானான மாகீர் என்ற அம்மியேலின் மகனும், ரோகிலிம் ஊரானும் காலாத் நாட்டானுமாகிய பெர்ஜலாயியும்,
28. தாவீதிடம் வந்து அவருக்கு மெத்தைகள், கம்பளங்கள், மண்பாண்டங்கள், கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம்,
29. மொச்சை, அவரை, சீசேர் பயறு, தேன், வெண்ணெய், ஆடுகள், கொழுத்த கன்றுகள் முதலியவற்றைக் காணிக்கையாய்க் கொடுத்தார்கள். அவர்கள் இவற்றை எல்லாம் தாவீதும் அவரோடு இருந்த மக்களும் உண்ணும்படி கொண்டு வந்திருந்தார்கள். ஏனெனில், அம் மக்கள் பாலைவனத்தில் களைத்துப் பசியும் தாகமுமாய் இருப்பார்கள் என்று அவர்கள் எண்ணியிருந்தனர்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 24
1 அப்போது அக்கித்தோபேல் அப்சலோமை நேக்கி, "நான் பன்னீராயிரம் மனிதரைத் தேர்ந்து கொண்டு இன்றிரவே புறப்பட்டுத் தாவீதைப் பின் தொடர்வேன். 2 இளைத்துக் களைத்துக் கைதளர்ந்துள்ள அவர் மேல் நான் பாய்ந்து, அவருடன் இருக்கிற மக்கள் அனைவரும் அவரை விட்டு ஓடிப்போகச் செய்வேன். பின்னர் அவரை வெட்டி வீழ்த்துவேன். 3 பிறகு ஒரு மனிதன் திரும்பி வருவது போல் நான் மக்கள் எல்லாரையும் கொண்டு வருவேன். நீர் அவர் ஒருவரையே தேடுகிறீர் அன்றோ? அவ்விதம் செய்தால் மக்கள் எல்லாரும் சமாதானமாய் இருப்பார்கள்" என்றான். 4 அவனது இக்கூற்று அப்சலோமுக்கும் இஸ்ராயேலின் பெரியோர் அனைவருக்கும் பிடித்திருந்தது. 5 ஆயினும் அப்சலோம், "அரக்கித்தனான கூசாயியை வரச் சொல்லுங்கள்; அவன் வாய்மொழியையும் கேட்போம்" என்றான். 6 கூசாயி அப்சலோமிடம் வந்த போது, அப்சலோம் அவனைப் பார்த்து, "அக்கித்தோபேல் இவ்வாறு கூறியிருக்கிறாரே, நாம் அவ்வாறு செய்யலாமா? நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டான். 7 கூசாயி அப்சலோமை நோக்கி, "அக்கித்தோபேல் இம்முறை சொன்ன ஆலோசனை நல்லதன்று" என்றான். 8 மீண்டும் கூசாயி, "உம் தந்தையும் அவருடன் இருக்கிற மனிதரும் மிக்க வல்லமை வாய்ந்தவர்கள் என்றும், தன் குட்டிகளைப் பறிகொடுத்த பெண் கரடி காட்டைப் பாழாக்கி விடுவதுபோல் அவர்கள் அவ்வளவு வயிற்றெரிச்சல் கொண்டிருக்கிறார்கள் என்றும், சிறப்பாக உம் தந்தை போரில் சிறந்தவர் என்றும், அவர் மக்களோடு தங்குவதில்லை என்றும் நீர் அறிவீரே. 9 அவர் இப்பொழுது ஒரு குகையிலாவது தனக்குப் பிடித்தமான வேறெந்த இடத்திலாவது ஒளிந்திருப்பார். நம் வீரர்களில் யாரேனும் ஆரம்பத்திலேயே அடிபட்டு விழுந்தால் அதைக் கேட்கிற யாவரும் என்ன சொல்வார்கள்? அப்சலோமைப் பின்செல்லும் மக்களிடயே வீழ்ச்சி உண்டாயிற்று என்று அன்றோ சொல்லுவார்கள்? 10 அப்போது ஏறு போன்ற வீரர்கள் முதலாய்த் திடுக்கிட்டு அஞ்சி நடுங்குவார்கள். ஏனெனில் உம் தந்தை வலிமை வாய்ந்தவர் என்றும், அவரோடு இருக்கிறவர்கள் அனைவரும் ஆற்றல் படைத்தவர்கள் என்றும் இஸ்ராயேலர் எல்லாரும் அறிந்து கொள்வார்கள். 11 ஆதலால் இது நல்ல யோசனை என்று எனக்குத் தோன்றுகிறது: அதாவது, தான் முதல் பெர்சபே வரை உள்ள கடற்கரை மணலைப்போல் இஸ்ராயேலர் எல்லாரும் முதன் முதல் உம்மிடம் திரண்டு வரட்டும்; நீர் அவர்களோடு இருக்க வேண்டும். 12 அப்போது தாவீது எந்த இடத்தில் இருந்தாலும் சரி, நாம் அனைவரும் போய், பனி பூமியின் மேல் பெய்வது போல், அவர் மேல் பாய்ந்து அவரோடு இருக்கிற மனிதரில் ஒருவரையும் விட்டுவையோம். 13 அவர் ஏதாவது ஒரு நகருக்குள் நுழைய நேரிட்டால், இஸ்ராயேலர் எல்லாரும் கூடி அந்நகரின் மதிலைச் சுற்றிலும் கயிறுகளைப் போட்டு அதன் ஒரு கல்கூட அங்கே நிற்காதபடி அதை முழுவதும் இடித்து ஆற்றில் போடுவார்கள்" என்றான். 14 அப்சலோமும் இஸ்ராயேல் மனிதர் அனைவரும், "அக்கித்தோபேலின் ஆலோசனையை விட அரக்கித்தனான கூசாயியுடைய இந்த ஆலோசனையே சிறந்தது" என்றனர். இவ்வாறு ஆண்டவர், அப்சலோமுக்குத் தீங்கு நேரிடும் படி, அக்கித்தோபேலின் பயனுள்ள ஆலோசனை எடுபடாது போகச் செய்தார். 15 பின்னர் கூசாயி குருக்களாகிய சாதோக்கையும் அபியாத்தாரையும் நோக்கி, "இவ்வாறெல்லாம் அக்கித்தோபேல் அப்சலோமுக்கும் இஸ்ராயேலின் பெரியோர்களுக்கும் அறிவுரை கூறியிருக்கிறார்; அதற்கு மாறாக நான் இவ்வாறெல்லாம் சொல்லியிருக்கிறேன். 16 இப்பொழுதாவது நீங்கள் விரைவாய்த் தாவீதுக்கு ஆள் அனுப்பி, 'நீர் இன்று இரவு பாலைவனத்தின் வெளிகளில் தங்க வேண்டாம்; உமக்கும் உம்மோடு இருக்கிற மக்கள் எல்லாருக்கும் தீங்கு நேரிடாதபடிக்கு நீர் தாமதஞ் செய்யாமல் அக்கரைக்குப் போக வேண்டும்' என்று சொல்லச் சொல்லுங்கள்" என்றான். 17 அந்நேரத்தில் யோனத்தாசும் அக்கிமாசும் ரோகேல் நீரூற்றண்டையில் இருந்தார்கள். ஓர் ஊழியக்காரி போய் அவர்களிடம் அதைச் சொல்ல, அவர்கள் தாவீது அரசருக்கு அச்செய்தியை அறிவிக்கப் புறப்பட்டுப் போனார்கள். ஏனெனில் யாரும் காணாமலே அவர்கள் நகரில் நுழைதல் வேண்டும். 18 ஆனால் ஒரு சிறுவன் அவர்களைக் கண்டு அதை அப்சலோமுக்கு அறிவித்தான். அவர்களோ விரைந்து சென்று பாகூரிமில் இருந்த ஒரு மனிதன் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கே கிணறு ஒன்று முற்றத்தில் இருந்தது; அதில் இறங்கினார்கள். 19 அப்பொழுது வீட்டுக்காரி ஒரு போர்வையை எடுத்துக் கிணற்று வாயில் மேல் விரித்து அதன் மேல் தானியங்களைக் காயவைப்பது போல் அவற்றைப் பரப்பி வைத்தாள். இவ்வாறு அவர்கள் மறைந்திருந்த இடம் ஒருவருக்கும் தெரியாமல் போனது. 20 அப்சலோமின் ஊழியர்கள் அவ்வீட்டிற்குள் வந்து அப்பெண்ணை நோக்கி, "அக்கிமாசும் யோனத்தாசும் எங்கே?" என்று கேட்டனர். அவர்களுக்கு அப்பெண், "அவர்கள் இங்கே வந்து சிறிது நீர் பருகி விட்டு விரைவாய் வெளியேறி விட்டனர்" என்றாள். இவர்கள் தேடியும் காணாது யெருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 21 இவர்கள் போனபிறகு, அவர்கள் கிணற்றிலிருந்து மேலே ஏறிவந்து, தாவீது அரசரிடம் போய், "எழுந்து உடனே நதியைக் கடந்து போங்கள்; ஏனென்றால் அக்கித்தோபேல் தங்களுக்கு எதிராய் இவ்வாறெல்லாம் ஆலோசனை சொல்லி இருக்கிறான்" என்றார்கள். 22 அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்கள் அனைவரும் யோர்தானைக் கடந்தார்கள். பொழுது விடியு முன் ஆற்றைக் கடக்காதவன் ஒருவனுமில்லை. 23 அக்கித்தோபேல் தான் கூறியபடி அவர்கள் நடக்கவில்லை என்று கண்டு, தன் கழுதைக்குச் சேணம் இட்டு அதன் மேலேறித் தன் ஊரிலிருக்கிற வீட்டுக்குப் போய் தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்கு படுத்தி விட்டு, நான்று கொண்டு மடிந்தான். அவன் தந்தையின் கல்லறையில் அவனைப் புதைத்தார்கள். 24 தாவீது தம் பாளையத்திற்கு வந்து சேர்ந்தார். அப்சலோமோ இஸ்ராயேலின் எல்லா மனிதரோடும் யோர்தானைக் கடந்து சென்றான். 25 அப்சலோம் யோவாபுக்கு பதிலாக அமாசாவைப் படைத் தலைவனாக ஏற்படுத்தினான். அமாசாவோ எஸ்ராயேலியனான எத்திரா என்றதொரு மனிதனுக்குப் பிறந்தவன். இவன் அபிகாயிலை மணந்திருந்தான். இவள் நாவாசின் மகளும் யோவாபைப் பெற்ற தாயாகிய சார்வியாவின் சகோதரியும் ஆவாள். 26 இஸ்ராயேல் மக்களும் அப்சலோமும் காலாத் நாட்டில் பாளையம் இறங்கினார்கள். 27 தாவீது கஸ்திரா என்ற பாளையத்தை அடைந்த போது, அம்மோன் புதல்வருடைய நாட்டின் இராப்பாத் ஊரானாகிய சோபி என்ற நாகாசின் மகனும், லோதேபார் ஊரானான மாகீர் என்ற அம்மியேலின் மகனும், ரோகிலிம் ஊரானும் காலாத் நாட்டானுமாகிய பெர்ஜலாயியும், 28 தாவீதிடம் வந்து அவருக்கு மெத்தைகள், கம்பளங்கள், மண்பாண்டங்கள், கோதுமை, வாற்கோதுமை, மாவு, வறுத்த தானியம், 29 மொச்சை, அவரை, சீசேர் பயறு, தேன், வெண்ணெய், ஆடுகள், கொழுத்த கன்றுகள் முதலியவற்றைக் காணிக்கையாய்க் கொடுத்தார்கள். அவர்கள் இவற்றை எல்லாம் தாவீதும் அவரோடு இருந்த மக்களும் உண்ணும்படி கொண்டு வந்திருந்தார்கள். ஏனெனில், அம் மக்கள் பாலைவனத்தில் களைத்துப் பசியும் தாகமுமாய் இருப்பார்கள் என்று அவர்கள் எண்ணியிருந்தனர்.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 17 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References