தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 சாமுவேல்
1. பின்னர் நிகழ்ந்ததாவது: அம்மோனிய அரசன் இறந்தான். அவன் மகன் ஆனோன் அவனுக்குப் பின் அரியணை ஏறினான்.
2. அப்பொழுது தாவீது, "ஆனோனின் தந்தை நாகாசு என்மீது இரக்கம் காட்டி வந்தது போல், நானும் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்று சொல்லி அவன் தந்தையின் சாவைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தம் ஊழியர்களை அனுப்பினார். ஆனால் தாவீதின் ஊழியர்கள் அம்மோனியர் நாட்டை அடைந்த போது,
3. அந்நாட்டுப் பெரியோர் தங்கள் தலைவரான ஆனோனை நோக்கி, "ஆறுதல் சொல்லும்படி தாவீது உம்மிடம் ஆட்களை அனுப்பினது உம் தந்தையைப் போற்றுவதற்காக என்றா நினைக்கிறீர்? அவர் இந்நகரை உளவு பார்த்து அதைப் பிடித்து அழிக்க வேண்டும் என்றல்லோ தம் ஊழியர்களை உம்மிடம் அனுப்பியுள்ளார்?" என்றனர்.
4. எனவே ஆனோன் தாவீதின் ஊழியரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளைப் பாதி கத்தரித்து இடுப்புத் துணியோடு அவர்களை அனுப்பி விட்டான்.
5. அது தாவீதுக்கு அறிவிக்கப்படவே, அம்மனிதர் மிகவும் வெட்கப்பட்டிருந்தது பற்றி அரசர் அவர்களுக்குத் தூதரை அனுப்பி, "உங்கள் தாடி வளரும் வரை நீங்கள் எரிக்கோவில் தங்கியிருந்து பிறகு வாருங்கள்" என்று சொல்லச் சொன்னார்.
6. அம்மோனியரோ தாங்கள் தாவீதுக்கு அவமானம் விளைவித்ததைக் கண்டு, ரோகோப் சீரியர்களிலும் சோபா சீரியர்களிலும் இருபதினாயிரம் காலாட் படையினரையும், மாவக்காவின் அரசனிடமிருந்து ஆயிரம் வீரர்களையும், இசுதோபிலிருந்து பன்னீராயிரம் வீரரையும் கூலிக்கு அமர்த்தினர்.
7. அதை தாவீது கேள்வியுற்றபோது, யோவாபையும் படை வீரர் அனைவரையும் அனுப்பி வைத்தார்.
8. அம்மோனியர் புறப்பட்டு வாயில் அருகே போருக்கு அணிவகுத்து நின்றனர். ஆனால் சோபாவின் சீரியர்களும் ரோகோப்பின் சீரியர்களும், மாவக்காவிலும் இசுதோபிலும் இருந்து வந்திருந்தவர்களும் தனியாகப் பாசறையில் தங்கியிருந்தனர்.
9. தனக்கு எதிராக முன்னும் பின்னும் போர் மூளயிருந்ததைக் கண்ட யோவாப் இஸ்ராயேல் வீரருள் சிலரைப் பொறுக்கி எடுத்து அவர்களைச் சீரியர்களுக்கு எதிராக அணி வகுத்து நிறுத்தினான்.
10. ஏனையவரைத் தன் சகோதரனாகிய அபிசாயிடம் ஒப்புவித்தான். அபிசாயி அம்மோனியருக்கு எதிராக அவர்களை அணிவகுத்து நிறுத்தினான்.
11. யோவாப், "சீரியர் கை மேலோங்கினால் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும். அம்மோனியர் கை மேலோங்கினால் நான் உனக்கு உதவிக்கு வருவேன்.
12. நீ துணிவுடன் இரு. நம் மக்களுக்காகவும் நம் இறைவனின் நகருக்காகவும் போரிடுவோம். ஆண்டவர் தமக்கு நலம் என்று தோன்றுவதைச் செய்வாராக" என்றான்.
13. எனவே, யோவாபும் அவனோடு இருந்த ஆட்களும் சீரியர் மேல் போரிடத் தொடங்கினவுடன் சீரியர் புறமுதுகு காட்டி ஓடினர்.
14. சீரியர் சிதறி ஓடுவதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயியிக்கு அஞ்சி ஓடி நகருக்குள் நுழைந்தனர். அப்பொழுது யோவாப் அம்மோனியரை விட்டு யெருசலேமுக்கு திரும்பி வந்தான்.
15. இஸ்ராயேலர் முன் தாங்கள் தோற்கடிக்கப் பட்டதைச் சீரியர்கள் கண்ட போது ஒன்று கூடி வந்தனர்.
16. ஆதரேஜேர் தூதரை அனுப்பி நதிக்கு அப்பால் இருந்த சீரியரை வரச் செய்து அவர்கள் படையையும் கொண்டு வந்தான். ஆதரேஜேருடைய படைத்தலைவன் சோபாக் அவர்களுக்குத் தலைவனாய் இருந்தான்.
17. அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டவுடன் அவர் இஸ்ராயேலர் அனைவரையும் கூட்டிக் கொண்டு யோர்தானைக் கடந்து ஏலாமுக்குப் போனார். அப்போது, சீரியர் தாவீதுக்கு எதிராகத் தங்கள் படைகளை அணிவகுத்து அவரோடு போரிட்டனர்.
18. சீரியர் இஸ்ராயேலுக்குப் புறமுதுகு காட்டி ஓடவே, தாவீது சீரியரில் எழுநூறு தேர் வீரர்களையும் நாற்பதினாயிரம் குதிரை வீரர்களையும் கொன்று, அவர்களின் படைத்தலைவன் சோபாக்கையும் வெட்டி வீழ்த்தினார்.
19. அப்பொழுது ஆதரேஜேரின் தோழமை அரசர் அனைவரும் தாங்கள் இஸ்ராயேலரால் தோற்கடிக்கப் பட்டதைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஐம்பத்தெட்டாயிரம் வீரரோடு சிதறி ஓடினர். பிறகு அவர்கள் இஸ்ராயேலோடு சமாதானம் செய்து கொண்டு இஸ்ராயேலுக்கு அடிமைகள் ஆயினர். அன்று முதல் அம்மோனியருக்கு உதவி செய்ய அவர்கள் துணியவில்லை.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 24
2 சாமுவேல் 10:38
1 பின்னர் நிகழ்ந்ததாவது: அம்மோனிய அரசன் இறந்தான். அவன் மகன் ஆனோன் அவனுக்குப் பின் அரியணை ஏறினான். 2 அப்பொழுது தாவீது, "ஆனோனின் தந்தை நாகாசு என்மீது இரக்கம் காட்டி வந்தது போல், நானும் அவனுக்கு இரக்கம் காட்டுவேன்" என்று சொல்லி அவன் தந்தையின் சாவைக் குறித்து அவனுக்கு ஆறுதல் சொல்லத் தம் ஊழியர்களை அனுப்பினார். ஆனால் தாவீதின் ஊழியர்கள் அம்மோனியர் நாட்டை அடைந்த போது, 3 அந்நாட்டுப் பெரியோர் தங்கள் தலைவரான ஆனோனை நோக்கி, "ஆறுதல் சொல்லும்படி தாவீது உம்மிடம் ஆட்களை அனுப்பினது உம் தந்தையைப் போற்றுவதற்காக என்றா நினைக்கிறீர்? அவர் இந்நகரை உளவு பார்த்து அதைப் பிடித்து அழிக்க வேண்டும் என்றல்லோ தம் ஊழியர்களை உம்மிடம் அனுப்பியுள்ளார்?" என்றனர். 4 எனவே ஆனோன் தாவீதின் ஊழியரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய ஆடைகளைப் பாதி கத்தரித்து இடுப்புத் துணியோடு அவர்களை அனுப்பி விட்டான். 5 அது தாவீதுக்கு அறிவிக்கப்படவே, அம்மனிதர் மிகவும் வெட்கப்பட்டிருந்தது பற்றி அரசர் அவர்களுக்குத் தூதரை அனுப்பி, "உங்கள் தாடி வளரும் வரை நீங்கள் எரிக்கோவில் தங்கியிருந்து பிறகு வாருங்கள்" என்று சொல்லச் சொன்னார். 6 அம்மோனியரோ தாங்கள் தாவீதுக்கு அவமானம் விளைவித்ததைக் கண்டு, ரோகோப் சீரியர்களிலும் சோபா சீரியர்களிலும் இருபதினாயிரம் காலாட் படையினரையும், மாவக்காவின் அரசனிடமிருந்து ஆயிரம் வீரர்களையும், இசுதோபிலிருந்து பன்னீராயிரம் வீரரையும் கூலிக்கு அமர்த்தினர். 7 அதை தாவீது கேள்வியுற்றபோது, யோவாபையும் படை வீரர் அனைவரையும் அனுப்பி வைத்தார். 8 அம்மோனியர் புறப்பட்டு வாயில் அருகே போருக்கு அணிவகுத்து நின்றனர். ஆனால் சோபாவின் சீரியர்களும் ரோகோப்பின் சீரியர்களும், மாவக்காவிலும் இசுதோபிலும் இருந்து வந்திருந்தவர்களும் தனியாகப் பாசறையில் தங்கியிருந்தனர். 9 தனக்கு எதிராக முன்னும் பின்னும் போர் மூளயிருந்ததைக் கண்ட யோவாப் இஸ்ராயேல் வீரருள் சிலரைப் பொறுக்கி எடுத்து அவர்களைச் சீரியர்களுக்கு எதிராக அணி வகுத்து நிறுத்தினான். 10 ஏனையவரைத் தன் சகோதரனாகிய அபிசாயிடம் ஒப்புவித்தான். அபிசாயி அம்மோனியருக்கு எதிராக அவர்களை அணிவகுத்து நிறுத்தினான். 11 யோவாப், "சீரியர் கை மேலோங்கினால் நீ எனக்கு உதவி செய்ய வேண்டும். அம்மோனியர் கை மேலோங்கினால் நான் உனக்கு உதவிக்கு வருவேன். 12 நீ துணிவுடன் இரு. நம் மக்களுக்காகவும் நம் இறைவனின் நகருக்காகவும் போரிடுவோம். ஆண்டவர் தமக்கு நலம் என்று தோன்றுவதைச் செய்வாராக" என்றான். 13 எனவே, யோவாபும் அவனோடு இருந்த ஆட்களும் சீரியர் மேல் போரிடத் தொடங்கினவுடன் சீரியர் புறமுதுகு காட்டி ஓடினர். 14 சீரியர் சிதறி ஓடுவதைக் கண்ட அம்மோனியரும் அபிசாயியிக்கு அஞ்சி ஓடி நகருக்குள் நுழைந்தனர். அப்பொழுது யோவாப் அம்மோனியரை விட்டு யெருசலேமுக்கு திரும்பி வந்தான். 15 இஸ்ராயேலர் முன் தாங்கள் தோற்கடிக்கப் பட்டதைச் சீரியர்கள் கண்ட போது ஒன்று கூடி வந்தனர். 16 ஆதரேஜேர் தூதரை அனுப்பி நதிக்கு அப்பால் இருந்த சீரியரை வரச் செய்து அவர்கள் படையையும் கொண்டு வந்தான். ஆதரேஜேருடைய படைத்தலைவன் சோபாக் அவர்களுக்குத் தலைவனாய் இருந்தான். 17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டவுடன் அவர் இஸ்ராயேலர் அனைவரையும் கூட்டிக் கொண்டு யோர்தானைக் கடந்து ஏலாமுக்குப் போனார். அப்போது, சீரியர் தாவீதுக்கு எதிராகத் தங்கள் படைகளை அணிவகுத்து அவரோடு போரிட்டனர். 18 சீரியர் இஸ்ராயேலுக்குப் புறமுதுகு காட்டி ஓடவே, தாவீது சீரியரில் எழுநூறு தேர் வீரர்களையும் நாற்பதினாயிரம் குதிரை வீரர்களையும் கொன்று, அவர்களின் படைத்தலைவன் சோபாக்கையும் வெட்டி வீழ்த்தினார். 19 அப்பொழுது ஆதரேஜேரின் தோழமை அரசர் அனைவரும் தாங்கள் இஸ்ராயேலரால் தோற்கடிக்கப் பட்டதைக் கண்டு அஞ்சி நடுங்கி, ஐம்பத்தெட்டாயிரம் வீரரோடு சிதறி ஓடினர். பிறகு அவர்கள் இஸ்ராயேலோடு சமாதானம் செய்து கொண்டு இஸ்ராயேலுக்கு அடிமைகள் ஆயினர். அன்று முதல் அம்மோனியருக்கு உதவி செய்ய அவர்கள் துணியவில்லை.
மொத்தம் 24 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 10 / 24
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References