தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 இராஜாக்கள்
1. ஒருநாள் இறைவாக்கினரின் பிள்ளைகள் எலிசேயுவை நோக்கி, "அடியோர் உம்மோடு வாழ்ந்து வரும் இந்த இடம் மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது.
2. எனவே, நாம் யோர்தான் நதிக்குச் சென்று காட்டினின்று மரங்களை வெட்டிக் கொணர்ந்து வீடுகட்டி அவ்விடத்தில் குடியேறுவோம்" என்றனர். அதற்கு அவர், "போங்கள்" என விடை தந்தார்.
3. அவர்களில் ஒருவன், "நீரும் எங்களோடு வாரும்" என அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார்.
4. எனவே, அவரும் அவர்களோடு சென்றார். அவர்கள் யோர்தானுக்கு வந்து அங்கே மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர்.
5. அவ்வாறு அவர்கள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது, ஒருவனுடைய கோடரி பிடி கழன்று நீரில் விழுந்தது. உடனே, அவன் அப்போது எலிசேயுவை நோக்கி, "ஐயோ, என் குருவே! ஐயையோ, இதனை இரவலாயன்றோ வாங்கி வந்தேன்" எனக் கூக்குரலிட்டான்.
6. அப்போது கடவுளின் மனிதர், "அது எங்கு வீழ்ந்தது?" என்று அவனைக் கேட்டார். அவன், கோடரி விழுந்த இடத்தை அவருக்குக் காட்டினான். உடனே எலிசேயு ஒரு சிறு கட்டையை வெட்டி ஆற்றில் எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கிற்று.
7. பிறகு அவர், "எடுத்துக்கொள்" என்று அவனிடம் கூற, அவனும் கையை நீட்டி அதை எடுத்துக் கொண்டான்.
8. நிற்க, சீரியாவின் அரசன் இஸ்ராயேல் மேல் போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, "இன்னின்ன இடத்தில் பதுங்கியிருப்போம்" என்று சொன்னான்.
9. ஆகையால் கடவுளின் மனிதர் இஸ்ராயேல் அரசனிடம் ஆள் அனுப்பி, "அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், அங்கே சீரியர் பதுங்கியிருக்கின்றனர்" என்று சொல்லச் சொன்னார்.
10. இஸ்ராயேல் அரசன் கடவுளின் மனிதர் குறித்திருந்த இடத்திற்குப் படையை அனுப்பி, அவ்விடத்தைக் தானே முந்திப் பிடித்துக் கொண்டான். இவ்விதம் பல முறை அவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.
11. இதன் பொருட்டுச் சீரியாவின் அரசன் மனம் கலங்கித் தன் ஊழியர்களை வரச் சொல்லி, "இஸ்ராயேல் அரசனுக்கு என்னைக் காட்டிக் கொடுத்தவன் யார் என்று நீங்கள் ஏன் இன்னும் என்னிடம் சொல்லாது இருக்கிறீர்கள்?" என அவர்களைக் கேட்டான்.
12. அதற்கு அலுவலரில் ஒருவன் அவனை நோக்கி, "என் அரசரான தலைவ, அப்படி ஒருவனும் இங்கு இல்லை. ஆனால் இஸ்ராயேலில் இருக்கும் எலிசேயு என்ற இறைவாக்கினர் தாங்கள் ஆலோசனைக் கூடத்தில் சொல்லும் அனைத்தையும் இஸ்ராயேல் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகின்றார்" என்றான்.
13. அரசன் ஊழியர்களை நோக்கி, "நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். பின், நான் ஆட்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்" என்றான். அவர்கள் வந்து, "அரசே, இப்பொழுது எலிசேயு தோத்தானில் இருக்கிறார்" என்று அரசனிடம் தெரிவித்தனர்.
14. ஆதலால் அரசன் அங்குக் குதிரைகளையும் தேர்களையும் வலிமை வாய்ந்த சேவகர்களையும் அனுப்பினான். இவர்கள் இரவே வந்து நகரை முற்றுகையிட்டனர்.
15. கடவுளுடைய மனிதரின் ஊழியன் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும் குதிரைகளும் தேர்களும் நகரை முற்றுகையிட்டிருக்கக் கண்டு, தன் தலைவரிடம் ஒடிவந்து, "ஐயையோ! என்ன செய்வோம்?" எனப் பதறினான்.
16. அதற்கு எலிசேயு, "நீ அஞ்ச வேண்டாம்; அவர்களை விட நம்மிடம் அதிகம் பேர் இருக்கிறார்கள்" என மறுமொழி சொன்னார்.
17. பின்பு எலிசேயு, "ஆண்டவரே, அவன் பார்வை பெறும்படி அவன் கண்களைத் திறந்தருளும்" என்று ஆண்டவரை நோக்கி வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே அவன் கண்களைத் திறந்தார். அதோ மலை எங்கணும் தீ மயமான குதிரைகளும் தேர்களும் எலிசேயுவைச் சூழ்ந்து நிற்கக் கண்டான்.
18. எதிரிகள் அவரை அணுகி வந்தனர். அதைக் கண்டு எலிசேயு ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, இம் மக்கள் எல்லாரையும் குருடராக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசேயுவின் மன்றாட்டுக்கு இரங்கி அவர்களைக் குருடராக்கினார்.
19. அப்போது எலிசேயு அவர்களை நோக்கி, "இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனை நான் உங்களுக்குக் காட்டுவேன்" என்றார். இவ்வாறு அவர் சமாரியாவுக்கு அவர்களை நடத்திச் சென்றார்.
20. அவர்கள் நகருக்குள் நுழைந்த போது, எலிசேயு ஆண்டவரை நோக்கி, "என் ஆண்டவரே, இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே அவர்கள் சமாரியா நகரின் நடுவில் தாங்கள் இருப்பதாகக் கண்டு கொண்டனர்.
21. இவர்களைக் கண்டவுடன் இஸ்ராயேல் அரசன் எலிசேயுவை நோக்கி, "ஐயனே, இவர்களை நான் கொல்லட்டுமா?" என வினவினான்.
22. அதற்கு அவர், "அவர்களைக் கொல்ல வேண்டாம். ஏனெனில், நீர் அவர்களைக் கொல்வதற்கு வாளாலோ அம்புகளாலோ நீர் அவர்களைப் பிடிக்கவில்லை. மாறாக, அவர்கள் உண்டு குடித்துத் தங்கள் தலைவரிடம் திரும்பும்படி நீர் அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடும்" என்றார்.
23. அதைக்கேட்ட அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்து அளித்தான். அவர்களும் உண்டு களித்தனர். பின்னர் அரசன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவரிடம் திரும்பி வந்தனர். ஆனால் அன்று தொட்டு அந்தச் சீரியக் கள்வர்கள் இஸ்ராயேல் நாட்டில் காலெடுத்து வைக்கவில்லை.
24. பின்னர் சீரியா அரசன் பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையும் திரட்டி வந்து சமாரியாவை முற்றுகையிட்டான்.
25. அப்போது சமாரியாவில் ஒரே பஞ்சம். ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக் காசுக்கு விற்கும் வரையிலும், புறாக்களின் எச்சமோ காபாசு என்ற மரக்காலிலே நான்கில் ஒரு பங்கு ஐந்து வெள்ளிக் காசுக்கு விற்கும் வரையிலும் நகர முற்றுகை நீடித்தது.
26. இஸ்ராயேலின் அரசன் நகர மதில் வழியே சென்று கொண்டிருக்கையில் மாது ஒருத்தி கூக்குரலிட்டு, "என் அரசரான தலைவா, என்னைக் காப்பாற்றும்" என்றாள்.
27. அதற்கு அவன், "ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால், நான் எங்ஙனம் உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தோ ஆலையிலிருந்தோ? சொல்" என்றான். மேலும் அவளை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? சொல்" என்றான்.
28. அதற்கு அவள், "இதோ இந்தப் பெண் என்னை நோக்கி, 'இன்று நாம் சாப்பிடும்படி உன் மகனைக் கொடு; நாளை என் மகனைச் சாப்பிடலாம்' என்றாள்.
29. நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம்; மறுநாள், 'நாம் சாப்பிடும்படி, உன் மகனைக்கொடு' என்றேன். அவளோ தன் மகனை ஒளித்து விட்டாள்" என்று சொன்னாள்.
30. அரசன் இதைக் கேட்டவுனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நகர மதில் வழியாகச் சென்றான். அவன் தன் உடலின் மேல் மயிர் ஆடை ஒன்றை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர்.
31. அரசன் சபதம் கூறி, "இன்றைய பொழுதுக்குள்ளே நான் சாபாத்தின் மகன் எலிசேயுவின் தலையை வெட்டாது போனால், கடவுள் எனக்கு என்ன தீமை செய்தாலும் செய்யட்டும்" என்றான்.
32. எலிசேயுவோ தம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். மூப்பரும் அவரோடு அமர்ந்திருந்தனர். எனவே, அரசன் தனக்கு முன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அவன் வருவதற்குள் எலிசேயு தம்மோடு இருந்த பெரியோர்களைப் பார்த்து, "கொலை பாதகனின் மகன் என் தலையை வெட்டும்படி ஒருவனை அனுப்பியிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமே. எனவே, எச்சரிக்கையாயிருங்கள். அவன் வரும் போது கதவை அடைத்து அவனை உள்ளே விடாதீர்கள். ஏனெனில் அவனுடைய தலைவன் அவனைப் பின் தொடர்ந்து வருகிறான். இதோ, அவனது காலடிச் சத்தமும் கேட்கிறது" என்றார்.
33. எலிசேயு இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அரசன் அவரிடம் அனுப்பியிருந்த அந்த மனிதன் எதிரே வந்தான். வந்து, "ஆண்டவர் இவ்வளவு பெரிய துன்பத்தை அனுப்பியிருக்கிறாரே! இதனினும் பெரிய துன்பத்தை அவர் எனக்கு இனி அனுப்பவும் கூடுமோ?" என்றான்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 25 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 25
2 இராஜாக்கள் 6:31
1 ஒருநாள் இறைவாக்கினரின் பிள்ளைகள் எலிசேயுவை நோக்கி, "அடியோர் உம்மோடு வாழ்ந்து வரும் இந்த இடம் மிகவும் நெருக்கடியாய் இருக்கிறது. 2 எனவே, நாம் யோர்தான் நதிக்குச் சென்று காட்டினின்று மரங்களை வெட்டிக் கொணர்ந்து வீடுகட்டி அவ்விடத்தில் குடியேறுவோம்" என்றனர். அதற்கு அவர், "போங்கள்" என விடை தந்தார். 3 அவர்களில் ஒருவன், "நீரும் எங்களோடு வாரும்" என அழைத்தான். "நானும் வருகிறேன்" என்று அவர் கூறினார். 4 எனவே, அவரும் அவர்களோடு சென்றார். அவர்கள் யோர்தானுக்கு வந்து அங்கே மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். 5 அவ்வாறு அவர்கள் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது, ஒருவனுடைய கோடரி பிடி கழன்று நீரில் விழுந்தது. உடனே, அவன் அப்போது எலிசேயுவை நோக்கி, "ஐயோ, என் குருவே! ஐயையோ, இதனை இரவலாயன்றோ வாங்கி வந்தேன்" எனக் கூக்குரலிட்டான். 6 அப்போது கடவுளின் மனிதர், "அது எங்கு வீழ்ந்தது?" என்று அவனைக் கேட்டார். அவன், கோடரி விழுந்த இடத்தை அவருக்குக் காட்டினான். உடனே எலிசேயு ஒரு சிறு கட்டையை வெட்டி ஆற்றில் எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கிற்று. 7 பிறகு அவர், "எடுத்துக்கொள்" என்று அவனிடம் கூற, அவனும் கையை நீட்டி அதை எடுத்துக் கொண்டான். 8 நிற்க, சீரியாவின் அரசன் இஸ்ராயேல் மேல் போர் தொடுத்தான். அப்பொழுது அவன் தன் அலுவலரோடு கலந்து பேசி, "இன்னின்ன இடத்தில் பதுங்கியிருப்போம்" என்று சொன்னான். 9 ஆகையால் கடவுளின் மனிதர் இஸ்ராயேல் அரசனிடம் ஆள் அனுப்பி, "அந்த இடத்திற்குப் போகாமல் எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், அங்கே சீரியர் பதுங்கியிருக்கின்றனர்" என்று சொல்லச் சொன்னார். 10 இஸ்ராயேல் அரசன் கடவுளின் மனிதர் குறித்திருந்த இடத்திற்குப் படையை அனுப்பி, அவ்விடத்தைக் தானே முந்திப் பிடித்துக் கொண்டான். இவ்விதம் பல முறை அவன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான். 11 இதன் பொருட்டுச் சீரியாவின் அரசன் மனம் கலங்கித் தன் ஊழியர்களை வரச் சொல்லி, "இஸ்ராயேல் அரசனுக்கு என்னைக் காட்டிக் கொடுத்தவன் யார் என்று நீங்கள் ஏன் இன்னும் என்னிடம் சொல்லாது இருக்கிறீர்கள்?" என அவர்களைக் கேட்டான். 12 அதற்கு அலுவலரில் ஒருவன் அவனை நோக்கி, "என் அரசரான தலைவ, அப்படி ஒருவனும் இங்கு இல்லை. ஆனால் இஸ்ராயேலில் இருக்கும் எலிசேயு என்ற இறைவாக்கினர் தாங்கள் ஆலோசனைக் கூடத்தில் சொல்லும் அனைத்தையும் இஸ்ராயேல் அரசனுக்கு வெளிப்படுத்தி விடுகின்றார்" என்றான். 13 அரசன் ஊழியர்களை நோக்கி, "நீங்கள் போய், அவர் எங்கு இருக்கிறார் என்று பார்த்து வாருங்கள். பின், நான் ஆட்களை அனுப்பி அவரைப் பிடிக்கச் செய்வேன்" என்றான். அவர்கள் வந்து, "அரசே, இப்பொழுது எலிசேயு தோத்தானில் இருக்கிறார்" என்று அரசனிடம் தெரிவித்தனர். 14 ஆதலால் அரசன் அங்குக் குதிரைகளையும் தேர்களையும் வலிமை வாய்ந்த சேவகர்களையும் அனுப்பினான். இவர்கள் இரவே வந்து நகரை முற்றுகையிட்டனர். 15 கடவுளுடைய மனிதரின் ஊழியன் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தான். அப்பொழுது படைகளும் குதிரைகளும் தேர்களும் நகரை முற்றுகையிட்டிருக்கக் கண்டு, தன் தலைவரிடம் ஒடிவந்து, "ஐயையோ! என்ன செய்வோம்?" எனப் பதறினான். 16 அதற்கு எலிசேயு, "நீ அஞ்ச வேண்டாம்; அவர்களை விட நம்மிடம் அதிகம் பேர் இருக்கிறார்கள்" என மறுமொழி சொன்னார். 17 பின்பு எலிசேயு, "ஆண்டவரே, அவன் பார்வை பெறும்படி அவன் கண்களைத் திறந்தருளும்" என்று ஆண்டவரை நோக்கி வேண்டினார். ஆண்டவர் அவ்விதமே அவன் கண்களைத் திறந்தார். அதோ மலை எங்கணும் தீ மயமான குதிரைகளும் தேர்களும் எலிசேயுவைச் சூழ்ந்து நிற்கக் கண்டான். 18 எதிரிகள் அவரை அணுகி வந்தனர். அதைக் கண்டு எலிசேயு ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, இம் மக்கள் எல்லாரையும் குருடராக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசேயுவின் மன்றாட்டுக்கு இரங்கி அவர்களைக் குருடராக்கினார். 19 அப்போது எலிசேயு அவர்களை நோக்கி, "இது நீங்கள் செல்ல வேண்டிய பாதையுமல்ல, நகருமல்ல. என்னைப் பின் தொடருங்கள். நீங்கள் தேடும் மனிதனை நான் உங்களுக்குக் காட்டுவேன்" என்றார். இவ்வாறு அவர் சமாரியாவுக்கு அவர்களை நடத்திச் சென்றார். 20 அவர்கள் நகருக்குள் நுழைந்த போது, எலிசேயு ஆண்டவரை நோக்கி, "என் ஆண்டவரே, இவர்கள் பார்வை பெறும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும்" என்றார். ஆண்டவர் அவர்கள் கண்களைத் திறக்கவே அவர்கள் சமாரியா நகரின் நடுவில் தாங்கள் இருப்பதாகக் கண்டு கொண்டனர். 21 இவர்களைக் கண்டவுடன் இஸ்ராயேல் அரசன் எலிசேயுவை நோக்கி, "ஐயனே, இவர்களை நான் கொல்லட்டுமா?" என வினவினான். 22 அதற்கு அவர், "அவர்களைக் கொல்ல வேண்டாம். ஏனெனில், நீர் அவர்களைக் கொல்வதற்கு வாளாலோ அம்புகளாலோ நீர் அவர்களைப் பிடிக்கவில்லை. மாறாக, அவர்கள் உண்டு குடித்துத் தங்கள் தலைவரிடம் திரும்பும்படி நீர் அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடும்" என்றார். 23 அதைக்கேட்ட அரசன் அவர்களுக்குப் பெரிய விருந்து அளித்தான். அவர்களும் உண்டு களித்தனர். பின்னர் அரசன் அவர்களை அனுப்பி வைத்தான். அவர்களும் தங்கள் தலைவரிடம் திரும்பி வந்தனர். ஆனால் அன்று தொட்டு அந்தச் சீரியக் கள்வர்கள் இஸ்ராயேல் நாட்டில் காலெடுத்து வைக்கவில்லை. 24 பின்னர் சீரியா அரசன் பெனாதாத் தன் எல்லாச் சேனைகளையும் திரட்டி வந்து சமாரியாவை முற்றுகையிட்டான். 25 அப்போது சமாரியாவில் ஒரே பஞ்சம். ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக் காசுக்கு விற்கும் வரையிலும், புறாக்களின் எச்சமோ காபாசு என்ற மரக்காலிலே நான்கில் ஒரு பங்கு ஐந்து வெள்ளிக் காசுக்கு விற்கும் வரையிலும் நகர முற்றுகை நீடித்தது. 26 இஸ்ராயேலின் அரசன் நகர மதில் வழியே சென்று கொண்டிருக்கையில் மாது ஒருத்தி கூக்குரலிட்டு, "என் அரசரான தலைவா, என்னைக் காப்பாற்றும்" என்றாள். 27 அதற்கு அவன், "ஆண்டவர் உன்னைக் காப்பாற்றவில்லை என்றால், நான் எங்ஙனம் உன்னைக் காப்பாற்றுவது? களஞ்சியத்திலிருந்தோ ஆலையிலிருந்தோ? சொல்" என்றான். மேலும் அவளை நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்? சொல்" என்றான். 28 அதற்கு அவள், "இதோ இந்தப் பெண் என்னை நோக்கி, 'இன்று நாம் சாப்பிடும்படி உன் மகனைக் கொடு; நாளை என் மகனைச் சாப்பிடலாம்' என்றாள். 29 நாங்கள் என் மகனைச் சமைத்துச் சாப்பிட்டோம்; மறுநாள், 'நாம் சாப்பிடும்படி, உன் மகனைக்கொடு' என்றேன். அவளோ தன் மகனை ஒளித்து விட்டாள்" என்று சொன்னாள். 30 அரசன் இதைக் கேட்டவுனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு நகர மதில் வழியாகச் சென்றான். அவன் தன் உடலின் மேல் மயிர் ஆடை ஒன்றை அணிந்திருந்ததை மக்கள் கண்டனர். 31 அரசன் சபதம் கூறி, "இன்றைய பொழுதுக்குள்ளே நான் சாபாத்தின் மகன் எலிசேயுவின் தலையை வெட்டாது போனால், கடவுள் எனக்கு என்ன தீமை செய்தாலும் செய்யட்டும்" என்றான். 32 எலிசேயுவோ தம் வீட்டில் உட்கார்ந்திருந்தார். மூப்பரும் அவரோடு அமர்ந்திருந்தனர். எனவே, அரசன் தனக்கு முன் ஒரு மனிதனை அவரிடம் அனுப்பியிருந்தான். அவன் வருவதற்குள் எலிசேயு தம்மோடு இருந்த பெரியோர்களைப் பார்த்து, "கொலை பாதகனின் மகன் என் தலையை வெட்டும்படி ஒருவனை அனுப்பியிருக்கிறான் என்று உங்களுக்குத் தெரியுமே. எனவே, எச்சரிக்கையாயிருங்கள். அவன் வரும் போது கதவை அடைத்து அவனை உள்ளே விடாதீர்கள். ஏனெனில் அவனுடைய தலைவன் அவனைப் பின் தொடர்ந்து வருகிறான். இதோ, அவனது காலடிச் சத்தமும் கேட்கிறது" என்றார். 33 எலிசேயு இங்ஙனம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அரசன் அவரிடம் அனுப்பியிருந்த அந்த மனிதன் எதிரே வந்தான். வந்து, "ஆண்டவர் இவ்வளவு பெரிய துன்பத்தை அனுப்பியிருக்கிறாரே! இதனினும் பெரிய துன்பத்தை அவர் எனக்கு இனி அனுப்பவும் கூடுமோ?" என்றான்.
மொத்தம் 25 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 25
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References