தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 இராஜாக்கள்
1. அவள் சொன்னதை அவர்கள் அரசனுக்கு அறிவித்தனர். அவன் அழைப்புக்கிணங்கி யூதாவிலும் யெருசலேமிலுமுள்ள பெரியோர்கள் யாவரும் அவனிடம் வந்து கூடினர்.
2. அப்பொழுது அரசனும் யூதா மனிதர் அனைவரும் யெருசலேம் குடிகள் அனைவரும் குருக்களும் இறைவாக்கினர்களும், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆண்டவரின் ஆலயத்திற்கு வந்தனர். அரசனோ ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் கேட்கும்படி படித்தான்.
3. அரசன் படியில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவர் கட்டளைகளையும் சட்டங்களையும் சடங்குமுறைகளையும் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் உடன்படிக்கையாக எழுதப்பட்டிருந்த அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்து கொண்டான். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.
4. அப்போது அரசன் பாவாலின் வழிபாட்டிற்காகவும் சிலைச்சோலைகளிலும் விண்சக்திகளுக்கு வழிபாடு செய்யவும் பயன்படுத்தப்பட்ட எல்லாப் பாத்திரங்களையும் ஆலயத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி, பெரிய குரு எல்கியாசுக்கும் இரண்டாம் நிலைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டான். அப்பாத்திரங்களை யெருசலேமுக்கு வெளியே கெதிரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்து, சாம்பலைப் பேத்தலுக்குக் கொண்டு சென்றான்.
5. அத்தோடு யூதாவின் நகர்களிலும் யெருசலேமைச் சுற்றியும் அமைக்கப்பட்டிருந்த மேடுகளின் மேல் பலியிட யூதா அரசர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த குருக்களைக் கொன்றான். மேலும் பாவாலுக்கும், சூரிய, சந்திரனுக்கும், பன்னிரு விண்மீன்களுக்கும், விண் சக்திகள் யாவற்றிற்கும் வழிபாடு செய்து வந்தவர்களையும் அழித்தான்.
6. சிலைச்சோலையினின்று எடுக்கப்பெற்று ஆண்டவரின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையையும் யெருசலேமுக்குப் புறம்பே கெதிரோன் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு சென்றான். அங்கே அதைச் சுட்டெரித்து சாம்பலாக்கி, அச்சாம்பலைக் கீழ்குல மக்களின் கல்லறைகளின் மேல் எறியப் பணித்தான்.
7. அன்றியும் ஆண்டவரின் ஆலயத்திலே பெண் தன்மையுள்ள ஆடவரின் விடுதிகள் இருந்தன. அங்கே பெண்கள் சிலைச்சோலைகட்குத் தேவையான துணிகளை நெய்து வருவார்கள். அரசன் அவ்விடுதிகளையும் தரைமட்டமாக்கினான்.
8. இன்னும் யூதாவின் நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் வரவழைத்து, காபா முதல் பெத்சபே வரையிலும் குருக்கள் பலியிட்டு வந்த எல்லா மேடுகளையும் மாசுபடுத்தினான். நகர வாயிலுக்கு இடப்புறம் நகர்த்தலைவனான யோசுவாவின் வீட்டு வாயிலின் அருகே இருந்த பீடங்களையும் இடித்தான்.
9. மேடுகளின் குருக்கள் யெருசலேமில் இருந்த ஆலயத்துப் பலிபீடத்தை நாடி வராது, தங்கள் சகோதரரோடு புளியாத அப்பங்களையே உண்டு வந்தனர்.
10. மெல்லோக் சிலைக்கு நேர்ச்சையாக ஒருவரும் தம் மகனையோ மகளையோ தீயைக் கடக்கச் செய்யாதபடி, என்னோமின் மகனின் பள்ளத்தாக்கிலிருக்கும் தொபேத் என்ற இடத்தை மாசுபடுத்தினான்.
11. மேலும் யோசியாசு அரசன் ஆண்டவரின் ஆலய வாயிலருகில், பாரூரிம் ஊரானாகிய நாத்தான் மெலேக் என்ற அண்ணகனின் வீட்டையடுத்து, யூதா அரசர்களால் சூரியனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைகளை அப்புறப்படுத்தினான். சூரியனின் தேர்களையோ நெருப்பிலிட்டான்.
12. மேலும் யூதா அரசர்களால் ஆக்காசின் மேல் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், மனாசேயால் ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும் அரசன் இடித்து, அவற்றின் இடித்த துண்டுகளை அங்கிருந்து எடுத்துக் கெதிரோன் ஆற்றில் கொட்டினான்.
13. யெருசலேமில் குற்றத்தின் குன்று எனப்பட்ட மலைக்கு வலப்புறத்தில் இஸ்ராயேலின் அரசன் சாலமோன் சீதோனியரின் தெய்வமான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் பாவப் பொருளான காமோசுக்கும், அம்மோன் புதல்வரின் இழிபொருளான மெல்கோமுக்குக் கட்டி எழுப்பியிருந்த மேடுகளையும் அரசன் மாசு படுத்தினான்.
14. அன்றியும் அவன் அவற்றின் சிலைகளை உடைத்து, சிலைச்சோலைகளை அழித்து, அவ்விடங்களை மனிதரின் எலும்புகளால் நிரப்பினான்.
15. தவிர, இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாம் பேத்தலில் எழுப்பியிருந்த மேடுகளையும் பலிபீடத்தையும் அழித்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி, சிலைச்சோலையையும் தீக்கிரையாக்கினான்.
16. யோசியாசு திரும்பிப் பார்த்தபோது அங்கு மலையின் மேல் கல்லறைகள் இருக்கக் கண்டான். ஆட்களை அனுப்பி, அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வந்து, முன்பு கடவுளின் மனிதர் கூறியிருந்த ஆண்டவரின் சொற்படி அவற்றை அங்கிருந்த பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து அதை மாசுபடுத்தினான்.
17. பின்பு அவன், "அதோ, அங்குத் தெரியும் கல்லறை யாருடையது?" என்று கேட்டான். அந்நகர மக்கள், "அது யூதா நாட்டைச் சேர்ந்த ஒரு கடவுளின் மனிதருடைய கல்லறை. நீர் பேத்தலின் பலிபீடத்திற்கு இப்படி எல்லாம் செய்வீர் என்று முன்னறிவித்தவர் அவர்தான்" என்றனர்.
18. அதற்கு அவன், "இருக்கட்டும்; அவருடைய எலும்புகளை ஒருவனும் எடுக்க வேண்டாம்" என்றான். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியாவைச் சேர்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் விட்டு வைத்தனர்.
19. ஆண்டவருக்குக் கோபமுண்டாகும்படி இஸ்ராயேலின் அரசர்கள் சமாரியா நகர்களிலே மேடுகளில் கட்டியிருந்த (சிலைக்) கோவில்களை எல்லாம் யோசியாசு இடித்து, பேத்தலில் செய்தவாறே அவைகட்கும் செய்தான்.
20. அங்கு இருந்த மேடுகளில் பலியிட்டு வந்த குருக்களை எல்லாம் கொன்று போட்டு, அப்பீடங்களின் மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தான். இவற்றின் பின் யெருசலேமுக்குத் திரும்பினான்.
21. பிறகு யோசியாசு மக்கள் எல்லாரையும் பார்த்து, "இவ்வுடன்படிக்கை நூலில் வரையப்பட்டுள்ளது போல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாய்ப் பாஸ்காத் திருவிழாக் கொண்டாடுங்கள்" என்று கட்டளையிட்டான்.
22. யோசியாசினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக யெருசலேமில் பாஸ்கா கொண்டாடப்பட்டது.
23. இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்த நீதிபதிகளின் நாள் முதல், யூதா அரசர் காலத்திலும் இஸ்ராயேல் அரசர் காலத்திலும் அத்துணைச் சிறப்பான பாஸ்காத் திருவிழா நடந்ததில்லை.
24. குரு எல்கியாசு ஆலயத்தில் கண்டெடுத்த நூலில் எழுதப்பட்டிருந்த சட்டத்தை நிறைவேற்றும்படி, யோசியாசு யூதா நாட்டிலும் யெருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும் சிலைகளையும் தூய்மையற்றவைகளையும் அருவருப்பானவற்றையும் அழித்தொழித்தான்.
25. அவனைப்போல் தன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும் மோயீசனின் நீதி நூலிற்கேற்ப ஆண்டவரிடம் திரும்பி வந்தவர் இதற்கு முன் இருந்ததுமில்லை; இனி இருக்கப் போவதுமில்லை.
26. எனினும் மனாசே செய்து வந்த தீய செயல்களால் ஆண்டவர் யூதாவுக்கெதிராய்க் கடும் கோபமுற்றிருந்தார். அந்தக் கோபம் இன்னும் தணியவில்லை.
27. எனவே ஆண்டவர், "நாம் இஸ்ராயேலைப் போல் யூதாவையும் நமது முன் நின்றுத் தள்ளி விடுவோம். நாம் தேர்ந்து கொண்ட யெருசலேம் நகரையும், நமது பெயர் இங்கு விளங்கும் என்று நாம் கூறின ஆலயத்தையும் உதறித் தள்ளுவோம்" என்றார்.
28. யோசியாசின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன.
29. அவன் ஆட்சி காலத்தில் எகிப்து நாட்டின் அரசன் பாரவோன் நெக்காவோ அசீரிய அரசனுக்கு எதிராகப் படைதிரட்டி, யூபிரட்டீசு நதியை வந்தடைந்தான். அப்பொழுது யோசியாசு அரசன் அவனைத் தாக்க வந்தான். பாரவோன் மகேதோவில் அவனோடு போர் செய்து அவனைக் கொன்றான்.
30. அவனுடைய ஊழியர் அவனுடைய சடலத்தை மகேதோவிலிருந்து யெருசலேமுக்குக் கொண்டு சென்று அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்தனர். பிறகு நாட்டு மக்கள் யோசியாசின் மகன் யோவக்காசைத் தேர்ந்து கொண்டு, அபிஷுகம் செய்து அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை அரசனாக நியமித்தார்கள்.
31. யோவக்காசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்தி மூன்று. யெருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் அமித்தாள். இவள் லொப்னா என்ற ஊரைச் சேர்ந்த எரேமியா என்பவனுடைய மகள்.
32. யோவக்காசு தன் முன்னோர்கள் செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான்.
33. அவன் யெருசலேமில் அரசாளாதபடி பாரவோன் நெக்காவோ அவனைப் பிடித்து, எமாத் நாட்டிலிருக்கும் ரெபிளாவில் சிறையில் வைத்தான். அன்றியும் யூதா நாடு தனக்கு நூறு தாலந்து வெள்ளியையும், ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் செலுத்தக் கட்டளையிட்டான்.
34. பாரவோன் நெக்காவோ யோசியாசின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதில் அரசனாக ஏற்படுத்தி, அவனது பெயரை யோவாக்கிம் என்று மாற்றினான். பின்னர் யோவக்காசை எகிப்துக்குக் கொண்டு சென்றான். அவன் அங்கேயே இறந்து போனான்.
35. மேற்சொன்ன வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் விதித்த கட்டளைப்படி செலுத்த எண்ணி, யோவாக்கிம் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். மேலும் மக்களிடமிருந்து அவரவர் வசதிக்கு ஏற்ப வெள்ளியும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி அதைப் பாரவோனுக்குச் செலுத்தினான்.
36. அரசனான போது யோவாக்கிமுக்கு வயது இருபத்தைந்து, பதினொன்று ஆண்டுகள் அவன் யெருசலேமில் அரசாண்டான். அவன் தாயின் பெயர் எசபிதா. இவள் ரூமா என்ற ஊரைச் சேர்ந்த பாதாயியா என்பவனின் மகள்.
37. (36b) யோவாக்கிம் தம் முன்னோர் செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான்.
மொத்தம் 25 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 25
1 அவள் சொன்னதை அவர்கள் அரசனுக்கு அறிவித்தனர். அவன் அழைப்புக்கிணங்கி யூதாவிலும் யெருசலேமிலுமுள்ள பெரியோர்கள் யாவரும் அவனிடம் வந்து கூடினர். 2 அப்பொழுது அரசனும் யூதா மனிதர் அனைவரும் யெருசலேம் குடிகள் அனைவரும் குருக்களும் இறைவாக்கினர்களும், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆண்டவரின் ஆலயத்திற்கு வந்தனர். அரசனோ ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் கேட்கும்படி படித்தான். 3 அரசன் படியில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவர் கட்டளைகளையும் சட்டங்களையும் சடங்குமுறைகளையும் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் உடன்படிக்கையாக எழுதப்பட்டிருந்த அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்து கொண்டான். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர். 4 அப்போது அரசன் பாவாலின் வழிபாட்டிற்காகவும் சிலைச்சோலைகளிலும் விண்சக்திகளுக்கு வழிபாடு செய்யவும் பயன்படுத்தப்பட்ட எல்லாப் பாத்திரங்களையும் ஆலயத்தினின்று வெளியே எறிந்துவிடும்படி, பெரிய குரு எல்கியாசுக்கும் இரண்டாம் நிலைக் குருக்களுக்கும், வாயிற்காப்போருக்கும் கட்டளையிட்டான். அப்பாத்திரங்களை யெருசலேமுக்கு வெளியே கெதிரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்து, சாம்பலைப் பேத்தலுக்குக் கொண்டு சென்றான். 5 அத்தோடு யூதாவின் நகர்களிலும் யெருசலேமைச் சுற்றியும் அமைக்கப்பட்டிருந்த மேடுகளின் மேல் பலியிட யூதா அரசர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த குருக்களைக் கொன்றான். மேலும் பாவாலுக்கும், சூரிய, சந்திரனுக்கும், பன்னிரு விண்மீன்களுக்கும், விண் சக்திகள் யாவற்றிற்கும் வழிபாடு செய்து வந்தவர்களையும் அழித்தான். 6 சிலைச்சோலையினின்று எடுக்கப்பெற்று ஆண்டவரின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையையும் யெருசலேமுக்குப் புறம்பே கெதிரோன் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு சென்றான். அங்கே அதைச் சுட்டெரித்து சாம்பலாக்கி, அச்சாம்பலைக் கீழ்குல மக்களின் கல்லறைகளின் மேல் எறியப் பணித்தான். 7 அன்றியும் ஆண்டவரின் ஆலயத்திலே பெண் தன்மையுள்ள ஆடவரின் விடுதிகள் இருந்தன. அங்கே பெண்கள் சிலைச்சோலைகட்குத் தேவையான துணிகளை நெய்து வருவார்கள். அரசன் அவ்விடுதிகளையும் தரைமட்டமாக்கினான். 8 இன்னும் யூதாவின் நகர்களில் இருந்த எல்லாக் குருக்களையும் வரவழைத்து, காபா முதல் பெத்சபே வரையிலும் குருக்கள் பலியிட்டு வந்த எல்லா மேடுகளையும் மாசுபடுத்தினான். நகர வாயிலுக்கு இடப்புறம் நகர்த்தலைவனான யோசுவாவின் வீட்டு வாயிலின் அருகே இருந்த பீடங்களையும் இடித்தான். 9 மேடுகளின் குருக்கள் யெருசலேமில் இருந்த ஆலயத்துப் பலிபீடத்தை நாடி வராது, தங்கள் சகோதரரோடு புளியாத அப்பங்களையே உண்டு வந்தனர். 10 மெல்லோக் சிலைக்கு நேர்ச்சையாக ஒருவரும் தம் மகனையோ மகளையோ தீயைக் கடக்கச் செய்யாதபடி, என்னோமின் மகனின் பள்ளத்தாக்கிலிருக்கும் தொபேத் என்ற இடத்தை மாசுபடுத்தினான். 11 மேலும் யோசியாசு அரசன் ஆண்டவரின் ஆலய வாயிலருகில், பாரூரிம் ஊரானாகிய நாத்தான் மெலேக் என்ற அண்ணகனின் வீட்டையடுத்து, யூதா அரசர்களால் சூரியனுக்கென்று எழுப்பப்பட்டிருந்த குதிரைகளை அப்புறப்படுத்தினான். சூரியனின் தேர்களையோ நெருப்பிலிட்டான். 12 மேலும் யூதா அரசர்களால் ஆக்காசின் மேல் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த பலிபீடங்களையும், மனாசேயால் ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும் அரசன் இடித்து, அவற்றின் இடித்த துண்டுகளை அங்கிருந்து எடுத்துக் கெதிரோன் ஆற்றில் கொட்டினான். 13 யெருசலேமில் குற்றத்தின் குன்று எனப்பட்ட மலைக்கு வலப்புறத்தில் இஸ்ராயேலின் அரசன் சாலமோன் சீதோனியரின் தெய்வமான அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் பாவப் பொருளான காமோசுக்கும், அம்மோன் புதல்வரின் இழிபொருளான மெல்கோமுக்குக் கட்டி எழுப்பியிருந்த மேடுகளையும் அரசன் மாசு படுத்தினான். 14 அன்றியும் அவன் அவற்றின் சிலைகளை உடைத்து, சிலைச்சோலைகளை அழித்து, அவ்விடங்களை மனிதரின் எலும்புகளால் நிரப்பினான். 15 தவிர, இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கியிருந்த நாபாத்தின் மகன் எரோபோவாம் பேத்தலில் எழுப்பியிருந்த மேடுகளையும் பலிபீடத்தையும் அழித்து நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி, சிலைச்சோலையையும் தீக்கிரையாக்கினான். 16 யோசியாசு திரும்பிப் பார்த்தபோது அங்கு மலையின் மேல் கல்லறைகள் இருக்கக் கண்டான். ஆட்களை அனுப்பி, அக்கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வந்து, முன்பு கடவுளின் மனிதர் கூறியிருந்த ஆண்டவரின் சொற்படி அவற்றை அங்கிருந்த பலிபீடத்தின் மேல் சுட்டெரித்து அதை மாசுபடுத்தினான். 17 பின்பு அவன், "அதோ, அங்குத் தெரியும் கல்லறை யாருடையது?" என்று கேட்டான். அந்நகர மக்கள், "அது யூதா நாட்டைச் சேர்ந்த ஒரு கடவுளின் மனிதருடைய கல்லறை. நீர் பேத்தலின் பலிபீடத்திற்கு இப்படி எல்லாம் செய்வீர் என்று முன்னறிவித்தவர் அவர்தான்" என்றனர். 18 அதற்கு அவன், "இருக்கட்டும்; அவருடைய எலும்புகளை ஒருவனும் எடுக்க வேண்டாம்" என்றான். அப்படியே அவருடைய எலும்புகளையும், சமாரியாவைச் சேர்ந்த இறைவாக்கினர்களின் எலும்புகளையும் விட்டு வைத்தனர். 19 ஆண்டவருக்குக் கோபமுண்டாகும்படி இஸ்ராயேலின் அரசர்கள் சமாரியா நகர்களிலே மேடுகளில் கட்டியிருந்த (சிலைக்) கோவில்களை எல்லாம் யோசியாசு இடித்து, பேத்தலில் செய்தவாறே அவைகட்கும் செய்தான். 20 அங்கு இருந்த மேடுகளில் பலியிட்டு வந்த குருக்களை எல்லாம் கொன்று போட்டு, அப்பீடங்களின் மேல் மனித எலும்புகளைச் சுட்டெரித்தான். இவற்றின் பின் யெருசலேமுக்குத் திரும்பினான். 21 பிறகு யோசியாசு மக்கள் எல்லாரையும் பார்த்து, "இவ்வுடன்படிக்கை நூலில் வரையப்பட்டுள்ளது போல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் புகழ்ச்சியாய்ப் பாஸ்காத் திருவிழாக் கொண்டாடுங்கள்" என்று கட்டளையிட்டான். 22 யோசியாசினுடைய ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் ஆண்டவருக்குப் புகழ்ச்சியாக யெருசலேமில் பாஸ்கா கொண்டாடப்பட்டது. 23 இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்த நீதிபதிகளின் நாள் முதல், யூதா அரசர் காலத்திலும் இஸ்ராயேல் அரசர் காலத்திலும் அத்துணைச் சிறப்பான பாஸ்காத் திருவிழா நடந்ததில்லை. 24 குரு எல்கியாசு ஆலயத்தில் கண்டெடுத்த நூலில் எழுதப்பட்டிருந்த சட்டத்தை நிறைவேற்றும்படி, யோசியாசு யூதா நாட்டிலும் யெருசலேம் நகரிலும் இருந்த மந்திரவாதிகளையும், குறிசொல்வோரையும் சிலைகளையும் தூய்மையற்றவைகளையும் அருவருப்பானவற்றையும் அழித்தொழித்தான். 25 அவனைப்போல் தன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு ஆற்றலோடும் மோயீசனின் நீதி நூலிற்கேற்ப ஆண்டவரிடம் திரும்பி வந்தவர் இதற்கு முன் இருந்ததுமில்லை; இனி இருக்கப் போவதுமில்லை. 26 எனினும் மனாசே செய்து வந்த தீய செயல்களால் ஆண்டவர் யூதாவுக்கெதிராய்க் கடும் கோபமுற்றிருந்தார். அந்தக் கோபம் இன்னும் தணியவில்லை. 27 எனவே ஆண்டவர், "நாம் இஸ்ராயேலைப் போல் யூதாவையும் நமது முன் நின்றுத் தள்ளி விடுவோம். நாம் தேர்ந்து கொண்ட யெருசலேம் நகரையும், நமது பெயர் இங்கு விளங்கும் என்று நாம் கூறின ஆலயத்தையும் உதறித் தள்ளுவோம்" என்றார். 28 யோசியாசின் மற்றச் செயல்களும் அவன் செய்தவை யாவும் யூதா அரசரின் நடபடி நூலில் எழுதப்பட்டுள்ளன. 29 அவன் ஆட்சி காலத்தில் எகிப்து நாட்டின் அரசன் பாரவோன் நெக்காவோ அசீரிய அரசனுக்கு எதிராகப் படைதிரட்டி, யூபிரட்டீசு நதியை வந்தடைந்தான். அப்பொழுது யோசியாசு அரசன் அவனைத் தாக்க வந்தான். பாரவோன் மகேதோவில் அவனோடு போர் செய்து அவனைக் கொன்றான். 30 அவனுடைய ஊழியர் அவனுடைய சடலத்தை மகேதோவிலிருந்து யெருசலேமுக்குக் கொண்டு சென்று அவனுடைய கல்லறையில் அடக்கம் செய்தனர். பிறகு நாட்டு மக்கள் யோசியாசின் மகன் யோவக்காசைத் தேர்ந்து கொண்டு, அபிஷுகம் செய்து அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை அரசனாக நியமித்தார்கள். 31 யோவக்காசு அரசனான போது அவனுக்கு வயது இருபத்தி மூன்று. யெருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செலுத்தினான். அவன் தாயின் பெயர் அமித்தாள். இவள் லொப்னா என்ற ஊரைச் சேர்ந்த எரேமியா என்பவனுடைய மகள். 32 யோவக்காசு தன் முன்னோர்கள் செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். 33 அவன் யெருசலேமில் அரசாளாதபடி பாரவோன் நெக்காவோ அவனைப் பிடித்து, எமாத் நாட்டிலிருக்கும் ரெபிளாவில் சிறையில் வைத்தான். அன்றியும் யூதா நாடு தனக்கு நூறு தாலந்து வெள்ளியையும், ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் செலுத்தக் கட்டளையிட்டான். 34 பாரவோன் நெக்காவோ யோசியாசின் மூத்த மகன் எலியாக்கிமை அவனுடைய தந்தைக்குப் பதில் அரசனாக ஏற்படுத்தி, அவனது பெயரை யோவாக்கிம் என்று மாற்றினான். பின்னர் யோவக்காசை எகிப்துக்குக் கொண்டு சென்றான். அவன் அங்கேயே இறந்து போனான். 35 மேற்சொன்ன வெள்ளியையும் பொன்னையும் பாரவோன் விதித்த கட்டளைப்படி செலுத்த எண்ணி, யோவாக்கிம் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் மேலும் வரி விதித்தான். மேலும் மக்களிடமிருந்து அவரவர் வசதிக்கு ஏற்ப வெள்ளியும் பொன்னும் மிகுதியாகத் திரட்டி அதைப் பாரவோனுக்குச் செலுத்தினான். 36 அரசனான போது யோவாக்கிமுக்கு வயது இருபத்தைந்து, பதினொன்று ஆண்டுகள் அவன் யெருசலேமில் அரசாண்டான். அவன் தாயின் பெயர் எசபிதா. இவள் ரூமா என்ற ஊரைச் சேர்ந்த பாதாயியா என்பவனின் மகள். 37 (36b) யோவாக்கிம் தம் முன்னோர் செய்தபடியே ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான்.
மொத்தம் 25 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 23 / 25
×

Alert

×

Tamil Letters Keypad References