தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 இராஜாக்கள்
1. யூதாவின் அரசன் ஆக்காசினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், ஏலாவின் மகன் ஓசே அரசனாகிச் சமாரியாவில் இஸ்ராயேலை ஒன்பது ஆண்டுகள் ஆண்டு வந்தான்.
2. அவன் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தான். ஆயினும் தனக்கு முன் வாழ்ந்திருந்த இஸ்ராயேலின் அரசர்களைப் போல் செய்யவில்லை.
3. சீரிய அரசன் சல்மனாசார் அவனுக்கு எதிராய்ப் படையெடுத்து வர, ஓசே அவனுக்கு அடியானாகிக் கப்பம் செலுத்தி வந்தான்.
4. ஓசே ஆண்டுதோறும் அசீரிய அரசனுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை இனிச் செலுத்தாதிருக்கத் துணிந்து எகிப்திய அரசன் சுவாவிடம் ஆள் அனுப்பிக் கலகம் செய்ய விழைந்தான். அசீரிய அரசன் இதை அறிந்து, ஓசேயை முற்றுகையிட்டுப் பிடித்துச் சிறையில் வைத்தான்.
5. பின் சல்மனாசார் இஸ்ராயேல் நாடெங்கும் தன் படையுடன் சுற்றி வந்து, சமாரியாவைத் தாக்கி, அதை மூன்று ஆண்டுகளாக முற்றுகையிட்டான்.
6. ஓசேயின் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில் அசீரிய அரசன் சமாரியாவைப் பிடித்து, இஸ்ராயேலரை அசீரியா நாட்டிற்குச் சிறைப்பிடித்துக் கொண்டு போய், கோசான் நதியோரத்திலுள்ள மேது நாட்டின் நகர்களான ஆலாயிலும் காபோரிலும் அவர்களைக் குடியேறக் கட்டளையிட்டான்.
7. இஸ்ராயேல் மக்கள் தங்களை எகிப்து நாட்டினின்றும், அந்நாட்டு அரசன் பாரவோனின் ஆதிக்கத்தினின்றும் விடுவித்திருந்த தங்கள் கடவுளான ஆண்டவருக்கு எதிராய்ப் பாவம் செய்து பிற தெய்வங்களைத் தொழுது வந்தனர்.
8. மேலும் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களின் பொருட்டு அழித்திருந்த புறவினத்தாரின் இழிவான பழக்க வழக்கங்களின்படி நடந்து வந்தனர். இதனாலேயே இவை நிகழ்ந்தன.
9. இஸ்ராயேல் மக்கள் தாகாதனவற்றைச் செய்து தங்கள் கடவுளான அவரை மனம் நோகச் செய்ததுமன்றி, காவலர் காவல்புரியும் கோபுரங்கள் முதல் அரண் சூழ்ந்த நகர் வரை, ஊர்களெங்கும் (விக்கிரக ஆராதனைக்காக) தங்களுக்கு மேடுகளைக் கட்டினர்.
10. மேலும் உயர்ந்த எல்லாக் குன்றுகளின் மேலும், தழை அடர்ந்த மரங்களுக்குக் கீழும் சிலைகளையும் தோப்புகளையும் அமைத்துக் கொண்டனர்.
11. ஆண்டவர் அவர்கட்கு முன்பாக அந்நாட்டைவிட்டு வெளியேற்றியிருந்த புறவினத்தாரின் வழக்கப்படி அப்பீடங்களின் மேல் தூபமிட்டுத் தீயன பல புரிந்து ஆண்டவருக்குக் கோபமூட்டினர்.
12. செய்யக்கூடாது என்று ஆண்டவர் தங்களுக்கு விலக்கியிருந்த மிகவும் அருவருப்பான சிலைகளைச் செய்து அவை முன் பணிந்து தொழுது வந்தனர்.
13. ஆண்டவர் எல்லா இறைவாக்கினர், திருக்காட்சியாளர்கள் மூலமாயும் இஸ்ராயேலிலும் யூதாவிலும், "நீங்கள் இத் தகாத வழிகளை விட்டு மனம் திரும்புங்கள். நாம் உங்கள் முன்னோருக்கு அளித்ததும், நம் அடியார்களாகிய இறைவாக்கினரை அனுப்பிச் சொன்னதுமான முறையின் படி நம் கற்பனைகளையும் சடங்கு முறைகளையும் கைக்கொண்டு நடங்கள்" என்று திட்டவட்டமாய் எச்சரித்துக் கொண்டிருந்தார்.
14. ஆனால் அவர்கள் அதற்குச் செவி கொடுத்ததேயில்லை. ஆண்டவரான கடவுளுக்கு அடிபணிய மனமில்லாத தங்கள் முன்னோரைப்போல் தாங்களும் வணங்காக் கழுத்தினர் ஆயினர்.
15. மேலும் ஆண்டவரின் சட்டங்களையும், தங்கள் முன்னோரோடு அவர் செய்திருந்த உடன்படிக்கைகளையும், தங்களுக்கு அவர் விடுத்த எச்சரிக்கைகளையும் புறக்கணித்தனர். வீணான வழிகளைப் பின்பற்றி வீணராகி, தங்களைச் சுற்றிலுமிருந்த இனத்தாரைப் பின்பற்றி ஆண்டவர் கட்டளையிட்டு விலக்கியிருந்தவற்றையே செய்து வந்தனர்.
16. தங்கள் கடவுளான ஆண்டவருடைய எல்லாக் கட்டளைகளையும் கைவிட்டனர். இரண்டு கன்றுக் குட்டிகளைச் செய்து அவற்றிற்குச் சோலைகளை அமைத்து, விண்மீன்கள் அனைத்தையும் தொழுது, பாவாலுக்கு ஊழியம் செய்தனர்.
17. தங்கள் புதல்வர்களையும் புதல்விகளையும் தீயில் நடக்கச் செய்து அவர்களைப் பாவாலுக்குக் காணிக்கை ஆக்கினர். குறிகேட்டும் சகுனம் பார்த்தும் இன்னும் பல தீயவழிகளில் நடந்தும் வந்ததினால் ஆண்டவருக்குக் கோபமுண்டாக்கினர்.
18. ஆகையால் ஆண்டவர் இஸ்ராயேலின்மேல் மிகவும் சினமுற்று, அவர்களைத் தன் திருமுன் நின்றும் தள்ளி விட்டார். யூதா கோத்திரத்தார் மட்டுமே இன்னும் எஞ்சியிருந்தனர்.
19. யூதா கோத்திரத்தாரும் தங்கள் கடவுளான ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கவில்லை. இஸ்ராயேல் மக்கள் நடந்து வந்த தவறான வழியிலேயே தாங்களும் நடந்து வந்தனர்.
20. எனவே ஆண்டவர் இஸ்ராயேல் சந்ததியார் அனைவரையும் கைவிட்டு அவர்களைத் துன்பத்தில் ஆழ்த்திக் கொள்ளைக்காரரின் கையில் அவர்களை ஒப்படைத்து, அவர்களைத் தமது திருமுன் நின்று தள்ளிவிட்டார்.
21. இஸ்ராயேல் தாவீது வம்சத்தை விட்டுப் பிரிந்து, நாபாத்தின் மகன் எரோபோவாமைத் தங்களுக்கு அரசனாக ஏற்படுத்திக் கொண்ட காலம் முதல் இது நடந்து வந்தது. ஏனெனில், எரோபோவாம் இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரை விட்டு விலகும்படி செய்து அவர்களைப் பெரிய பாவத்திற்கு உள்ளாக்கியிருந்தான்.
22. இவ்வாறு எரோபோவாம் செய்திருந்த எல்லாப் பாவ வழிகளிலும் இஸ்ராயேல் மக்கள் நடந்து,
23. ஆண்டவர் தம் அடியாரான இறைவாக்கினர் அனைவரின் வாயிலாகச் சொல்லியிருந்தபடி அவர்களைத் தமது திருமுன் நின்று முற்றும் தள்ளிவிடும் வரை, அவர்கள் அந்தப் பாவவழிகளை விட்டு விலகவில்லை. இஸ்ராயேலர் தமது சொந்த நாட்டினின்று அசீரியாவுக்குக் கொண்டு போகப்பட்டு இன்று வரை அங்கே இருக்கிறார்கள்.
24. அசீரிய அரசன், பாபிலோன், கூத்தா, ஆவா, ஏமாத், செபார்வாயிம் முதலிய நாடுகளிலிருந்து மனிதரை அழைத்து வந்து, அவர்களை இஸ்ராயேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியாவின் நகர்களில் குடியேறச் செய்தான். அவர்களும் சமாரியாவைத் தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டு அதன் நகர்களில் குடியேறினார்கள்.
25. அவர்கள் அங்கு ஆண்டவருக்கு அஞ்சி நடக்கவில்லை. எனவே ஆண்டவர் அவர்களுக்குள் சிங்கங்களை ஏவி விட, அவை அவர்களைக் கொன்று போட்டன.
26. அப்பொழுது மக்கள் அசீரிய அரசனுக்குச் செய்தி அனுப்பி, "அரசே, தங்களால் இங்கிருந்து அனுப்பப்பட்டுச் சமாரியாவின் நகர்களில் குடியேறின இனத்தார் அந்த நாட்டின் கடவுளுடைய கட்டளைகளை அறிந்து நடக்கவில்லை; எனவே ஆண்டவர் அவர்கள் நடுவே சிங்கங்களை அனுப்பினார். அம்மக்கள் அந்த நாட்டுக் கடவுளின் கட்டளைகளை அறியாது நடந்ததால், சிங்கங்கள் அவர்களைக் கொன்றுபோடுகின்றன" என்று அறிவித்தார்கள்.
27. அதற்கு அசீரிய அரசன், "நீங்கள் சிறைப்பிடித்துக் கொண்டு வந்த குருக்களில் ஒருவனைச் சமாரியாவுக்குக் கூட்டிப் போங்கள். அவன் அங்கே வந்து அவர்களுடன் தங்கியிருந்து, நம் மக்களுக்கு அந்த நாட்டுக் கடவுளின் கட்டளைகளைக் கற்பிக்கட்டும்" என்று கட்டளையிட்டான்.
28. அவ்வாறே சமாரியாவிலிருந்து சிறைப்பிடித்துக் கொண்டுவரப்பட்டவர்களில் ஒரு குரு பேத்தலுக்கு வந்து அங்கே தங்கியிருந்து ஆண்டவரை எங்ஙனம் வழிபடுவதென்று மக்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்.
29. ஆனால் ஒவ்வோர் இனத்தாரும் தத்தம் தெய்வங்களைச் செய்து கொண்டு, தாங்கள் குடியேறிய நகர்களில் சமாரியர் முன்பு அமைத்திருந்த மேடைக் கோயில்களில் அவற்றை வைத்தனர்.
30. பாபிலோனியர் சொகோத்--பெனோத் என்ற சிலையையும், கூத்தேயிலிருந்து வந்த மக்கள் நெர்கேல் சிலையையும், ஏமாத் மக்கள் அசிமா என்ற சிலையையும்,
31. ஏவையர் நேபகாசையும் தார்தாகையும் தங்களுக்குச் செய்து கொண்டனர். செபர்வாயிம் என்ற நாட்டிலிருந்து வந்தவர்களோ தங்கள் நாட்டுத் தெய்வங்களாகிய அதிராமெலேக்குக்கும் அனாமெலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பிலிட்டுப் (பலியிட்டு) வந்தனர்.
32. எனினும் இதனுடன் அவர்கள் ஆண்டவரையும் வழிபட்டு வந்தனர். மேடைக் கோயில்களில் தங்களுக்குள் கீழ்குலத்தவரைக் குருக்களாக ஏற்படுத்தினார்கள்.
33. அவர்கள் ஆண்டவரை வழிபட்டு வந்த போதிலும், தங்கள் சொந்த நாட்டு வழக்கப்படி தங்கள் தெய்வங்களுக்கும் ஊழியம் செய்து வந்தனர்.
34. அவர்கள் இன்று வரை தாங்கள் முன் கடைப்பிடித்து வந்த முறைகளின் படியே வாழ்ந்து வருகின்றனர். ஆண்டவர் பேரில் அவர்களுக்கு அச்சமுமில்லை; மேலும் ஆண்டவரால் இஸ்ராயேல் என்று அழைக்கப் பட்ட யாக்கோபின் மக்களுக்குக் கட்டளையிட்ட சடங்கு முறைகளையும், நீதி முறைகளையும் சட்டங்களையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்கிறதுமில்லை.
35. இஸ்ராயேலரோடு ஆண்டவர் உடன்படிக்கை செய்து அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னதாவது: "அன்னிய தெய்வங்களுக்கு அஞ்சவும் வேண்டாம்; அவர்களை வணங்கி வழிபடவும் வேண்டாம்; அவர்களுக்குப் பலியிடவும் வேண்டாம்.
36. உங்களைப் பெரும் ஆற்றலினாலும் தோள் வலிமையினாலும் எகிப்து நாட்டிலிருந்து மீட்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி, அவரையே வழிபட்டு, அவருக்கே பலியிடுங்கள்.
37. அவர் உங்களுக்கு எழுதிக் கொடுத்த சடங்கு முறைகளையும் நீதி முறைகளையும் சட்டங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம் கடைப்பிடித்து வந்தால், நீங்கள் அன்னிய தெய்வங்களுக்கு அஞ்ச வேண்டியதில்லை.
38. நாம் உங்களோடு செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அன்னிய தெய்வங்களை வழிபடாமலும்,
39. உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சி நடங்கள். அவரே உங்கள் எதிரிகள் அனைவரின் கையினின்றும் உங்களை விடுவிப்பார்."
40. ஆயினும் அவர்கள் அதற்குச் செவி கொடாமல் முன் போலவே நடந்து வந்தனர்.
41. ஆகவே இவ்வினத்தார் ஆண்டவருக்கு அஞ்சியிருந்த போதிலும் தங்கள் சிலைகளுக்கும் வழிபாடு செய்து வந்தனர். அவர்களுடைய மக்களும் பேரப்பிள்ளைகளும் தங்கள் முன்னோர்களைப் போலவே இன்று வரை செய்து வருகின்றனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 25 Chapters, Current Chapter 17 of Total Chapters 25
2 இராஜாக்கள் 17:20

×

Alert

×

tamil Letters Keypad References