தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 கொரிந்தியர்
1. இறைமக்களுக்கெனச் செய்யும் இந்த அறப்பணியைக் குறிந்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை.
2. ஏனெனில், உங்களுடைய உற்சாகம் எனக்குத் தெரியும். தண்டலுக்குரிய ஏற்பாடெல்லாம் கடந்த ஆண்டிலேயே அக்காயா நாட்டில் செய்தாயிற்று என்று மக்கெதோனியரிடம் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறேன்; உங்களுடைய ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது.
3. உங்களைக் குறித்து நாங்கள் இதில் பெருமைப்படுவது வீணாகக் கூடாது என்பதற்காகவே இச்சகோதரர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். நான் ஏற்கெனவே மக்கெதோனியருக்குச் சொன்னதுபோல, நீங்கள் தக்க ஏற்பாட்டோடு இருக்க வேண்டும் அன்றோ?
4. இல்லையேல், மக்கெதோனியர் என்னோடு வரும்போது, நீங்கள் எந்த ஏற்பாடுமின்றி இருப்பதைக் கண்டால், நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்காக நாங்கள் தலைகுனிய வேண்டியிருக்கும்; நீங்களும் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
5. ஆகையால்தான், அச்சகோதரர்கள் எனக்கு முன்பே உங்களிடம் வந்து, நீங்கள் வாக்களித்திருந்த நன்கொடையைச் சேர்க்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும் என, எனக்குத் தோன்றிற்று. இவ்வாறு ஏற்பாடாய் இருந்தால், நீங்கள் கொடுப்பது, வேண்டாவெறுப்போடு தந்ததாய் இராமல், அன்பின் கொடையாகவே விளங்கும்.
6. இதை எண்ணிப் பாருங்கள்: சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான்; பெருக விதைப்பவன் பெருக அறுப்பான்.
7. ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு கொடுக்கட்டும்; முகவாட்டத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடாதீர்கள்; ஏனெனில் முகமலர்ச்சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்புகூர்கிறார்.
8. கடவுள் உங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்பவல்லவர்; எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் போதுமான அளவில் உங்களிடம் இருக்கச் செய்வார்; அதோடு எந்தசெயலையும் செய்வதற்குத் தேவையான பொருள் உங்களிடம் மிகுதியாகவே இருக்கச் செய்வார்.
9. அதைக்குறித்தே, ' வாரி வழங்கினான், ஏழைகளுக்கு ஈந்தான், அவனது ஈகை என்றென்றும் மறக்கப்படாது! ' என்று எழுதியுள்ளது.
10. விதைக்கிறவனுக்கு விதையும், உண்பதற்கு உணவும் கொடுத்து உதவுகின்றவர் விதைப்பதற்கு வேண்டியதை உங்களுக்கும் கொடுத்து அதைப் பெருகச் செய்து, உங்களுடைய ஈகையால் ஏராளமான பலன் விளையச் செய்வார்.
11. நீங்களும் எல்லா வகையிலும் செல்வர்களாகி, உங்கள் வள்ளன்மையில் எக்குறைவுமின்றி விளங்குவீர்கள்; எங்கள் பணியின் வாயிலாக அவ்வள்ளன்மை மக்களின் நன்றியறிதலைக் கடவுள்பால் எழும்பச் செய்யும்.
12. அதாவது நீங்கள் செய்யும் இந்தத் கொண்டு இறைமக்களின் குறைகளை நீக்குவதோடு, பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியாகவும் மலரும்.
13. இந்தத் திருப்பணியின் வாயிலாய் உங்கள் நற்பண்பு எண்பிக்கப்படும்; நீங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் நற்செய்திக்குக் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும்; அவர்களுக்கும் மற்றெல்லாருக்குமே உங்கள் நற்கொடையால் நீங்கள் காட்டிய வள்ளன்மையும் வெளிப்படும். அந்தக் கீழ்ப்படிதலையும் வள்ளன்மையையும் பார்த்து, அவர்கள் கடவுளை மகிமைப் படுத்துவார்கள்.
14. மேலும், கடவுள் உங்கள் மேல் பொழிந்த அருளை அவர்கள் உணர்ந்து, உங்களிடம் பரிவு கொண்டு, உங்களுக்காக வேண்டுவார்கள்.
15. கடவுள் வழங்கிய சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கு நன்றி.
மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
1 இறைமக்களுக்கெனச் செய்யும் இந்த அறப்பணியைக் குறிந்து நான் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. 2 ஏனெனில், உங்களுடைய உற்சாகம் எனக்குத் தெரியும். தண்டலுக்குரிய ஏற்பாடெல்லாம் கடந்த ஆண்டிலேயே அக்காயா நாட்டில் செய்தாயிற்று என்று மக்கெதோனியரிடம் உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறேன்; உங்களுடைய ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது. 3 உங்களைக் குறித்து நாங்கள் இதில் பெருமைப்படுவது வீணாகக் கூடாது என்பதற்காகவே இச்சகோதரர்களை உங்களிடம் அனுப்பியுள்ளேன். நான் ஏற்கெனவே மக்கெதோனியருக்குச் சொன்னதுபோல, நீங்கள் தக்க ஏற்பாட்டோடு இருக்க வேண்டும் அன்றோ? 4 இல்லையேல், மக்கெதோனியர் என்னோடு வரும்போது, நீங்கள் எந்த ஏற்பாடுமின்றி இருப்பதைக் கண்டால், நாங்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்காக நாங்கள் தலைகுனிய வேண்டியிருக்கும்; நீங்களும் தலைகுனிய வேண்டியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. 5 ஆகையால்தான், அச்சகோதரர்கள் எனக்கு முன்பே உங்களிடம் வந்து, நீங்கள் வாக்களித்திருந்த நன்கொடையைச் சேர்க்கும்படி கேட்டுக் கொள்ளவேண்டும் என, எனக்குத் தோன்றிற்று. இவ்வாறு ஏற்பாடாய் இருந்தால், நீங்கள் கொடுப்பது, வேண்டாவெறுப்போடு தந்ததாய் இராமல், அன்பின் கொடையாகவே விளங்கும். 6 இதை எண்ணிப் பாருங்கள்: சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான்; பெருக விதைப்பவன் பெருக அறுப்பான். 7 ஒவ்வொருவனும் தனக்குள் முடிவு செய்தவாறு கொடுக்கட்டும்; முகவாட்டத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடாதீர்கள்; ஏனெனில் முகமலர்ச்சியுடன் கொடுப்பவன் மேல்தான் கடவுள் அன்புகூர்கிறார். 8 கடவுள் உங்களை எல்லா நன்மைகளாலும் நிரப்பவல்லவர்; எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் போதுமான அளவில் உங்களிடம் இருக்கச் செய்வார்; அதோடு எந்தசெயலையும் செய்வதற்குத் தேவையான பொருள் உங்களிடம் மிகுதியாகவே இருக்கச் செய்வார். 9 அதைக்குறித்தே, ' வாரி வழங்கினான், ஏழைகளுக்கு ஈந்தான், அவனது ஈகை என்றென்றும் மறக்கப்படாது! ' என்று எழுதியுள்ளது. 10 விதைக்கிறவனுக்கு விதையும், உண்பதற்கு உணவும் கொடுத்து உதவுகின்றவர் விதைப்பதற்கு வேண்டியதை உங்களுக்கும் கொடுத்து அதைப் பெருகச் செய்து, உங்களுடைய ஈகையால் ஏராளமான பலன் விளையச் செய்வார். 11 நீங்களும் எல்லா வகையிலும் செல்வர்களாகி, உங்கள் வள்ளன்மையில் எக்குறைவுமின்றி விளங்குவீர்கள்; எங்கள் பணியின் வாயிலாக அவ்வள்ளன்மை மக்களின் நன்றியறிதலைக் கடவுள்பால் எழும்பச் செய்யும். 12 அதாவது நீங்கள் செய்யும் இந்தத் கொண்டு இறைமக்களின் குறைகளை நீக்குவதோடு, பலர் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியாகவும் மலரும். 13 இந்தத் திருப்பணியின் வாயிலாய் உங்கள் நற்பண்பு எண்பிக்கப்படும்; நீங்கள் ஏற்றுக்கொண்ட கிறிஸ்துவின் நற்செய்திக்குக் காட்டும் கீழ்ப்படிதல் புலப்படும்; அவர்களுக்கும் மற்றெல்லாருக்குமே உங்கள் நற்கொடையால் நீங்கள் காட்டிய வள்ளன்மையும் வெளிப்படும். அந்தக் கீழ்ப்படிதலையும் வள்ளன்மையையும் பார்த்து, அவர்கள் கடவுளை மகிமைப் படுத்துவார்கள். 14 மேலும், கடவுள் உங்கள் மேல் பொழிந்த அருளை அவர்கள் உணர்ந்து, உங்களிடம் பரிவு கொண்டு, உங்களுக்காக வேண்டுவார்கள். 15 கடவுள் வழங்கிய சொல்லொண்ணாக் கொடைக்காக அவருக்கு நன்றி.
மொத்தம் 13 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 9 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

Tamil Letters Keypad References