தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 கொரிந்தியர்
1. ஏனெனில் மண்மீது நாம் குடியிருக்கும் இக்கூடாரம் தகர்ந்து வீழ்ந்தாலும், கடவுளிடமிருந்து கிடைத்த வீடு ஒன்று நமக்கு விண்ணில் உள்ளது. இது கையால் அமைக்கப்படாதது; முடிவில்லாதது. இதையெல்லாம் நாம் அறிவோமன்றோ?
2. உள்ளபடியே இந்தக் கூடாரத்தில் உள்ள நாம் விண்ணிலிருந்து வரும் நம் உறைவிடத்தை மேலணிந்து கொள்ளவேண்டுமென்ற ஏக்கத்தால் பெருமூச்செறிகிறோம்.
3. உடை இழந்தவர்களாய் இராமல், உடுத்தியவர்களாய் இருந்தால் தான் ' அப்பேறு கிடைக்கும்.
4. இந்தக் கூடாரத்தில் இருக்கும் நாம் இந்நிலையைத் தாங்கமுடியாமல் பெருமூச்செறிகிறோம்; இந்த உடையைக்களைந்தெறிய நமக்கு விருப்பமில்லை; சாவுக்குரியது வாழ்வில் ஆழ்ந்து கலந்துவிடும்படி மேலுடை அணியவே விரும்புகிறோம்.
5. இதற்கென்றே கடவுள் நம்மை உருவாக்கினார்; அதற்கு அச்சாரமாக நமக்கு ஆவியானவரைத் தந்திருக்கின்றார்.
6. ஆதலால்தான் எப்பொழுதும் நம்பிக்கையோடு இருக்கிறோம்; இந்த உடலில் குடியிருக்கும்வரை ஆண்டவரின் வீட்டினின்று தொலைவில் அலைகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்
7. ஏனெனில், கண்கூடான காட்சி நமக்கில்லை. நாம் வாழ்வது விசுவாச வாழ்வு--
8. நம்பிக்கையை இழக்காமல், 'இவ்வுடலை விட்டுக் குடிபெயர்ந்து ஆண்டவரது வீட்டில் குடியேறுவதையே விரும்புகிறோம்.
9. ஆகவே உடலில் குடியிருந்தாலும் அதனின்று குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவர்களாய் இருக்கவேண்டும் என்பதே எங்கள் பேராவல்.
10. ஏனெனில், உடலோடு இருந்தபோது அவனவன் செய்த நன்மை தீமைக்குத்தக்க பலனடையும்படி கிறிஸ்துவின் நீதியிருக்கை முன் நாம் அனைவரும் செய்ததெல்லாம் வெளிப்படவேண்டும்.
11. ஆகையால், ஆண்டவரின் மீதுள்ள அச்சத்தை மனத்திலிருத்தி மக்களை வயப்படுத்தப்பார்க்கிறோம். எங்கள் உள்ளம் கடவுளுக்கு வெளிப்படையாய் இருக்கிறது; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாய் இருக்கும் என நம்புகிறேன். மறுபடியும் உங்கள் முன் எங்களைக் குறித்து நாங்களே நற்சான்று கூறவில்லை.
12. ஆனால், எங்களைப்பற்றி நீங்கள் பெருமைப்பட்டுக்கொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்; அப்போது, உள்ளத்தில் இருப்பதைப் பாராமல் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்துப் பெருமை பாராட்டுகிறவர்களுக்கு, நீங்கள் விடைசொல்ல இயலும்.
13. நாங்கள் மதிமயங்கியவர்கள்போல் இருக்கிறோமென்றால், கடவுளுக்காகவே அப்படி இருக்கிறோம்; அறிவுத் தெளிவோடு இருக்கிறோமென்றால், உங்களுக்காகவே அப்படி இருக்கிறோம்.
14. அனைவருக்காகவும் ஒருவர் உயிர்துறந்தார் என்று உணர்ந்ததும் கிறிஸ்துவின் அன்பு எங்களை ஆட்கொள்கிறது; அனைவருக்காகவும் ஒருவர் இறந்தாரென்றால், அனைவருமே இறந்துபோயினர் என்பது பொருள்.
15. அப்படி அனைவருக்காகவும் அவர் உயிர்துறந்ததோ, வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்த்தவர்க்கென வாழவேண்டும் என்பதற்காகவே.
16. ஆதலால், இனிமேல் நாங்கள் ஊனக்கண் கொண்டு யாரையும் பார்ப்பதில்லை; இதற்கு முன் ஊனக்கண் கொண்டு கிறிஸ்துவைப் பார்த்திருந்தாலும், இனிமேல் அப்படிப் பார்ப்பதில்லை.
17. ஆகவே ஒருவன் கிறிஸ்துவுக்குள் வாழ்ந்தால், புதியதொரு படைப்பு தோன்றுகிறது; பழையன கழிந்துபோயின.
18. இதோ! புதியன தோன்றியுள்ளன. இவை எல்லாம் கடவுள் செயல்தான். அவரே கிறிஸ்துவின் வழியாய் நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவு செய்யும் திருப்பணியை எங்களுக்குக் கொடுத்தார்.
19. உள்ளபடியே கடவுள் உலகினரின் குற்றங்களுக்குரிய கடனைக் கணிக்காமல் அவர்களைக் கிறிஸ்துவுக்குள் தம்மோடு ஒப்புரவாக்கினார்; அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.
20. ஆகவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய்ச் செயலாற்றுகிறோம்; நாங்கள் பேசுவது கடவுளே அறிவுறுத்துவது போலாகும். ஆகவே கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் மன்றாடுகிறோம்:
21. கடவுளோடு ஒப்புரவாகுங்கள். கடவுளுடைய அருள் தன்மையோடு நாமும் கிறிஸ்துவுக்குள் விளங்கும்படி, பாவமே அறியாத அவரை நமக்காகப் பாவ உருவாக்கினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 13 Chapters, Current Chapter 5 of Total Chapters 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
2 கொரிந்தியர் 5:1

×

Alert

×

tamil Letters Keypad References