தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
2 நாளாகமம்
1. அப்பொழுது நாட்டு மக்கள் யோசியாசின் மகன் யோவாக்காசை அழைத்து அவனை யெருசலேமில் அவனுடைய தந்தையின் அரியணையில் ஏற்றினார்கள்.
2. யோவாக்காஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. மூன்று மாதம் யெருசலேமில் அவன் அரசாண்டான்.
3. பின்னர் எகிப்திய அரசன் யெருசலேமுக்கு வந்து அவனை அரச பதவியின்று நீக்கி வைத்தான். மேலும் மக்கள் மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னும் தண்டனையாக விதித்தான்.
4. அவனுடைய சகோதரன் எலியாக்கீமை அவன் யூதாவுக்கும் யெருசலேமுக்கும் அரசனாக்கினான்; இவனது பெயரை மாற்றி யோவாக்கீம் என்று இவனை அழைத்தான். யோவாக்காசையோ தன்னோடு எகிப்திற்குக் கூட்டிச் சென்றான்.
5. அரச பதவி ஏற்ற போது யோக்கீமுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் பதினோர் ஆண்டுகள் அரசாண்டான். தன் கடவுளாகிய ஆண்டவர் திரு முன் அவன் தீமையையே செய்து வந்தான்.
6. கல்தேயரின் அரசன் நபுக்கோதனசார் அவனைத் தாக்கிச் சிறை பிடித்து, பபிலோனுக்குக் கொண்டு போனான்.
7. ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த தட்டுமுட்டுகளையும் பபிலோனுக்குக் கொண்டு சென்று அவற்றைத் தன் கோவிலிலே வைத்தான்.
8. யோவாக்கீமின் மற்றச் செயல்களும், அவன் செய்த அருவருப்பான தீச் செயல்களும், யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அவன் மகன் யோவக்கீன் அவனுக்கு பின் அரியணை ஏறினான்.
9. யோவக்கீன் அரசனான போது, எட்டு வயதினனாயிருந்தான். அவன் யெருசலேமில் மூன்று மாதமும் பத்து நாளுமே அரசாண்டான். அவன் ஆண்டவர் திருமுன் தீமையையே செய்தான்.
10. மறு ஆண்டின் துவக்கத்தில் அரசன் நபுக்கோதனசார் அவனைச் சிறைபிடிக்கவும், கடவுளின் ஆலயத்திலிருந்த விலையேறப் பெற்ற தட்டு முட்டுகளைக் கொள்ளையிட்டுப் பபிலோனுக்குக் கொண்டு செல்லவும் தன் படையை அனுப்பி வைத்தான். மேலும் நபுக்கோதனசார் அவனுக்குப் பதிலாக அவனுடைய சிற்றப்பன் செதேசியாசை யூதாவுக்கும் யெருசலேமுக்கும் அரசனாக்கினான்.
11. செதேசியாஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தொன்று. இவன் யெருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான்.
12. தன் கடவுளாகிய ஆண்டவர் திரு முன் தீயன புரிந்து வந்தான். இறைவாக்கினர் எரெமியாஸ் கடவுளின் திருப்பெயரால் அவனுக்குப் புத்தி சொல்லி வந்தார். செதேசியாசோ அவருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி அவருக்கு மரியாதை செய்யவில்லை.
13. கடவுளின் திருப்பெயரால் தன்னை ஆணையிடச் செய்த அரசன் நபுக்கோதனசாருக்கு எதிராக அவன் கிளர்ச்சி செய்தான். அன்றியும் அவன் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்பால் மனம் திரும்பாதபடி இறுமாப்புக் கொண்டு தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டான்.
14. அவன் மட்டுமன்றி, குருக்களில் தலைமையானவர்களும் மக்களும் புறவினத்தாரைப் பின்பற்றிக் கெட்ட நடத்தையில் இறங்கினர். ஆண்டவர் தமக்கென யெருசலேமில் பரிசுத்தப்படுத்தியிருந்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினர்.
15. அவர்களுடைய முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்கள் மீதும் தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டவராய்த் தம் தூதுவர்களை நாளும் அதிகாலையில் அவர்களிடம் அனுப்பி, அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தார்.
16. அவர்களோ கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்கள் வார்த்தைகளை மதியாது, இறைவாக்கினரை நகைத்து நிந்தித்தனர். எனவே ஆண்டவரின் சீற்றம் மக்கள் மேல் மூண்டது. இனி உதவி எங்கிருந்து வரும்?
17. ஏனெனில் ஆண்டவர் கல்தேயரின் அரசனை அவர்கள் மேல் ஏவி விட்டார். அவன் வந்து கடவுள் ஆலயத்தின் திருவிடத்திலேயே அவர்களின் இளைஞர்களை வாளால் வெட்டினான். இளைஞர் கன்னியர் என்றும், முதியோர் கிழவர் என்று பாராது எல்லாரையும் ஆண்டவர் அவனது கையில் ஒப்புவித்தார்.
18. மேலும் அவன் கடவுளின் ஆலயத்தில் உள்ள சிறிதும் பெரிதுமான எல்லாத் தட்டுமுட்டுகளையும், ஆலயத்தின் கருவூலங்களையும், அரசனின் செல்வங்களையும், தலைவர்களின் சொத்துகளையும் கொள்ளையிட்டுப் பபிலோனுக்குக் கொண்டு போனான்.
19. எதிரிகள் கடவுளின் ஆலயத்தைத் தீக்கு இரையாக்கினர்; யெருசலேமின் மதிலை இடித்துக் கோபுரங்களை எல்லாம் அழித்து விட்டனர்.
20. வாளுக்கு இரையாகாது தப்பின ஏனையோர் சிறைப்படுத்தப்பட்டு பபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டனர். பாரசீக ஆட்சி ஏற்படும் வரை, அங்கே அரசனுக்கும் அவனுடைய புதல்வருக்கும் அடிமைகளாய் இருந்து வந்தனர்.
21. இவ்வாறு எரெமியாஸ் வாயிலாக ஆண்டவர் கூறியிருந்த வாக்கு நிறைவேறும் பொருட்டு, நாடு தான் ஓய்ந்திருக்க வேண்டிய ஆண்டுகளுக்கு ஈடாக ஓய்வை அனுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க் கிடந்த நாளெல்லாம் எழுபது ஆண்டுகளாக ஓய்ந்திருந்தது.
22. எரெமியாஸ் வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த வாக்கு நிறைவேறும்படி பாரசீக அரசன் சீருஸ் என்பவனின் முதலாம் ஆண்டிலே ஆண்டவர் அவனை ஏவி விட, சீருஸ் கடிதம் எழுதித் தனது நாடெங்கும் ஆட்களை அனுப்பினான்.
23. பாரசீக அரசன் சீருஸ் சொல்லுகிறதாவது: விண்ணகக் கடவுளாகிய ஆண்டவர் பூமியின் நாடுகளை எல்லாம் எனக்கு அடிமைப்படுத்தி, யூதாவிலுள்ள யெருசலேமில் தமக்கு ஓர் ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளார். எனவே உங்கள் நடுவே வாழ்ந்து வரும் அவருடைய மக்கள் அனைவரும் யெருசலேமுக்குப் போகட்டும். அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் அவர்களோடு இருப்பாராக!" என்று எங்கும் விளம்பரம் செய்தான்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 36
2 நாளாகமம் 36:36
1 அப்பொழுது நாட்டு மக்கள் யோசியாசின் மகன் யோவாக்காசை அழைத்து அவனை யெருசலேமில் அவனுடைய தந்தையின் அரியணையில் ஏற்றினார்கள். 2 யோவாக்காஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. மூன்று மாதம் யெருசலேமில் அவன் அரசாண்டான். 3 பின்னர் எகிப்திய அரசன் யெருசலேமுக்கு வந்து அவனை அரச பதவியின்று நீக்கி வைத்தான். மேலும் மக்கள் மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னும் தண்டனையாக விதித்தான். 4 அவனுடைய சகோதரன் எலியாக்கீமை அவன் யூதாவுக்கும் யெருசலேமுக்கும் அரசனாக்கினான்; இவனது பெயரை மாற்றி யோவாக்கீம் என்று இவனை அழைத்தான். யோவாக்காசையோ தன்னோடு எகிப்திற்குக் கூட்டிச் சென்றான். 5 அரச பதவி ஏற்ற போது யோக்கீமுக்கு வயது இருபத்தைந்து. அவன் யெருசலேமில் பதினோர் ஆண்டுகள் அரசாண்டான். தன் கடவுளாகிய ஆண்டவர் திரு முன் அவன் தீமையையே செய்து வந்தான். 6 கல்தேயரின் அரசன் நபுக்கோதனசார் அவனைத் தாக்கிச் சிறை பிடித்து, பபிலோனுக்குக் கொண்டு போனான். 7 ஆண்டவரின் ஆலயத்தில் இருந்த தட்டுமுட்டுகளையும் பபிலோனுக்குக் கொண்டு சென்று அவற்றைத் தன் கோவிலிலே வைத்தான். 8 யோவாக்கீமின் மற்றச் செயல்களும், அவன் செய்த அருவருப்பான தீச் செயல்களும், யூதா, இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அவன் மகன் யோவக்கீன் அவனுக்கு பின் அரியணை ஏறினான். 9 யோவக்கீன் அரசனான போது, எட்டு வயதினனாயிருந்தான். அவன் யெருசலேமில் மூன்று மாதமும் பத்து நாளுமே அரசாண்டான். அவன் ஆண்டவர் திருமுன் தீமையையே செய்தான். 10 மறு ஆண்டின் துவக்கத்தில் அரசன் நபுக்கோதனசார் அவனைச் சிறைபிடிக்கவும், கடவுளின் ஆலயத்திலிருந்த விலையேறப் பெற்ற தட்டு முட்டுகளைக் கொள்ளையிட்டுப் பபிலோனுக்குக் கொண்டு செல்லவும் தன் படையை அனுப்பி வைத்தான். மேலும் நபுக்கோதனசார் அவனுக்குப் பதிலாக அவனுடைய சிற்றப்பன் செதேசியாசை யூதாவுக்கும் யெருசலேமுக்கும் அரசனாக்கினான். 11 செதேசியாஸ் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது அவனுக்கு வயது இருபத்தொன்று. இவன் யெருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். 12 தன் கடவுளாகிய ஆண்டவர் திரு முன் தீயன புரிந்து வந்தான். இறைவாக்கினர் எரெமியாஸ் கடவுளின் திருப்பெயரால் அவனுக்குப் புத்தி சொல்லி வந்தார். செதேசியாசோ அவருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தி அவருக்கு மரியாதை செய்யவில்லை. 13 கடவுளின் திருப்பெயரால் தன்னை ஆணையிடச் செய்த அரசன் நபுக்கோதனசாருக்கு எதிராக அவன் கிளர்ச்சி செய்தான். அன்றியும் அவன் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர்பால் மனம் திரும்பாதபடி இறுமாப்புக் கொண்டு தன் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டான். 14 அவன் மட்டுமன்றி, குருக்களில் தலைமையானவர்களும் மக்களும் புறவினத்தாரைப் பின்பற்றிக் கெட்ட நடத்தையில் இறங்கினர். ஆண்டவர் தமக்கென யெருசலேமில் பரிசுத்தப்படுத்தியிருந்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினர். 15 அவர்களுடைய முன்னோரின் கடவுளாகிய ஆண்டவர் தம் மக்கள் மீதும் தம் உறைவிடத்தின் மீதும் இரக்கம் கொண்டவராய்த் தம் தூதுவர்களை நாளும் அதிகாலையில் அவர்களிடம் அனுப்பி, அவர்களுக்கு அறிவுரை கூறி வந்தார். 16 அவர்களோ கடவுளின் தூதர்களை ஏளனம் செய்து, அவர்கள் வார்த்தைகளை மதியாது, இறைவாக்கினரை நகைத்து நிந்தித்தனர். எனவே ஆண்டவரின் சீற்றம் மக்கள் மேல் மூண்டது. இனி உதவி எங்கிருந்து வரும்? 17 ஏனெனில் ஆண்டவர் கல்தேயரின் அரசனை அவர்கள் மேல் ஏவி விட்டார். அவன் வந்து கடவுள் ஆலயத்தின் திருவிடத்திலேயே அவர்களின் இளைஞர்களை வாளால் வெட்டினான். இளைஞர் கன்னியர் என்றும், முதியோர் கிழவர் என்று பாராது எல்லாரையும் ஆண்டவர் அவனது கையில் ஒப்புவித்தார். 18 மேலும் அவன் கடவுளின் ஆலயத்தில் உள்ள சிறிதும் பெரிதுமான எல்லாத் தட்டுமுட்டுகளையும், ஆலயத்தின் கருவூலங்களையும், அரசனின் செல்வங்களையும், தலைவர்களின் சொத்துகளையும் கொள்ளையிட்டுப் பபிலோனுக்குக் கொண்டு போனான். 19 எதிரிகள் கடவுளின் ஆலயத்தைத் தீக்கு இரையாக்கினர்; யெருசலேமின் மதிலை இடித்துக் கோபுரங்களை எல்லாம் அழித்து விட்டனர். 20 வாளுக்கு இரையாகாது தப்பின ஏனையோர் சிறைப்படுத்தப்பட்டு பபிலோனுக்குக் கொண்டு போகப் பட்டனர். பாரசீக ஆட்சி ஏற்படும் வரை, அங்கே அரசனுக்கும் அவனுடைய புதல்வருக்கும் அடிமைகளாய் இருந்து வந்தனர். 21 இவ்வாறு எரெமியாஸ் வாயிலாக ஆண்டவர் கூறியிருந்த வாக்கு நிறைவேறும் பொருட்டு, நாடு தான் ஓய்ந்திருக்க வேண்டிய ஆண்டுகளுக்கு ஈடாக ஓய்வை அனுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க் கிடந்த நாளெல்லாம் எழுபது ஆண்டுகளாக ஓய்ந்திருந்தது. 22 எரெமியாஸ் வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த வாக்கு நிறைவேறும்படி பாரசீக அரசன் சீருஸ் என்பவனின் முதலாம் ஆண்டிலே ஆண்டவர் அவனை ஏவி விட, சீருஸ் கடிதம் எழுதித் தனது நாடெங்கும் ஆட்களை அனுப்பினான். 23 பாரசீக அரசன் சீருஸ் சொல்லுகிறதாவது: விண்ணகக் கடவுளாகிய ஆண்டவர் பூமியின் நாடுகளை எல்லாம் எனக்கு அடிமைப்படுத்தி, யூதாவிலுள்ள யெருசலேமில் தமக்கு ஓர் ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டுள்ளார். எனவே உங்கள் நடுவே வாழ்ந்து வரும் அவருடைய மக்கள் அனைவரும் யெருசலேமுக்குப் போகட்டும். அவர்களின் கடவுளாகிய ஆண்டவர் அவர்களோடு இருப்பாராக!" என்று எங்கும் விளம்பரம் செய்தான்.
மொத்தம் 36 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 36 / 36
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References