தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 நாளாகமம்
1. ஆசாவின் மகன் யோசபாத் அவனுக்குப் பின் அரியணை ஏறி இஸ்ராயேலுக்கு எதிராகத் தன்னைப் பலப்படுத்திக் கொண்டான்.
2. அவன் யூதாவின் அரணான அனைத்து நகர்களிலும் படையையும், யூதா நாட்டிலும் அவனுடைய தந்தை ஆசா கைப்பற்றியிருந்த எப்பிராயீமின் நகர்களிலும் காவற்படைகளையும் நிறுவினான்.
3. கடவுள் யோசபாத்தோடு இருந்தார். அவன் பாவால்களின் மேல் நம்பிக்கை வைக்காமல்,
4. தன் தந்தை தாவீதின் வழியிலே நடந்து, தன் தந்தையின் கடவுளையே நம்பி வந்தான்; இஸ்ராயேலின் பாவ வழியில் நடவாது, அவருடைய கட்டளைகளின்படியே நடந்து வந்தான். ஆண்டவர் அவனது ஆட்சியை நிலைநிறுத்தினார்.
5. யூதா குலத்தார் அனைவரும் யோசபாத்துக்குப் பரிசுகளைக் கொடுத்து வந்தனர். அதனால் அவனது செல்வமும் புகழும் நாளுக்கு நாள் வளர்ந்தது.
6. மேலும் அவன் ஆண்டவரின் வழிகளில் உறுதியுடன் நடந்து யூதாவிலிருந்த மேடைகளையும் சிலைத்தோப்புகளையும் அழிக்கத் துணிந்தான்.
7. அவன் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் யூதா நகர்களில் போதிக்கும் பொருட்டு மூப்பர்களான பெனாயில், ஒப்தியாஸ், சக்கரியாஸ்,
8. நத்தானியாஸ், ஜபதியாஸ், அசாயேல், செமிரமோத், யோனத்தான், அதோனியாஸ் ஆகியோரையும், அவர்களோடு குருக்களான எலிசமாவையும் யோராமையும் அனுப்பி வைத்தான்.
9. இவர்கள் ஆண்டவரின் திருச்சட்ட நூலைக் கையிலேந்தி யூதாவின் எல்லா நகர்களுக்கும் சென்று மக்களுக்குப் போதித்து வந்தார்கள்.
10. யூதாவைச் சுற்றிலுமிருந்த நாட்டு மக்கள் ஆண்டவருக்கு அஞ்சினர். எனவே அவர்கள் யோசபாத்துக்கு எதிராய்ப் போரிடத் துணியவில்லை.
11. பிலிஸ்தியரும் யோசபாத்துக்குப் பரிசுகளைக் கொடுத்து வந்தார்கள். அரேபியரும் அவனுக்கு ஏழாயிரத்தெழுநூறு வெள்ளாட்டுக் கடாக்களையும் கொடுத்து வந்தார்கள்.
12. இவ்வாறு யோசபாத் நாளுக்கு நாள் பேரும் புகழும் அடைந்து வந்தான். அப்பொழுது அவன் யூதாவிலே கோட்டைகளையும் அரணான நகர்களையும் கட்டினான்.
13. மேலும் யூதாவின் நகர்களிலே வேறுபல வேலைகளையும் செய்வதற்கு அவன் முயன்றான். யெருசலேமில் ஆற்றல் படைத்தவரும் திறமை மிக்கவருமான வீரர் பலர் இருந்தனர்.
14. தங்கள் குலத்தின்படியும் குடும்பங்களின்படியும் அவர்களின் எண்ணிக்கையாவது: யூதாவில் ஆயிரவர் தலைவர்களும், படைத்தலைவன் அத்னாவும், அவனுக்குக் கீழ் ஆற்றல் மிக்க மூன்று லட்சம் வீரர்களும் இருந்தனர்.
15. அவனுக்கு அடுத்த நிலையில் யோகனான் இருந்தான். அவனுக்குக் கீழ் இரண்டு லட்சத்து எண்பதினாயிரம் வீரர் இருந்தனர்.
16. அவனுக்கு அடுத்த நிலையில் ஆண்டவருக்குத் தன்னையே அர்ப்பணித்திருந்த ஜெக்ரியின் மகன் அமாசியாஸ் இருந்தான்; அவனுக்குக் கீழ் இரண்டு லட்சம் வீரர்கள் இருந்தனர்.
17. அவனுக்கு அடுத்த நிலையில் போரில் வல்லவனான எலியாதா இருந்தான். கேடயம் தாங்கிய வில் வீரர் இரண்டு லட்சம் பேர் அவனுக்குக் கீழ் இருந்தனர்.
18. அவனுக்கு அடுத்த நிலையில் யோசபாத் இருந்தான். போரிடத் தயாராயிருந்த லட்சத்து எண்பதினாயிரம் பேர் அவனுக்குக் கீழ் இருந்தனர்.
19. இவர்கள் எல்லாரும் அரசனுக்கு ஏவல் புரிந்து வந்தனர். இவர்களைத் தவிர யூதாவின் அரண் சூழ்ந்த நகர்களிலும் போர்வீரர் பலர் இருந்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 36 Chapters, Current Chapter 17 of Total Chapters 36
2 நாளாகமம் 17:13

×

Alert

×

tamil Letters Keypad References